காலைக் கதிரவனோடு
கைகோர்த்து
தூரத்து
ரயில் பயணம்
தொடர் வண்டியின்
தடதட சப்தம்
திடீரென
வீசிய சாரல்
மழை!!
பல வித முகங்களின்
வெவ்வேறு எண்ண அலைகளுடன் பயணம் ,
மகிழ்வுடன் என அனைத்தையும் ரசித்தே பயணிக்க எண்ணினேன் ......
ஆனால்
அருகில் புலன் ஓயாமல்
உரையாட எத்தனிக்கும்
ஒரு சக பயணி
என் இருக்கைக்கு அருகில் அமர்ந்து அவரின்
உரைவீச்சின்
வீரியத்தை
என் மீது தெளிக்க
முனைகையில்
போலியாய்
விழி மூடியே
என் பயணத்தை
நிறைவு செய்கிறேன்
வேறு வழியின்றி .....
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.