தமிழ்ப் புலமையின் குறியீடு நீ
சொல்லின் வீச்சும்
அறிவின் துலக்கமும்
தமிழ் கூறும் உலகெங்கும்
உன்னை நினைக்க வைத்தது.
விமர்சன வீச்சினால் ஈழத்தமிழை
உலகெங்கும் எடுத்துச் சென்றாய் நீ
கணைகள் பெற்றாலும்
சளைக்காது தொடர்ந்தாய் நீ.
யாழ் பல்கலையில்
இறுதியாய்
உன் தமிழ்ப்புலமையின் கப்பிப்பால்
குடித்த பாலகர்களில் ஒருவனாய்
அன்று நானும்
உன் அருகில் இருந்தேன் ஐயா.
அதனால் இருவிழி நீருடன்
உலகெங்கும் பரந்த
உன் மாணவசீடர்களில்
ஒருவனாய் நின்று
அஞ்சலித்தேன் ஐயா!
ஈழத்து இலக்கிய வானின்
விடிவெள்ளியாய் என்றும் ஒளிர்வாய்
தமிழ்ப் புலமையின் குறியீடாய்
நீ இன்னும் வாழ்வாய்
kuneswaran thuvarakan <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.