அன்றிலும் மகன்றிலும்
கடற்கரை மணலில்
கைகளைக் கோர்த்து
கால்புதைய நடப்பதல்ல
காதல்!
நெடிதுயர்ந்த
மரங்கள் அடர்ந்த
பூங்காக்களில்
புதர்களின் ஓரம்
புகலிடம் தேடுவதும் - அல்ல
காதல்!

கடற்கரை மணலில்
கைகளைக் கோர்த்து
கால்புதைய நடப்பதல்ல
காதல்!
நெடிதுயர்ந்த
மரங்கள் அடர்ந்த
பூங்காக்களில்
புதர்களின் ஓரம்
புகலிடம் தேடுவதும் - அல்ல
காதல்!
1. மௌனம்
மழையை ஏந்திய இலையிலிருந்து
மெதுவாகக்கீழிறங்குகிறது மழைத்துளியொன்று
எண்ணெய்வாசனை கமழும் சமையலறை தயாராகிறது
நாவின் மொட்டுக்களைத்தூண்டும்
செம்மண் தோட்டத்துக் கத்தரி
கிண்ணங்களில் அடங்குகின்றது
முத்துக்களெனத் திரண்ட மல்லிகை மொட்டுக்களை
நிமிடத்தில் கட்டி முடித்துவிடும் விரல்களின்
களி நடனம் மிளிர்கிறது
இணையின் பெயரை அழகாக உச்சரிக்கும் இதழ்களுக்குள்
உமை விடுபட்டு விடுகிறாள் அவ்வப்போது
அர்த்தநாரி இழந்துபோக
சிவனின் தாண்டவம்
சிந்தையில் செங்கொடி படர்ந்த நாட்களில்
படிந்த நிழல்
சித்தன்ன வாசல் ஓவியமாய்ப் பூத்திருக்கிறது
விழி நோக்கி
உன் பேச்சு அதிகமென்று
வேலியிட்ட மணித்துளிகளில்
பொங்கியெழும் பேரலயென மேலெழுந்து அடங்கும் மனம்
ஆழ்கடல் மௌனத்தைச் சூடிக்கொள்கிறது
மௌனத்தினுள் காளியின் நீண்ட நாக்குத் தொங்கிக் கொண்டிருக்கிறது
சிந்தும் இரத்தத்துளிகளுடன்.

என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
என்னுள் விளையும்
எண்ணங்கள் என்பேன்
என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
விண்ணில் தோன்றும்
விந்தைகள் என்பேன்
என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
கற்றுக் கொண்ட
பாடங்கள் என்பேன்
என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
என்னுள் என்னைத்
தொலைத்தேன் என்பேன்
1. எங்கே போகிறது
- வேதா. இலங்காதிலகம். ஓகுஸ், டென்மார்க். -
வாழ்வு முடிந்திட எம்மைத் தொடர்வதொரு
ஆழ்வெளி வாழ்வா! எங்கு போகிறோம்!
சூழ் நிலவும் சூனிய வெளியுமா!
வீழ் இறகாகி விண்ணில் வலமோ!
உடலின் ஆன்மா கடலாவி போன்றதோ!
சடலம் எரியும், சாசுவதம் ஆன்மாவோ!
உடலம் தேடி மறுபடி அடைக்கலமோ!
சுடல் என்பது ஆன்மாவிற் கில்லையோ!
உடலைப் பிரிய விரும்பாத ஆன்மா
கடலைத் திடலை எப்படித் தாண்டும்!
படலையாக மனமா! ஆன்மா நடலையிடுமே!
ஆன்ம விடுதலையொரு காத்திர விடுதலை
நேத்திர நீர் வடிய முறையான
சாத்திரப்படி கோத்திர வழிப்படி எம்
ஆத்தும சாந்திக்காய் ஏத்தும் அமைதிப்படி
ஆன்ம சேத்திர விடுதலை எனலாமோ!
1. வர்ணத்தின் நிறம்
முதலில்
நிறத்தில்
வர்ணம்
தெரிகிறதாவெனத்
தேடுகிறோம்
நெற்றியில் தெரியவில்லையெனில்
சட்டைக்குள் தெரியலாம்
சில பெயர்களிலும்
வர்ணம் பூசியிருக்கலாம்
வார்த்தையிலும்
சில நேரம்
வர்ணத்தைத் தெரிந்துகொள்கிறோம்
நான்கு மூலைகளில்
மஞ்சள் தடவிய
திருமண அழைப்பிதழ்களில்
முந்தைய தலைமுறையின்
வால்களில்
வர்ணங்கள் தெரிகின்றன
கவி யாற்றலை வளமுடைத் தாக்கி !
தமிழினை உயர்த்திட கவிபாடிடும் கூட்டம்
வஞ்சகப் போட்டியாளர் பொறமை தனத்தினை
சொற்களால் எரிந்து மகிழ்ந்து விளையாடும்
பொல்லா மனசு இருந்திடல் கண்டு
நல் லுள்ளங்களில் வேதனைத் தழும்பு !
நண்பர் கொடுமை கவிதைப் போராட்டம் !
சரித்து வீழ்த்திச் சாபமிடும் மன வெறி
உயிர் தமிழ் மொழி அழிந்து கவிமனம்
பொறாமை தளையிடை வேதனைப்படுந்துயர்
ஊதிப் பெருத்திட ஆற்றலை அழித்திட
கவி உள்ளத்தில் வேதனை நெருப்பு !

அன்று கப்பலிலே ஏறிவந்து- இலங்கைக்
கரைசேர்ந்த முப்பாட்டன் சோற்றுக்காய்
காடுவெட்டி தேயிலைநாட்டி-வெள்ளைக்
காரனுக்காய் உழைத்தாரே.
எட்டு அடிகொண்ட லயமென்று -நீண்ட
அடுத்தடுத்தக் குடிசைக்குள்ளே -கொத்து
அடிமைபோல் வாழ்ந்தேதான் -சொந்த
அறிவுமங்கிக் கிடந்தாரே.

வாசலருகே மலர்ச்செடியின்
பூக்களுக்கு வரும் வண்ணத்துப் பூச்சிகளே
கொழும்புக்குச் செல்லும் வழி அறிவீரோ
அம்மாவின் மரணத்துக்காக இன்றிரவு
பாடப்படப்போகும் போதனை கீதங்களை
கொழும்புக்குச் சென்று
அப்பாவிடம் உரைப்பீரோ
1. கொலை
இன்று முழுதும் என்னைக் கொன்று கொண்டிருந்தேன்
மற்றவர்கள் என்னைக் கொல்வதையும் விட
நானே என்னைக் கொல்வது சுலபமாக இருக்கலாம்
அது நல்லதும் கூட என்றெண்ணினேன்
ஆனால் அது மிகக் கடினமாக இருந்தது.

கூடையினை தலையேந்தும் வள்ளி
கொழுந்துதனை தளிர்விரலால் கிள்ளி
போடுகிற காரணத்தால்
பொருள்தேடும் தேசத்தார்
மூடர்களாய் நகைப்பாரே எள்ளி
கோடைஅனல் கொடுமின்னல் காற்று
கொட்டுமழை இடிக்குமிடி ஏற்று
மாடெனவே தினமுழைத்து
மண்வெட்டி யாய்தேய்ந்து
பாடுபட்டும் பட்டினியே ஈற்று
குடத்தில் விளக்காய் ஏன் பெண்ணே!
நடக்கும் விளக்கன்றோ நீ பெண்ணே!
தடம் பதிக்க ஆசை கொள்!
சுடர் வீசத் திறமை கொள்!
திடம் கொண்டு சுமைகள் பங்கிடு!
அடங்கும் எண்ணச் சிறகை அரி!
இடப்புளக்கம் உலகில் பரந்தது.
அடம் பிடித்தேனும் அறிவைப் பெருக்கிடு!
நுண்மையாய்ப் பெண் இல்லம் பேணும்
வண்ணம் கண்டு ஊர் வியக்கும்!
தண்மை அன்பைத் தரும் இவள்
கண்படும் அழகிலும் ரதி மகள்!
ஊன்றுகோலாய்ப் பெண் குடும்பத்திற்கும்
சான்றோனாக வாரிசை வளர்க்கவும் – ஆனால்
பெண் திறனை எல்லோரும் போற்றார்.
புண்பட வைக்கவும் சிலர் பின்னிற்கார்!
கிளிஞ்ச பாய்
பழஞ்சோத்து நீர்
ஆனாலும் கூட
கனவுக்குடித்தனத்துக்கு
கிளியோபற்றாவை தேடுகிற அண்ணன்;
ஊர் சுற்றும் தம்பியால்
பீடி சுத்தும் அம்மா
காச நோய் கண்டதனால்
பேசாப்பொருளான
அப்பா
சீதனம் கேட்டுவரும்
தவணை முறைத் துன்பத்தால்
வாழாவெட்டியாய் வாழும்
அக்கா

1. உழை!
சும்மா கிடப்பதுவும்
சோர்ந்தே படுப்பதுவும்
இம்மை வாழ்வுக்கே
இடராகும்; அறிவீரோ ?
1
உன்னை நினைவு கூறுவதற்கு
என்னிடம் இருக்கிறது
உன் வெயில் காலத்து அணைப்புகள்
மழைக்காலத்து தீண்டல்கள்
இதயத்திடம் சொல்லத்தேவையில்லை
அவரை நினைவு கூறு என்று
கோழி எப்படி நினைவு கூறும்
விடியற்காலையை
வாசலை
கோலங்கள் நினைவு கூறுவதாய்
உன்னை நினைக்கின்றேன்
விதைக்குள் மண் நுழைவதில்லை
மண்ணின்றி முளைக்க முடியுமா
நினைவு கூறலால் வளர்கின்றேன் நான்

துல்லியமான நீர்ப்பரப்பு
கூழாங்கற்களைப் போர்த்திப் படர்ந்திருக்கிறது
சலனமற்றிருக்கிறது ஈர நிலத்தின் சயனம்
போர்வையின் பாசிப் பூக்களும் பசிய அலங்காரங்களும்
அசைந்தசைந்து
காற்றின் தாலாட்டுக்களை இசைக்கின்றன மௌனமாய்
உன் கையிலொரு மதுக் குவளை
'அதிதிகளாய்ப் பறவைகள் வந்திரையும்
மா கடலின் மேலேயான வானம் பற்றித் தெளிவாகத் தெரியும்
சமுத்திரம் பற்றி மட்டும் சொல்' என்றாய்
'இறுதி மதுவில் கரைந்தழியும் பேரண்டம்'
வேறென்ன சொல்ல இயலும்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இளம்நண்பர் சுறுசுறுப்பர் சிறுகதையை நான் படித்தேன்.
மளமளென்று எழுதியது... மைகூடக் காயவில்லை...
இருந்தசிறு குறைகள்என் துருதுருப்பைக் குறைக்கவில்லை.
புரிந்து அதனைப் படித்து விட்டுப் பல மணிகள் சிந்தித்தேன்.
அன்புக்கு இலக்கணமாய் காதலுக்கோர் பொற்சிலையாய்
இன்சுவைகொள் இலக்கியமாய் மானிடத்தின் முதன்மையனாய்
என்னுளத்துள் இடம்பிடித்தான் கதைமாந்தன் என்னும் 'அவன்" --
தன்-இனியாள் மறைவாய் மணந்தும் கடுகளவும் வெறுக்காதான்.
அடுத்தநாள் காலையிலே படுக்கைவிட்டு எழுமுன்னம்
நடுநிசியில் தொடங்கியஎன் நடுவு-நிலை ஆய்வுகளின்
முடிவுகள் முன்னிடம்பெற்று மனத்திரையில் ஓடுகையில்
சடுதியாய் என்கண்கள் சலக்குளமாய்ப் பனித்தன பார்!
1
நண்பனுக்கு நிறைய வேலைகள்
என்னுடைய காலையைப்போலத்தான்
அவனுடைய காலையும்
இளம் வெயிலால் நிரப்பட்டிருக்கும்
அவனுடைய தொடக்கமும்
என்னுடைய தொடக்கமும்
உறக்கத்திலிருந்து எழுவதுதான்
அவனுடைய கடமையும் என்னுடைய கடமையும் வேறுவேறு
வெவ்வேறு பரபரப்புகளால் மூடப்பட்டவை
நண்பன் பூப்பறித்துக்கொண்டிருக்கும் போது
நான் தூங்கிக்கொண்டிருப்பேன்
நண்பன் வேதம் ஓதிவிட்டு யோகா செய்யும் போது
நான் என் உறக்கத்தைக்கழற்றி விடுவேன்
அவன் காயத்திரி மந்திரம் ஜெபிக்கும் போது
விடுதலை படிப்பேன்

இலைகளை உதிர்த்தழும் விருட்சங்களைத் தடவிக் கொடுத்து
தாண்டிச் சென்ற கோடையைக் கழுவி
ஞாபகக் கொடியில் காயப்போட்டாயிற்று உலர்த்தவென
வெண்சாயங்களில் தோய்த்தெடுத்த இழைகளைக் கொண்டு
குளிர்காலக் கம்பளிகளை
பின்னுகிறது காலம்
அதைப் பிடித்துக் கொண்டு படர்கிறது
நேற்றைக்கு முந்தைய தினங்களில் துளிர்விட்ட
சிறு ஒற்றைக் கொடி
வைசாக தினங்களில் வெண்ணிற ஆடையும் பூக்களுமென
விகாரைக்கு அணிவகுத்துச் சென்ற பக்தர்கள்
எறிந்து போன சிறு விதையாக இருக்கலாம் தாவரத்தின் மூலம்
(இ)ரயில்களே தோற்றுவிடுமாப்போல் வளைந்து நெளிந்து நீண்டு புகும், புழுதி அள்ளி எறியும் ஒற்றையடித்தெருக்களுக்குள்ளும்... அதன் கூடவே நிரைநிரையாக அணிவகுத்து காற்றுக்குத்தலைகோதும் பனைமரக்காடுகளுக்குள்ளும்… உச்சி வெயில் நேரம் தாகம் தீர்க்கும் தருக்கள் சகிதம், கிடுகு, தென்னைஓலை, பனைஓலை, பனைமட்டை, வாழைச்சருகு, பூவரசு, ஆமணக்கு, கிளிசெறியா, கிளுவை, கள்ளி, அளம்பல் என்று வேலிகளால் வகுக்கப்பட்ட நிலபுலங்களுக்குள்ளும்... சொக்கிக்கிடந்தவாறு, சதா சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்கால் நீரின் (நி)சப்தத்துக்குக்கூட ஊறுவிளையாமல் நாழிகைப்பொழுதுகளும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர் கிராமிய வாழ்வியலின் ஒரு பக்க அழகுப்பதிவு!

1.சமகால மனிதநேயம்
காமுகர்களின்
கண்கள் அரங்கத்திற்கு
காட்சி தொடங்க
கறுப்புத் திரைபோடும்
வெறுப்புச் சேவகன்.
மனச்சித்திரம்

தட்டான்கள் சிறகடிக்கும்
மழைக்காலத்து மலையென
அந்த நிகழ்வு நடந்துவிடும்
எதிர்பாராத வருகையில்
குல்மோஹர் மலர்கள் தூவப்பட்டிருக்கும் சாலையெங்கும்
என்றோ பூத்திருந்த மலரின் மணம் அப்பொழுது கசிந்துவிடும்
விடைபெறும் தருணங்களில்
யாரும் அறியாமல்
வெளிப்படத்தான் செய்கிறது
அது.

இவர்க்கிலையோ ..?
பரந்த கடலன்னை மேனியிலே,
நீந்தும் படகினில் தானமர்ந்தே,
ஞாலம் புகழ்ந்திடும் நீருழவன்,
நாடியே மீனினைத் தான் பிடிப்பான் !
கந்தலுடையவன்தான ணிந்தே,
கஞ்சிக் கலயத்தைத் தான் சுமந்தே ,
நொந்து வருந்தியே !தன்னுடலை,
நூறு வகைக் கடல் மீன் பிடிப்பான் !
பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்.
- வ.ந.கிரிதரன் -
கதிரும், உழவும் இன்றேல் இங்கு
உயிரின் இருப்பும் இல்லை அதனால்
நன்றி மறப்பது நன்று அன்று
என்றே நாமும் பொங்கல் செய்வோம்.
கதிரும் வாழ்க! உழவும் வாழ்க!
உழவர் வாழ்வில் இன்பம் பொங்க,
உலகோர் வாழ்வில் மகிழ்ச்சி மலர
இத்தரை எங்கும் மரங்கள் செழிக்க
இங்கு இருக்கும் உயிர்களும் களிக்க
கதிரும் உழவும் எருதும் எண்ணி
அனைவர் வாழ்வும் களியால் சிறக்க
இன்பப் பொங்கல் செய்வோம்
பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்.
நாளும் பொழுதும் இரத்தம் சிந்தி
வாழும் வாழ்வு ஒழிந்து நீதி
ஒளியில் உலகு மூழ்கிக் களிக்க
அனைத்துப் பிரிவுகள் நீங்கி மானுட
இனத்தில் ஏற்றம் பிறந்திட எங்கும்
களியால் நிறைந்து வழிந்திட
பொங்கலொ பொங்கல். பொங்கலோ பொங்கல்

கட்சி விட்டுக் கட்சித் தாவிக்
காட்ட வந்த தேர்தல்.
கட்டுக் கட்டாய் பணத்தை அள்ளிக்
கொட்ட வந்த தேர்தல்
பெட்டி மேல பெட்டி வைத்து
பேரம் பேசும் தேர்தல்
மட்ட மான கொள்கை கொண்ட
மானங் கெட்டத் தேர்தல்

1. நல்லோர்க்கே சொர்க்கம்....!
வாழ்க்கை என்பது சிறிதாகும் - அதில்
வாழும் முறையோ பெரிதாகும்
ஏழைக் கிரங்கி வாழ்வதுவே இனிய
இஸ்லாம் தந்த நெறியாகும்....!
குடிசை வாழும் ஏழைகளும் - பெருங்
கோடி சீமான் "ஹாஜி"களும்
முடிவில் சமமாய் மண் மீது - நபி
மொழிந்தவாறு "ஜனாஸா"வே....!