அன்னா அக்மதோவா கவிதைகள்

1889 இல் பிறந்த ரஷ்யக் கவிஞர். நிக்கோலாய் குமிலியோவ் என்ற கவிஞரைக் காதலித்து,1910 இல் திருமணம் செய்தார்; 1916 இல் இருவரும் பிரிந்தனர். எதிர்ப்புரட்சியாளர் என்ற தவறான குற்றச்சாட்டில் 1921 இல் குமிலியோவ் சுட்டுக்கொல்லப்பட்டார். 1912 இல், அக்மதோவாவின் முதலாவது கவிதை நூலான ‘மாலைப்பொழுது’ வெளிவந்தது; 1914 இல் ‘மணிகள்’ என்ற இரண்டாவது தொகுப்பு வெளியானது. 1935 – 40 ஆம் ஆண்டுகளில், - ஸ்டாலினின் ‘களைஎடுப்புக்’ காலகட்டத்தில் – எழுதப்பட்ட ‘இரங்கற்பா’ நெடுங்கவிதை மிக முக்கியமான படைப்பாகும். ஸ்டாலினின் இலக்கியக் கொமிஸாரான ‘ஸ்தனோவ்’, “ பாதி கன்னியாஸ்திரி ; பாதி வேசி” என அக்மதோவாவை இழித்துரைத்தார். ‘யுனெஸ்கோ’ நிறுவனம், 1989 ஆம் ஆண்டினை ‘அக்மதோவா ஆண்டு’ எனப் பிரகடனப்படுத்தியது. இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் உலகக் கவிஞரில் ஒருவராக அக்மதோவா கருதப்படுகிறார். 1966 இல் மரணமடைந்தார்.

அவள் வீற்றிருந்த நாற்காலி ஜொலிக்கும் சிம்மாசனம்,












பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









