என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
என்னுள் விளையும்
எண்ணங்கள் என்பேன்
என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
விண்ணில் தோன்றும்
விந்தைகள் என்பேன்
என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
கற்றுக் கொண்ட
பாடங்கள் என்பேன்
என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
என்னுள் என்னைத்
தொலைத்தேன் என்பேன்
என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
என்னை எரித்த
எண்ணெய் என்பேன்
என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
காலில் தைத்த முட்கள்
பயணத்தின் துணை என்பேன்
என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
கவியரசரின் முன்னே
கால் தூசு என்பேன்
என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
அன்பு மனங்களின் பாசம்
என் எழுத்தின் வாசம் என்பேன்
என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
என்னை அறிந்திடும்
தேடலின் பாதை என்பேன்
என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
எல்லாம் தமிழினுள்
ஜக்கியம் என்பேன்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.