அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வருடாந்தம் தமிழ் எழுத்தாளர் விழாவை கலை இலக்கிய ஒன்றுகூடலாக நடத்திவருவதுடன் அனுபவப்பகிர்வு நிகழ்வுகளையும் ஒழுங்குசெய்து வருகிறது. கடந்த காலங்களில் சிறுகதை, கவிதை மற்றும் தமிழ் விக்கிபீடியா பயிலரங்கு அனுபவப்பகிர்வுகளை நடத்தியுள்ள சங்கம் - நாவல் இலக்கியம் தொடர்பான அனுபவப்பகிர்வையும் நடத்தவுள்ளது. சங்கத்தின் தலைவர் Dr. நடேசனின் தலைமையில் நடைபெறவுள்ள நாவல் இலக்கிய அனுபவப்பகிர்வில் இலங்கை - தமிழக நாவல்கள் புலம்பெயர்ந்தவர்களின் நாவல் இலக்கிய முயற்சிகள் மற்றும் மேலைத்தேய பிறமொழி நாவல் இலக்கியம் தொடர்பாகவும் உரைகளும் கலந்துரையாடலும் இடம்பெறும்.
மெல்பனில் எதிர்வரும் 13-12-2014 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு Mulgrave Neighbourhood House ( 36-42 Mackie Road, Mulgrave, Victoria -3170) சமூக மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு இலக்கிய ஆர்வலர்கள் அழைக்கப்படுகிறார்கள். கலந்துகொள்ளும் இலக்கிய ஆர்வலர்களும் தமது நாவல் இலக்கிய வாசிப்பு அனுபவங்கள் தொடர்பாக கருத்துக்களைத் தெரிவிக்கலாம். மேலதிக விபரங்களுக்கு: நடேசன் (தலைவர்) 0411 606 767 | ஸ்ரீநந்தகுமார் (செயலாளர்) 0415 405 361
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.