1. எம்.எஸ்.வியிசை வண்ணங்கள் தரளக் குவியல்
அசைந்தாடும்தென்றலின் பயணம் இவரிசை.
திசையின்றி உலகெங்கும் பரவிய பேரருவி.
இசைக் கௌரவம் நீராரும் கடலுடுத்தி..
நசையுறு இசைக்கு அழிவில்லை அஞ்சலிகள்.
சங்கீதம்! இங்கிதமுடை சுவர சாரதி.
அங்கீகாரம் கலைமாமணி, பிலிம் பெஃயர்,
மங்காத வாழ்நாள் சாதனையாளர், கௌரவ டாக்டர்.
சங்கீத இராசாங்கம் 1945 – 2015வரை.
இசைப்படியமைவு '' பணம் '' என்எஸ். கிருஷ்ணன்
இசைக்கருவி மூன்றுடன் தாழையாம் பூமுடித்து.
இசைக்கருவி முன்னூறுடன் எங்கே நிம்மதி.
இவரிசைமன்னன் பேரருவி, மெல்லிசை மன்னன்.
மனயங்காத் சுப்பிரமணியம் விசுவநாதன் ஐயா
கேரளா பாலக்காட்டு மகாஇசைப்பிறப்பு 24-6-1928.
சரளமாய் 1200 படங்களிற்கு மேலிசையிட்டார்.
பிரவாளயிசையதிபதி உயிர் மறைவு 14.7.2015.
(பிரவாளம் - பவளம்.)
2 எம்.எஸ்.வியிசை வண்ணங்கள் தரளக் குவியல்
முருக பக்தர் எம்.எஸ்.வி
வறுமையிலிருந்து பெருமை பெற்றார்.
வெறுமையறு நிறைவிசை சமைத்தார்.
பெருமையுடை துணைவி ஜானகியம்மாள்.
கல்விச்சாலைசெல்லாத இசைமேதை.
கண்ணகியிலிருந்து பத்துப் படநடிகர்.
கடும் வயோதிபத் துன்பமேக(ஏகல்)
கண்மூடினார் அமைதி கொள்ளட்டும்.
எண்பத்தேழு வருடங:களில் எத்தனையிசை!
எகிப்து இசை பட்டத்துராணி
மெக்சிக்கன் இசை முத்தமிடும் நேரமெப்போ
ரஷ்ய இசை கண்போன போக்கிலே
லத்தீன் இசை யார் அந்தநிலவு
யப்பானிசை பன்சாயி காதல்பறவைகள்
பெர்சியன் இசை நினைத்தேன் வந்தாய்!
பெருமை!..இனிமை!..தமிழே!....
3, துர்க்காதேவி.
சிம்மவாகினி தாயே எம்
அம்மா துர்க்கா தேவி
தீய சக்தி ஒளிக்க
தீயாய் துணை வருவாய்.
நவராத்திரி ஒன்பது நாட்கள்
தவமான முதல் மூன்றும்
நவசக்தி நாயகி உன்னை
நலம் வேண்டி வணங்குவோம்.
மகிஷாசுரமர்த்தனி அகிலாண்ட ஈசுவரி
மங்களசண்டிகையே அருள் வடிவே
ஆதிபராசக்தி அன்பின் உருவே
ஆபத்தைத் தடுப்பாய் போற்றி.
திரிசூல நாயகியே போற்றி
திரிபுர சுந்தரியே அருள்வாய்
பரசுராமருக்கு அமரத்துவம் தந்தாய்
பக்தியுடன் உன்னைப் பணிகிறோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.