நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோவின் புதிய முன்னெடுப்பான படச்சுருள் மாத இதழை தமிழ்நாடு முழுக்க அறிமுகம் செய்யும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயணம் செய்யவிருக்கிறோம். உங்கள் பகுதியில் நீங்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைக்க விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் சார்பாக பெரிய செலவு இருக்காது. நான் சொந்த செலவில் வந்து போகிறேன். ஒத்த சிந்தனையுள்ள நண்பர்களை ஓரிடத்தில் கூட்டினால் போதும். நல்ல சினிமாவிற்கான ஒரு கூடுகையாக இதனை நண்பர்கள் எடுத்துக்கொண்டு இந்த பணியில் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு ஐம்பது பிரதிகள் விற்றால் மட்டுமே நாம் விரைவில் நமது இலக்கை அடைய முடியும். எனவே நண்பர்கள் சிரமம் பாராமல் தங்கள் பகுதியில் படச்சுருள் இதழை அறிமுகம் செய்யும் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். தொடர்புக்கு: 9840698236. பிறகு பார்த்துக்கொள்ளலாம், நாளை பேசலாம் என்று தள்ளிப்போடாமல் உடனே அழையுங்கள். ஜூலை மாதத்திற்குள் பயணத்தை தொடங்கி சில இடங்களுக்கு சென்றாக வேண்டும்.
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
தமிழ் ஸ்டுடியோ: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.