1.
சின்னக்கா , அவரது பெயர் சியாமளா, அவரின் புதல்வர் தோழர் குருநாதிக்கு பதினாறு வயதிற்கு மேலே இராது . அக்காவிற்கு அந்த மித்திரனின் மீது அபார நம்பிக்கை . காரணம் அவன் அவருக்குப் பிடித்த லகஷ்மி ஆசிரியையின் புத்திரன் . அந்த கிராமத்தில் , ஆசிரியையை யாருக்குத் தான் பிடிக்காது . சரஸ்வதியின் (கல்வி) முகம் . பள்ளிக்கூடத்தில் முகத்தை பார்த்த மாத்திரத்திலே புரிந்து கொண்டு " சாப்பிட்டாயா? "என விசாரிக்கும் எம்ஜிஆரின்பண்பு. பள்ளிக்குப் பிறம்பான நேரங்களில் கிராமத்திலிலுள்ள ...மாணவரின் வீட்டிற்கும் சென்று கதைக்கும் அன்பு . மாணவரின் பெற்றோருக்கு ஆலோசனைகள் வேறு கூறுவார் . அங்கே , வறிய நிலையில் இருப்பவர் அவர் மூலமாகவும் வேலையற்ற காலங்களில் மற்றைய ஆசிரியர்கள் வீடுகளிற்கும் சென்று மா, மிளகாய்த்தூள் .... இடித்தல் முதலான வேலைகள் ,பரஸ்பர உதவிகளைப் பெறுகிறார்கள் . விவசாயிகள் வாசிகசாலைகளிற்கு விலைச்சலில் சிறிதளவு நெல்... கொடுக்கிறதும் இடம் பெறுகிறது . கொடுக்கிறதில் உள்ள நெகிழ்ச்சியில் ஒரு வளர்ச்சி ஏற்படும் என்கிறார்கள் . காந்தி வழி . அவ்விடத்துப்பெடியள் அவற்றைப் பகிர்கிறார்கள் . இவரைப் பார்த்து மற்ற ஆசிரியரும் கூட ...மாணவர் வீடுகளிற்குச் சென்று விசாரிக்கிறதெல்லாம் இடம் பெறுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் . இது ஒரு காலத்தில் உடைத்து விடுமா?சமூக சுவகளை தகர்த்து விடுமா ?
அவனுடைய இயக்கம் தாமரையில் குருநாதி சேர்ந்த போது அவன் பார்த்துக் கொள்வான் என்று தைரியமாக இருந்தார் . ‘ஆசிரிய மரியாதையை இயக்கத்திற்கு பயன்படுத்துறேன் என்ற உறுத்தல் அவனுக்கும் இருக்கவே செய்தது . அவன் சேர்ந்த போதிருந்த பொறுப்பாளர் ரஞ்சன் அவர் பகுதியைச் சேர்ந்தவர் . அவருடைய வட்டத் தோழர்கள் பாண்டி , அன்டன் , கேதீஸ்...,,அவன் .அதிலே கேதீஸ் குருநாதிக்கு அண்ணன் முறை . அண்ணனுக்குப் பின்னால் எப்பவும் அவர்களுடனேயே இழுபட்டுக் கொண்டிருந்தான்.இயக்கத்திலிருந்தாலும் அன்றாடம் காய்ச்சிகள் . அவனை விட ரஞ்சன் உட்பட மற்றவர்களும் நகரவேலைக்கும் போய்க் கொண்டிருந்தவர்கள் .
யாழ்ப்பாணத்தில் அடிக்கடி குண்டு வெடிப்புகள் ஏற்பட்டதில் வேலை வாய்ப்பெல்லாம் நின்று போய் விட்டிருந்தது . அவர்களில் ஒருத்தனாக ஒரிரவு நிலா வெளிச்சத்திலே வழுக்கியாற்றுப்பாலத்தில் தொலைவில் முழங்காலளவு (தொடை) இருந்த நீரில் இறால் பிடிக்க இவனும் வந்திருந்தான் . இவனுக்கு வெறும் கையாலே பிடிக்கலாம் என்பதெல்லாம் தெரியாது . சேற்றில் தடவி ...அவனும் கூட பிடித்ததில் இறால்கள் அகப்பட்டிருந்தன . பாண்டி வீட்டிலே கொடுத்திருந்தார்கள் . ‘ இப்படி பல தடவை போய் பிடிக்கிறது இருக்கிறது 'என்று கேதீஸ் கூறினான் . ' ஏன்ரா , கடலிலே போய் பிடிக்கிறதுக்கு என்ன ? ,வலை வீச முடியாதா?' கேட்டான் . ' விட மாட்டார்களடா'என்று அவன் சிரித்தான் . எப்படிப் பார்த்தாலும் சைக்கிளில் வலம் வந்து விடக் கூடிய தூரம் தான் கிராமம். இயக்கத்தில் சேர்ந்த பிறகு இரவில் வீட்டிற்கு லேட்டாக வாரது எல்லாம் சாதாரணமாகி விட்டிருந்தது .உயர்வகுப்பில் அவன் படித்து தேறியிருந்திருந்தால் ... இப்படி எல்லாம் வந்திருக்க மாட்டானோ ...? , அம்மா அவனை ' திசை மாறிய பறவை ' என்கிறார் . வீட்டுக்கு ஒருத்தனை விடுதலைக்குக் கொடுக்க வேண்டாமா? . கிருஸ்ணரின் பார்வையில் எல்லாமே முன்பே' தீர்மானிக்கப் பட்டது தான் நடக்கிறது .
வடக்கின் பொருளாதாரம் கடலும் , நிலமும் சார்ந்தது . அவசியம் ஒரு மரைன் (கடற் கல்வியில் வகுப்பு வைக்கிற தொழிற் ) கல்லூரி வடக்கிலே , நிறுவ வேண்டும் 'என்று அன்றே சேர் பொன் இராமநாதன் அரசை வலியுறுத்தியிருக்கிறார். ' வளங்கள் இங்கே இல்லை 'என்று மறுக்கப்பட்டு கட்டுப்பெத்தைக்கு ... கொண்டு போய் நிறுவப்பட்டிருக்கிறது . பலவித விமர்சனங்களைச் சுமந்தாலும் சேர் . பொன் .இராமநாதன் ஒரு அறிவு ஜீவி . மக்கள் மத்தியில் அதிகமாக பாமரப்பார்வைகளே நிலவுகின்றன . வெற்றுப் பேச்சுகளை வைத்து உடனுக்குடன் முடிவெடுப்பதும் சரியில்லை . சமூக வெறியரான (ஒரேற்றர்) சுந்தரலிங்கம் பற்றியும் ... இதே மாதிரி . அவர் ஓரிடத்தில் , கணித வகுப்பை.. நடத்துற போது..'படிக்க வேண்டுமடா' என மனிதராக பாடம் நடத்தியதை’ ஒருவர் நினைவு கூர்ந்து ' அவர் அப்படிப்பட்டவரே இல்லை ' என மறுத்திருக்கிறதை கட்டுரை ஒன்றிலே வாசித்திருக்கிறான் . பத்திரிகைக் கொச்சைப் பேச்சுக்களை நம்பி விடுற எமக்கு உண்மைகளை வெளிப்படுத்துற யந்திரம் ஒன்று இல்லை அது கொட்டி விடுற குப்பைகளை அள்ளுறது சிரமம் தெரிந்தது தானே . அது பொய்மையை மெய்மையாக்கிக் கொண்டு கிடக்கிறது .
நமக்கு எப்பவும் நாம் தாம் ஆசிரியராக இருக்க வேண்டும் , அது நமக்குத் தெரிவதில்லை. இயக்கத்தில் பொல்லாதது , இல்லாதது என நிறைய செய்திகள் வரும் . 'தெளிவுபடுத்தும் வரையில் . செவியில்... ஏற்றிக் கொள்ளக் கூடாது , கவனமாகவே இருக்க வேண்டும் என்றார்கள் . சமூனரிலும் பல பிழையான வதந்திகள் கலந்து விட்டிருக்கின்றன . பார்த்தீர்களா , வதந்தியில் நல்லதும் , கெட்டதும் , இருக்கிறதென்றால் ' பொய்கள் ' என்ற சொல்லே போதுமே , ஏன் ஒரே அர்த்தப்படும் இந்தச் சொல் ? . ஜூலைக் கலவரமே வதந்திகளாலே நிகழ்த்தப்பட்ட ஒன்று தான் . எவ்வளவு கோரமாக நடத்தி விட்டிருக்கிறார்கள் . . இப்ப , இவர்களுடன் நல்லுறவில் வாழ வேண்டுமாம் . முடியிறக் காரியமா? . நமக்கு வேறு புதிராகப் போதிக்க ( தமிழிழப்புத்திரர்கள் )இயக்கங்கள் வந்திருக்கின்றன . நம்ம ஆளும் அதிலே ஒருத்தர் தான் . ' இவர்களுக்கு மனிதர்கள் மனிதர்களாக தெரிவதில்லை ' என்ற விமர்சனமும் இருக்கிறது . ஓம் நமோ நாராயணா ! . இந்த பலவீனத்தை வைத்தே தெய்வத்திலும் தனிநபர் வழிபாடுகள் சொல்லப்படுகிறது . அதிலிருக்கிற புத்திமதிகளையும் நாம் எடுத்திருக்க வேண்டும் .
இன்று , உலகம் ஒரே குடைக்குக் கீழே வந்து அடையப் பார்க்கிறதா , அல்லது ஒரு சிறைக்குள் அடைக்கப் பார்க்கிறதா ? . இதனால் நன்மையை விட தீமையே அதிகமாகி வருகிறது . தவறான ஊகம் .. கண்டதைச் செய்யும் , சொல்லும் நாடுகள் . ஒரு பொய்யை விடாது சொல்லி , சொல்லி வந்தால் மெய்யாகி விடுகிறது . அப்படித் தான் சமூகமும் சமூகப் பிரிவுகளும் ஏற்பட்டன . ' ஆரியர் சொன்னதா , வெள்ளையர் சொன்னதா ? ' என பட்டிமன்றம் நடத்த வேண்டியதில்லை . பிரித்தாள்கிறவர்களுக்கு பிரிவுகளின் வளர்ச்சி தேவை .
நமக்கு ’ஒரு மூன்றாவது கண்ணும் இருக்க வேண்டும் . ‘நெற்றிக்கண் , அறிவுக்கண்‘ பற்றிய கற்பனை இப்படியாகத்தான் ஏற்பட்டிருக்கலாம் . கோயில்களில் பல தலைகள் உள்ள பெண் தெய்வத்தைக் கூட காணமுடிகிறது . ஏன் பல தலைகள் ? பல கைகள் . ஏன், எதற்காக ? பாதுகாப்புக்காகவா அல்லது பல திறமைகளைக் குறிப்பிட ...வந்திருக்குமோ ? . மொத்தத்தில் மனிதரில் பெண்களுக்கு நிலவும் பாதுகாப்பின்மையால் தான் பெண் தெய்வங்கள் பெரிதும் நாலு கைகளுடன் படைக்கப்பட்டு வருகின்றன . கோயில்கள் புராதன நூலகமாகவும் இருக்கிறது . இந்தியக்குடியினர் , உலகிலுள்ள பழங்குடியினர் மனித இனம் ஒரு பகுதியிலிருந்து தோன்றி பரவியவர் என்கிற போது ...எல்லாருக்குமிடையில் தொடர்புகள் இருக்கவே வேண்டும் . ஒரு மதத்தில் கிளைத்த கிளைகளாக மதங்கள் அனைத்தும் இருப்பதால் ஒற்றுமைகளை... நிறையக் காணக் கூடியதாகவும் இருக்கும் . கிருஸ்ணரும் யேசுவும் ஒரே கொப்பி , யேசு அகிம்ஷையில் இறங்கி விட்டார் , கிருஸ்ணர் எதிரான வழியில் விடுதலை வீரராகச் செல்கிறார் . ஒப்பிடுவதை விட்டு , விட்டு...படிக்க வேண்டியவற்றை ...எடுத்துக் கொள்வதே நல்லது .
கனடிய (பழங்குடியின)ர் மிருகம் , பறவை...உயினங்களை மனித வடிவிலே வரைந்து தள்ளி , அதனுள்ளே நிறைய விபரங்களை வரைகிறார்கள் . பட்சி ராஜா ...இப்படியாக பிள்ளையார் பிறந்திருப்பாரோ ? இவர் இவர்களின் நம்பிக்கையில் இருந்து பிறந்தவர் போலவே மித்திரனுக்கு தோன்றிக் கொண்டேயிருக்கிறது .
நிச்சியம், பின்னால் ஒரு நாட்டுக்கதையோ .எதுவோ இருக்கும் . கலாச்சாரம் சிலைகளிலும் , நாட்டார் கதைகள் செருகப்படுகின்றன . ஜேர்மனியர் , இந்திய சுவடிகளில் கண்டறிந்ததை வைத்து தற்கால நிலவளவியலை அளவியலை மேம்படுத்தியவர். பிரிட்டிசார் சுவடிகளை எரித்தும் , அழித்தும் வர இவர்கள் . அவற்றை பத்திரப்படுத்தி ' அஸ்திரம் ' போன்ற பயங்கர ஆயுதங்களை எல்லாம் தயாரித்தனர் ...எனச் செல்கிறது .கொச்சைப்படுத்தல்கள் ஐரோப்பிய காலனியாட்சியிலும் ஏற்படுத்தப்பட்டது எனக் கூறப்படுகிறது . போரின் போது கொச்சைகள் அவசியமாகிறது .' சமூனர்' என்ற சொல் பொறுப்புகளைக் குறிப்பிடுகிறதன்றி உரிமைகளையோ , படிகளையோ அல்ல ' என்று சமயிகள் கூறுகிறார்கள் . பார்ப்பனர் என்பது பிறப்பால் வாருபவரில்லை , அது அறிவின் உச்சநிலை என்கிறது சாத்திரங்கள் . பாரதியும் அப்படித்தான் கூறுகிறார் . மித்திரனும் நம்புகிறான் . ஐயரில் வெறுப்பில்லை என்றதால் கோயில்களையும் ஒரு தேடுதலுடன் பார்ப்பதில் அவனுக்கு பிரியம் . ஏன் ? என்ற கேள்விக்கான பதில்கள் தான் வேண்டும் .
மித்திரனில்லை எவருமே எல்லாதிற்கும் ஆசைப்படலாம் . அதற்கு உரிமையும் இருக்கிறது .
அவன் வவுனியாவிலிருந்து .. வந்த புதிதில் கிராமத்தில் காலை வேளையிலே , சாலையிலே உரமான நீள தடித்த தடியில் ஒரு புறம் பறிக்கூடையும் மறுபுறத்தில் வலையும் தொங்க கரிய இரும்பு மனிதர் சிலர் திரிவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறான் . அவனுக்கு அந்த பறிக்கூடுகளை கடலில் போட்டு (தாழ்த்து) மீன் பிடிக்கிற முறையும் இருக்கிறது என்பதெல்லாம் அன்று தெரியாது . பிடிக்கிறவையை கொண்டு வருவதற்கே பயன்படுத்துறார்கள் என்றே ...இயக்கத்தில் இருந்த போதிலும் கூட நம்பியே வந்திருக்கிறான் . வலையை விட நண்டு வகயிறாக்கள் பிடிக்க கூடு(கூடை)கள் .... இருப்பது இப்பத்தான் தெரியும் . தீவின் பொருளாதாரம் நிலத்தையும் ,கடலையும் ஆதாரமாகக் கொண்டவை. ' மீன்பிடி என்பது கற்க வேண்டிய ஒரு கல்வி ' . கிராமத்தில் கால் வைத்ததிலிருந்தே கடல்...அவனை இழுத்துக் கொண்டே இருந்தது . காட்சிகள் ...மனதைக் கவ்வின . கொக்குகள் தொட்டு பெரியவையான சைபீரியன் பறவைகளை கல்லுண்டாய் வெளியிலே , வானில் விரையும் கறுப்பு நிறமுடைய நீண்ட கழுத்துடைய வரிசைக்கு பறக்கும் கடற்காகங்களை அண்ணாந்து பார்க்க , பார்க்க.... மிதக்க ,மீன்பிடிக்கிற ஆசைகள் கூடிக் கொண்டே போயின . புதிதில் வெளியில் நிலவிய சமூனர் முறை புரியவில்லை . வளர்ந்த பிறகும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை . இவர்களின் அனுவங்கள் திரட்டப்பட்டு தொழில்கல்லூரிகளாக நிறுவப்பட்டு வகுப்புகள் வைக்கப்பட்டு ...இயல்பாகவே தொழில்களில் கலக்கிறது நிகழ வேண்டும் என கற்பனைப் பண்ணினான். தாமரையிலும் இதே கொள்கை நகர்வுகள் இருப்பது தெரிய வரவே சேர்ந்தும் விட்டிருக்கிறான் . அவனுடைய அராலிக்கடலில் கனவுக்கலம்கள் , கப்பல்கள் பல மிதந்து கொண்டேயிருக்கின்றன .
சமூக அடக்குமுறைகள் பற்றி பேசப்படுகின்றன . அவர்களுமே வேலைகளிற்கு எதிராக அடக்குமுறைககளை முன்னெடுக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை . அனைத்து அடக்குமுறைகளையும் தகர்க்க வேண்டும் என்கிற தாமரை இயக்கம் அக்கடமி என கல்வி நிலையங்களை ஏற்படுதுவதை ...தொழிற்சங்கம் எனமறுவி நிறுவி அவர்களிடமிருக்கிற வாசிகசாலை சனசமூக நிலையங்களையே எளிமையாக கற்றுக் கொடுக்கிற கல்விக் கூடங்களாகப் பயன்படுத்தி இலக்குகளை நோக்கி நடக்க முடியும் என்கிறது . எவருமே கடறொழிலை செய்யலாம் தவறில்லை . கடலர் , அழகும் . பயங்கரமும் நிறைந்தவர். அதற்காக கடலிலே கால் நனைக்கக் கூடாது 'எனத் தடுப்பது அழகு இல்லை . கடல்னர் குடும்பங்கள் ஒவ்வொன்றும் ...பலி கொடுத்து தான் தொழில் செய்து கொண்டிருக்கின்றன . பெரும் அநுதாபத்திற்குரியவர் . தாம் . அதனாலே, கட லே தமக்கு தாம் சொந்தம் எனக். கொண்டாடி விட முடியாதல்லவா !
மேலை நாடுகள் யூனியன் , சங்கம் என்றாலே அலறி ஓடுகின்றன . வேம்பாக கசக்கிறது . அங்கே இருந்தும் இலங்கைக்கு தடைகள் வந்து வருக்கின்றன. எல்லாருக்கும் எல்லாத் தொழிலையும் செய்ய உரிமை இருக்கிறது . தடுக்க எவருக்குமே ... உரிமை கிடையாது . நாம் ஒரே குடும்பம் . சங்கம் அமைத்த தமிழர் !. மீண்டும் சங்கம் அமைத்து பீடு நடை போடுவோம். வெளியாருக்கு சங்கம் பிடிக்கவில்லை என்பதற்காக நாம் சங்கம் அமைப்பதை நிறுத்தி நின்று விடக் கூடாது .நாடுகள் பல இப்படி குழப்பமான கொள்கைகளை வைத்திருப்பதாலே தான் உலகமெங்கும் இனப்பிரச்சனை கள் , அதனால் , புலம் பெயர்தலில் கடலில் பலி எடுப்புகள் விண்ணைத் தொடுகின்றன .
மித்திரன் , தோழர் ஒருவருடன் , அவரின் தந்தை 'இந்திய வர்த்தகம் செய்பவர் , ஓட்டி ஒருவரை சந்திக்க சென்றிருந்தான் . அங்கே , சிரித்த முகத்துடன் வயசுப் பெடியனின் படம் காய்ந்த சருகு மாலையுடன் (சாமிப்படம் வைத்திருப்பது போல) சுவரில் வைக்கப்பட்டிருந்தது . நைனாதீவு கடல்கடினர் சுட்டதில் இறந்து போனவன்' என ஓட்டி கூறினார் . அந்தரமாக இருந்தது . அவர் ' இங்கே எல்லா வீடுகளிலும் ...இப்படி படங்கள் இருக்கின்றன . தொழிலால் ... ஏற்படுவதை ஏற்றுக் கொள்ள முடிகிறது .. இது வேணாமே ' என்கிறார் . இலங்கை அன்பால் ஒரு நாடில்லாமல் , ஆயுதத்தால் முழு நாடாகக் கிடக்கிறது . நிலம் விழுங்கப்பட்டு போய்க் கொண்டிருக்கிறது .அந்த நிலம் மீட்கப்பட வேண்டும் .இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பாக்கு நீரிணை வழியே 23 கிலோ மீற்றர் இடைப்பட்ட தூரம்... , ஆழம் ,வெறும் 20 மீற்றருடையது . 80 - 100 அடி உடையது இலகுவாக கடந்து விட முடியும் . அந்த தூரத்திலே தலைமன்னாரும் ராமேஸ்வரமும் இருக்கிறது . நெடுந்தீவிலிருந்தும் ராமேஸ்வரத்து தொலைதொடர்புக் கோபுரத்தைப் பார்க்க முடியும் . இடையிலே கச்ச தீவு இருக்கிறது . இரு தரப்பிலும் சிவில் நிர்வாகம் நிலவும் என்றால் கச்ச தீவில் கால் பதித்து இந்தியாவிற்கு வள்ளத்திலேயே சுலபமாக பாதுகாப்பாக ,சென்று விட முடியும் . போக்குவரத்து சுலபமாக இருந்தால் ஈழத்தமிழர் உரிமைகளிற்கு சிறிது பாதுகாப்பும் நிலவும் என நம்பப்படுகிறது . மேற்கு நாடுகள் சுயநிர்ணயம் , இறைமை என குறுக்கீடு இல்லாமல் இருந்தால் சரி . உக்ரேன் போர் , ரஸ்யாவை சேதப்படுத்துவதை நோக்கமாக , இலக்காகக் கொண்டது .
ரஸ்யாவைப் பார்கிற போது அவனுக்கு பலவித தேசிய கலர்களில் உடைகளில் முதலில் ..மக்களே கண்ணிற்குள் தெரிகிறார்கள் . பழங்குடியினரின் கூட்டுமக்கள் போலவும் தோன்றும் . ஐரோப்பியர்கள் , இலங்கையின் ஈழ வெறுப்பைப் போல பழங்குடி வெறுப்பையும் அடியில் மறைவாக வைத்திருப்பதாகப் படுகிறது. எனவே தான் ரஸ்யா மேல் திரும்ப , திரும்ப படையெடுப்பை நடத்திக் கொண்டிருக்கிறது . மார்க்சிச நாட்டை உலக நாடுகள் காப்பாற்றவே வேண்டும் . அது லெனினை , ஸ்டாலினை பெற்றெடுத்த நாடு , அது தன்னைத் தானே காத்துக் கொள்ளும்தான் . இருந்தாலும் வெளிவாரியாகவும் ஆதரவு நிலை நிலவுவது நல்லது ..
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.