சித்திரத்தாள் சிரித்தாள் எனைப் பார்த்து. எம் சுவரின்
மத்தியிலே தூக்கி, மறைந்து சென்று மறந்து வரும்
சித்திரத்தாள், இன்று சிரித்தாள். என் சென்றவளின்
முத்துப் போல் பல் வரிசை மிளிர்ந்து முகம் மலர்ந்து
சிரித்தாள், இதழ் பிதுக்கி, இடக்கண்ணைச் சிறுக்கவைத்து.
புன்னகித்துக் குறும்பினளாய் என் மனதைத் துள்ள வைக்க
இன்பம் குவிந்து நான், இருந்தாப் போல் குதூகலித்தேன்.
என்னவளின் அவ்வுருவம் எம் திருமணத் தினமின்று
தன் நினைவைத் தூண்டித் தனிமையினைத் துரத்தியது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.