பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் 125 பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆண்டும் ஏப்ரல் மாதத்தை சமூக நீதிக்கான மாதமாக அனுசரிக்க சென்னையிலுள்ள பனுவல் புத்தக விற்பனை நிலையம் முடிவு செய்துள்ளது. மார்ச் 28, 2015 அன்று தொடங்கும் சமூக நீதி நிகழ்வுகள் தொடர்ந்து ஏப்ரல் 26, 2015 வரைக்கும், ஒவ்வொரு சனி, ஞாயிறன்றும் நடைபெறும்.
போட்டிகள்
மாணவர்கள், இளைஞர்களின் பங்கேற்புடன் நிகழ்ச்சிகளைச் செய்ய விரும்புகிறோம். இந்த அடிப்படையில் டாக்டர் அம்பேத்கரின் சாதியை ஒழிக்கும் வழி நூலை முன்வைத்து, கட்டுரை, குறும்படம், ஒளிப்படப் போட்டிகளில் கலந்து கொள்ள உங்களை அழைக்கிறோம். மேலும் தகவல்களுக்கு http://www.panuval.com/blog/?p=29 பார்க்கவும்
சிறப்பு புத்தக விற்பனை
சமூக நீதி நிகழ்வுகள் நடக்கும் காலம் முழுவது கீழே கொடுக்கப்பட்டுள்ள புத்தகங்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும் (அஞ்சல் செலவு தனி)
சாதி அழித்தொழிக்கும் வழி ரூ. 70/-
அயோத்திதாசர் சிந்தனைகள் ரூ.1400
நொறுக்கப்பட்ட மக்களும் மறுக்கப்படும் நீதியும் ரூ.200
தம்மபதம் ரூ.130
மனுதர்ம சாஸ்திரம் ரூ. 160
தனிப் புத்தகங்களாக – 10% தள்ளுபடி, முழுவதுமாக வாங்கினால் 20% தள்ளுபடி
அமர்வுகள்
மார்ச் 28 சனி
சமூக நீதி - 2015 நிகழ்வுகளை துவக்கிவைத்து சிறப்புரை
பேரா. வசந்தி தேவி (முன்னாள் துனைவேந்தர்)
சாதி ஒழிப்பு பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி
தோழர். தலித் சுப்பையா
தோழர். சந்தன மேரி
தோழர். காளீஸ்வரன்
மற்றும் கலைக் குழுவினர்
இடம் : ஸ்பேசஸ், என் 1, எலியாட்ஸ் கடற்கரை, பெசண்ட் நகர்
கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து நிகழ்ச்சிகளும் மாலை 5: 30 மணிக்கு நடைபெறும்
இடம்: பனுவல் புத்தக விற்பனை நிலையம்
112, திருவள்ளுவர் சாலை, திருவாண்மியூர்,
சென்னை 600 041.
தொடர்புக்கு : 89399 – 67179 / 044-4310-0442
மார்ச் 29 ஞாயிறு
தலித் முரசு இதழ்களின் கண்காட்சி
தோழர். நீலகண்டன் (கருப்பு பிரதிகள்) தொடங்கிவைகிறார்
ஏப்ரல் 3 வெள்ளி
அம்பேத்கரின் பெண்ணிய சிந்தனைகள் - வாசிப்பு
அருள்மொழி, பாத்திமா பர்ணாட், வ. கீதா, பாமா, ரமணி, பிரேமா ரேவதி, அமுதா மற்றும் பலர்
ஏப்ரல் 4 சனி
அம்பேத்கரின் பாதையில் நீதியை தேடி
தாம் மேற்கொண்டுள்ள சட்டத் தொழிலில் சட்டம், நீதி, நீதியான சமுதாயம் குறித்த அம்பேத்கரின் பார்வையால் வழிநடத்தப் பெற்ற அனுபவங்கள், அவை சார்ந்த விளக்கங்கள், பகிர்வுகள்.
வழக்கறிஞர் சத்தியசந்திரன்
அம்பேத்தரின் அரசியல் சட்ட தொகுப்பாக்கம் - சரவணன்
ஏப்ரல் 5 ஞாயிறு
அம்பேத்கரின் வாழ்வு தரும் பாடங்கள் - குறிப்பாக அவரது வாழ்க்கையை புரிந்து கொள்ளுதல், அதனை எழுதுதல், பகிர்ந்து கொள்ளுதல் என்பதன் பொருள், அவர் தழுவிய பௌத்தம் ஏற்படுத்திய மனமாற்றங்கள் ஆகியன குறித்த உரையாடல்
அம்பேத்கரின் வாழ்க்கையை எழுதுதல் என்பதன் பொருள் - அழகிய பெரியவன்
அம்பேத்கரின் பௌத்தம் தந்த உந்துதல் - தம்மபதத்தை முன்வைத்து - யாழன் ஆதி
ஏப்ரல் 11 சனி
அம்பேத்கர் கண்ட ஜனநாயகம்
அரசியல் தளத்தில் மட்டுமில்லாது சமுதாய, பண்பாட்டுத் தளங்களிலும் சமத்துவமும் சகோதரத்துவமும் நிறுவப்பட வேண்டும் என்பதை அம்பேத்கர் தன்வாழ்நாள் முழுவதும் முக்கியமான கோரிக்கையாக முன்வைத்து வந்தார். சாதி சமுதாயத்தில் கடைக்கோடி இடத்தில் நிற்கும் தலித்துகளுக்கும் மட்டுமில்லாது சூத்திரர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றியும் விவாதித்தார். இவற்றை விளக்கும், அலசும் அமர்வு
அம்பேத்கரின் பார்வையில் சூத்திரர்கள் - தோழர். G. செல்வா
சிறுபான்மையினர் குறித்த அம்பேத்கரின் பார்வை - ஹெச். முஜீபுர் ரஹ்மான்
ஏப்ரல் 12 ஞாயிறு
அம்பேத்கரின் அரசியல் சுவடுகளில் நின்று தமிழகத்தில் செயல்பட்ட பட்டியலின மக்களின் கூட்டமைப்பு, குடியரசுக் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், அம்பேத்கரை முன்வைத்து இன்று மக்களை திரட்ட வேண்டிய அவசியம் குறித்தும் விவாதம். தலித் இதழ்களின் வரலாறு, அவை முன்வைத்த விவாதங்கள், கைக்கொண்ட விவாதக் களங்கள், இவற்றுடன் அம்பேத்கரின் இதழியல் பணியை பேசும் அமர்வாகவும் இது இருக்கும்.
பட்டியலின மக்களின் கூட்டமைப்பு, குடியரசுக் கட்சியின் செயல்பாடுகள் - ஸ்டாலின் ராஜாங்கம்
தலித் இதழியல் - அம்பேத்கரும் பிறரும் -பாலசுப்பிரமணியம்
ஏப்ரல் 14 செவ்வாய்
சாதியை ஒழிப்பது எப்படி? என்பது தொடர்பான கட்டுரை, ஆவணப்படம்/குறும்படம் மற்றும் ஒளிப்படப் போட்டிகளுக்காண பரிசளிப்பு நிகழ்ச்சி
ஏப்ரல் 19 ஞாயிறு
சாதி ஒழிப்பு என்பதன் முக்கியத்துவத்தை கலை, இலக்கிய, நாடக வெளிகளில் நிறுவுவதிலுள்ள சவால்கள் - சுகிர்தராணி , அ. மங்கை , ஓவியர். க. நடராஜ்
ஏப்ரல் 25 சனி
அம்பேத்கரின் சோசலிசம்
மார்ச்சியத்தை தொடர்ந்து விவாதத்துக்கு உட்படுத்திய அம்பேத்கரின் சோசலிசம், இன்றைய சூழலில் இடதுசாரிகள் அம்பேத்கரின் அரசியல் சிந்தனையை உள்வாங்கி விவாதப்படுத்த வேண்டியதன் தேவை - இவற்றை விளக்கும், அலசும் அமர்வு - பா. சம்பத் (தீண்டாமை ஒழிப்பு முண்ணனி) ,
செந்தில் (இளந்தமிழகம்)
எனது படைப்புகளில் பெண் கதாபாத்திரங்களின் இடதுசாரித் தன்மை - ஸ்ரீதர கணேசன்
ஏப்ரல் 26 ஞாயிறு
சாதி ஒழிப்பு என்பதன் முக்கியத்துவத்தை கலை, இலக்கிய, நாடக வெளிகளில் நிறுவுவதிலுள்ள சவால்கள் - சு. தமிழ்ச்செல்வி , மதிவண்ணன் , முகில்
ஒருங்கினைப்பாளர் : வ. கீதா
ஏற்பாட்டுக் குழு:
அமுதரசன் | செந்தில்நாதன் | ஆர். பி. அமுதன் | ஆர். ஆர். சீனிவாசன்| கருணா பிரசாத் | தயாளன் | இனியன் | ராம்
மற்றும் பனுவல் - முகுந்தன், சரவணன், அர்சுணன், வெங்கடேஸ்வரன், உமா, நந்தினி, பாஸ்கர்
ஏற்பாடு:
பனுவல் புத்தக விற்பனை நிலையம்
அருந்தினை - இயற்கை விளை பொருள் அங்காடி
மூன்றாம் அரங்கு - நாடக்குழு, சென்னை
தடாகம் பதிப்பகம்
காடு : காட்டுயிர் - சூழலியல் இருமாத இதழ்
சமூக நீதி நிகழ்வுகளுக்கு உதவ விரும்புவோர் பனுவல் புத்தக நிலையத்துடன் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட நிகழ்வுக்கு தங்களாலான பண உதவியை செய்யலாம்.
தொடர்புக்கு :
பனுவல் புத்தக விற்பனை நிலையம்
112, திருவள்ளுவர் சாலை, திருவாண்மியூர்,
சென்னை 600 041.
தொடர்புக்கு : 89399 – 67179 / 044-4310-0442
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.