கவிதை: முதியோர் முரசு

அது ஒரு அளவான குடும்பம் - ஆனால்
அழகான குடும்பம் என்று சொல்வதற்கில்லை...
அது மூன்று தலைமுறைகள் வாழுகின்ற வீடு
மூவருக்கு அது கூடு -
வயதில் முதிர்ந்த இருவருக்கு அது கூண்டு...
முதிர்ந்த தலைமுறைக்கு மகனொருவன்
உண்டு - அவன் மனைவி என்னும்
மலரின் பின்னால் சுற்றுகின்ற மயக்க வண்டு...
இன்னும் சொன்னால் மனைவி
என்னும் சாட்டையால் சுற்றுகின்ற பம்பரம்
மணிக்கணக்கில் வேலை
செய்து தளர்ந்துவிடும் எந்திரம்...
அந்த வீட்டின் இல்லத்தரசி ஆணைகளால் ஆளுகிறாள் -
அடக்கி ஆளுகின்ற அதிகாரத்தால் நீளுகிறாள்...
மூன்றாம் தலைமுறையாய் மழலை
மொழி பேசும் மகவொன்றும் உண்டு -
அவன் வாசமும் பாசமும் வீசுகின்ற மலர்ச்செண்டு...
அந்த வீட்டின் இரு தூண்கள் வேம்போடு ஓர் அரசு...
அவர்கள் படும் இன்னல்களில் உருவானது என் முரசு...
வாழ்கையில் கடந்து வந்த பாதைகளை
முதிய நெஞ்சங்கள் அசை போடுகின்றன
விரக்கிதியின் விளிம்பில் நின்று
சோக இசை பாடுகின்றன...



- 30.08.2019 அன்று, “மனைவியர் தின” த்தினை முன்னிட்டு, குத்துவிளக்காகத் திகழும் “குடும்ப விளக்கு”ப் பெண்ணைச் சிறப்பித்த பாவேந்தரது வரிகளை, முடிந்தவரை என் வரிகளில் தருகின்றேன். -

தண்ணீரில்









பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









