எழுத்தாளர் குரு அரவிந்தனின் எழுத்துகள் பற்றி.... - முனைவர் கரு. முத்தய்யா - காரைக்குடி -
4
7-வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் வை.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 3 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு ஆரம்பமானது. இந்தக் கண்காட்சியை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பித்து வைத்திருந்தார். விரும்பிய நூல்களை ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதியை இந்தக் கண்காட்சி ஏற்படுத்தி இருந்தது.
கண்காட்சி ஆரம்பமானபோது அகணி வெளியீட்டகத்தினர் கனடா எழுத்தாளர் குரு அரவிந்தனின் நூல்களையும் அரங்கு எண் 604, 605 பகுதியில் காட்சிப்படுத்தியிருந்தனர். இலக்கிய ஆர்வலர்கள் பலர் இந்த நூல்களைப் பார்வையிட்டும், வாங்கியும் சென்றுள்ளனர். தமிழ்நாட்டு வாசகர்களைச் சென்றடைய இது நல்லதொரு சந்தர்ப்பமாக அமைந்திருந்தது. அரங்கு எண் 604, 605 இன் முதல் விற்பனையாகிய ‘தங்கையின் அழகிய சினேகிதி,’ ‘மனதைத் தொட்ட எழுத்தின் பக்கங்கள்’ ஆகிய நூல்களைப் பிரபல கவிஞர் இந்திரன் அவர்கள் கவிஞர் மு. முருகேஸ் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.