கவிதை: நம்பிக்கை!
நம்பிக்கையை கவிதை: பிறகும் தொடரும் தீவின் மழை!
மழை வெளி நிலத்தின் பட்சிகள்
ஈர இறகை உலர்த்தும் புற்பாதையில்
மீதமிருக்கும் நம் பாதச்சுவடுகள் இன்னும்
எப்பொழுதும் மழைபெய்யும் ஊரின் பகல்வேளை
மென்குளிரைப் பரப்பியிருக்க
நனைந்திடாதபடி முழுவதுமாக மறைத்த நாம்
நடந்து வந்த பாதையது
தீவின் எல்லாத் திசைகளிலும்
கடலை நோக்கி நதிகள் வழிந்தோடும்
அவ் வழியே பிரம்பு கொண்டு பின்னப்பட்ட
கூடைத் தொப்பியை அணிந்து வந்த முதியவள்
‘கருமேகக் கூட்டங்களற்ற வானை
ஒருபோதும் கண்டதில்லை’ என்றதும்
சிரட்டைகளால் செதுக்கப்பட்ட
அவளது சிற்பங்களை முழுவதுமாக வாங்கிக் கொண்டாய்
இவ்வாறாக
கரிய முகில் கூட்டம் நிரம்பிய வானின் துண்டு
உன் சேமிப்பில் வந்தது
மழை உனக்கு அவ்வளவு பிடிக்கும்
கவிதை: புனைபெயரின் தன்வரலாறு

என் புனைபெயர் என் தனியறை;
அரியாசனம்;
நட்புவட்டம்;
வீடு; நாடு; சமூகம்; உலகம்;
கடல்; கானகப் பெருவெளி;
காலம்; காலாதீதம்;
கனாக்களின் கொள்ளிடம்….
என் நம்பிக்கைகளின் கருவூலம்;
என்னிலிருந்து பல கிளைபிரிந்து
விரிகின்ற கற்பகவிருட்சம்…
காணக் கண்கோடிவேண்டும் தரிசனம்,
தேவகானம்…..
கவிதை: கழியும் பொழுதில் சிறக்கும் வாழ்வு!

எக்கணமும் இக்குமிழி உடைந்து விடலாம்.
அவ்விதமே எனக்குத்தோன்றுகிறது.
தற்செயற் சாத்தியங்களில் சுழலுமிருப்பில்
அவ்விதம்தான் எனக்குத்தோன்றுகிறது.
சிறு மாற்றம் கூட சில வேளைகளில்
இருப்பினைக் கேள்விக்குறியாக்கும்
அபாயமுண்டு என்பதை
உணர்வதற்கு இயலாத
ஆட்டங்களில், ஓட்டங்களில்
விரைந்து செல்லும் வாழ்வு
இதனைத்தான் எனக்கு உணர்த்துகிறது.
ராஜகவி ராகில் கவிதைகள் மூன்று!
1. நதி பெய்கின்ற மழையில் பெருக்கெடுக்கும் இருள்

சூரியன் கொண்டு வந்து விட்டுச் சென்ற இருளெனவும்
ஓர் இருளிலிருந்து கடத்தப்பட்ட
இன்னோர் இருள் மின்குமிழெனவும் நீ
ஓர் உயிர்த் தசை
பாவ இரும்புத்துகளாய் காந்த இதயம்
பொய் வேரில் நாவு மரம்
இருட்டு உண்ணுகின்ற இரவுக் கண்
கறுப்பு இசை உணருகின்ற மலட்டுக் காது
திக்கெட்டும் தீபாவளியும் திக்குமுக்குக் கவிஞரும்
திக்கு ஒன்றில் செல்லும் தீபாவளியினைத் தேடி அலைந்து வந்தேன்.
திக்கெட்டும் அதன் சவாரி இன்று, என்று, சிலர் சொல்லக் கேட்டேன்.
திக்கு முக்காடி அடிமுடி எல்லாம், அண்டம் முழுதிலும் தேடினேன், யான்.
திக்கு எட்டல்ல, எட்டெட்டு இன்று, அதற்கு, என்று அறிந்து திகைக்கிறேன்.
நரகாசுரன் எனும் நரகத்து அசுரன் மடிந்த திதியே தானா எம் தீபாவளி?
பரதனின் அண்ணன் ராமன் ஈரேழு ஆண்டின் பின்அயோத்தி திரும்பிய அதா?
இரக்கமிலாக் கௌரவரைப் பாரதத்தில் வென்று பாண்டவர் சென்ற அன்றா?
அரசன் விக்கிரமாதித்தன் அரியணை ஏறியது எனச் சொல்லும் அத்-தினமா?
எத்தனையோ பழங் கதைகள் ஊருக்கூர் உண்டெனக் கண்டு கொண்டேன்.
எத்தனையோ திக்குகள் திசைகளிலே தீபாவளி செல்கிறது என்று அறிந்தேன்.
பக்தியுடன் கொண்டாடும் பண்டிகை அல்ல எம் தீபாவளி எனவும் கண்டேன்.
தீபாவளியின் வேர் இந்தியாவில்ளூ இந்து மதத்தின் வைஷ்ணவ அலகில். ஆனால்
இன்று அதைச் சைவர், ஜெயின் மதத்தோர், சீக்கியர் மட்டுமல்ல, உலகில் அவர்
சென்ற இடமெல்லாம்: மலேசியா, சிங்கப்பூர், மேற்கிந்திய மற்றும் பிஜித் தீவுகள்,
அவுஸ்திரேலியா, நியூசீலந்து, ஏன் ஐரோப்பா, அமெரிக்கா, என் பிரிய பிரித்தானியா
என்ற இடங்களை எல்லாம் பாதகன் நரகாசுரன், தன் சாவினால் பிடித்து விட்டான்.
.முனைவர். சு.செல்வகுமாரன் (அண்ணாமலைப்பல்கலைக்கழகம்) kகவிதைகள்!

1. கூடு
இளைப்பாற
ஓர் இடம் வேண்டும்
மாட மாளிகையோ
மண்குடிசையோ வேண்டாம்
புங்க மரத்திற் கூடுகட்டி
முட்டையிட்டு
குஞ்சு பொரித்ததும்
பறந்து போன
சாம்பற் குருவியின்
கூடு போல
ஒரு சின்னக் கூடு போதும்
இரவு நேரங்களிலும்
மழை நாட்களிலும்
இளைப்பாறிக் கொள்வதற்கு
கவிதை: அத்தை ஆகிய சித்தப்பா

என்னுள்
கனன்ற நெருப்பு -
பதின்ம வயதில்
எழுந்து நின்று
கொழுந்து விட்டெரிகையில்
தோன்றியது வினா -
நான் 'நானாக' வாழ்வதா
அன்றி
ஆணாகவே வாழ்வதா?
கவிதை: சொல்லாத வார்த்தைகள்!
இல்லாத இலக்கைப் போல்... நில்லாத நிழலைப் போல்...
சொல்லாத வார்த்தைகளை எவர் எங்ஙனம் காண்பார்?
சொல்லாத வார்த்தைகளை எவர் எங்ஙனம் கேட்பார்?
சொல்லாத வார்த்தைகளை எவர் எவ்வாறு அறிவார்?
வில்லாலே விசயன் நில-நீர் நோக்கி மேலே-சுழல் மச்சம்
நல்லாய்க் குறி வைத்து நங்கையைப் பிடித்தான் என்றால்...
பொல்லால் தன் பெண்ணாளை இருள்பிடித்த அடுக்களையுள்
கல்வி-குறை முடக்குருடன் அடக்கத் துணிந்ததைப்போல்... நாம்...
அவல் போன்ற வார்த்தைகளை வெறும் வாயில் சப்புவதா?
சவர்க்காரக் குமிழிகளால் கவிக்கோட்டை கட்டுவதா?
இவர் என்ன, சுவர் இல்லாச் சித்திரங்கள் தேடுகிறார்?
மந்திரத்தால் மாம்பழங்கள் யாம் விழுத்த வேண்டுகிறார்?
சந்தி சிரிக்க வைக்க எமைச் சங்கடத்தில் மாட்டுகிறார்?
கவிதை: அன்பெனும் விதை விதைப்போம்

புராதன சாமான்களுக்கென
ஒதுக்கப்பட்ட அறையொன்றில்
விடுதலை கிடைக்காத
போர்க்காலக் கைதியைப்போல
முடங்கிக் கிடக்கும்
முற்காலங்களில்
வீட்டில் வயது முதிர்ந்தவர்கள்
இருக்கின்றார்கள் என்பதற்கு
அடையாளமாக இருந்த அது
ஒருவேளை பாட்டிக்குத் தன் அம்மா
சீதனமாக கொடுத்ததாகக் கூட
இருக்கலாம்.
பா வானதி வேதா இலங்காதிலகம். கவிதைகள் மூன்று!
1. எம்.எஸ்.வியிசை வண்ணங்கள் தரளக் குவியல்
அசைந்தாடும்தென்றலின் பயணம் இவரிசை.
திசையின்றி உலகெங்கும் பரவிய பேரருவி.
இசைக் கௌரவம் நீராரும் கடலுடுத்தி..
நசையுறு இசைக்கு அழிவில்லை அஞ்சலிகள்.
சங்கீதம்! இங்கிதமுடை சுவர சாரதி.
அங்கீகாரம் கலைமாமணி, பிலிம் பெஃயர்,
மங்காத வாழ்நாள் சாதனையாளர், கௌரவ டாக்டர்.
சங்கீத இராசாங்கம் 1945 – 2015வரை.
இசைப்படியமைவு '' பணம் '' என்எஸ். கிருஷ்ணன்
இசைக்கருவி மூன்றுடன் தாழையாம் பூமுடித்து.
இசைக்கருவி முன்னூறுடன் எங்கே நிம்மதி.
இவரிசைமன்னன் பேரருவி, மெல்லிசை மன்னன்.
கவிதை: காடு வளம் பேணு!

காடு வளந்தன்னை கண்போன்றுக் காக்கின்ற
நாடு வளங்கொள்ளும் நற்பேறு –கூடும்
அதுவல்லா மண்மேல் அழிகின்ற வித்து
மெதுவாகக் கொல்லும் எமை.
காயும் இயற்கைக் கனலால் உயிரெல்லாம்
ஓயும் தருணத்தை உண்டாக்க -நோயும்
நொடியுமாய் நொந்து நுடங்கிடும் நீயோர்
கொடிநாட்டு தோன்றும் வனம்.
பேராசிரியர் கோபன் மகாதேவா கவிதைகள் இரண்டு!
1. என் மகிழ்வறத்தை உன் சிரிப்பால் மீட்டிடு! {ஒரு காதலனின் இலகு மொழிச் சங்கீதக் கவிதை]
ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி!
என்னை விட்டுத் தூரம் சென்ற காதலி
என்னுள் இன்னும் கொலுவிருக்கும் காதலி.
ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி!
உன் சிரிக்கும் சித்திரத்தைக் காண்கையில்
என் உளத்தில் வாழ்வின் ஊக்கம் கூடுதே.
ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி!
என்னை விட்டுத் தூரம் சென்ற காதலி
என்னுள் என்றும் கொலுவிருக்கும் காதலி.
ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி!
உனை நான் மறவேன். உனை நான் துறவேன்.
உனை நான் துறவேன். உனை நான் மறவேன்.
ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி!
என்னை விட்டுத் தூரம் சென்ற காதலி
என்னுள் என்றும் கொலுவிருக்கும் காதலி.
ராஜகவி ராகில் கவிதைகள் இரண்டு!

1. பெண் பால் ஆலயம் .
வாடாத வரம்
பெறும்
அன்னை மீது
விழுந்த
பூ .
கவிதை: பசி

எரியும் அனலில்
தேகத்தை உருக்கி
உயிரால் பெருங்கனவை
எழுதிய
ஒரு பறவை
அலைகிறது தீராத்
தாகத்தில.
படிக்கட்டு!
அன்பு படிக்கட்டு ஆசைப் படிக்கட்டு
இன்பம் பெருகும் படிக்கட்டு – துன்பம்
விலகும் படிக்கட்டு. வெண்ணிலா வந்து
உலவும் படிக்கட்டு நீ.
எண்ணப் படிக்கட்டு எண்ணும் படிக்கட்டு
வண்ணப் படிக்கட்ட மண்விட்டு – விண்ணில்
அடிக்கல் இடுதற்கு அஸ்திவாரம் செய்து
படிக்கட்டுக் கட்டு பயின்று.
கட்டி முடிச்சிடக் கட்டி லகப்பட்டுக்
கட்டில் சுகப்பட்டு கட்டுண்ட – கட்டைநீ
விட்டு விடைபெற்று விண்ணில் கொடிக்கட்ட
கட்டும் படிக்கட் டுயர்த்து.
சக்தி சக்திதாசன் கவிதைகள்!
1. அலாரம் அலற விழித்தன விழிகள்
இரவெனும் நதியிலேகி வண்ணக்
கனவெனும் படகிலேறி வானில்
மிதந்து சென்ற உணர்வினையேந்தி
வியந்து நின்ற வகையிங்கு பகர
சின்னச் சின்னச் நட்சத்திரங்கள்
சொன்ன பல சுவையான கதைகள்
வண்ண முழு நிலவது தானும்
மெல்லத் தேயும் விந்தை விளக்க
கவிதை: நாள் தூரமில்லை!

பெருகிவரும் மக்கள்தொகை பீதியூட்ட, தேவைகளும்
பெருக்கெடுக்கும் காலமொன்று பேதலிப்பை ஏற்படுத்த
எரிசக்தி நீர்வளங்கள் நிலவளங்கள் பற்றாக்குறை
ஏற்படுத்தப் போகின்ற எதிர்கால விபரீதம்
உருகிவரும் பனிமலைகள் ஒழுகிடவே ,கடல்மட்டம்
உயர்வடைந்து நிலம்குறைந்து மழைவெள்ளம், இடிமின்னல்
ஒருபோதும் இல்லாத வகையினிலே பயங்கரமாய்
உலகத்தை ஆட்டிவைக்கும் நிலைவரும்நாள் தூரமில்லை.
க.பிரகாஷ் கவிதைகள்!
1. புனல் வாதம்
கவிதை எழுத தெரிந்த எனக்கு
அதை வெளியிடத் தெரியவில்லை
இதுவரை எழுதிய எனது கவிதையை
வைகை ஆற்றில் – காகிதக்
கப்பலாக ஓடவிட்டேன்
தன்னைச் சுடும்
கரையில்லாக் கடல்
இவ்வுலகுக்குப் பாழ்
கறையுள்ள மனித மனம்
மனிதகுலத்துக்கே பாழ்
மனமில்லை
மல்லிகைக்கு – நல்ல
மனமுண்டு – அதை
நுகரும் மனிதனுக்கோ
மனமும் இல்லை
மானமும் இல்லை
’ரிஷி’யின் கவிதைகள்!
தோரணைகள்
1
முகம் திரிந்து நோக்கியதில் குழைந்த மனம்
அழையாத விருந்தாளி ஆக அறவே மறுக்க
நெருங்கிய உறவெனினும் ஒருபோதும்
நுழைந்ததில்லை யவர் வீட்டில்…
யாசகமாய்ப் பெறுவதல்லவே பிரியமும் அக்கறையும்…
பசியை மூட்டை கட்டித் தலைச்சுமையோ டேற்றி
தன்மானமே பெரிதெனப் போய்க்கொண்டிருந்தாள் மூதாட்டி.
தளர்ந்த கைகள், தள்ளாடுங் கால்கள்…..
வளராக் கூந்தல் வளரும் நரை
முள்தைத்த பாதம், கண்ணில் புரை….
எனில்
வைராக்கியம் வேரோடிய மனம்.
பா வானதி வேதா. இலங்காதிலகம் ( டென்மார்க். ) கவிதைகளிரண்டு!
1. புல்.
புல்லில் படுத்து வானம் பார்
அல்லல் தீர்க்கும் பாதைக்கு ஊர்!
மெல்லென மனவுடல் களைப்பழிக்கும் இச்சை
சில்லெனக் கண்களைக் குளிர்விக்கும் பச்சை.
புல்வெளி கால்நடைகளின் மேய்ச்சல் நிலம்.
பல் வகைப் புற்கள் நல் மருந்தாம்.
புல் பூமாதேவியின் பாதுகாப்புக் கவசம்.
உல்லாசம் சீவன்களிற்குப் புல்லில் புரள்தல்.
புல்லில் காகிதம் செய்தனர் கி.மு2400ல்.
புல்லின் அரசன் அறுகம் புல்லாம்.
அகரம் புல், அருகன் புல்லாகிய
அறுகம் புல்லில் பல இனங்களுண்டு.
ஏகப்பட்ட பெயர்கள் அருகன் புல்லிற்கு.
காகா மூலி, ஆரோக்கியப் புல்,
குழந்தைகளிற்குக் குருமருந்து, பிள்ளையார் புல்,
விஷ்ணு மூலியென்றும் சித்தர் வழங்குகிறார்.
ரிஷி கவிதைகள்!
1. வெந்து தணியும் காடு….
துண்டுப்பெண்ணொருத்தியிடம் இவளது அந்தரங்கத்தை
யவர்கள் விண்டுவைத்துக்கொண்டிருக்கும் நேரம்
ஒருவேளை கள்ளச்சிரிப்புடன் கண்ணடித்துக்கொண்டிருக்கக்கூடும்;
வியூகம் அமைத்து வென்று சூடிய வாகைகளைக்
கணக்கெடுத்துக்கொண்டிருக்கக்கூடும்….
என்றேனும் அறிவார்களோ _
கூண்டுக்குள் வசிக்கப் பழகிவிடும் கிளி யல்ல இவள்;
அரசனருகில் அப்பாவியாய் ஆரோகணித்திருக்கும் அன்னமும் அல்ல.
கழுகின் கூர்விரிவைக் கைக்குள் பிரபஞ்சமாக்கி
விட்டு விடுதலையாகிநிற்கும் சிட்டுக்குருவி!
இருந்தும் சக்ரவர்த்தியின் திருத்தோள்களைக் கூடாகத் தரித்திருந்ததெல்லாம்
அவர் அருமை பெருமை அறிந்ததாலேயே.
அரசவையோ, பரிவாரமோ பரிசில்களோ ஒரு பொருட்டில்லை யென்றுமே.
ஆன்மாவின் அடியாழத்தைத் தீண்டுமவர் ஆலோலங் கேட்கவே
தத்தித்தத்தி நடைபழகிவந்த திக் குருவி யவர் காலடியில்.
ஜூன் 2015 கவிதைகள்: மேலும் சில...
க.பிரகாஷ் (முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை) கவிதைகள்!
இயற்கையின் வெற்றி
விளைநிலம் பல்பொருள் விளையிடம்
அறுவடையோ சந்தைக்கு
விளைநிலம் விலைநிலமாக
விற்பனை சதுரக்கணக்கில் – விண்ணுயர்
கட்டட அறுவடையோ இயற்கைக்கே!
பொருளாதாரச் சிந்தனை
கல்விக்கலைக்கு மொழி தேவையா
மொழியாளுமை நல்லறிவாம்
நல்லறிவை விலை பேசலாம்
சாதி மதம் மொழி கல்வி – அடிப்படை
பொருளாதாரம்! பொருளாதாரம்!
ஜூன் 21 தந்தையர் தினக்கவிதை: அப்பா!
கட்டபொம்மனும்
கர்ண மகாராசனும்
எல்லாமே எனக்கு
என்னுடைய அப்பாதான்.
எனது எதிர்காலத்துக்கு
இன்றும்
சொல்லத்தெரிந்தது
“அப்பா போல வரணும்.”
நான் அறிந்த
கணிதமும் இலக்கியமும்
அப்பாதான்.
பேராசிரியர் கோபன் மகாதேவாவின் கவிதைகளிரண்டு!
மந்தாரத்திலும் மகிழ்வற வாழ்வு
ஆற்றலினால் ஆற்றி விட்டு ஆறுதலைத் தேடும் அவர்...
வேற்று நிர்ப்பந்தங்கள் நிதம்நிதம் நிமிர்த்தும் அவர்
கூற்றுக்கள் கவிதைகளைக் கடு கெதியில் பதிவதற்கு
ஊற்றுப் பேனாக்கள் பல உசார்நிலையில் காத்திருந்தும்...
ஏற்றுத் தான் வாழ்ந்து கொண்டு. வந்தபல இடர்களையும்...
நேற்றிருந்த பிரச்சனைகள் நாளைஇரா எனும்படியாய்
மாற்றாரையும் மதிப்பார் சமைக்கும் சிறு கறிகளுடன்
சோற்றையும் குழைத்திடுவார் சேர்ந்துஉண்டு மகிழ்ந்திடுவார்.
கூற்றைப் போல் ஒரு பக்கம் இடுப்பு என்றும் வலித்தாலும்
ஏற்றுப் பொறுத்திடுவார் தனக்கு வரும் நோ(ய்)க்களினை...
ஈற்றுஇருந்து தனிமையிலே ஈழத்தை நினைக்கையிலே
காற்றில்வரும் செய்தி-பல காதுகளைக் கடித்திடினும்...
வீற்றிருந்து படிக்கின்றார் விதம்விதமாம் நூல்களினை.
காற்றும் குளிர்கால மழைகள் புறம் ஊற்றிடினும்...
நோற்று வாழ்ந்துகொண்டு நான்-எனும் திமிர்இன்றிப்
போற்றுபவர் போற்றட்டும் தூற்றுபவர் தூற்பர் என...
ஆற்றுகின்றார் இன்னும் தன் ஆக்கங்கள் மகிழ்வறத்தில்.
மற்ற கட்டுரைகள் ...
- துயரச்சித்திரம்
- முகநூல்: தமிழினி ஜெயக்குமாரன் கவிதைகள் நான்கு!
- முகநூல்: தமிழினி கவிதைகளிரண்டு!
- எழுதுகோல் எடு!
- ஒரு தீர்மானம்!
- குடிகார அப்பாக்கள்!
- ஆசிரியர் தினச்சிறப்புக் கவிதை 13.5.2015: பாதம் தொட்டு வணங்குவோம்
- மணிக்குள் நிமிடமாய் மறைந்தவன்
- இரங்கல் கவிதை: எழுத்தாளனை அதிகம் நேசித்தவன் நீ
- அன்றிலும் மகன்றிலும்
- இர.மணிமேகலை கவிதைகள் மூன்று!
- என்னைக் கேட்டால்..
- வேதா. இலங்காதிலகம் கவிதைகள்!
- சேயோன் யாழ்வேந்தன் கவிதைகள்!
உட்பிரிவுகள்
கவிதை கட்டுரை எண்ணிக்கை: 788
பதிவுகள்
- பதிவுகள் முகப்பு
- ஆதவன் கதிரேசர்பிள்ளை
- ஜோதிகுமார்
- கிறிஸ்டி நல்லரெத்தினம்
- யமுனா ராஜேந்திரன்
- முருகபூபதி
- சுப்ரபாரதிமணியன்
- தேவகாந்தன்
- வெங்கட் சாமிநாதன்
- கே.எஸ்.சிவகுமாரன்
- நுணாவிலூர் கா.விசயரத்தினம்
- முனைவர் ஆர்.தாரணி
- லதா ராமகிருஷ்ணன்
- குரு அரவிந்தன்
- கலாநிதி நா.சுப்பிரமணியன்
- கலாநிதி சு.குணேஸ்வரன்
- ரிஷான் ஷெரீப்
- நாகரத்தினம் கிருஷ்ணா
- சத்தியானந்தன்
- ரஞ்ஜனி சுப்ரமணியம்
- வாகீசன்
- வேந்தனார் இளஞ்சேய்
- நவஜோதி ஜோகரட்னம்
- ஶ்ரீரஞ்சனி
- த.சிவபாலு
- பதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)
- பதிவுகள் (2000 - 2011)
- சுற்றுச்சூழல்
- விளையாட்டு
- விளம்பரம்
- வரிவிளம்பரம்
- அரசியல்
- நேர்காணல்
- இ(அ)க்கரையில்
- இலக்கியம்
- சிறுகதை
- கவிதை
- அறிவியல்
- ஆய்வு
- நிகழ்வுகள் & அறிவித்தல்கள்
- நூல் அறிமுகம்
- கலை
- கட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு
- பதிவுகளில் அன்று
- மின்னூல்கள்
- அறிஞர் அ.ந.கந்தசாமி
- வ.ந.கிரிதரன்
- கணித்தமிழ்
- சமூகம்
- சிறுவர் இலக்கியம்
- பயணங்கள்
- பதிவுகள் மின்னூற் தொகுப்புகள்
- பதிவுகள் விளம்பரம்
- மரண அறிவித்தல்கள்
- வாசகர் கடிதங்கள்
- நாவல்
- சினிமா
- முகநூற் குறிப்புகள்
- நலந்தானா?
- Canadian News
- நூலகம் - கிடைக்கப்பெற்றோம்
- Privacy Policy for Pathivukal
அண்மையில் வெளியானவை
- கனடா - ரொறன்ரோவில் நூல் வெளியிட்டு விழா! - சுலோச்சனா அருண் -
- ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: "முன்வரலாற்றுக் கால தமிழகம் ; இடம் - மனிதர்கள் - மொழி. அண்மைக் கால உரையாடல்கள்."
- சிறுகதை: கைக்குள்… -பாலமுருகன்.லோ -
- பதிவுகள் இணைய இதழுக்குப் படைப்புகள் அனுப்பும் எழுத்தாளர்களுக்கு!
- இரங்கல் செய்தி - டாக்டர் தி. ஞானசேகரன்! – குரு அரவிந்தன் -
- சித்திரைத் திருமகளை வரவேற்போம் வாருங்கள்!! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
- கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு!
- ஞானம் ஆசிரியர் ஞானசேகரன் - படைப்பிலக்கியத்துறையிலிருந்து இதழாசிரியராகவும் பதிப்பாளராகவும் பரிணமித்த ஆளுமை! - முருகபூபதி -
- அஞ்சலி: எழுத்தாளர் ஞானசேகரன் மறைந்தார்! - வ.ந.கிரிதரன் -
- அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூல் பற்றிய குறிப்புகள்! - வ.ந,கிரிதரன் -
- நீலகிரி படகர்களின் ‘சுத்துக் கல்லு மொரா’ எனும் கடவுள் முதுமரமும் சங்கக் கூறுகளும்! - முனைவர்.கோ.சுனில்ஜோகி , உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை -
- நனவிடை தோய்தல்: குழையல் சோறு! - இந்து.லிங்கேஸ் -
பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே
ISSN 1481 - 2991
Editor-in - Chief: V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
பேராசிரியர் நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர் லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)
அடையாளச் சின்ன வடிவமைப்பு:தமயந்தி கிரிதரன்
'Pathivukal' Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor Durai Manikandan (TamilNadu)
Professor Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy (Australia) Logo Design: Thamayanthi Giritharan






ISSN 1481 - 2991
ஆசிரியர்: வ.ந.கிரிதரன்
Editor-in - Chief: V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
பதிவுகள் இணைய இதழின் முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். இது இலாப நோக்கற்று இயங்கும் இதழ். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
Pathivugal Online Magazine''s main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. It operates on a not-for-profit basis. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள்.காம் மின்னூல்கள்
Yes We Can
IT TRAINING
* JOOMLA Web Development* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
* C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com
பதிவுகள் விளம்பரம்





