கடந்த 2008 முதல் தமிழ்ப் படைப்பாளிகளை புறந்தள்ளும் விதமாக நூலக ஆணை தராத தமிழ்நாடு அரசைக் கண்டித்து நூலக ஆணை வேண்டி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் சார்பில் கவிஞர் சுடர் முருகையா தலைமையில் 11-01-2013 அன்று திருவல்லிக்கேணியில் கவன ஈர்ப்புப் பேரணி நடைபெற உள்ளது.
இடம்: அரசு விருந்தினர் மாளிகை (Government Guest House), சேப்பாக்கம் மைதானம் அருகில், வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600005.; நாள்: 11-01-2013; நேரம்: காலை 9.00 மணி
தமிழர்களின் தாய்நாடான தமிழ்நாட்டிலேயே தமிழ்ப் படைப்பாளர்களுக்கு இந்த அவலநிலை. படைப்பாளர்கள் அனைவரும் ஆதரவு தாருங்கள். படைப்பாளர்களாகிய நாம் நமக்கான உரிமையைப் பெற போராடிப் பார்க்கலாம். மற்றவர்களோடு இந்தத் தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள். குறுஞ்செய்தி, மின்னஞ்சல், அலைபேசி மற்றும் வாய்மொழி ஊடாக இந்தத் தகவலைத் தெரியப் படுத்துங்கள். அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.
இந்தப் பதிவைப் படிக்க வாய்ப்புக் கிடைக்கும் ஊடக ஆசிரியர்கள் இந்தத் தகவலை மற்றவர்களுக்குச் சொல்லுங்கள். தங்களுடைய ஊடகங்களின் ஊடாக மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
நன்றி.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.