மண்டைப் பாணர் - ஓர் ஆய்வு
பாணர் குறித்த செய்திகள் சங்கப் பாக்களிலும் தொல்காப்பியத்திலும் காணப்படுகின்றன. இப்பாணர் மூன்று வகையினர் என்று கூறிய அறிஞர் பெருமக்கள், மண்டைப்பாணர் என்றொரு வகையையும் கூறியுள்ளனர். பாணர் மரபில் மண்டைப்பாணர் என்றொரு வகை இருந்தனரா? மண்டை என்பது பாணர்க்கு மட்டும் உரிய ஒன்றா? மண்டை என்பது யாழ்க்கருவி போல் இசைக்கருவியா? மண்டைப்பாணர் என ஏன் அழைக்கின்றனர்? போன்ற வினாக்கள் தோன்றுகின்றன. எனவே, ‘மண்டைப் பாணர் என்றொரு வகையினர் சங்கக் காலத்தில் இருந்தனரா?’ என்னும் சிக்கலை முன்னிறுத்தி இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.
மண்டை என்பது என்ன?
மண்டை என்பது சங்கக்கால இரவலர்கள் உணவு பெற்று உண்பதற்காக வைத்திருந்த ஓர் உணவுப் பாத்திரம் ஆகும். மன்னரது அரண்மைக்குச் சென்ற இவர்கள், மன்னனைப் புகழந்து பாடி முடித்த பின்பு அரசர்கள் கொடுக்கும் கள், சோறு போன்ற உணவுகளை இம்மண்டையில் பெற்று உண்டுள்ளனர். அரண்மனைக்காரர்களும் அம்மண்டையில்தான் உணவுகளை வழங்கியுள்ளனர். இம்மண்டை இரவலர்களின் உண்கலமாக இருந்துள்ளது எனப் புறநானூற்றுச் செய்யுட்கள் கூறியுள்ளன. இதனைப் பின்வரும் தலைப்பின் கீழ் காணலாம்.
புறநானூற்றில் மண்டை இடம்பெறும் சூழல்
புறநானூற்றுப் பாக்கள் பல செய்திகளை எடுத்துக் கூறுகின்றன. அவற்றுள் மண்டை என்பதைக் குறித்து சில பாடல்கள் கூறியுள்ளன. அவற்றினை இப்பகுதியில் எடுத்துக்காட்டி ஆராயப்பட்டுள்ளன. விறலியை ஆற்றுப்படுத்திய ஒளவையார், ‘கவிழ்ந்து கிடக்கும் உண்கலமாகிய என் மண்டையை மலர்க்குநர் யார்? என ஏங்கி காட்டில் இருந்த சில்வளை விறலியே!, சேய்மைக்கண்ணன்றி அண்மையிலேயே நெடுமான்ஞ்சி உள்ளான். அவன்பால் செல்வையாயின், அவன் பகைப்புலத்துத் திறையாகக் கொண்ட பொருட்களை, ஒரு பொழுதும் ஈரம் பார்க்காத மண்டை நிரம்ப ஊன் கொடுப்பதில் வல்லவன். அவனை நாடிச் செல்க’ எனக் கூறியுள்ளார். இதனை,
“ஒருதலைப் பதலை தூங்க வொருதலைத்
தூம்பகச் சிறுமுழாத் தூங்கத் தூங்கிக்
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரெனச்
சுரன்முத லிருந்த சில்வளை விறலி
செல்வை யாயிற் சேணோ னல்லன்
முனைசுட வெழுந்த மங்குன் மாப்புகை
மலைசூழ் மஞ்சின் மழகளி றணியும்
பகைப்புலத் தோனே பல்வே லஞ்சி
பொழுதிடைப் படாஅப் புலரா மண்டை
மெழுகுமெல் லடையிற் கொழுநிணம் பெருப்ப
அலத்தற் காலை யாயினும்
புரத்தல் வல்லன் வாழ்கவன் றாளே” -புறம்.103

முன்னுரை
நீதிக்கருத்துக்களை போதிக்கக் கூடிய இலக்கியங்கள் அற இலக்கியங்கள் எனப்படுகின்றன. கி.பி.12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய அறநூல்களைப் படைத்துள்ளார்.
1:0. முன்னுரை
1:0. முன்னுரை
முன்னுரை
சங்ககால மக்களின் வணிகத்தைப் பற்றிப் பேசும்போது அக்காலத்து மக்களின் வாழ்க்கைநிலை எப்படி இருந்தது என்பதையும் அறியவேண்டும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்நிலப்பிரிவில் இயற்கையமைப்புக்குத் தக்கபடி அக்காலத்து மக்களின் வாழ்க்கை அமைந்திருந்தது. பண்டைத் தமிழ்நாட்டின் அடிப்படைத் தொழிலாக வேளாண்மை அமைந்திருந்தது. மருதநிலப் பகுதியில் நெல்லும், கரும்பும் பயிர் செய்யப்பட்டன. எள், கொள், துவரை ஆகியன குறிஞ்சி, முல்லை நிலப்பகுதிகளின் பயிர் ஆயின. சாமை, வரகு, திணை ஆகியன முக்கிய புன்செய் நிலப் பயிர்களாக அமைந்திருந்தன. தேனெடுத்தல், கிழங்குகளை அகழ்ந்தெடுத்தல், மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல் ஆகியன ஏனைய பொருளாதார நடவடிக்கைகளாக இடம்பெற்றுள்ளன. நெசவு, கொல்வேலை, தச்சு வேலை, கருப்பஞ்சாற்றிலிருந்து வெல்லம் எடுத்தல், சங்கறுத்தல், கூடை முடைதல் ஆகியன இன்றியமையாக் கைத்தொழில்களாக இருந்தன.
தொல் தமிழரின் நுண்ணறிவு மிக வியப்பிற்குரியதாகும். பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் மொழியியல், உயிரியல், கணிதவியல், அறிவியல் ஆகியவற்றில் தமிழர் பெற்றிருந்த பேரறிவு போற்றுதற்குரியதாகும். தொன்மை மிகுந்த தமிழன் கண்ட பேருண்மைகளை இன்றைய அறிவியலாளர் மறுப்பதற்கில்லை. மாறாகப் பண்டைத்தமிழர் கூற்றினை அடிப்படையாகக் கொண்டே பல சிறந்த அறிவியல் உண்மைகளை நிலைப்படுத்தியுள்ளனர் என்பது தெளிவாகும். பிறப்புக்கள் ஆறு என்பதை,
முன்னுரை:
முன்னுரை
- L T Kiringoda is a Chartered Architect, Town Planner and a Chartered Environmentalist. He headed the Directorate of Development Planning of the Urban Development Authority of Sri Lanka, wherein he served for nearly 3-decades.-
- திரு. திலினா கிரிங்கொட (Thilina Kiringoda) எழுபதுகளில் என்னுடன் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயின்ற சக சிங்கள மாணவர்களிலொருவர். கட்டடக்கலைத்துறையில் இளமானி, முதுமானிப்பட்டப்படிப்பை முடித்த இவர் ,நகர அமைப்புத்துறையிலும் முதுமானிப்பட்டப்படிப்பை முடித்தவர். நகர அதிகார சபையில் பல வருடங்களாகப்பணியாற்றி ஓய்வுபெற்ற இவர் இலங்கையின் தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய அமைப்பின் தலைவராகவுமிருந்திருக்கின்றார். ( the President of the Organization of Professional Associations of Sri Lanka ). இவரது ஆங்கிலக் கட்டுரைகள் பல கட்டடக்கலை, நகரத்திட்டமிடல் பற்றியவை, பல ஆங்கில் ஆய்வேடுகளில் வெளியாகியுள்ளன. அவை அவற்றின் பயன் கருதி இங்கு பிரசுரமாகும். இவற்றைப் பதிவுகள் இணைய இதழுக்கு அனுப்பி, பதிவுகளில் வெளியிடத் தமது சம்மதத்தை வழங்கிய திலிந்தா கிரிங்கொடவுக்கு நன்றி. அவர் அனுப்பிய கட்டுரைகளில் முதலாவது கட்டுரையான, சூழலுக்குப் பாதிப்புறா வகையில் நிறைவேற்றக்கூடிய குடிமனைகள் விடயத்தில் இலங்கையின் அனுபவம் பற்றிய கட்டுரையான “Search for feasible and sustainable shelter: Sri Lanka’s experience” என்னும் கட்டுரை முதலில் இங்கு பிரசுரமாகின்றது. நகர அமைப்பு, கட்டடக்கலை, மற்றும் குறைந்த செலவிலான சூழலுக்கேற்ற குடிமனைகள் போன்ற விடயங்களில் அனைவரும் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்பதாலும் இவ்விதமான ஆய்வுக் கட்டுரைகளின் தேவை அதிகமாகின்றது. - பதிவுகள்-
முன்னுரை
முன்னுரை
சார்லஸ் டார்வின் எழுதிய உயிரினங்களின் பரிணாமக் கொள்கையைத் தழுவி ஹெர்பர்ட் ஸ்பென்சர் (Herbert Spencer 1820 – 1903) சில சமூக பரிணாமத்தினை பற்றி சமூகவியல் விதிகள் (Principles of Sociology ) என்னும் நூலில் பல கருத்துக்களை முன் வைத்தார்.
முன்னுரை
சங்ககாலத் தோற்கருவிகளுள் முரசு முக்கிய இடம் பெற்றுள்ளது. இது அரசர்களுக்குரிய மதிப்புறு தோற்கருவியாக விளங்கியதை சங்க இலக்கிய குறிப்புகள் வழி உணர முடிகிறது. போர்களத்திலும், அரண்மனைகளிலும் முறையே உணர்ச்சிகளையும், அறிவிப்புக்களையும் முரசு அரைந்து வெளிப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு செயல்களுக்கும் உரிய அடிப்படையில் முரசு பல வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தன. போர்முரசு, கொடைமுரசு, மணமுரசு என வினைக்கு ஏற்ப ஓசை மற்றும் தகவமைப்பில் மாறுபட்டிருந்தன. ஏற்றின் தோலை மயிர்சீவாது போர்த்து வாரிறுகக் கட்டப்பட்ட முரசத்திற்குப் பலி வழங்கல் பண்டைய மரபு. திணையரிசியைக் குருதியில் தோய்த்து முரசுக்குப் பலியாக்குவர் என்று முரசின் இயல்புகளையும், வகைகளையும் விளக்குவார்கள். “எறிமுரசு, சிலைத்தார் முரசு, இடிமுரசு, தழுங்குகுரல் முரசு, உருமிசை முரசு என்ற அடைகளினால் முரசம் ஒரு போரொலித் தாளமுடையது அன்றிப் பண்ணிசைக்கும் கருவி அன்று”1 என்று கு.வெ.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.
விழுமியம் என்ற சொல்லிற்குத் தமிழ் இலக்கண இலக்கியங்கள் யாவும் பெரும்பான்மையும் உயர்ந்த, சிறந்த, மேலான என்னும் பொருளைத் தருகின்றன. அதனடிப்படையில் சங்க இலக்கிய அக நூல்களில் ஒன்றான நற்றிணைப் பாடல்களில் காணலாகும் புற விழுமியங்களை ஆராய இக்கட்டுரை முயல்கிறது. தலைவன், தலைவி, தோழி, பாங்கன், செவிலி, நற்றாய்ஆகிய மாந்தர்களின் வழிச் சமூகத்திற்கு கிடைத்த புற விழுமியங்கள்விளக்கப்படவுள்ளன. அரசன் ஆட்சி செய்தல், வள்ளலின் கொடைத்திறம், மனித நேயம், அஃறிணை உயிரைத் தன் உயிராகக் கருதுதல், குலம் பார்க்காமை, சமயம், நம்பி வந்தவரை கைவிடாதிருத்தல் எடுத்த செயலை செவ்வனே செய்தல், தேவையற்று உயிர் நீங்குதல் தவறு ஆகிய புற விழுமியங்களைப் பின்வரும் நற்றிணைப் பாடல்களின் வழிக் காணலாம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









