கலாபூஷணம் பி.ரி. அஸீஸ் எழுதிய சுட்ட பழமே சுவை அமுதே, தென்றலே வீசி வா ஆகிய இரு நூல்களின் வெளியீடும் கலை இலக்கியத்துறையில் ஈடுபட்டு இலை மறை காயாக இருக்கின்ற இலக்கியவாதிகளைக் கௌரவிக்கும் நிகழ்வும் எதிர்வரும் 21.09.2014ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணிக்கு கிண்ணியா பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. கிண்ணியா நகர பிதா டொக்டர் ஹில்மி மகரூப் நிகழ்வுக்கு தலைமை தாங்குவார். பிரதம விருந்தினராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், கௌரவ விருந்தினர்களாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆர்.எம். அன்வர் சட்டத்தரணி ஜே.எம். லாஹிர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் சிறுவர் பாடல்கள் மற்றும் பாடல்களுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். அத்தோடு காலஞ்சென்ற கவிஞர் அண்ணல் எழுதிய 'அண்ணல் கவிதைகள்' கவி நூல் மீள் பிரசுரம் பற்றிய அறிவிப்பும் அங்கு பிரகடனப்படுத்தப்படும். புத்திஜீவிகள் , ஊடகவியலாளர்கள் , இலக்கியவாதிகள , ஆர்வலர்கள்,; வாசகர்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் ஏற்பாட்டுக் குழுவினரான பாத்திமா றுஸ்தா பதிப்பகம் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்க அழைப்புவிடுத்துள்ளது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.