எமது இனத்தையும், எமது பாரம்பரிய பிரதேசத்தையும் அழிக்கின்ற சிறீலங்கா அரசினால் நிறைவேற்றப்பட்டுவரும் நிகழ்ச்சி நிரலை தடுத்து நிறுத்தும் முகமாகவும், தமிழ் மக்களுடைய அபிலாசையை அடிப்படையாகக் கொண்ட அரசியல்த் தீர்வினை ஒருங்கிணைந்து அடையும் நோக்குடனும் ஆக்கபூர்வமான தொடர்ச்சியாக நடைபெறுகின்ற கலந்துரையாடல் ஜேர்மனியின் தலைநகரமான பேர்லின் மாநகரில் கடந்த 26, 27 திகதிகளில் நடைபெற்றது. தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இக் கலந்துரையாடல் நவம்பர் 2012 இல் ஆரம்பமானது. இக் கலந்துரையாடல்களில், தாயகத்திலிருக்கும் அரசியல் அமைப்புக்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புää தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் மக்கள் அமைப்பான தமிழ் சிவில் சமூகம், மற்றும் புலம்பெயர் வாழ் தமிழர்களது அமைப்புக்களான அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலகத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புக்கள் கலந்து கொண்டிருந்தன.
அடுத்துவரும் கலந்துரையாடல்களில் ஏனைய தமிழ் அமைப்புக்களையும் தொடர்ச்சியான முறையில் இணைத்துக் கொள்வதே நோக்கம்.
ஊடகத் தொடர்பு: சுரேன் சுரேந்திரன்
தோலைபேசி: 10 44 (0) 7958 590 196
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Skype: surendirans
செய்தி ஆசிரியர்களுக்கான குறிப்பு
இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிவுற்றதைத் தொடர்ந்து பல்வேறு அடிமட்ட அமைப்புக்களால் 2009 இல் உலகத் தமிழர் பேரவை (உதபே) உருவாக்கப்பட்டது. இதுவே, ஐந்து கண்டங்களையும் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட ஆகப் பெரிய புலம் பெயர்ந்த தமிழர்களின் அமைப்பாகும். வன்முறையற்ற செயல் திட்டத்திற்கே உலகத் தமிழர் பேரவை முற்றுமுழுதாக அர்ப்பணிக்கபட்டுள்ளது. இலங்கையில் நீதி, மீளிணக்கம், பேச்சுவார்த்தைமூலம் அரசியல் தீர்வு ஆகியவற்றின் அடிப்டையில் நிலையான சமாதானத்தை இப்பேரவை வேண்டுகின்றது. மேலதிக விபரங்களுக்குத் தயவுசெய்து இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். அல்லது www.globaltamilforum.org ஐப் பார்க்கவும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.