கவி யாற்றலை வளமுடைத் தாக்கி !
தமிழினை உயர்த்திட கவிபாடிடும் கூட்டம்
வஞ்சகப் போட்டியாளர் பொறமை தனத்தினை
சொற்களால் எரிந்து மகிழ்ந்து விளையாடும்
பொல்லா மனசு இருந்திடல் கண்டு
நல் லுள்ளங்களில் வேதனைத் தழும்பு !
நண்பர் கொடுமை கவிதைப் போராட்டம் !
சரித்து வீழ்த்திச் சாபமிடும் மன வெறி
உயிர் தமிழ் மொழி அழிந்து கவிமனம்
பொறாமை தளையிடை வேதனைப்படுந்துயர்
ஊதிப் பெருத்திட ஆற்றலை அழித்திட
கவி உள்ளத்தில் வேதனை நெருப்பு !
கவிதை மழை சுனாமியாகி முகக்கடலில்
அலையாய் தடவிடும், முகநூல் தோழர்
மனம் நொந்திட கண்ணீர் சிந்திட
புரியா மனதினர் பொறாமை பிடித்தவர்
பா வடித்தாலும் பாராட்டுப் பெற்றாலும்
நேர்மை நெஞ்சில் கனலும் நெருப்பு !
நேர்மை தொலைந்து பேராசையில் வீழ்ந்து !
தலைக்கனம் நிறைந்து செயலில் ஆழ்ந்து !
கவிதைப் பாயில் அகங்காரம்படுத்து !
கவி யாத்மாக்கள் இழிநிலை கண்டு !
அன்பான உள்ளங்களில் எரியும் நெருப்பு !
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.