முகவரி.
திமிராகக் கம்பீரமாகக்
கரையொதுங்கும் அலைகளின்
நுரைச் சதங்கைகள் அமைதியாகின.
ஆர்ப்பரித்தலும் அடங்குதலும் அதன் விதி.
சங்கு சிப்பிகளை அள்ளி வருதலே அதன் முகவரி
கடல் மொழியின் கிளை உச்சாணியில்
காத்திருக்கும் பறவையாக அல்ல
சிறகு விரிக்கும் கவிதைப் பறவையாக நான்.
oo
வாழ்வு முழுதும்...
கெட்ட வார்:த்தைகள் மொழியும் ஒருவன்
கெட்ட வார்த்தைகளால் வளர்க்கப் பட்டிருப்பானோ!
கொட்டிப் பின்னப்பட்டு குட்டுப்பட்டும்
கெட்ட வார்த்தையோடு அமர்ந்திருப்பது
பட்ட மரத்தினடியில் இருப்பது போன்றது.
கெட்ட கனவுகளின் கிண்ணமே அவள் வாழ்வு முழுதும்.
ஆட்டம் ஏன்!!
பெரிய மனிதக் கடலில்
நரி போன்ற திமிங்கிலங்கள்
செரிக்கச் செரிக்கக் குட்டிமீன்களை
அரித்து அரித்து உண்டன.
மனிதப் பாறைகளும் பார்த்தபடி
அநியாயங்களை வெகுவாக இரசித்தபடி
குறியான போதை பெருகியது
வெறியாக உலகை மிரட்டுகிறது.
உயிர் பிளக்கும் அநியாயம்
துயரம் வார்த்தைகளும் ஊமையானது.
உயர்ந்து கடலலைகள் அடித்தது.
அயர்ச்சியின்றி அனைத்துமடங்கியது! மௌனம்!!
30-7-2019
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.