சித்தமொன்று சத்தமின்றிச் சேவகம் செய்திடும்
பத்திநாதர் தன்னைவிட்டோம் பரிதவிக் கின்றமே!
செத்துமாந்தர் சிதறுகுண்டிற் சீவியம் இழக்கவும்
அத்திரமாய்ப் பக்கநின்று ஆதரித்த தந்தையே!
காயமோடு நொந்தபோதும் கருதுமண்ணின் சேவையில்
நேயமோடு நின்றநாதர் நிலத்துநேசர் அல்லவோ?
தூயசேவை ஆகமக்கள் துன்பமோட வைத்தவர்
மாயமொடும் உலகைவிட்டார் வருந்துகிறோம் மக்களே!
ஆழியலை மீதிலுற அன்னைநில மக்களை
வாழ்வியற்றி வைத்தசேவை மறக்குமாமோ மண்ணிலே
சூழ்நிலையில் வேறுநாட்டிற் சிறக்குமாற்றல் இருந்துமே
மேழியொடும் வாழ்ந்தஈழம் மறக்கவொணாப் பத்தரே!
போரினோடும் குண்டினோடும் பெரியதுன்ப மாகையில்
ஊரினோடும் உணவினோடும் உடன்தவித்துக் காத்தவர்
பேரிதயப் பத்திநாதர் பிரிந்துவிட்டார் என்செய்வோம்?
வீரிதயம் வீழ்;ந்ததின்று வேதனையே அம்மவோ!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Jul. 14 at 11:08 p.m.