அன்பெனும் வழியெடுத்து
அறிவெனும் உளியெடுத்து
சிறந்த சிற்பங்கள் செய்யும்
செம்மையான சிற்பிகள் நீங்கள் !
நாளைய சமுதாயத்தை
நயம்பட படைக்க வேண்டி
நாளும் தவமிருக்கும்
நவயுக பிரம்மாக்கள் நீங்கள் !
தாம் பெற்றதனத்தும்
கசடறக் கற்றதனைத்தும்
தம்மக்கள் பெறவேண்டி
தவங்கிடக்கும் ஏணிப்படிகள் நீங்கள் !
ஒழுக்கம் உயர்கல்வி தந்து
தழைக்கும் வழிகள் காட்டி
தலைநிமிர்ந்து நிற்கும்
கலங்கரை விளக்கம் நீங்கள் !
உங்கள் எண்ணங்களை
உயர்ந்த வண்ணங்களை
நெஞ்சில் நிறுத்தி நேர்மை பெருக்கி
வாழ்ந்து காட்டுவோம் நாங்கள் !
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.