கடந்த வாரம் 12.10.2012 வெள்ளியன்று உயிரையும், தங்களது இழப்புகளையும் பொருட்படுத்தாது மற்றவர்களைக் காத்தற்பொருட்டு துணிச்சலுடன் அருஞ்செயல்களையும் , தியாகங்களையும் கனடிய மண்ணில் புரிந்தவர்களைக் கௌரவிக்கும் 40 ஆவது வருட தேசிய நிகழ்வு கனடிய ஆளுநர் டேவிட் ஜோன்சனின் ஒட்டாவோ "றிடோ" வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. விழாவில் முதலாவாதாகக் கௌரவிக்கபட்டு விருது வழங்கப்பட்டவர்களில் காலம் சென்ற "இளம் வீரன்" பிருந்தன் முதன்மையாக இருந்தார். சில வருடங்களுக்கு முன்னர் ஸ்காபுறோ (கனடா) நகரில் குளிர் நீர் நிறைந்திருந்த ஒரு குளத்தில் மூழ்கிய பாடசாலை நண்பன் ஒருவரை காப்பாற்றுவதற்காகக் குளத்தில் பாய்ந்து தனது உயிரை பலி கொடுத்த செல்வன் பிருந்தன் முரளிதரனை கௌரவிக்கும் வகையில் கனடாவின் ஆளுனர் நாயகம் சிறப்புப் பதக்கம் ஒன்றை அவரது பெற்றோரிடம் கையளித்தார். பிருந்தனது தந்தையான நடராஜா முரளிதரனும் , தாயாரான சத்தியசிறியும் (றஞ்சி) நிகழ்வில் பங்குபற்றி பிருந்தன் சார்பில் விருதினைப் பெற்றுக் கொண்டார்கள்.
இவ்வாறான அதியுயர் விருதொன்றை தமிழர் ஒருவர் வெளிநாடொன்றில் பெறுவது வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும். விருது கொடுக்கப்பட்ட வேளையில் எடுக்கப்பட்ட படங்கள் கனடிய ஆளுநரின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பிருந்தனின் நினைவாக ரொறன்ரோவில் உள்ள Wharnsby Park இன் பெயர் பிருந்தனைக் கௌரவிக்கும் முகமாக Birunthan Park என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.