நூல்:- உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் | வெளியீடு: மறைகரம் | நூலாசிரியர் ராஜன் ஹூல் | மொழிபெயர்ப்பாளர் என். எம். அமீன். | இலங்கை விலை 750
“உயிரைப் பறிப்பார்கள். உடமை அழிப்பார்கள்: இவை எல்லாம் யாரிடம் சொல்வது, இறைவனிடம் தான் கைகேந்த வேண்டும்: அநீதிக்கு எதிராய். மனிதனில் நீதி தேவன் இல்லாத பட்சத்தில் இறைதேவன்தான் தண்டனை வழங்க வேண்டும். அம்மக்களைப் பாதுகாக்க வேண்டும்:” என்று இந்த நாட்டிலுள்ள நல்லுள்ளம் படைத்த பெரும்பாலான மக்களின் மனதில் எழுந்த வேதனைகள் அவர்களுடைய முகங்களில் காணப்பட்டன. குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராய் இந்நாட்டில் திட்டமிட்டு அரங்கேற்றிய சூழ்ச்சிகள், அநீதிகள,; கொடுமைகள் அனைத்தையும் அவர்கள் நேரிலேயே பார்த்துப் பார்த்து உள்ளத்தால் நொந்து வெதும்பிக் கொண்டிருந்தார்கள்.
இறைவன் கருணையுள்ளம் படைத்தவன். அவன் யாருக்கும் அநீதி இழைக்க மாட்டான். அநீதி இழைக்கப்பட்டவன் இறைவனிடம் இரு கைகளையும் ஏந்தி நீதி கேட்கும் பட்சத்தில் அதற்குரிய தண்டனை பொதுவாக உடனே கிடைத்துவிடும். இறைவனுக்கும் பாதிக்கப்பட்ட மனிதனுக்கும் இடையில் திரை இருக்காது. இறைவன் உடனே உரிய தீர்ப்பை வழங்குவிடுவான். இறை நீதி ஒரு நாளும் தற்கொலை செய்து கொள்வதில்லை. உண்மையை ஒரு நாளும் மூடி மறைக்க முடியாது. என்றைக்கு ஒரு நாளாவது வெளி வரும் என்ற வாசகத்தை வலியுத்தும் வரலாற்று சம்பவம் இவையாகும். இவை பற்றி ராஜன் ராஹ{ல் ஆங்கிலத்தில் எழுதிய நூலை மூத்த ஊடகவியலாளர் என். எம். அமீன் “ உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்” என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
ஈழத் திருநாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ எனப் பல்லின மக்களுக்கும் ஒன்றித்து வாழ்ந்து கொண்டிருக்கும் தருணத்தில் முஸ்லிம்களை மட்டும் தனிமைப்படுத்தி அவர்களுக்கு எதிரான பல்வேறு பிரச்சினைகளைத் தோற்றுவித்து, இனவாத தன்மையின் சொரூபத்தை பல்வேறு வகையில் ஈவிரக்கமற்ற முறையில் செய்து காட்டி நிரூபித்துள்ள விடயங்களும், உயிர்த்த ஞாயிறு சம்பவம் நடப்பதற்கு முன் பின்னுள்ள சம்பவங்களும் உண்மைக்கு உண்மையாய் அந்நூலிலுள்ள தகவல்களை என். எம். அமீன் மொழிபெயர்த்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து இந்நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் இதன் பின்னணியென்ன? இதன் சூத்திரதாரி யார் என்பதை யாவரும் அறிந்ததே. இந்தச் சம்பவம் தொடர்பில் ஆழ்ந்த புலமையும், அறிவும் ஞானமும் முஸ்லிம் சமூகத்தின் இருப்புக்காகப் போராடிய என். எம். அமீன் அவர்கள் முக்கியமான ஒருவர்.
பலர் உத்தியோகத்தர்களாக இருந்தாலும் அவர்கள் பொதுவான சமூகப் பணிகளில் ஈடுபடுவதில்லை. அப்படி ஈடுபட்டாலும் உத்தியோகத்தர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதுடன் பொதுப் பணிகளையும் இடைநிறுத்திக் கொள்வார்கள். ஆனால் ஓய்வு காலத்திலும் மிகச் சிலரே மேலும் அசாதாரண ஆத்ம பலமுடைய அர்த்தமுள்ள பணிகளைச் செய்கிறார்கள். இதில் இரண்டாவது வகையைச் சாந்தவர் என். எம். அமீன் அவர்கள். முஸ்லிம் மீடியாக போரத்தின் தலைவர். இவர் கடந்த 17-12-2024 தேதி பத்திரிகையாளர் சங்கம் நடத்திய கௌரவிப்பு விழாவில் கௌரவிக்கப்பட்டவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர். பாராளுமன்றத்;தில் உரை மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றியவர்.
தினகரன் பத்திரிகையின் முகாமையாளராகவும் இருந்து கடமையாற்றி ஓய்வு பெற்றவர். கல்வி, சமூக மறுமலர்ச்சிக்காக தோற்;றுவிக்கப்பட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர். இன்னும் பல்வேறு அமைப்புக்களின் தலைவராக இருந்து அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. இவற்றிற் கூடாக இவரது பணிகள் சமூகத்தால் மதிப்பிட வேண்டியவை.
பன்மொழிப் புலமை ஊடாக பெறப்பட்ட பரந்த அறிவு, பல தசாப்த காலமாக சமூகப் பிரக்ஞையால் கிடைத்த அனுபவம், அனைத்திலும் மேலாக இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற போது அவர் நவமணிப் பத்திரிகையின் ஆசிரியர் கடமையில் இருந்தார். அவர் துணிந்து பத்திரிகையின் தர்மாக விளங்கும் கோட்பாட்டுக்கு இணங்க அப்பத்திரிகையினை வெளிக்கொணாந்தார். தனக்கே உரித்தான நடையில் கருத்தினை வலிமையோடு மொழிபெயர்த்துள்ளார். முஸ்லிம்கள் அபாயகரமான நெருக்கடிகள் எதிர்நோக்கிய விதம் குறித்து ராஜன் ஹ{ல் அவர்களினால் எழுதப்பட்ட இரத்தக் கண்ணீரின் குரல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நூல் எழுத்துலகில் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய நூல். இந்த மொழிபெயர்ப்பைத் தந்த என். எம். அமீன் அவர்களுக்கு தனியிடம் உண்டு.
முஸ்லிம்களுடைய நியாயத் தன்மையை முஸ்லிம் எழுத்தாளர்களால் வெளியே எடுத்துச் சொல்வதற்கு அச்சப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் “உண்மைமையை உண்மையாய்” உரத்துச் சொல்வதற்காக எழுதப்பட்ட ஒரு பதிவேடுதான் இவை.
இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளின் ஆழத்தையும் இந்தத் தாக்குதலுக்கான பின்னணியையும் விரிவாக ;ஆராய்ந்;து இன்னும் எழுதப்பட வேண்டிய தேவை இருக்கிறது. இதில் சம்மந்தப்பட்ட உரிய உயர் எழுத்தாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
உண்மையிலேயே பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். இந்த வாய்மொழிப் பேச்சை இந்நாட்டில் கண்ணூடாக கண்டு களிக்க முடிந்தது. அதிகார வேட்கைக்காக இனவாத ரீதியாக எவையெல்லாம் செய்ய முடியுமோ அவை எல்லாம் செய்து வெற்றி வாகை சூடியவர்களால் இந்நாட்டில் ஏற்பட்ட உணவுப் பசிக்காக தாக்குப் பிடிக்க முடியாமற் போயிற்று. குறிப்பாக உணவுப் பசி அதிகாரப் பசியை விடப் பொல்லாதது. ஆதனை இந்நாட்டில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த “காலிமுகத் திடல்”; மக்கள் எழுச்சிப் போராட்டம் தெட்டத் தெளிவாகப் புலப்படுத்தியது. இவைதான் இறை நியதியும் இறைவனின் தீர்ப்பும் ஆகும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் முழு இலங்கை முஸ்லிம் மக்களையும் ஓர் அபாயகரமான நிலைக்கு கொண்டு வந்தது. முழு நாட்டு மக்களும் முஸ்லிம்களை சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் தொடங்கினர். இந்தச் சந்தர்ப்பத்தில் கிறிஸ்த சபையின் தலைவர் ரஞ்ஜித் மல்கம் ஆண்டகை. இந்த குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒரு தெளிவான அறிக்கையினை விடுத்து நோந்து போயுள்ள முஸ்லிம்களுக்கு ஆற்றுப்படுத்தலைச் செய்திருந்தார். கிறிஸ்தவ மக்களும் இவ்விடயம் தொடர்பில் நன்கு தெளிவாக இருந்தார்கள். அவர்கள் முஸ்லிம்கள் மீது சந்தேகம் கொள்ளவில்லை. ஆனாலும் அதைத் தொடர்ந்து சில தீய சக்திகள் வன்முறைகளளை முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டிருந்தனர். கம்பஹா, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பன்னல. ஹெட்டிப்பொல, மினுவான்கொடை, நீர்கொழும்பு போன்ற பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள்.
இதில் ஒரு புறம் முஸ்லிம் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள், வீடு சொத்துக்கள், தொழிற்பேட்டைகள் உடமைகள் என்பன பெருமளவு பாதித்தது. கலவரத்தன் கொடூரம் உயிர்களும் பறிக்கப்பட்டன. முஸ்லிம்களின் பெருமதிப்புக்குரிய புனித அல் குர்ஆனைக் கூட வீடுகளில் வைத்துக் கொள்ள முடியாத நிலை இருந்தது. மறுபுறம் இராணுவ கெடுபிடிகள், முஸ்லிம் அரசியல்வாதிகள் கையாளாத நிலைமைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள்.
இந்தக் குண்டுத் தாக்குதலின் பின்புலமாகச் செயற்பட்ட சூத்திரதாரிகள் யார் என்பதை இந்த நாட்டில் சரிவர அறிதல் விடயம் இன்னும் தொடர்கதையாகவே இருக்கின்றது. இவ்விடயம் தொடர்பில் அறிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக வேண்டி இம்முறை முஸ்லிம்கள் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை உறுதி செய்வதற்காக வாக்களித்தோர் தொகை அதிகம். இவை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையிலும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஆக மொத்தத்தில் இந்த குண்டுத் தாக்குதலுடன் சம்மந்தப்பட்ட சஹ்ரான் குழுமத்தினர்கள் நடவடிக்கைகள், அவருடன் தொடர்பு பட்ட சகல அம்சங்களும் விலாவாரியாக இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்து எந்தவொரு அநியாயமும் செய்யாமல் அப்பாவியான வைத்தியர் சாபியின் விவகாரம் இனக் குரோதக் கொந்தளிப்பில் எவ்வாறு சிக்குண்டு சின்னாபின்னமாக்கப்பட்டார் என்பதை ஒரு கேலிக் கூத்தாக சித்தரிக்கப்படுகிறது. அவர் கைது முதல் விடுதலை தொடர்பான அனைத்து தகவல்களும் இந்நூலில் தெளிவுற விளக்கப்பட்டுள்ளன.
எனினும் அதற்குப் பின்னர் அவர் நீதி மன்றத்தில் நிராபராதி என்று தீர்ப்பு வழங்கப்பட்டு அவருடைய சம்பளத்தை மீளவும் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டது. அவர் நாட்டில் மருந்து வகைகள் தட்டுபாடு நிலவியதால் அப்பணத்தை சுகாதாரத் திணைக்களத்திற்கே மீளவும் அன்பளிப்பாக வழங்கி வைத்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அரசியல் ஆட்சி அதிகாரத்திற்காக தமிழ் மக்கள், தமிழ் தோட்டப்புற மக்கள ;முஸ்லிம்கள் , கிறிஸ்தவ சிறுபான்மையின மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட சகல இனவாத வன்முறைகள் எல்லாம் தக்க சான்றுகளுடன் இந்நூலில் எழுதப்பட்டுள்ளன.
நடந்து முடிந்த சம்பவங்களையும் நாட்டின் எதிhகால நலனை முன் வைத்து எழுதப்பட்ட இந்நூலின் மொழி பெயர்ப்பில் அட்டைப் படம் பின்வருமாறு விளக்குகின்றன.
இந்த நூலின் பிரதான வாதமானது 2018 முஸ்லிம் விரோத மோதல் வெற்றியளிக்காமை. 2018 அரசியல் சதி, அதன் பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், மீண்டும் மே மாதம் முஸ்லிம் விரோத மோதல் இடம்பெற்றமை. டொக்கர் சாபியின் சம்பவம் போன்றவை யாவும் ஒரு கதையின் தொடரான சம்பவங்களாகும். இது முஸ்லிம் வாக்குகளினால் தாக்கத்தை ஏற்படுத்துவது அல்லது கட்டுப்படுத்தும் முயற்சி பற்றி குறிப்பிடப்படுகிறது.” என்று கூறுகின்றன.
இவ்வகையில் மூத்த ஊடகவியலாளரான என். எம். அமீன் அவர்கள் தொடர்ந்து தனது மொழி பெயர்ப்புத் துறையில் ஈடுபட வேண்டும். அதற்கான நீண்ட காலம் பாராளுமன்றத்தில் உரை மொழிபெயர்பாளராக கடமையாற்றிய அனுபவமும் ஊடகத்துறையில் நீண்ட காலம் சேவையாற்றிய தேர்ச்சியும், திறமையும் ஈடுபாடும் அவரிடம் அதிகம் இருக்கின்றது. எனவே அவருடைய எழுத்துப் பயணம் மென்மேலும் சிறப்புற்று மலர்ந்து மிளிர எனது உளம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.