மனக்குறள் (1 - 8) - குறள் வெண்பா -

மனக்குறள்-1: முற்றும் அறத்தின் முடிபே!
பொள்ளாச்சி நல்ல புதுமை மகத்துவங்கள்
இல்லா தொழிந்ததுவோ இன்று?
நாடு நரிகளென்றால் நத்தும் விசுக்கல் என்றால்
ஊடு வலிதானே ஓடும் !


மனக்குறள்-1: முற்றும் அறத்தின் முடிபே!
பொள்ளாச்சி நல்ல புதுமை மகத்துவங்கள்
இல்லா தொழிந்ததுவோ இன்று?
நாடு நரிகளென்றால் நத்தும் விசுக்கல் என்றால்
ஊடு வலிதானே ஓடும் !

1
பதின் பருவ பள்ளியாய்ப் போன
முள் மரங்களின் குத்தகைத்தாரர் நீ
ஆடுகளின் ஓய்விடங்கள்
கவட்டையோடு உன்னை அடிக்க
அலைந்து திரிந்த நிலங்கள் பலவிதம்
தலை தூக்கி சூரியனோடு நீ பேசும்
உரையாடல் கேட்க காத்திருந்த மணித்துளிகள் பல
எதற்குத் தலையாட்டுகிறாய் என்று
என்னைத் தவிர யாருமில்லா நண்பகலில்
சிந்தித்துக் கொண்ட காலங்கள் அநேகம்
என் கவட்டைக் கல்லுக்கு இரையான உனது
உறவினர்கள் கனவுகளில் புரியாத மொழியில்
பேசிக் கொண்டே இருக்கிறார்கள்

- கவிஞர் கண்ணதாசனின் பிறந்த தினம் ஜூன் 24. அதனையொட்டி வெளியாகும் கவிதையிது. -
திரையுலகில் புகுந்தாலும் திறலுடைய சொற்கொண்டு
பலருடைய மனமுறையப் பாடியவர் நின்றாரே
நிலைநிற்கும் பலகருத்தை சுமந்துவந்த அவர்பாட்டு
நெஞ்சமதில் எப்போதும் நிலைத்துமே நிற்கிறது !
காதலவர் கைபட்டால் காமனுமே கலங்கிடுவான்
தேவர்கூட அவர்பாட்டை திறமென்றே பகர்ந்திடுவார்
சாதிமதம் காதலுக்கு தடையாதல் தகாதென்று
சேதிசொன்ன பாடலைநாம் தினமுமே ரசித்துநிற்போம் !
பட்டினத்தார் தத்துவத்தைப் பலபேரும் அறிவதற்குப்
பலபாட்டில் தந்துநின்ற பாவேந்தன் கண்ணதாசன்
இஷ்டமுடன் தமிழ்தந்தான் எமையென்றும் மகிழ்வித்தான்
கஷ்டம்பல பெற்றிடினும் காலமெலாம் வாழுகிறான் !

பதியிழந்து பலமிழந்து,
படைத்துவிட்ட நாடிழந்து,
கதியிழந்து வருவரல்ல அகதி! - ஆங்கே
விதியிருந்தும் கதியிருந்தும்,
விபரமற்றோர் தமைமிதிக்கும்,
வீணர்களே உள்ளூரின் அகதி!
நெற்றிதன்னில் வழிகின்ற,
நீள்வியர்வை நிலஞ்சிந்த,
கஷ்டமுற்று உழைப்பவனின் கூலி! - அதை
பத்தினுக்கு எட்டாக்கி,
பகற்கொள்ளை அடிப்பவரே,
சொத்துசுகம் வைத்திருந்தும் அகதி!
விரதமெலாம் தானிருந்து
விரும்பியெனை இறைவனிடம்
வரமாகப் பெற்றவரே
வாய்மைநிறை என்னப்பா
விரல்பிடித்து அரிசியிலே
எழுதவைத்த என்னப்பா
உரமாக என்னுள்ளே
உணர்வோடு கலந்துவிட்டார் !
தோள்மீது எனைத்தூக்கி
தான்மகிழ்ந்து நின்றிடுவார்
வாழ்நாளில் வீழாமல்
வளரவெண்ணி பலசெய்தார்
மெய்வருத்தம் பாராமல்
எனையெண்ணி தானுழைத்தார்
கண்ணெனவே காத்துநின்றார்
கருணைநிறை என்னப்பா !
பொட்டுவைத்த என்முகத்தை
கட்டிக்கட்டி கொஞ்சிடுவார்
பட்டுச்சட்டை வாங்கிவந்து
பரவசத்தில் மூழ்கிடுவார்
இஷ்டமுடன் தன்மார்பில்
எனையுறங்க வைத்திடுவார்
அஷ்ட ஐஸ்வரியமென்று
அனைவர்க்கும் சொல்லிடுவார் !
நானுண்ட மிச்சமெலாம்
தானெடுத்து சுவைத்திடுவார்
அவர்பாதி நானென்று
அவருக்குள் எண்ணிடுவார்
உலகிலென்னை உயர்ந்தவனாய்
உருவாக்க உருவானார்
நிலவுலகில் என்னப்பா
நிகரில்லா தெய்வமன்றோ !

பல்கலைக் கழக மென்று : பாரது போற்றிச் சொல்ல,
நல்லதோர் குடும்பம் செய்யும்…..சிந்தை ! - அந்த,
நல்லவர் பேருலகில்…….. தந்தை....!
ஓர்பது மாதந் தன்னில் : ஒருத்திதன் வயிற்றிற் கொளினும்,
யார் அதன் வேரை இட்டார்……. முதலில் ? - அவர்,
பேர் அது தந்தையாகும்…… உலகில்....!
வானது பெய்தால் தானே : வையகம் பசுமை காணும்,
வானைப்போல் வழங்கிடுவார்…… வாரி ! - அந்த,
வான்புகழ் கொண்ட தந்தை ……. பாரி...!
அன்பெனும் அமளி மேலே : அன்னைதான் துயிலச் செயினும்,
நன்புகழ் அறிவை ஏற்றும்……. ஜோதி ! - அது,
நானிலம் புகழும் தந்தை……. ஜாதி...!
எதை எதோ நினைத்து நெஞ்சம் : ஏங்கிய போதும் மழலை,
உதையினைக் கண்டபோது…… மலரும் ! - அந்த,
உத்தமர் தந்தை என்பார் ……. பலரும் !

பலூன் ஊதிக்கொண்டிருந்த அந்தச் சிறுமி
தவறி அதனுள் விழுந்துவிட்டாள்.
அவளுடைய மூச்சுக் காற்றில்
பலூன் பெரிதாகிக் கொண்டிருந்தது
அவள் மூச்சில் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டேயிருந்தது.
பலூனில் கருவில் இருக்கும் சிசுவைப் போல
தத்தளித்துக் கொண்டிருந்தாள்
பலூனின் வாயைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்துவிட
பிரயத்தனம் செய்தவைகள் எல்லாம் வீணாகிக் கொண்டிருந்தன.
“பஞ்சத்தில் உழன்று : பட்டினி கிடந்தாலும்….
பட்டதாரி ஆக்கிப் : பார்க்க வேண்டும் தம்மகனை….”
நெஞ்சத்தில் நினைப்போடு : நிறையப் பெற்றோர்கள்,
நெருக்கடிகளைச் சுமந்து : நேரகாலத் தையும்மறந்து ….,
பட்டணம் அனுப்பிவைத்துப் : பட்டதாரி ஆக்கிவிட்டு,
பட்டயம் பெற்றதனைப் : படம்பிடித்து மாட்டிவைத்து,
தொட்டதனைப் பார்ப்பதிலே : சுகமொன்றைக் கண்டுவிடும்,
பெற்றோர்க்கும் பிள்ளைகட்கும் : இக்கவிதை சமர்ப்பணமாம் !
பட்டம் பெறுவதில்தான் : பற்றெல்லாம் இருந்ததனால்,
பழகியே எத்தொழிலும் : பார்ப்பதற்கு வாய்ப்பு இன்றிப்,
பாவம் இவன் நிலைமை : பயனற்ற அலைச்சலிலே…….
பணிகள் பலதேடிப் : படியேறி இறங்குகின்றான்…..!
ஒரு ரூபாச் சீட்டினிலே : ஒரு லட்சம் கனவுகாணும்….
உருப்படார் வரிசையிலே : உள்ளபடி இவனும் ஒன்று !
“உனக்கும் கீழுள்ளோர் : ஒருகோடி என அவரை,
நினைத்துப் பார் அதிலே : நிம்மதியை நாடு” என்று….,
செப்பிய கவிஞர் தன் : சிந்தனை வரிகளை….
திருப்பியே பார்த் துணர்ந்து : திருந்தியே கொள்ளுங்கள் !
“உனக்கும் முன்னே : உள்ளவர் பலரே….
உத்தியோகம் பெற்றோர் : ஒருவர் சிலரே….! ”
என்கின்ற உண்மையை : ஏற்றிட மறுத்தே,
இன்னும் வாழ்க்கையை : இழந்திட வேண்டாம் !
பட்டம் பெறுவதும் : படிப்பில் உழல்வதும்,
“பாபச் செயல்” என்று பகர்ந்திட வில்லை !

அறம் பொருளின்பமென்று முப்பால் முலையெடுத்து
புறம் அகம் நிகழ்வதத்தனையும் - இகம் பரமென்று
எங்குள்ளார்க்கும் புகட்டிப் புவிதனில் புகழொடு
தோன்றிப் புகழொடு மறைந்தான் திரு வள்ளுவன் !
ஒன்று தெய்வமென்றுணர்தல் வேண்டுமென்று ஓதி
ஒற்றுமையின் வலுவுரைக்க ஓயாது பாடிப் - பெண்ணடிமை
தீருமட்டும் கவியெடுத்துச்சாடி களிறிடரித்தான் விழுந்து
கண்ணணோடு உறைந்தான் கவி பாரதி !
அன்பாயுதமெடுத்து அஹிம்சையென்னும் உறையிலிட்டு
துன்பம்வரும் வேளையிலும் மலர்ந்து - காலன் வரும்
காலம்வரை நடந்து கருப்பு வெள்ளைக் கலகமோய
கணைகள் வாங்கிச் சரிந்தான் மகான் காந்தி !
நோயடித்த பிள்ளைகளின் துயர்துடைத்தோர் கருணைத்
தாயென்றணைத்து நின்றாள் - அவள் கரம்பட்டுத்
தலைதெறிக்க ஓடியதாம் பிணிகள்; தம்சேவை தேவையென
தேவனழைக்கச் சென்றாள் அன்னை தெரசா !

விரிந்த உலக வலையின்
அத்தனை நம்பிக்கைகளும்,
தத்துவங்களும்,
மதங்களும்
சாமானியனுக்கு கைவிரிக்கும்.
அனுதினமும் சாண் எற முழஞ்சறுக்கி
கரையேற்றத்தை கானல் நீராக்கி காக்கவைக்கும்.
வியாபாரிக்கு விலை மதிப்பில்லா
உலோகமோ
பண்டமோ
பத்திரமோ
அடைமானத்தின் பிடிமானமே
கஞ்சத்தனத்தை களைக்கும் நம்பிக்கைகளானது.
மோசமான வியாபாரியே
உலோகமற்ற உயிரின்
அடைமானத்தில் அவமானம் காண்பான்.
உலக மகாநேயத்தின் மன்னனை
தமிழன் என்றால்
அவனுக்கு பெரும் சக்கரவர்த்தி
வேட்பாளர் என புளகாங்கித்து முழங்கு.

1. இயேசுவின் முகத்தில் பயத்தின் சாயல்
மூக்கைத் துளைத்து
நினைவில் வடுவான
ரத்த வாசனை!
எப்பொழுது தோட்டாக்களின்
உறக்கம் களையுமோவென்று
உறங்காமல் இருந்த
பொழுதுகள் அதிகம்!
மனித ஓலங்களின் ஓசை
அடங்க மறுத்து தூங்கி
சிவந்த கண்களோடு பகல்!

தாயாரின் வலியிலே தாரணியில் வீழ்வதும்
தவழ்வதும் வளர்வதும் தானாகி நிமிர்ந்திட
ஓயாது கற்பதும் உழைப்பதும் உயர்வதும்
ஒருத்தியை மணப்பதும் உறவினில் கலப்பதும்
தீயாக இருப்பதும் தேனாகி சுவைப்பதும்
தீராத மோகத்தில் திரிவதும் திடீர்
நோயாகி வீழ்வதும் நொடிக்குள் மறைவதும்
நீதானே! வாழ்வின் நிசமும் இதுதானே..
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

சிறு தூறலாய்
காட்சி தந்த பெருமழையாயிற்று.
அம்மா
பெரிய கிடாரமாய்
கொண்டுவந்து
கூரை ஒழுக்கைச் சரிசெய்தாள்.
மரங்கள் முறிந்ததாயும்,
காற்று பேயாய் அடிப்பதாகவும்
கணபதியர் சொல்லிப்போவது மெதுவாய்
சன்னலோரம்
குந்தியிருந்தவளுக்கும்
கேட்டது.
அப்பா மூலையில் குடங்கிப்போய்
பிணம்போலக்கிடந்தார்..
மழை விடவேண்டும்..ஊருக்குள் போகவேண்டும்..
இன்று அடுப்பெரிய ஏதாவது வேண்டும்..
கடைசிக்குரலும்
'அம்மா பசிக்குது'
சொல்லி அடங்கிப்போனது.
அம்மா என்ன ஊற்றெடுக்கும் சுரங்கமா?
அழும் குழந்தைக்குப்பால்தர...??
வெறி கொண்டு அலைகின்ற
நெறி பிறழ்ந்த கூட்டமதால்
கறை படியும் காரியங்கள்
கண் முன்னே நடக்கிறது
பொறி புலன்கள் அவரிடத்து
அழி என்றே சொல்லுவதால்
குடி மக்கள் என்னாளும்
கதி கலங்கிப் போகின்றார் !
மதம் என்னும் பெயராலே
மதம் ஏற்றி நிற்கின்றார்
சினம் என்னும் பேயதனை
சிந்தை கொள வைக்கின்றார்
இனம் என்னும் உணர்வுதனை
இருப்பு கொள்ள வைக்குமவர்
தினம் தீங்கு செய்வதிலே
திருப்தி உற்று திரிகின்றார் !
(ஒரு தாயின் நிகழ்காலத் துடிப்பும்,வருங்கால எதிர்பார்ப்பும்)

1.
கட்டிய கணவர்தம்,
மட்டிலா அன்பினால்,
கட்டிப் பொன் : கனியைப்பெற் றேன்! – வாரிக்
கட்டியே முத்தம்இட் டேன்! – சிறு
தொட்டிலில் போட்டவன்,
தூங்கிடும் போதிலே,
தூய்மையாம் தெய்வம்கண் டேன்! – ஒரு
தாய்மையின் உய்வில்நின் றேன்!
2.
எட்டியே பிடித்துமார்,
பற்றியே முகத்தினால்,
முட்டியே பருகக்கண் டேன்! – முகம்
மோதியே மகிழக்கண் டேன்! - தேன்
சொட்டென வாயினால்,
விட்டிடும் வீணிரால்,
சட்டையும் நனையக்கண் டேன்! – மனம்
சாலவே குளிரக்கண் டேன்!
கருவறையில் குடியிருத்தி
குருதிதனைப் பாலாக்கி
பெற்றெடுக்கும் காலம்வரை
தன்விருப்பம் பாராது
கருவளரக் கருத்துடனே
காத்திருக்கும் திருவடிவம்
உண்டென்றால் உலகினிலே
உண்மையிலே தாயன்றோ !
குடியிருந்த கோவிலதை
கூடவே வைத்திருந்தும்
கோடிகொண்டு கோவில்கட்டி
குடமுழுக்கும் செய்கின்றோம்
கருவறையை தாங்கிநிற்கும்
கற்கோயில் நாடுகிறோம்
அருகிருக்கும் கோவிலாம்
அம்மாவை மறக்கலாமா !
அன்னதானம் செய்கின்றோம்
அறப்பணிகள் ஆற்றுகிறோம்
ஆத்ம திருப்தியுடன்
அநேகம்பேர் செய்வதில்லை
தம்பெருமை தம்புகளை
தானதனில் காட்டுகிறார்
தாயவளைத் தாங்கிநிற்க
தானவரும் நினைப்பதில்லை !

1. கன்னிக் கூறை
வாங்கி வைத்த சந்தனமும்
புதுசு மணக்கும் ஆடைகளும்
வைத்த இடத்தில்
அப்படியே இருக்கின்றன
நான்
பெரிய மனிசியாகி
இந்த வீடடிற்குள் இன்னும்
உங்களுக்காகக்
காத்துக் கொண்டிருக்கின்றேன்
உம்மா...
என்னைக் குளிப்பாட்டி
ஆடை உடுத்தி
அழகு பார்க்க
நீங்கள் இனி
வரவே மாட்டீர்களா?
இரக்கமின்றி கொலைசெய்ய
எம்மதமும் சொன்னதுண்டா
வணக்கத்தலம் வன்முறைக்கு
வாய்ததென்றும் சொன்னதுண்டா
அரக்ககுணம் மனமிருத்தி
அனைவரையும் அழிக்கும்படி
அகிலமதில் எம்மதமும்
ஆணையிட்டு சொன்னதுண்டா !
ஈஸ்டர்தின நன்னாளில்
இலங்கையினை அதிரவைத்த
ஈனச்செயல் தனைநினைக்க
இதயமெலாம் நடுங்கிறதே
துதிபாடி துதித்தவர்கள்
துடிதுடித்தார் குருதியிலே
அதையெண்ணி அகிலமுமே
அழுதேங்கி நிற்கிறதே !
பிராத்தனைக்குச் சென்றவர்கள்
பிணமாகிக் கிடந்தார்கள்
பேயாட்டம் நடந்தேறி
பெருந்துயரே எழுந்ததுவே
இன்னுயிரை ஈந்தளித்த
யேசுபிரான் சன்னதியில்
இரத்தவெறி அரங்கேறி
எடுத்ததுவே பலவுயிரை !

1. காற்று கரைந்துவிட
நிலம் சடமாக.....
நீர் உறைந்துவிட...
எத்தனித்து உமிழ்கிறது வானம்.
குளிரும் இரவுகளில்....
எரியும் மனமுல்லை.
எரியும் மனமதனில்...
விரியும் பகற்கொள்ளை.
தேர்தல்தேர்தல் தேர்தலென்று 
- சித்திரைப் புத்தாண்டு நாளினையொட்டி அண்மையில் கிடைத்த கவிதை.- பதிவுகள்.காம் -
இன்று
நாங்கள் காலை துயில் எழுந்து
நாட்காட்டியைப் பார்த்தால்
பங்குனித்திங்கள் பெற்றெடுத்த
சித்திரைப்பாவையே உந்தன்
மத்தாப்பூ முகம் தெரிகிறதே !
இன்று
நோக்குமிடமெல்லாம்
சித்திரைப் பாவையே உந்தன்
நேசக்கரம் நீட்டுகிறதே !
இன்று
கேட்குமிடமெல்லாம்
சித்திரைப் பாவையே உந்தன்
மனிதநேயம் ஒலிக்கிறதே !

1. இராவணன்களே….
அடிப்படையில் அனைவரும்
பத்துத்தலையோடுதான்
வடிவமைக்கப்படுகிறோம்
பத்துத்தலையில்
சிலவற்றைக் குறைத்துக்கொண்டவர்கள்
தலைமுறைக்குத்தேவைப்பட்டார்கள்
சிலவற்றில் சிரத்தையும்
சிலவற்றைத்தவிர்த்தும்
வாழ்ந்தவர்கள்
தலைவர்களானார்கள்
நமக்குத் தத்துவமானார்கள்
தத்துவம்தந்தார்கள்
தலைமுறைகள்
பேசவேண்டுமானால்
உங்கள் கவனம்
சில
தலைகளில் மட்டுமே

1. தேடி அலைந்த பாதியில் கிடைத்த மீதி
அதிகமாகி விட்டது வயது
பாா்க்காதே அதையெல்லாம்!
உடம்பு இப்படி நடுங்குகிறது
மறைக்க முடியவில்லை
அவளுக்குத் தெரிந்தால்
எனது வீரமெலாம் போச்சு!
பயந்து ஒளிந்து அவளது
அழகு உதட்டைப் பாா்த்தேன்
அனுமதித்தால் ஒரு முத்தம்
எதற்கு கஞ்சத்தனம்
அவளது விருப்பம் வரை!

புத்தாடை வாங்கிடுவோம்
புத்துணர்வு பெற்றிடுவோம்
முத்தான முறுவலுடன்
சித்திரையை காத்திருப்போம்
எத்தனையோ சித்திரைகள்
எம்வாழ்வில் வந்தாலும்
அத்தனையும் அடிமனதில்
ஆழமாய் பதிந்திருக்கும்
சொத்துள்ளார் சுகங்காண்பர்
சொத்தில்லார் சுகங்காணார்
எத்தனையோ துயரங்கள்
இருந்தேங்க வைக்கிறது
அத்தனையும் பறந்தோட
சித்திரைதான் உதவுமென
நம்பிடுவார் வாழ்வினிலே
நலம்விளைப்பாய் சித்திரையே