- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
17.4.1917 ஆம் ஆண்டு மேலைச் சிவபுரியில் வ.சு.ப. மாணிக்கம் பிறந்தார்.இயற்பெயர் அண்ணாமலை.மாணிக்கம் என்று அழைக்கப்பட்டார்.அப்பெயரே நிலைத்து விட்டது.பண்டிதமணி கதிரேசச் செட்டியாரின் தொடர்பால் தமிழ் நூல்களை ஊன்றிப் படித்தார். தமிழில் ‘அகத்திணைக் கொள்கை என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர்.தமிழ் சூடி என்னும் நூலை இயற்றியவர் ஆவார்.இவர் கல்விச் சிந்தனையில் தலையாயவர்.மொழிப் பகை விரும்பாதவர்.மொழிக்கலவை வேண்டாதவர்.எக்கலையும் தமிழ்ப்படுத்தலாம் ;.என்னும் கொள்கையர்.அறிவுத் தூய்மை போல அகத்தூய்மையும் புறத்தூய்மையும் கொண்டவர்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அறிவு நலம் பெற்று வளர்ந்து அழகப்பர் கல்லூhயில் ஆள்வினைத்திறம் கற்று மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் மதிப்புயர் துணைவேந்தராக பணியாற்றிய இவர்.இளமைத்துறவு,செல்வத் துறவு போலப் புகழ்த்துறையும் விரும்பும் காந்திய நெறியாளர் உரைநடையில் புதுத்தடம் காட்டுபவர்.உவமை நடையும், சுருக்க நடையை வளஞ் செய்து தனிநடையாளராகக் காட்டுகின்றன.இவர்; பாடிய ‘கொடை விளக்கு’ வள்ளல் அழகப்பரின் புகழ்பாடும் தமிழ் விளக்கு.இவரால் இயற்றப்பட்ட தமிழ் சூடி,ஆத்திசூடி போல அமைந்தது.இவருடைய பாடல்களில் உலகப் பார்வை,தேசியப் பார்வை,தமிழ்ப் பார்வை,ஒழுக்கப் பார்வை,நடைமுறைப் பார்வை எனப் பலவிதப் பார்வைகளைத் தம் இலக்கியங்களில் பதிவு செய்துள்ளார்.இந்நூல் ஒரடியால் அமைந்த 118 பாடல்களைக் கொண்டு அமைந்துள்ளன சூடிகள் பலவற்றிலும் தமிழ் சூடிக்கு தனி இடம் உண்டு இந்நூல் காப்பு வாழ்த்துப் போல் குழந்தையை முன்னிலையாக கொண்டு தமிழை வாழ்த்தி பாடியுள்ளார்.இந்நூலில் இடம்பெறும் சமுதாய நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சமுதாயம் என்பதன் பொருள்
சமுதாயம் என்பதற்கு கௌரா தமிழ் அகராதி கூட்டம், சங்கம், பொதுவானது, மக்களின் திரள், பொருளின் திரள்,உடன்படிக்கை என்று பல்வேறு பொருள் விளக்கமளிக்கிறது.(ப.331)

தமிழ்ப்பற்று
இந்நூலில் தமிழ்ப்பற்றை வளர்க்க கூடிய பாடல்கள் ஏழு  (1,21,44,50,61,62,100,) ஆகும்.  ஒவ்வொரு மனிதருக்கும் தமிழ்ப்பற்று இருக்க வேண்டும்.இப்பற்றை வளர்ப்பது தமிழ் நூல்கள் இந்நூல்களைப் படிக்க வேண்டும் என்று இந்நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.இதனை, ‘அகத்தமிழ் படி’ (1) என்ற பாடலால் அறியலாம்.மேலும்

சங்க நூல் போற்று (44)
செந்தமிழ் பயில் (50)
இந்தியை விலக்கு (21)
‘தமிழிசை பரப்பு’(61)
‘தாய்மொழி முதன்மொழி’(62)
முத்தமிழையும் பரப்பு  (100)

என்ற பாடல்களின் மூலம் சங்க நூல்களை போற்றி படிக்க வேண்டும் என்றும், தமிழ்ப்பற்றை வளர்க்கும்வேண்டும் என்றும் மொழிகளில் இந்தியை விலக்கு என்றும்,முத்தமிழில் ஒன்று இசை இதனைப் பரப்ப வேண்டும் என்றும்,மொழிகளே முதன் மொழி என்றும்முதன்மையான மொழியே தாய் மொழி என்றும் பாடலில் இயல்,இசை,நாடகம்,என்ற முத்தமிழையும் பரப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் நூல்களைப் படி
தமிழ் நூல்கள் வாழ்க்கைக்கு உகந்த நீதிகளை எடுத்துக் கூறுவதால் இந்நூல்களை மக்கள் படிக்கும் போது நல்ல வழியை அடைவார்கள் என்ற கருத்தை இந்நூலைப் படிக்கும் போது நன்கு புலனாகும் என்பது தெளிவு.
தமிழ்நூல்களான :

1.தொல்காப்பியம்
2.திருக்குறள்
3.குறுந்தொகை
4.சிலப்பதிக்காரம்

போன்ற வாழ்க்கைக்கு பயன் தரும் நெறிகளைக் எடுத்துக்கூறும் நூல்களைப் படிக்க வேண்டும் என்று ஆசிரியர் கூறியுள்ள பாங்கு இங்கு நோக்கத் தக்கது.

தொல்காப்பியம் படி
தொல்காப்பியம் ஒர் தமிழ் இலக்கண நூல் ஆகும்.இதனை இயற்றியவர் தொல்காப்பியர் ஆவார்.இத்தகைய நூலைப் படிக்க வேண்டும் என்பதற்காக தமது நூலில் சுட்டியுள்ளார்.இதனை,தொல்காப்பியம் படி (70) என்ற பாடலில் சுட்டியுள்ளார்.

திருக்குறள் படி
உலக இலக்கியங்களில் அதிகமாக மொழிபெயர்க்கப் பட்ட நூல் திருக்குறள் ஆகும்.இத்திருக்குறளைப் படி என்று எடுத்துரைக்கிறது.இதனை,

திருக்குறள் வரப்பண்   (63) என்ற பாடலால் அறியலாம்.

குறுந்தொகை படி
தமிழ் இலக்கியங்கள் பல இருப்பினும்  எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையைப் படிக்க வேண்டும் என்று எடுத்துரைத்துள்ளார்.இதனை
‘குறுந்தொகை படி’ (36) என்ற பாடலால் புலப்படுகிறது.

சிலப்பதிகாரம் போற்று
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று சிலப்பதிகாரம் ஆகும்.இந்நூலைப் படி என்று இந்நூலாசிரியர்  குறிப்பிடுகிறார் இதனை,

பூம்புகார் போற்று (89) என்று குறிப்பிடுகிறார்.

சமயம் மதம், சார்ந்த நூல்களைப் படிக்க வேண்டும்
ஒவ்வொருவரும் சமயம்,மதம் சார்ந்த நூல்களை  படிக்க வேண்டும் என்று எடுத்துரைக்கிறார்.இந்நூல்கள் சமுதாயத்திற்கு உகந்த ஒழுக்க நெறிகளைப் பறைச்சாற்றுவதால் இக்கருத்தை இயம்பியுள்ளார் போலும்.

தேவாரம் பாடு
தேவாரம் ஒர் பக்தி இலக்கிய நூல் ஆகும். தேவாரம் பாடியவர்கள் திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் ஆவார்.சிவபெருமானின் சிறப்புகளைப் பற்றி எடுத்துரைக்கும் நூல் ஆகும்.

விவிலியம் படி

கிறித்துவ நூலான விவிலியத்தைப் படிக்க வேண்டும் என்று இந்நூல் இயம்புகிறது.இதனை,

விவிலியம் படி (113) என்ற குறளால் அறியலாம்.

கொரான் படி
இஸ்லாமிய மத நூலான கொரான் வழி நில் என்று இந்நூலாசிரியர் எடுத்துரைத்துள்ளார்.இதனை,

கொரான் வழி நில் (41) என்ற பாடலால் அறியலாம்.

கல்வித் தொடர்பானக் கருத்துக்கள்

நூல்கள் எழுது
நூல்கள் பல எழுதவேண்டும் என்று இந்நூலாசிர் குறிப்பிடுகிறார்.இதனை, ‘நூல்கள் எழுது’ (77) என்ற பாடலால் உணரமுடிகிறது.மற்றொரு பாடலில் ‘படிப்பைத் தொடர்’(84) என்ற பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்துக்களைத் தெளிவாக எழுது
எழுதப்படுவதே எழுத்து ஆகும் .இத்தகைய எழுத்து மற்றவர்களுக்கும் புரிய வேண்டும்.எழுதும் போது தெளிவாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று இந்நூலாசிரியான வ.சு.ப.மாணிக்கம் குறிப்பிடுகிறார்.இதனை,

முத்தின் எழுது (20) என்ற பாடலால் அறியலாம்.

பல மொழியறிவை பெறு
இந்நூல் ஆசிரியர் மொழிப் பல கல் என்று குறிப்பிடுகிறார்.இவருக்கு தாய் மொழி மீது பற்று இருந்தாலும் மொழியின் அறிவை பெற வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.இதனை,
மொழி பல கல் (104) என்று குறிப்பிடுகிறார்

பிறமொழி கலவாமை
சொல்லைப் பேசும் போது பிற சொற்களைக் கலந்து பேசக் கூடாது என்கிறார் இந்நூல் ஆசிரியர் இதனை,
சொல்லைக் கலவேல் (53) என்ற பாடலால் அறியலாம்.

தனிமனித நெறிகள்
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி தனிமனிதன் என்பதற்கு ழநெ யஅழபெ வாந pநசளழn, மக்களில் ஒருவர், தனியன், தனியொருவன், துணையிலி, ஆதரவற்றவன் என்று பொருள் விளக்கம் தருகிறது.சமுதாயத்தில் சேர்ந்து வாழும் ஒருவனே  தனிமனிதன் ஆவான்.இவர்களுக்கு சொல்லப்பட்ட நெறிகள் சமுதாயத்திற்கு சொல்லப்படுவனவாக உள்ளன.

தேசப்பற்று
இந்தியன் என்ற ஒர் இலக்கணத்திற்கு தகுந்த வாறு நட என்று குறிப்பிடுகிறார்.இதனை, ‘இந்தியனா இரு’(3) என்ற பாடலால் புலப்படுகிறது.

ஒற்றுமை உணர்வு
ஒற்றுமையே பலம் என்பது பழமொழி இக்கருத்திற்கு வலுசேர்க்கும் விதத்தில் இந்நூலும்  இக்கருத்தையே இயம்புகிறது.இதனை,
ஒருமை வழிபாடு (10) என்ற பாடல் புலப்படுத்துகிறது.இதன் மூலம் மக்கள் யாவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும் சண்டையிட்டு கொண்டு வாழக் கூடாது என்ற கருத்தையும் இயம்புகிறது.

அன்புடன் பழகு
பிறரிடம் பழகும் போது அன்புடன் பழக வேண்டும்.வள்ளுவரும் அன்புடைமை என்ற அதிகாரத்தை தனியாக வைத்துள்ளார்.இதனை
யாப்புப் பழகு (108) என்ற பாடலால் அறியலாம

ஒழுக்கம்
வள்ளுவர் பெருந்தகை ஒழுக்கமுடைமை என்ற அதிகாரத்தை தனியாக வைத்துள்ளார்.மக்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஒழுக்கம் உடையவராக இருப்பதே சிறந்தது ஆகும்.இந்நூலும் ஒழுக்கத்தை பெறு என்று எடுத்துரைக்கிறது.இதனை,
‘ நற்சான்று பெறு’ (30) என்ற பாடலால் புலப்படுகிறது. மேலும் மற்றொரு பாடலில் உன்னிடம் உள்ள தவறுகளைத் திருத்திக் கொண்டு மற்றவர்களைத் திருத்த முயற்சி செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.இதனை,  ‘உன்னைத் திருத்து’ (31)என்ற பாடலின் மூலம் நீ ஒழுக்கமுடையவனாக திருந்து பிறகு மற்றவர்களையும் ஒழுக்கமுடையவனாக்கு என்று குறிப்பிடுகிறார்.

பெரியோர் வழி நில்
தம்மில் மூத்தோர்களை மதிக்க வேண்டும்.அதிலும் கல்வி அறிவில் சிறந்தவர்களின் வழி நிற்க வேண்டும் என்று இந்நூல் ஆசிரியர் இயம்பியுள்ளார்.இதனை,
பெரியோர் வழி நில் (90)
என்ற பாடலின் வழி பெரியோரைத் துணையாக கொள்ள வேண்டும் அதுவே சிறந்தது என்று இயம்பியுள்ளார்.

உழைப்புடன் வாழ்
உழைப்பே மனிதனுக்கு அழகு ஆகும்.உழைப்பை பற்றிய பாடல்கள் இந்நூலில் இடம்பெறுகின்றன.இதனை,மனிதனின் உழைப்பு அவர்களின் உடலை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது.மற்றொரு பாடலில் உழைப்பின் பயனாக வியர்வை நிலத்தில் சிந்தும் படி இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது இதனை, ‘வேர்க்க உழை’(25)என்ற பாடலின் வழி தெளிவுப்படுத்தப்படுகிறது.

காந்தி வழி செல்
நம் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த காந்தி மகான் வழியில் செல்ல வேண்டும்.அதாவது அகிம்சையோடும்,அமைதியுடனும் இருக்க வேண்டும் என்ற கருத்தை இந்நூல் ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார்.இதனை,
காந்தி வழிச் செல் (33) என்ற பாடலின் வழி மக்களிடையே அகிம்சையையும், அமைதியையும் ஏற்படுத்தியுள்ளர்.

தாயைப் போற்று
தாய் என்பதற்கு தமிழ் தமிழ் அகர முதலி அன்னை,ஐவகை தாயருள் ஒருத்தி,தாயாக கருதப்படும் அரசன் தேவி,அண்ணை தேவி,மகள் கொடுத்தவள் இவர்களுள் ஒருத்தி என்று பொருள் உரைக்கிறது.தாயைப் போற்ற வேண்டும் என்கிறது இதனை,

ஓளவையைப் போற்று   (12) என்ற பாடலால் அறியலாம் .இக்காலத்தில் பெற்றெடுத்த தாயை முதியோர்கள் இல்லத்தில் சேர்க்கும் மனப்பான்மை உள்ளது.

கற்பு
பெண்கள் கற்புடன் இருப்பதே சிறந்த பண்பு ஆகும்.சிலப்பதிகாரம் என்ற நூலும் கற்பின் சிறப்பை புகழ்பாடுகிறது.இந்நூலும் கண்ணகியை மையமாக வைத்து பெண்களுக்கு கற்பின் சிறப்பை எடுத்துரைக்கிறது.இதனை,
கண்ணகி    வழிநட (19) என்ற பாடலால் அறியலாம்.

சேமிப்பு குணம் உடையவராக இரு
சிறுத்துளி பெருவெள்ளம் என்பார்கள் இக்கருத்திற்கு இணங்க பெற்றோர்கள் சிறுவயதிலேயே சேமித்து வைக்கும் பழக்கத்தை தம் குழந்தைகளுக்கு கற்று தர வேண்டும் இப்பழக்கமே சிறந்த பழக்கம் ஆகும்.மேலும் இப்பழக்கம் வேண்டும் என்று இந்நூல் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.இதனை,
சேமிப்புப் பழகு  (51) என்ற பாடலால் வலியுறுத்தப்படுகிறது.

கூட்டுறவுக்கொள்
கூட்டு உறவுடன் வாழ்வதே  சிறந்தது ஆகும். கூட்டு வாழ்க்கை வாழும் போது அதிகமாக அன்பு பரிமாறிக் கொள்ளப்படும்.கூட்டுறவு என்பதற்கு கௌரா தமிழ் அகராதி நெருங்கிய தொடர்பு கொள்,நெருங்கிய தொடர்பு,நட்பு,நட்பு கொள் என்று  பல பொருள் உரைக்கிறது.

பெருமை தரும் செயல்களை செய்

பெருமை தரும் செயல்களையே செய்ய வேண்டும் என்று இந்நூல் இயம்புகிறது.இதனை,
பீடுவினை செய்  (87) என்ற பாடல் குறிப்பிடுகிறது.

நட்பைப் பெருக்கி கொள்
தமிழ் - தமிழ் அகர முதலி நட்பு என்பதற்கு சிநேகம் உறவு, சுற்றம்,நண்பன், யாழின் நாலாம் நரம்பு, காதல், அரசாங்கம் ஆறனுள் ஒன்றாகிய நட்பரசர், கையூட்டு, மாற்றரசரோடு நட்புச்செய்கை என்று விளக்கம் அளிக்கிறது.
நட்பு என்பதற்கு உறவு,கண்ணோட்டம்,நட்பு,வழக்கு,அன்பு,உரிமை என்று பல்வேறு விளக்கம் அளிக்கிறது கௌரா தமிழ் அகராதி விளக்கம் அளிக்கிறது.நட்பையும் அன்பையும் பெருக்கி கொள்ள வேண்டும் என்று இந்நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.இதனை,
கேண்மை பெருக்கு  (39) என்ற பாடலால் உணரமுடிகிறது.

வாழ்வை உயர்த்தி கொள்
ஒருவன் வாழ்வு தாழ்வான நிலையில் இருந்தால் அதை முன்னேற்றப் படுத்திக் கொள்ள வேண்டும் மற்றவர்களைப் பார்த்தாவது என்று குறிப்பிடுகிறார்.இதனை,
வாழ்வை உயர்த்து  (28) என்ற பாடலால் அறியலாம்.

பொருளை சம்பாதி
உலக மக்கள் அனைவரும் சோம்பேறித் தனம் இல்லாமல் சம்பாதிக்க வேண்டும் என்று கூறுகிறது.இதனை,
ஈட்டுக பொருள்  (4) என்ற பாடலால் அறியலாம்.
என்ற பாடலடி சுட்டுகிறது.

மக்களை மதிக்க வேண்டும்
மற்றவர்களை மதிக்கும் பண்பை சிறந்த பண்பு ஆகும்.இப்பண்பு இருக்க வேண்டும் என்று இந்நூலாசிரியர் இயம்புகிறார்.இதனை,
‘மக்களை மதி’என்ற பாடலால் அறியலாம்.

சுகாதார மேம்பாடுடன் வாழ வேண்டும்
நாட்டில் உள்ள மக்கள் நலனுடன் வாழ சுகாதாரம் முக்கியம் ஆகும்.இன்றும் கூட சுகாதாரமற்ற நிலை காணப்படுகிறது.மக்கள் சிலர் தெருவோரங்களிலும்,பேருந்து நிலைகளிலும் எச்சில் துப்புகின்றனர் இந்நிலை மாற வேண்டும் என்பதற்காகவே பின்வரும் கருத்தை எடுத்துரைத்துள்ளார் இதனை,
எச்சில் துப்பேல் (16) என்ற பாடலில் அறியலாம்.

அடைக்கலமாக வந்தவர்களை காக்க வேண்டும்
அடைக்கலம் என்பதற்கு தஞ்சை,எளிமை,தாழ்வு,துனி,பற்றுக்கோடு,பெருமை,அற்பம் என்று கௌரா தமிழ் அகராதி பொருள் உரைக்கிறது.இந்நூல் அடைக்கலமாக வந்தவர்களை காக்க வேண்டும் என்று இயம்புகிறது.இதனை,
தஞ்சையைக் காக்க (17)என்ற பாடலில் எடுத்துரைக்கிறார்.

உணவு
உணவு வகையில் எவ்வகை உணவு உண்ண வேண்டும் என்று இந்நூல் ஆசிரியர் கூறுகிறார் இதனை,உடலுக்கு நன்மை தரும் உணவுகளையே உண்ண வேண்டும் என்று இந்நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார் இதனை,
கோதுமை யுண் (42) என்ற பாடல் எடுத்துரைக்கிறது.மருத்துவரும் இவ்வுணவையே அதிகமாகப் பரிதுரைசெய்கின்றனர்.

சைவ உணவு உண்
வள்ளுவர் பெருந்தகை புலால் உண்ணாமை என்ற அதிகாரத்தை  வைத்துள்ளார்.புலால் உணவு உண்ணுதல் உடல் நலத்திற்கு கேடு பயப்பனவாகும்.பிற உயிரினங்களின் ஊனை உண்ணுதல் கூடாது என்கிறது இந்நூல் இதனை,
சைவம் பிடி   (52)
என்ற பாடலில் குறிப்பிடுகிறார்.சைவ உணவை தான் உண்ண வேண்டும் என்று இந்நூல் ஆசிரியர் கூறுவதன் வழி அசைவ உணவை உண்ணக் கூடாது என்ற கருத்தை தெளிவுப்படுத்தியுள்ளார்.

தீண்டாமைக் கொள்ளக் கூடாது
ஒருவர் மற்றவரிடம் தீண்டாமைக் கொள்ளக் கூடாது.பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தீண்டாமைப் பார்க்க கூடாது என்பதை முதல் பக்கத்திலேயே தீண்டாமை ஒர் பெருங்குற்றம்,தீண்டாமை ஒர் மனித தன்மையற்ற செயல்,தீண்டாமை ஒர் பெரும் பாவம் என எடுத்துரைக்கிறது.இத்தகைய கருத்தை இந்நூலும் இயம்புகிறது.இதனை தீண்டாமை யொழி (64)என்ற பாடலால் அறியலாம்.

நாவடக்கம்
ஒவ்வொரு மனிதனுக்கும் நாவடக்கம் இருக்க வேண்டும் என்று வள்ளுவாட குறிப்பிட்டுள்ளார்.இதனை,
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு    (127)

என்ற குறளில் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு மனிதனும் அதிகமாக பேசக் கூடாது என்ற கருத்தை இவ்வாசிரியர் பதிவு செய்துள்ளார். மேலே வள்ளுவர் கூறிய கருத்தையே  தமிழ்சூடியும் இயம்புகிறது.

இதனை நீளப் பேசேல் (75) என்ற பாடலடியால் அறியலாம்.

பழித்துரைத்தல் கூடாது.
ஒருவர் மற்றவரை பழித்துரைத்தல் கூடாது இதனை ‘வைவதை விடு’ (117) என்ற பாடலால் அறியலாம்.

தப்பினை ஒத்துக் கொள்ளும் மனப்பான்மை வேண்டும்
சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் தப்பினை ஒத்துக் கொள்ளும் மனப்பான்மை இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார் இதனை,
‘தப்பினை ஒப்பு (22) என்ற பாடல் சுட்டுகிறது..

ஆணவம் கொள்ளக் கூடாது
சமுதாயத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஏற்ற தாழ்வு இன்றியும், ஆணவம் இன்றியும் இருக்க வேண்டும் இக்கருத்தையே இந்நூலும் எடுத்துரைக்கிறது இதனை,கிளர்ச்சி எதற்கு  (34) என்ற பாடலில் விளக்கியுள்ளார்.

இலஞ்சம் வாங்கதே

இக்காலக்கட்டத்தில் இலஞ்சம் வாங்கும் செயல் புற்றீசல் போல் பெரிகி உள்ளது.இதனை பற்றி இந்நூல் ஆசிரியரும் குறிப்பிட்டுள்ளார்.இதனை,
கையூட்டு மறு  (40) என்ற பாடலால் அறியலாம்.

மதப்பற்று இல்லாத் தன்மை

எழுச்சி பெறுக
வள்ளுவர் பெருந்தகையும் ஊக்கமுடைமை என்ற அதிகாரத்தை அமைத்துள்ளார்.ஊக்கம் என்பதற்கு முயற்சி என்று பொருள் ஆகும்.இந்நூலும் இக்கருத்தையே இயம்புகிறது.இதனை,
மன முயற்சி பெறுக  (7) என்ற பாடல் சுட்டுகிறது.

இரவல் கேட்காதே
ஒருவர் மற்றவரிடம் ஓசி கேட்பது தவறு என்று வலியுறுத்துகிறது.இதனை,
ஓசி கேளேல்  (11) என்ற பாடல் எடுத்துரைக்கிறது.

சண்டைப் போடக் கூடாது
மக்களாய் பிறந்த ஒவ்வொருவரும் ஒற்றுமையுடன் வாழ்வதே சிறந்தது ஆகும்.சாதி,மதம்,இனம் என்ற அடிப்படையில் வம்பையோ,சண்டையோ போட்டுக் கொள்ளக் கூடாது.இதனை,
வம்பை வளர்க்கேல்   (23) என்ற பாடல் மூலம் அறியமுடிகிறது.

பொய் சொல்லக் கூடாது

வள்ளுவர் வாய்மை என்ற அதிகாரத்தை வைத்த வழி பொய் சொல்லக் கூடாது என்ற கருத்து புலப்படுகிறது.இதனை,
‘பொய்மை விடு’என்ற பாடலின் வழி வ.சு.ப.மாணிக்கம் கூறியுள்ளார்.

சோர்வு கொள்ளாதே
ஒருவரை கெடுப்பதே சோர்வு ஆகும்.இந்த சோர்வு யாருக்கும் வரக்கூடாது என்று இந்நூல் ;ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கு மாறாக முயற்சியை மேற்கொள் என்று குறிப்பிடுகிறார்.இதனை,
‘சோர்வை விடு’
என்ற பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

வேளாண்மை தொழில் செய்
உழவு என்ற அதிகாரத்தில் வேளாண்மைத் தொழிலைப் பற்றி திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.இத்தொழிலை சிறப்பு என்று இந்நூல் ஆசிரியரும் குறிப்பிட்டுள்ளார்.
நுகத் தொழில் சிறப்பு  (76) என்ற பாடலால் புலப்படுகிறது.

மது அருந்தாமை

வள்ளுவர் பெருந்தகை கள் உண்ணாமை என்ற அதிகாரத்தை வைத்துள்ளார்.இவ்வதிகாரம் கள் உண்ணக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்துவதற்காகவே வைக்கப்பட்டுள்ளது.இந்நூலும் மது அருந்தக் கூடாது என்று எடுத்துரைக்கிறது.இதனை,
‘ மதுவை விலக்கு’ என்ற பாடலில் எடுத்துரைத்துள்ளார்.

பகையை வெல்க

மனித சமுதாயத்தில் மக்களிடம் நட்பு மட்டும் தான் இருக்க வேண்டும் பகை பித்து இருக்கக் கூடாது இருக்கக் கூடாது என்றும் அப்படி இருந்தால் அதனை வெல்ல வேண்டும் என்று ஆசிரியர் கூறுவதன் வழி பகையை வெல்ல வேண்டும் என்பது புலப்படுகிறது.இதனை,

ஊழையும் வெல்க (6) என்ற பாடலால் அறியமுடிகிறது

முடிவுரை
நூல் ஆசிரியர் வரலாறு அறியமுடிகிறது,சமுதாயம் என்பதன் விளக்கம் அறியமுடிகிறது,தமிழ்ப் பற்று பற்றியும்,கல்வி தொடர்பானக் கருத்துக்கள் பற்றியும்,சமயம்,மதம் சார்ந்த நூல்களைப் பற்றியும்,தனிமனித நெறிகளான தேசப்பற்று பற்றியும், ஒற்றுமை உணர்வுடன் இரு என்றும், அன்புடன் பழக வேண்டும் என்றும், ஒழுக்கமுடையவனராக இருக்க வேண்டும் என்றும்,காந்தி வழி செல்ல வேண்டும் என்றும்,தாயைப் போற்ற வேண்டும் என்றும், மக்களை மதிக்க வேண்டும்,சுகாதார மேம்பாட்டுடன் வாழ வேண்டும் என்றும்,சேமிப்பு குணம் உடையவராக இருக்க வேண்டும் என்றும்,வேளாண்மைத் தொழில் செய்ய வேண்டும் என்றும்,நட்பை பெருக்கி கொள்ள வேண்டும் என்றும்,மது அருந்துதல் தவறு என்ற செய்தியையும் இந்நூல் எடுத்தோம்பியுள்ளன என்பதை இக்கட்டுரையின் வாயிலாக அறியமுடிகிறது.

துணைநூற்பட்டியல்
1.மெய்யப்பன்   ச      புதிய ஆத்திசூடி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை – 6000108, முதற்பதிப்பு -2008                                        
2.மெய்யப்பன். ச - நீதி நூல் தெளிவுரை,  மாணிவாசகர் பதிப்பகம், சென்னை -6000108, முதற்பதிப்பு -2006

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர் : - சு.ஜெனிபர் , முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி.24 -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R