ஆகஸ்ட் கவிதைகள் -2



[அண்மையில் மறைந்த பிரபல பாடகி விட்னி கூஸ்டன் நினைவாக...]
துடிக்கும் ஜீவன் ததும்புமிசை.
நொடியும் மறக்கவியலா இசை
அடி!..அந்த .”யூ…ஊ…உ..ஊ..”
பொடி காட் பாடல்.. ஆம்!
(” I will always love you…u….uu!..” -Body gard song )
விட்னிகூஸ்ரன் தன் குரலால்
கட்டினாள் மனங்களை! – தனக்குக்
கிட்டிய சுயதிறன் நம்பாது
கட்டப்பட்டாள் பய உணர்வால்.

உள்ளத்தில் வேதனை யெனும்
நெருப்பை மூட்டி!
நேந்திரமாம் ஒளிமலரை
இறுக மூடி!
பிரிந்ததேன்..?என் தாயே..!
துடித்து வாடி..!
ஹிதாயாமகள் கதறிப்புலம்புவதை
காணீரா யோ..?
பொங்கலோ பொங்கல்!
- சக்தி சக்திதாசன் -

பொங்கிடும் பானைகளில்
வடிந்திடும் நுரையினைப் போல்
வளரட்டும் மகிழ்வு உங்கள்
வளமிகு வாழ்க்கையிலே !
கிழக்கினில் உதித்திடுவான் எம்
தகித்திடும் செங்கதிரோன்
தந்திடும் நல் வரம்தனையே நாம்
தாழ்வாய் வணங்கிடுவோம்
உழவரின் வியர்வையினால் நன்கு
உலகமே செழித்திடுமே !
உழைப்பவர் வாழ்க்கையும் அதுபோல்
உயர்ந்திட வாழ்த்திடுவோம்
நான் எழுதிய கவிதைகளில் பல இப்பிரபஞ்சத்தில் நமது , மானுட, இருப்புப் பற்றிய தேடல்களாகவே இருப்பதை எனது கவிதைகளை வாசிப்பவர்கள் அறிந்து கொள்வர். மாணவனாக இருந்த காலத்திலிருந்து இன்று வரையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட அத்தகைய கவிதைகளின் தொகுப்பாக இதனைக் கருதலாம். எனது புனைகதைள் இன்றைய மனிதரினின் சமகால சமூக, அரசியல்ரீதியிலான பாதிப்புகளைக் களமாகக் கொண்டியங்கினால், எனது கவிதைகளோ பெரும்பாலும் இந்தப் பிரபஞ்சம் பற்றி, அது பற்றிய தேடல்களைப் பற்றியே அதிகமாகப் பிரதிபலிக்கும். ஆயினும் அவ்வப்போது சமகால சமூக, அரசியல் நிகழ்வுகளின் பாதிப்புகளைப் பற்றியும் அவை பேசும். ஆயினும் 'இருப்பதிகாரம்' என்னுமித் தொகுப்பு எனது இருப்பு பற்றிய தேடல்களின் விளைவான உணர்வுகளைப் பிரதிபலிக்கும். பல்வேறு இணைய இதழ்களில் (திண்னை, பதிவுகள், ஆறாந்திணை, தட்ஸ்தமிழ்.காம் போன்ற) வெளிவந்த கவிதைகள், என் மாணவப் பிராயத்திலே ஈழநாடு மாணவர் மலர், மற்றும் பலவேறு ஈழத்துப் பத்திரிகைகளான வீரகேசரி, ஈழமணி, சிந்தாமணி, தினகரன் போன்ற் பத்திரிகைகளில் வெளிவந்த ஆரம்பகாலக் கவிதைகளில் இருப்பு பற்றிய தேடலைப் பிரதிபலிக்கும் கவிதைகளின் தொகுப்பிது. ஏற்கனவே 'பதிவுக'ளில் வெளிவந்தது.