மொழிபெயர்ப்புக் கவிதை:  நிறைத்திடு! எனக்காக விளிம்புவரை கிண்ணத்தை 9Fill For Me a Brimming Bowl)
ஆங்கிலத்தில் - ஜான் கீற்ஸ் (John Keats) | தமிழாக்கம் - நாங்குநேரி வாசஸ்ரீ் 

நிரப்பிடு! விளிம்புவரை நன்கு கிண்ணத்தை
நிறைந்த அதனுள்ளே நுழைந்தமிழ எனதுயிர்
கலந்திடு! மருந்தைக் கட்டமைத்து முறையாய்
விலக்கிட விரட்டிட வென்மனம் பெண்ணவளை

வேட்கையைத் தூண்டும் வேண்டாத காமத்தை 
ஊட்டிடு ஓடைநீரின் ஊக்கமதாய் வேண்டாம்
ஆழுலகில் லீத்நீரை அருந்திடு அமரர்தம்
பாழுலக எண்ணம் பறந்தழிதல்போல் வேண்டும்

அழகின் சிகரமாய் அவளின் உருவம்
இழந்த நெஞ்சுறுதியை ஈர்த்து விளங்கிட  
கண்ணது கண்டதன் களிப்பாம் அதுஎன்றும்
கொண்ட மயக்கமாம் கற்பனையின் அதுஎன்றும்

உருகியோடு மென்மையை உடைய வதனத்தை
பெருகிய ஒளிதனைப் பொழிந்திடு கண்களை 
துறக்கமாம் புவிதனின் தனமது அதனை
துரத்திட இயலாது என்னால் இதுவீண்! 

வாழ்த்து பெறாதே ஒழியும் எம்பார்வையோ
இழந்தது பார்த்ததில் இலயித்திடு ஆர்வத்தை 
புகழுடைக் கவிதைப் படைப்புகள் தம்மையும்
மகிழ்வுடன் ஆய்விட முடியாதவன் இனியான் 

என் இதயத் துடிப்பை அவள் உணர்ந்திருந்தால்
புன் சிரிப்பு ஒன்றை அவள் உகுத்திருந்தால்  
நான் இனிய நிம்மதியை உணர்ந்திருப்பேன்
நான் துன்பத்தில் இன்பத்தை உணர்ந்திருப்பேன்

பனிநடுவே லாப்லாந்தின் டஸ்கன் நினைக்கும்
இனிய ஆர்னோவாய் இப்பொழுதும் எப்பொழுதும்
அவளென் சிந்தையின் எண்ணங்களின் ஒளிவட்டமே. 

Fill For Me a Brimming Bowl
(John Keats 31 October 1795 – 23 February 1821)

Fill for me a brimming bowl
And let me in it drown my soul:
But put therein some drug, designed
To banish Woman from my mind:

For I want not the stream inspiring
That heats the sense with lewd desiring,
But I want as deep a draught
As e’er from Lethe’s waves was quaffed;

From my despairing breast to charm
The Image of the fairest form
That e’er my revelling eyes beheld,
That e’er my wandering fancy spelled.

‘Tis vain! away I cannot chase
The melting softness of that face,
The beaminess of those bright eyes,
That breast – earth’s only Paradise.

My sight will never more be blessed;
For all I see has lost its zest:
Nor with delight can I explore
The Classic page, the Muse’s lore.

Had she but known how beat my heart,
And with one smile relieved its smart,
I should have felt a sweet relief,
I should have felt ‘the joy of grief’.

Yet as a Tuscan ‘mid the snow
Of Lapland thinks on sweet Arno,
Even so for ever shall she be
The Halo of my Memory.

August 1814

 கற்பனை எதுவெனில்......
(இன்னிசை வெண்பா)

புவியதன் போர்வையில் வண்ணமாய் நின்று
புவியோனின் பார்வையின் எண்ணத்தை வென்று
கவியின் செவியில் கதைபல சொல்லும்
கவிபுனை மந்திரக் கோல்.

அறிவிலார் யாரெனில் .....
(இன்னிசை வெண்பா)

சலசலக்கும் ஓலையின் சத்தமாய்ப் பாரினில்
சாலச் சிறந்த சரித்திரம் கண்டிட்ட
காலத்தால் முற்பட்ட காவிய மாந்தர்போல்
ஓலமிடுவார் யாரோ அவர்.

இலவச அறிவுரை
(வெளிவிருத்தம்)

இருவிரல் துப்பாக்கி யாகியே சுட்டிடும் - உலகில்
இருவிரல் கண்டால் இடரதும் அஞ்சும் – உலகில்
இருவிரல் கோர்த்திட இன்பம் விளையும் – உலகில்
இருவிரல் போலே இணைந்தே வாழ்வாய் - உலகில்

தத்துவக் குவியல்
(இன்னிசை வெண்பாக்கள்)

அகலிடத்து வாழ்தலை அந்தமில் என்றே
பகலதன் தாமரையாய்ப் புன்னகை பூத்து
புகலிடம் இல்லென புத்தியில் ஏற்றி
இகலுற வாழ்வர் பலர்.

எண்ணமது சீராய் இருப்பவன் வாழ்ந்திடுவான்
திண்ணமது இல்லான் தெருவினில் நின்றிடுவான்
சுண்ணமது இல்லா வெறுமிலை போலவே
வண்ணம் இழந்ததவ் வாழ்வு.

பிடித்த பேச்சும் பிடிபடாத தென்ற
பிடித்து நடிப்பானைப் பீடித்த நோயோ
பிடித்தது ஏதெனப் பிரித்து உணரும்
பிடியாம் மதியில் உணர்.

பிடித்ததைப் பேசு பிடிபடாது பேசு
பிடித்திடப் பேசு பிடிகொளப் பேசு
பிடித்து இடித்தல் பிடிகொடா தேற்றல்
பிடிப்பிலா வாழ்வைத் தரும்.

(நேரிசை வெண்பா)
கடவுளின் சொல்லென கண்டதைப் பேசி
நடந்திடும் மாக்களை நம்பி – கொடுக்கும்
மடமையை ஏற்காது மானுடம் காத்து
நடந்தால் கடவுளுன்னுள் ளாம்.

:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
 
வ.ந.கிரிதரன் பக்கம்
                                                                                             


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். இது இலாப  நோக்கற்று இயங்கும் இதழ். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. It operates on a not-for-profit basis. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்