ஆய்வு: புழங்கு பொருள் பண்பாட்டில் கலன்கள் (சங்க பாடல்களை முன் வைத்து)
உலகில் வாழ்கின்ற அனைத்து இன மக்களும் தாங்கள் வாழ்கின்ற புவியியற் சூழலுக்கு ஏற்பத் தங்களைச் சுற்றிலு காணப்படுகின்ற பொருட்களைப் பயன்படுத்தி தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனர். இவற்றுள் மனிதனின் அன்றாட தேவைகளான உணவு, உடை, உறைவிடம் என்பனவற்றில் உணவே முதன்மையாக இருக்கிறது. இக்கட்டுரையானது உணவுகளை உண்பதற்கு மக்கள் பயன்படுத்தி வந்த கலன்களைக் குறித்ததாக அமைகிறது.
பண்பாடு
பண்பாடு என்னும் கருத்தாக்கம் மக்களின் அறிவு சார்ந்த நிலையில் ஏற்படும் எண்ணற்ற கருத்து வடிவங்களின் முழுமை ஆகும் என்கிறார் சீ. பக்தவத்சல பாரதி (1980: 160). மனிதன் சமூக உறுப்பினன் என்ற நிலையில் அவன் பயன்படுத்தும் பொருட்கள் அவை பற்றிய கருத்தாக்கங்கள் இவைகளின் கூட்டுச் சேர்க்கைப் பண்பாடாகும். இது புவியியல் பரப்பு, நாடு, மொழி, இனம் போன்றவற்றிற்கேற்றபடி வழங்கும் இயல்புடையது.பண்பாடு என்னும் சொல் பண்படுத்துதல் என்ற சொல்லிலிருந்து உருவானது எனலாம். ஏனெனில் பண்பாடு என்ற சொல் மனிதனோடு மட்டுமே தொடர்புடையது. இது பிற உயிரினங்களிடமிருந்து மனிதனைப் பிரித்துக் காட்டுகிறது. பண்பாடு என்னும் கருத்தாக்கம் மக்களின் அறிவு சார்ந்த நிலையில் ஏற்படும் எண்ணற்ற கருத்து வடிவங்களின் முழுமை என்று பக்தவத்சலபாரதி (1980:160) குறிப்பிடுகிறார்.
பண்பாட்டினை மானிடவியலார் இரண்டாக வகைப்படுத்துகின்றனர். அவை, 1. பொருள்சார் பண்பாடு , 2. பொருள்சாராப் பண்பாடு என்பனவாகும். மக்கள் தங்களின் தேவைகளுக்காகச் செய்து கொள்ளும் அனைத்து வகையானப் பொருட்களும் பொருள்சார் பண்பாட்டினுள் அடங்கும். பொருள்சாராப் பண்பாட்டில் பொருள் வடிவம் பெறாத அனைத்துக்கூறுகளும் இடம் பெறுகின்றன. இவற்றில் புழங்குபொருட்கள் அனைத்தும் பொருள்சார் பண்பாட்டினை அடையாளப்படுத்துவனவாக விளங்குகின்றன.
புழங்கு பொருள்
புழங்கு என்பதற்குக் கதிரைவேற்பிள்ளை தமிழ் மொழியகராதி (1990:1047) வழங்குதல் என்றும், தமிழ் லெக்சிகன் (1982:2793) கையாளுதல், புழங்குதல் என்றும் விளக்கம் தருகின்றன. எனவே புழங்கு பொருள் என்பது மக்கள் அன்றாடம் தங்கள் தேவைக்காகப் பயன்படுத்தி வந்த,வருகின்ற பொருட்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.மக்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப தொன்று தொட்டே செய்துவருகின்ற கைவினைப் பொருட்கள் யாவும் புழங்குபொருள் பண்பாட்டை அடையாளப் படுத்துகின்றன. லூர்து(1997:297), இயற்கை வளங்களைப்பண்பாட்டுப் படைப்புகளாகவும், கலைப்படைப்புகளாகவும் மாற்றிக் கொள்வதையே புழங்கு பொருள்சார் பண்பாடு என்றும்; மானுடக்குழு ஒன்றின் தொழில் நுட்பத்திறனும் புழங்குபொருள் சார்ந்தகலைத்தொழில் வேலைப்பாடமைந்த பொருட்களும் புழங்குபொருள்பண்பாட்டில் அடங்குகின்றன என்றும் குறிப்பிடுகின்றார்.
புழங்கு பொருட்கள் குறித்து ஆய்வுச் செய்த ரெஜித்குமார் (2009: 2) மூன்றாக வகைப்படுத்தி கூறியுள்ளார். அவை, 1. உணவு சார்ந்த புழங்குபொருட்கள், 2. வீட்டுஉபயோகப் புழங்குபொருட்கள், 3. தொழிற்கள புழங்குபொருட்கள்என்பனவாகும்.

உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் மொழிகளில் முதன்மையானது தமிழ். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம், சீனம், ஹீப்ரு போன்ற பிற செம்மொழிகளும் போற்றத்தக்கன. இருப்பினும் தமிழ்மொழியே தனித்துவம் மிக்கது. மிக நீண்ட காலத்திற்கு முன்பே தரப்படுத்தப்பட்டது. எந்தமொழியிலிருந்தும் கடன் வாங்காத வேர்ச்சொற்களின் வளமுடையது. எக்காலத்தும் உயிர்த்துடிப்புடைய இளமைக்குன்றாத இலக்கிய வளம் கொண்டது. தமிழ்மொழி உலகிற்கு அளித்தக் கொடைகள் ஏராளம் எனலாம். அந்த வகையில் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் பேறுபெற்றுத் திகழ்கின்றன. பண்டைத் தமிழர் வாழ்க்கையை திணையின் அடிப்படையில் பிரித்துக் கொண்டனர். இவர்களிம் வாழ்வு அகம், புறம் சார்ந்த வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு விளங்கியதால் இவற்றைச் சார்ந்தே சங்க இலக்கியங்கள் தோன்றின. இத்தகைய சூழலில் அகத்தைப் பற்றிக் கூறும் அகநானூற்றில் பாலைத்திணைப் பாடல்கள் பற்றிச் சுருக்கமாக ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
முன்னுரை:
தமிழ் இலக்கியம் சங்க இலக்கியம், அற இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்தி இலக்கியம் என பல முகங்களைக் கொண்டது ஆகும். இவற்றுள் இக்கால இலக்கியமும் ஒன்று. கவிதை, சிறுகதை, நாவல் முதலானவை இவ்வகையைச் சாரும். கவிதை படைப்பாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் கவிஞர் வைரமுத்து. இவரது படைப்புகளில் ஒன்றான ‘இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல’ என்னும் நூலில் அமைந்த சமுதாயச் சிந்தனைகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது
முன்னுரை
இலக்கியம் என்பது கற்பனையால் விளையும் பாடுபொருளை உடையது. இலக்கியம் எனும் சொல் தொகை நூல்களுள் எங்கும் காணப்படவில்லை என்றாலும் பாடல், கவிதை, பாட்டு, செய்யுள்,நூல், பனுவல், ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புறப்பாடல்களில் இருந்து பெறப்படும் பிற பொருள்களாவன போர், வீரம், கொடை, சமுதாய நடை பற்றிய சான்றோர்களின் அறவுரை, அறிவுரை என்பன. இத்தகைய சிறப்புப் பெற்ற நம் இலக்கியத்தில் இலக்கியக் கோட்பாடுகளும் இயைந்துள்ளன. இலக்கியம் அனைத்திற்கும் பொதுவானவை இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு தொல்காப்பியர் தரும் கோட்பாடுகள் பலவாகும். இவையே முன்னம்,மரபு, உவமை, நோக்கு, உள்ளுறை, இறைச்சி, மெய்பாடு, வண்ணம், வனப்பு, யாப்பு, என்ற இப்பத்துக் கோட்பாடுகளில் ஒரு சிலவற்றைத் தனித்தனி இயல்களில் தொல்காப்பியர் விளக்கியுள்ளார். இவ்வாறு மெய்பாட்டில் காணலாகும் உவகையினை பதிற்றுப்பத்தில் பொருத்திப்பார்க்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.
சங்க இலக்கியங்களோடு செவ்விலக்கியமாகப் போற்றுமளவுக்கு சிறப்புடயது முத்தொள்ளாயிரம். வெண்பா யாப்பில் மூவேந்தர்களின் புகழினைப் பாடுவதற்கென்று எழுந்த நூலாகும். இந்நூல் சேர சோழ பாண்டியர்களின் புகழினைப்பாடும் புகழ்பாடும் ஓர் அரிய புதையலாகவும் இந்நூலில் மூவேந்தர்களை பாடினாலும் குறிப்பிட்ட எந்த மன்னனையும் பெயர் சுட்டிப் பாடாமல் வேந்தர்களும் பொதுப் பெயர்களாலேயே அவர்களைச் சிறப்பித்து கூறப்படுகின்றது. இந்நூல் புறத்திரட்டு என்ற தொகுப்பிலிருந்து 108 வெண்பாக்கள் மூவேந்தர்களை ஒவ்வொருவரையும் கூறப்படுவதால் இந்நூல் முத்தோள்ளாயிரம் என்ற பெயர் பெற்றது எனலாம். முத்தொள்ளாயிரத்தின் கால வரையறை மற்றும் பாடல் எண்ணிக்கையில் ஆய்வாளர்களிடையே பல்வேறு கருத்து வேறுபாடு உண்டு. புறத்திரட்டைப் பதிப்பித்தப் பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை இதன் காலம் கி.பி. 15ஆம் நூற்றாண்டு என்று முன் வைக்கிறார். இதனை பல்வேறு அறிஞர்கள் பலரும் பல்வேறு தரப்பில் உரைக்கின்றனர். இதை
உலக மக்கள் தொகையில் 5 சதவீதத்தினர், உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களின் மறுவாழ்வு குறித்து கடந்த இரு நூற்றாண்டுகளாகத்தான் உலகம் சிந்திக்கத் தொடங்கிருக்கிறது. உணவு, உடை, இருப்பிடத்தோடு உதவியும் அவர்களுக்கு அத்தியாவசிய தேவையில் ஒன்று. இதனால், அவர்களுக்கு உதவுவதற்காக பல தொழில் நுட்ப கருவிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இப்போக்கு உலக போர்களுக்குப் பிறகே அதிகரித்துள்ளது. போரினால் பலர் ஊனமாக்கப்பட்டனர். அவர்கள் படித்தவர்களாகவும், பல்துறை வள்ளுனர்களாகவும் இருந்தனர். அதனால், அவர்களே, தங்களுக்கான உதவு தொழிநுட்பக்கருவிகளை உருவாக்கினர். போரினால் பார்வை இழந்த அமெரிக்க ராணுவ வீரர் ரிச்சட், சாலையைக் கடப்பதற்காக வெண்கோளை {white cane} உருவாக்கினார். [ந.ரமனி இருலிலிருந்து ப. 42] பார்வையற்றோர்களை அழைத்துச்செல்ல நாய்களை பழக்க இயலுமா? என ஆய்வுகள் நடைபெற்றன. இவ்வாறான தொடர் ஆய்வுகள், பல உதவுதொழிநுட்ப கருவிகள் உருவாக காரணமாக அமைந்தன. கல்வி கற்றலிலும், பணித்தலங்களிலும் பார்வை மாற்றுத்திறனாளிகள், திறம்பட செயல்பட, உதவு தொழில்நுட்பங்களே பெரிதும் துணைசெய்கின்றன. பார்வையற்றோர்களுக்கு உதவும், உதவுதொழில்நுட்பம் குறித்த அறிமுகத்தை இக்கட்டுரை முன்வைக்கிறது.
முன்னுரை
முன்னுரை
தமிழ்மொழி மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலம் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய தொன்மைச் சிறப்பு மொழி. இதில் தற்போது கிடைக்கும் செவ்விலக்கிய நூல்களுள் மிகவும் தொன்மையான முதல்நூல் தொல்காப்பியமே என்பதில் ஐயமில்லை. தமிழ் மொழியின் பெருமையையும் தமிழ் மக்களின் வாழ்வியல் கோட்பாடுகளையும் அவர்தம் அறிவு மேம்பாட்டையும் உலகறியச் செய்யும் பெருமை உடையது. வாழ்க்கையை அகம், புறம் என்று பிரித்து அவற்றை இலக்கியமாகப் படைப்பதற்கு இலக்கணம் வகுத்துத் தந்தது தொல்காப்பியம். இதன் சிறப்பும் பயனும் அங்கமும் அழகும் மிகப்பெரிய அளவில் பட்டியலிட்டுக் காட்டலாம். எனினும் இவற்றைச் சுருக்கமாக ஆராய்வோம்.
முன்னுரை: -
முன்னுரை
மனிதனின் அழகியல் வெளிப்பாடு கலையாகும். கலை என்பது பார்ப்போர், கேட்போர் மனதில் அழகியல் உணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் அந்தந்தப் பயன்பாட்டுச் சூழலோடு வெளிப்படுத்து” ஆகுமென்று தற்காலத் தமிழகராதி கூறுகிறது. இக்கலை என்ற சொல்லிற்கு “செயல்திறன், ஆண்மான், ஒளி, சாத்திரம், மேகலை” எனவும் பொருள் கொள்ளப்படுகிறது. மனித வாழ்க்கையோடு தொடர்புடைய இக்கலை, உணர்ச்சி கொள்ளக்கூடியது. உணர்வுகளைத் தூண்டக்கூடியது. மனித மரபு வகைப்பட்டது. மனிதனால் செயற்கையாக உணர்வுகளை இயங்கச் செய்யக்கூடியது. தனிமனிதனிலிருந்து சமூகத்தை இணைக்கக் கூடியது. இத்தகைய சிறப்பு பெற்ற கலை, கலைப்பண்பாடு காலங்காலமாக மக்களோடு ஒன்றிணைந்தே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் இசை, சிற்பம், ஓவியம், கட்டிடம், நாட்டியம், கூத்து, ஒப்பனை உள்ளிட்ட கலைகளும் அடங்கும். இசை, நாட்டியம், கூத்து, ஆடல், பாடல் ஆகிய நிகழ்த்துக்கலைகள் உடலோடு உணர்ச்சிகளை ஏற்படுத்தி பிறர் பார்த்து மகிழுவதற்கு உறுதுணையாக இருந்து வருகின்றன. இக்கலைகளை நாட்டுப்புற நிகழ்த்துக்கலைகள் (Folk Performing Arts) என்று அழைக்கப்படுகிறது.
முன்னுரை
தொல்காப்பியத்தின்படி தலைவன் - தலைவி மறைவாக ஒழுகும் களவு ஒழுக்கத்தை வரையறுப்பதே களவு இலக்கியக்கொள்கையின் வேலை. அத்தகைய களவில் தலைவனுக்குச் சார்பாக இயங்கும் பாங்கன், தலைவிக்குச் சார்பாக இயங்கும் தோழி இடம்பெற்றிருப்பது பொருத்தமுடையது. களவு ஒழுக்கத்திற்கு எவ்வகையிலும் சார்பாக இயங்காத செவிலி, நற்றாய் பாத்திரங்கள் களவில் ஏன் இடம்பெற்றிருக்கிறது? களவுக்குப் பொருத்தமற்ற செவிலி, நற்றாய் இருவரில் நற்றாய் குடி பொறுப்பிற்கு உரிமையானவள்; செவிலி தலைவியின் குடிச்செயலைப் பின்பற்றி தலைவியை வளர்க்கும் பொறுப்பை ஏற்றிருப்பவள். குடிசார்ந்து நேரடி உரிமையைப் பெற்றிருப்பதால் களவுக்குப் பொருத்தமற்ற நற்றாய் பாத்திரம் இங்கு ஆய்வுக்குட்படுத்தப்படுகிறது. இவ்ஆய்வுக் கட்டுரைக்கு ஃபூக்கோவியல் சிந்தனை கருவியாகக் கொள்ளப்படுகிறது. காரணம் ஒரு பொருள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்றப்படுகிற இடத்தில் மாறிய பொருளுக்கும் மாற்றப்படுகிற பொருளுக்கும் இடையில் நடந்தவற்றைக் குறித்த ஆராய்ச்சியில் மிகுகவனம் செலுத்தியது ஃபூக்கோவியல் சிந்தனை. ஃபூக்கோ உற்பத்தியை நிகழ்த்தக்கூடிய ஒரு பொருள் குறித்த ஆராய்ச்சியை அவ்வரலாற்றின் பின்னணியில் ஆராய்பவர். ஆய்வுக்கட்டுரைக்கு எடுத்துக்கொண்ட இலக்கியவிதிகள் மொழியாலான ஒரு பொருள். அது இலக்கியவிதிகளை உற்பத்தி செய்யக்கூடியது. எனவே பூக்கோவியல் சிந்தனையைக் களவில் வைத்து விளக்க இடமுண்டு. மேலும் இங்குக் களவு கற்பாக மாற்றப்பட்டதற்கு இடையில் நற்றாயின் செயல்முறைகள் அமைந்திருக்கின்றன. அதற்குரிய தரவுகளைத் தொகுத்து வகைப்படுத்தி விளக்குவதற்கு முன் ஃபூக்கோவியல் சிந்தனையில் கட்டுரையை விளக்குவதற்குப் பயன்படக்கூடிய பகுதி சுருக்கமாகத் தரப்படுகிறது.
முன்னுரை
ஆய்வு நோக்கம் (Objectives)

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









