ஆய்வு: இளையராஜவின் இலக்கியப் படைப்புகளில் அணிகள்
ஒரு படைப்பு வாசகரை எளிதில் சென்றடைவதற்கும் கவரக் கூடியதாய் அமைவதற்கும் அப்படைப்பின் கரு அடிப்படை என்றாலும் அக்கருவை வளர்த்தெடுத்து இலக்கியமாக்குவதற்குப் படைப்பாளனின் படைப்பு உத்திகள் துணை செய்கின்றன. எனவே, ஒரு செய்தி அல்லது தகவலைப் படைப்பாளன் தன் படைப்பு உத்தகளால் சிறந்த இலக்கியப் படைப்பாக வெளிக்காட்ட முடியும். இந்த அடிப்படையில் “உத்திகள்’ அடிப்படை என்பதை அறியலாம்.
இலக்கியப் படைப்பாளிகள் செலச் சொல்லும் பொருட்டுப் பல்வேறு நெறிமுறைகளைக் கையாள்வர். இந்நுவல் நெறிமுறைகளே “இலக்கிய உத்திகள்’ என்னும் குறியால் – கலைச் சொல்லால் குறிக்கப்படுவன எனலாம். (அறிவுநம்பி.அ, 2001, ப: 6)
பொதுவாக நாவல், சிறுகதை போன்ற படைப்புகளில் உவமை, வருணனை, கற்பனை, பாத்திரப் படைப்பு உத்திகள், எழுத்து உத்திகள் போன்றவை நிறைந்து காணப்படும். இளையராஜாவின் படைப்புகளில் இறையனுபவங்கள் புதுக்கவிதையாயும், வெண்பா எனும் மரபுவழி பாக்களால் பாடப்பட்டதாயும் அமைந்துள்ளன. ஆயினும் பாமரரும் புரிந்துக்கொள்ளும் வகையில் எளிமையாக வெண்பாக்களைப் படைத்துள்ளார் இளையராஜா. இப்புரிதலின் அடிப்படையில் உவமை, உருவகம், தொடைகள், கற்பனை போன்ற பல உத்திகளைக் கையாண்டுள்ளார். அவற்றுள் குறிப்பாக “அணிகள்” இவர் படைப்பில் பயின்று வந்துள்ளமை குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது.
அணிகள்
அணி என்பதற்கு அழகு என்பது பொருள். இலக்கியத்திற்கு அழகூட்டுவதன் வாயிலாக இலக்கியத்தைச் சுவையுடையாக்குவது அணி. தொல்காப்பியத்தில் அணி குறித்து இடம்பெறவில்லையெனினும் “தண்டியலங்காரம்” அணிகள் குறித்த இலக்கணத்தை விரிவாகச் சுட்டியுள்ளது.இளைராஜாவின் வெண்பா படைப்புகளில் பல்வேறு அணிகள் இடம்பெற்றுள் ளன. அவை வருமாறு

முன்னுரை
இசுலாமியத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் தனக்கென ஒரு தனி பாணியை அமைத்து கவிதை, கட்டுரை, புதினம், சிறுகதை எழுதுவதில் வல்லவராகத் திகழ்ந்து கொண்டிருப்பவர் பாத்திமுத்து சித்தீக் அவர்கள். இந்நூற்றாண்டின் தலை சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராகத் திகழ்கின்றார். இவருடைய எழுத்துக்கள் எளிமையானவை கருத்துக்கள் புதுமையானவை. இவருடைய எழுத்துக்களில் சமூகத்தில் நிலவும் அவலங்கள், முரண்பாடுகளை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். பாத்திமுத்து சித்தீக்கின் ‘இடி மின்னல் மழை’ சிறுகதைகள் வழி அறியலாகும் சமூக நிலைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அனுபவம் வாய்ந்தவர்களின் அனுபவ மொழிகளாக வெளிவருபவை பழமொழிகள் ஆகும். முன்னோர்கள் தங்கள் வாழ்க்கையின்வழி கிடைத்த அனுபவத்தின் வெளிப்பாடே பழமொழிகள் என்னும் அறிவுச்சுரங்கம் ஆகும். பழமொழிக்கு சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் ஆற்றல் உண்டு. இவை மக்கள் மனதிலே ஆழமாகப் பதிந்து நற்செயலைத் தூண்டச் செய்கின்றன. பழமொழிகள் அனைத்தும் பழமையான நம்பிக்கைகளையும் வரலாற்றினையும் பண்பாட்டினையும் மனித உணர்வுகளையும் வெளிக்காட்டும் கருவியாகும். இத்தகு பழமொழிகள் சித்தர்களின் பாடல்களில் காணக்கிடைக்கின்றன. சித்தர்கள் தமிழ்சமூகத்தின் அறிவாளிகளாகக் கருதப்பட்டனர். இத்தகு அறிவாளிகளின் பாடல்களில் வெளிப்பட்டுள்ள பழமொழிகளை எடுத்துரைப்பதாகவே இக்கட்டுரை அமைகிறது.
தொல்காப்பியத்திலும் நன்னூலிலும் ”இரண்டாம் வேற்றுமை” என்று செயப்படுபொருள் வேற்றுமை கூறப்படுகின்றது. ”செயல் படுகின்ற பொருள்” என்பார் முனை. அகத்தியலிங்கம். செயப்படுபொருள் என்பது வினைக்குத் தகுந்தபடி மாறுகின்ற ஒன்று. எனவே செயப்படுபொருளை வரையறுப்பது கடினம் எனபார் முனை. கு.பரமசிவம். (இக்காலத்தமிழ் மரபு, 1983, பக் - 138).
சங்க மருவிய காலத்தில் தமிழ் நாட்டை ஆண்டவர்கள் களப்பிரர்கள்.இக்காலம் இருண்ட காலம் என அழைக்கப்படுகின்றன.இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பதினெட்டு நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இதில் அறநூல்கள் பதினொன்று, அகநூல்கள் ஆறு, புறநூல் ஓன்றாக அமைந்துள்ளன. இந்நூல்கள் எவை என்பதை பற்றி,
முன்னுரை
பண்டைய தமிழ் மக்களின் பண்பு, நாகரிகம், சமயம், அரசியல், தொழில் முதலியவற்றை அறிவதற்குத் தமிழ் நாட்டிலுள்ள கல்வெட்டுகள் பண்டைய நாணயங்கள் பிறநாட்டார் எழுதி வைத்த நூல்கள் முதலின கருவியாக விளங்குகின்றன. இவற்றைக் காட்டிலும் பண்டைய தமிழ் மக்களின் பண்பினை அறிவதற்கு தமிழ் இலக்கியங்களே சிறந்த சான்றாக அமைகின்றன. உலகம் நல்வழியில் இயங்குவதற்கு பண்பாடு (அ) பண்புடையார் வாழ்தல் மிகவும் பயனுள்ளது.
தமிழரின் வீரம்,கொடை,மானம் போன்ற முக்கியமான பண்புகளைப் போன்றே நம்மால் மறைக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட முக்கியமான பண்பு விருந்தோம்பல் ஆகும்.இந்த உலக இயக்கமே ‘பசி’ என்ற ஒற்றைச் சொல்லில் தான் உள்ளது.‘ஒரு சான் வயிறு இல்லாட்டா;உலகத்தில் ஏது கலாட்டா” என்று ஒரு எதார்த்தமான உண்மையினைப் போகின்ற போக்கில் சொல்லிச் செல்லும் கவிஞனும் உள்ளான். இன்றைய காலத்தில் உலகம் முழுவதும் விஞ்ஞான வளர்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகின்றது. அந்த ஈடுபாட்டில் மனிதத்தை மட்டும் மறந்து வருகின்றது. அதற்கான அடையாளம் தான் ஆப்பிரிக்க தீபகற்பப் பகுதியில் அமைந்துள்ள சோமாலியா நாடு ஆகும். இங்கு உணவு என்பது ஒரு வேளை கூட இல்லாமல் பஞ்சத்தாலும் பசியாலும் தற்பொழுதுவரை 2இலட்சத்து58 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.ஆனால் அறிவியல் வளர்ச்சியில் இன்றைய உலகம் சுருங்கிவிட்டது என்றும் மனிதன் இந்தப் பேரண்டத்தைத் தம் கைக்குள்ளே அடக்கிவிட்டான் என்றும் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றோம்.
உலகம் இன்று எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பல. அதற்கு முக்கியக் காரணமாக விளங்குவது மனிதா்களே. ஏனெனில், தனது சுயநலத்திற்காகவும், தனது மகிழ்ச்சிக்காகவும் மனிதன் இயற்கையை எப்போது தொட நினைத்தானோ அப்போதே பிரச்சனைகளும் ஆரம்பமாகத் தொடங்கின. அப்பிரச்சனைகளிலிருந்து, மனிதன் மீண்டுவர நினைத்தால்கூட அது முடியாத ஒன்றாகவே இன்றுவரை உள்ளது.
ஒரு சமூகத்தின் தத்துவார்த்த விழுமியங்களை அடுத்த தளத்தை நோக்கி நகர்த்தும் ஆக்கபூர்வ விளைவுகளில் ஒன்று ஆய்வு. அது தமிழ் அறிவுசார் மரபில் ஒரு பண்பாட்டு வடிவமாக இருந்து வருகிறது. 2000 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றுத் தொன்மை வாய்ந்த தமிழ் இனத்தின் பண்பாட்டு அசைவாக்கங்களை அத்தகைய ஆய்வுகளை துல்லியமாக புற உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக அமைந்து வருகின்றன. பண்பாட்டின் அடிப்படைகளை அறிந்துக்கொள்ள வரலாற்று ஆவணமாகத் திகழ்பவை இலக்கியங்கள் ஆகும். அதிலும் தமிழரின் வரலாற்று ஆவணங்களாக விளங்கும் சங்க இலக்கியங்களைப் பண்பாட்டு ஆய்வுகளுக்கு உட்படுத்துவதன் வழி தமிழர் தொல்கூறுகளை பண்பாட்டு விழுமியங்களின் தொடர்ச்சியை அறிந்து வெளிப்படுத்த இயலும். சங்க இலக்கியம் தொடாபான அண்மைக்கால ஆய்வுகளில் பலபுதிய போக்குகள் பதிவாகியுள்ளன. மானிடவியல், சமூகவியல், பண்பாட்டியல் ஆகிய புலங்கள் சார்ந்த சிந்தனைகளை உள்வாங்கிச் சங்க இலக்கியங்களைப் பொருள்கொள்ளும் முயற்சிகள் நடந்துள்ளன. அவ்வகையில் மானுடவியல் புலங்களுள் ஒன்றான இனவரைவியல் அடிப்படையில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றைப் பொருள்கொள்ளும் முயற்சியாக இக்கட்டுரை அமைகின்றது.
இந்தியாவில் ஆங்கில தலைமை கவா்னராக பதவி வகிகத்த வெல்லஸ்லி பிரபு பொ.ஆ 1797 இல் சென்னை கவா்னராக நியமனம் பெற்று பொ.ஆ 1798 இல் கவா்னா் ஜென்ரலான1 ஆங்கிலேயா்கள் இந்தியாவுக்கு வந்தவுடன் இந்திய நாட்டு மொழிகள், சட்டத் திட்டங்கள், வரலாறு மற்றும் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்பது வெல்லஸ்லியின் கருத்தாகும். கம்பெனி ஊழியா்களுக்கு அலுவல்களைப் பற்றிய கல்வியளித்தலின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு பொ.ஆ 1800 இல் கல்கத்தா வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியைத் தொடங்கினார்.2 ஆங்கிலேயா்கள் வாணிகக் குழுவில் பணியேற்கும் முன்பு இக்கல்லூரியில் கல்வி கற்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. அக்கல்லூரியில் பல ஐரோப்பியப் பேராசிரியா்களும் 80 இந்தியப் பண்டிதா்களும் பணியாற்றி வந்தனா். இக்கல்லூரியில் பயின்றவா்களைவிட பயிற்றுவிக்கும் ஆசிரியா்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் பொ.ஆ 1802 இல் இக்கல்லூரி மூடப்பட்டது. பொ.ஆ 1806 இல் மீண்டும் இக்கல்லூரி ஒரு பள்ளிக்கூடமாக மாற்றப்பட்டது. மேலும் கீழைநாட்டு மொழிகளைக் கற்பிக்க பொ.ஆ 1806 இல் கிழக்கிந்தியக் கல்லூரி ஒன்றும்3 தொடங்கப்பட்டது. வெல்லஸ்லி பிரபு காலத்தில் தஞ்சாவூரை ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜியுடன் ஆங்கிலேயா் ஓர் உடன்படிக்கைச் செய்து கொண்டார். அதன்படி தஞ்சை கோட்டையும், சில கிராமங்களும் தவிர மற்றவற்றை ஆங்கிலேயா் எடுத்துக் கொண்டனா். மன்னருக்கு ஆண்டு ஒன்றுக்கு நான்கு லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. பொ.ஆ 1833-ல் சரபோஜி மன்னா் இறக்கவே அவரது மகன் கடைசி சிவாஜி பணம் பெற்றுவந்தார். பொ.ஆ 1855 இல் சிவாஜி வாரிசு இன்றி இறக்கவே பொ.ஆ 1853இல் டல்ஹௌசி பிரபு காலத்தில் தஞ்சாவூர் ஆங்கிலேயா் வசமானது.4 ஹேஸ்டிங்ஸ் பிரபு பொ.ஆ 1813 இல் இந்தியாவின் கவா்னா் ஜெனரலானார். இவா் ஆங்கிலக் கல்வியை பரப்புவதற்குப் பல பள்ளிகளை நிறுவினார். கல்கத்தாவில் இருந்த இந்து கல்லூரிக்கு ஆதரவு அளிந்தார். அக்கல்லூரியில் ஆங்கிலமும் மேலைநாட்டு விஞ்ஞானமும் கற்பிக்கப்பட்டன.5 வில்லியம் பெண்டிங் பிரபு பொ.ஆ 1803 இல் சென்னை ஆளுநரனார். பெண்டிங் பிரபு காலத்தில்தான் ஆங்கிலம் பயிற்று மொழியாக்கப்பட்டது. பொ.ஆ 1813 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சாசனச் சட்டப்படி அறிவியல், இலக்கியம் மற்றும் கலாச்சார கல்வியை இந்திய மக்களிடையே பரப்புவதற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகையை செலவிடுவது பற்றி பல சா்ச்சைகள் ஏற்பட்டன. கீழைநாட்டு மொழிகளை பயிற்றுவிப்பதற்கும், கலாச்சாரத்தைக் கற்பிப்பதற்கும் பயன்படுத்த வேண்டும் என்று கீழைநாட்டு ஆதரவாளா்கள் (Orientalises) கூறினா். இவா்கள் கருத்தை எதிர்த்து, மேலைநாட்டு கல்வி ஆதரவாளா்கள் (Occidentalises) மேலை நாட்டு அறிவியல் கல்வியை ஆங்கில மொழியின் வாயிலாகக் கற்பிக்க வேண்டும் என்றனா். H.H.வில்சன் போன்ற அறிஞா்கள் கீழைநாட்டு மொழிகளான வடமொழி, அரபிக், பாரசீகம் போன்றவற்றிற்காக இராஜாஇராம் மோகன்ராய் போன்றவா்கள் மேலைநாட்டு அறிவியல் கல்வியை ஆங்கிலம் மூலமாகக் கற்பிக்க வேண்டும் என்றனா் (Occidentalises) இதனால் பெண்டிங் பிரபு தம் அவையில் இருந்த மெக்காலே பிரபுவிடம் கருத்து கேட்டார். மெக்காலே பிரபு இந்தியா்களுடைய பண்பாடுகளைப் பற்றி ஆங்கிலேயா்கள் அறிந்து கொள்ளவும், ஆங்கிலேயா்களை பற்றி இந்தியா்கள் அறிந்து கொள்வதற்கும் ஒரு பொதுமொழி தேவை என்பதை வலியுறுத்தினார். எனவே இந்தியா்களுக்கு ஆங்கில மொழியைக் கற்பித்து அவா்களுக்கு மேற்கத்திய நாகரிகத்தை கற்கும்படி செய்யத் திட்டமிட்டார். இந்தியா்களுக்கு ஆங்கிலக் கல்வி இன்றியமையாதது என்பதை கூறி வில்லியம் பெண்டிங் பிரபுவிடம் கூறி 1835 இல் கல்வி அறிக்கை (Education Minute) அக்கல்வி அறிக்கை அந்த ஆண்டு முதல் நடைமுறைபடுத்தப்பட்டது. அதுமுதல் ஆங்கிலம் இந்திய அரசின் பயிற்றுமொழியாகவும், அரசாங்க மொழியாகவும் மாறியது. இம்மொழியை கற்றறிந்த இந்தியா்கள் குறிப்பாக உயா்தர, மத்தியதர வகுப்பினா்கள் ஆங்கில நாகரீகத்தை பின்பற்ற தொடங்கினா்.
பாட்டும் தொகையுமெனப் பகுக்கப்பட்டுள்ள சங்க இலக்கியங்கள் பண்டைத் தமிழர்தம் பல்வேறு வாழ்வியல் மரபுகளைப் பதிவு செய்துள்ள சமூக ஆவணங்களாக விளங்குகின்றன. சமூகம் உருவான தன்மை குறித்தும், அரசுகள் உருவான தன்மை குறித்தும் விளக்கும் சங்க இலக்கியங்கள் பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் இயங்கியல் போக்கை, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமச்சீரற்ற சமூக வளர்ச்சிப் போக்கை வெளிப்படுத்தி நிற்கின்றன.
முன்னுரை 

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









