அறிஞர் அ.ந.கந்தசாமியின் படைப்புகள் பத்திரிகைகள், சஞ்சிகைகள் பலவற்றில் சிதறுண்டு கிடக்கின்றன. இவரது படைப்புகளை இலங்கையில் வாழும் எழுத்தாளர்கள், பதிப்பகங்கள், பல்கலைக்கழக நூல் நிலையங்கள் மற்றும் சுவடிகள் திணைக்களத்திலிருந்து பெற முடியும். மேலும் அ.ந.க.வின் நாவலான 'மனக்கண்' நாவலின் அத்தியாயம் 30 ஐயும் தேடிக்கொண்டிருக்கின்றோம். அந்நாவல் தினகரனில் 1967 காலகட்டத்தில் தொடராக வெளிவந்தது. மேற்படி அத்தியாயம் யூன் 1967 மாதத்தின் முதல் வாரம் வெளிவந்த தினகரனில் வெளிவந்திருக்க வேண்டும். அத்தியாயம் 29 மே 31, 1967இல் வெளிவந்திருக்கிறது. . யாரிடமாவதிருந்தால் அல்லது லேக் ஹவுஸ் நிறுவனத்தில் அல்லது சுவடிகள் திணைக்களத்துடன் தொடர்புகொண்டு எடுத்தனுப்ப முடியுமென்றால் ஆர்வமுள்ளவர்கள் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள். பணிக்கான ஊதியம் வழங்கப்படும். அ.ந.க.வின் படைப்புகள் இலங்கையிலிருந்து வெளிவந்த 'மரகதம்', 'பாரதி', 'இன்சான்', 'செய்தி', 'தினகரன்', 'வீரகேசரி', 'தேசாபிமானி', 'சிறிலங்கா', சுதந்திரன், தினபதி, சிந்தாமணி (இலங்கை தகவல் திணைக்கள வெளியீடு), ஈழகேசரி, Tribuneஎ போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. இலங்கை வானொலியிலும் அவரது பல படைப்புகள் ஒலிபரப்பப்பட்டுள்ளன. எம்மிடமும் அவரது படைப்புகள் பல இருக்கின்றன. இலங்கை சுவடிகள் திணைக்களத்திலும் சேகரிக்கப்பட்டுள்ள பத்திரிகை/ சஞ்சிகைகளில் அவரது படைப்புகள் பலவற்றைப் பெறமுடியும். அங்கிருந்து இப்பணியினைச் செய்வதற்கு ஆர்வமுள்ளவர்கள் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.