ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
கற்கை நெறிமுறைகள் பள்ளிகள் பல்கலைக்கழகங்கள் தாண்டி அன்றாட வாழ்விலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. மனிதனை மனிதனாக்குவது மனிதனைப் பக்குவப்படுத்துவது போன்றவையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்களில் பாதம் படாத பாமர மக்களைப் பக்குவப்படுத்தும் காரணிகளில்  இலக்கியம், கலை, சமயம், சமுதாயம், சமூகம், குடும்பம், கூட்டம் போன்றவை இன்றியமையாத பங்காற்றுகின்றன. இலக்கிய, கலை, சமயப் பங்களிப்பிற்கு எழுத்தறிவு அவசியமில்லை என்பது ஒருபுறம். எழுத்தறிவு இல்லாத இலக்கியம் நாட்டார் இலக்கியம் என்று பெயரைப் பெறும் என்பது மறுபுறம். இவ்வகை இலக்கியங்களும் கற்கை நெறிகளாக இருந்து மக்களை மகாத்துமாக்களாக்குகின்றன. இத்தகைய மகாத்துமாப் பனுவல்களைப் பத்திரப்படுத்தும் நூலகங்களாகக் கிராமங்கள் திகழ்கின்றன. கிராமங்களில் நடைபெறும் ஒழுக்கப் பிறழ்வுகள் ஒரு சில இந்நெறிமுறைப் பாடத்திட்டத்தின் போதாமையை எடுத்துரைக்கும் ஆவணங்களாகவும் செயல்படுகின்றன.இவ்விடமே வெறியாடல் கற்கை நெறியின் வெளி  குறித்து விவாதிக்க தூண்டுகிறது. இவ்வெளியானது அறிஞர் பெருமக்களால் நான்கு நிலைகளாகப் பாகுப்படுத்தப்படுகின்றது. அவை முறையே

1 கிளைச் சாதி - கிராமத் தெய்வம்
2 குலம்      - கால்வழித் தெய்வம்
3 குடும்பம்    - வீட்டுத் தெய்வம்
4 கூட்டம்     - ஊர்த்தெய்வம்

என்பனவாகக் கொள்ளப்படுகின்றன. இப்பாகுபாடுகள் கிராமங்களின் மிகப் பெரிய நிறுவனங்கள் எனக் கொள்ளலாம். இப்பகுப்புமுறை நான்கனுள் முதல் மூன்றும் செவ்வியல் பண்பு பெற்றவையாகவும் இறுதியாக இடம்பெறும் ‘கூட்டம் - ஊர்த்தெய்வம்’ என்பதை நவீனப் பண்பு கொண்டதாகவும் வரையறுக்கலாம். இதுவே இக்கற்கை நெறியின் உள்முரணாகக் கொள்ளப்படுகின்றது. இதன்படி செவ்வியல் x நவீனம் எனும் இரு கூறுகள் வெறியாடலில் பயின்றுவருவதைக் காணலாம்.

வ.எண்     -    செவ்வியல்  -    நவீனம்
1    கிராமத் தெய்வம் கால்வழித் தெய்வம்  வீட்டுத் தெய்வம்   -  ஊர்த் தெய்வம்
2    பெரும்பான்மைக் குலத்தெய்வங்கள் -   தனித் தெய்வங்கள்
3    சமூகம் சார்ந்தது -  சமுதாயம் சார்ந்தது
4          நெகிழ்வுத்தன்மையற்றது - நெகிழ்வுத்தன்மையுடையது                                                          
5    கற்கை நெறி மரபானது  -   சூழல் சார்ந்தது

பல நூற்றாண்டுகள் கழித்தும் வெறியாட்டு அசன்மைத் தன்மையுடன் இருப்பதற்கான காரணிகளை ஆராய வேண்டுமெனில் வெறியாட்டுத் தொடர்பாக நீண்டதொரு விவாதத்தை நிகழ்த்த வேண்டியிருக்கிறது. தமிழியல் ஆய்வுகள் பெரும்பாலும் வெறியாடலின் அகச் சான்றுகளையே அடுக்கிச் சொல்லியுள்ளன. இந்நிலையில் இவ்வெறியாட்டின் கற்கை நெறி மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு கூறாக உள்ளது. நிகழ்த்துகலை காப்பாற்றபடக் காரணமான கற்கை நெறியின் முக்கியக் காரணமான சாமியாட்ட நிகழ்வுகளே இங்கு வெறியாட்டாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. நிகழ்த்துதல் முறையில் நடைபெறும் வெறியாட்;டானது

·    உற்று நோக்குதல்
·    போலச் செய்தல்
·    உரிச் சொல்லறிதல்
·    கற்றல் - கற்பித்;தல்
·    சிந்தனைப் புலம்

போன்ற கூறுகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது.

உற்று நோக்குதல்
நாட்டார் வெறியாடலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முயலும் மாணவன் மிகச் சிறந்த பார்வையாளனாக இருக்கவேண்டிய கட்டாயமிருக்கிறது. பார;வையாளனைப் பங்கேற்பாளனாக மாற்றக்கூடிய திறம் நாட்டார் கலைக்குரியது என்பது நாமறிந்ததே. இவ்விடத்துப் பார்வையாளனின் உற்றுநோக்கல் முன்னாய்வுகளாக எடுத்துக் கொள்ளப் படுகின்றது. இன்றளவும் நாட்டார் வெறியாடலில் முன்னோடியான் என்ற அங்கீகாரம் அக்குழுவில் வயது முதிர்ந்த ஒருவருக்குரியது.

போலச் செய்தல்
உற்று நோக்கலின் மூலமாகப் பல வெறியாடல்களின் அடையாளங்களையும் குறியீடுகளையும்  உடல்மொழியுடன் உள்வாங்கியிருக்க வேண்டும். இதனுள் உச்சரிப்பு முறைகள் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். ஆரம்ப நிலையில் பெரும்பான்மை உடல்மொழிக் கூறுகள் மட்டுமே ஏற்றம் கொள்ளப்பட்டு நிகழ்த்துதல் இடம்பெறுவதற்கான அங்கீகாரமாகக் கொள்ளப்படும். உடல்மொழிக் கூறுகள் முழுக்கமுழுக்கப் போலச் செய்தலே அன்றித் தான்தோன்றித் தன்மையானவையல்ல.

உரிச் சொல்லறிதல்
குறியீடுகளை உள்வாங்குதல் என்பதும் உரிச்சொல்லறிதல் என்பதின் பாற்படும் இதன்படி வெறியாடல் நிகழ்த்துகலையில் ஈடுபடும் ஒருவருக்கு இது வேறொரு பொருளைத் தரக்கூடியதாக இருக்கும். இதனை மாணவன் அரங்கு மட்டுமின்றித் தன்னுடைய சுய ஆர்வம் காரணமாகத் தேடி அலைவதும் உண்டு. நாட்டார் வெறியாடலில் உரிச்சொல் பயன்பாடு இன்றியமையாத ஒன்று. சாதாரண வெறியாடலை நிகழ்த்தும் ஒருவரிடமிருந்து மீவியல்பாளன் ஒருவனை வேறுபடுத்துவதற்கு இவ்வெறியாடலில் உரிச்சொல் துணைசெய்கிறது.

சான்றாக பொதுவான நாட்டார் வெறியாடலில் ஈடுபடும் ஒருவர்  “மேளசத்தம் கேட்கணும்” என்பதாகச் சொல்லி ஆடுவாராயின் மீவியல்பாளன் இதே பொருண்மையை “மேளத்த வளங்கப்பா!” என்பதாகக் கூறக் காணலாம். மேளத்தைச் (இசையை) சத்தமாகக் காண்பதும் ‘வளத்தல்’ எனும் உயிரூட்டம் கொடுப்பதும் அவரவர் பக்குவப்பட்ட மனநிலையை அல்லது துறைதோய்ந்த தன்மையைக் காட்டிவிடுகின்றன. கல்வி மனிதனைப் பக்குவப்படுத்துவது; மனிதனை மனிதனாக்குவது உலக அறிவையும் தொழில்நுட்பத்தையும் அறியசெய்வது எனும் குரல்களை மேற்கண்ட சான்று உயிரூட்டம்  மெய்பெறச் செய்கிறது என்பது மறுக்கவியலாத ஒன்று.

கற்றல் - கற்பித்தல்
பார்வையாளர்கள் பலர் மத்தியில் கற்றல் - கற்பித்தல் நிகழ்வு நடைபெறுகிறது. வெறியாட்டு நிகழ்வின் ஆசான்கள்; கவனத்திற்குரியவர்கள். மிக நீண்ட தமிழ்ப் பண்பாட்டில் பெண்கள் ஆசிரியர்கள் எனும் அதிர்ச்சித் தகவல் இவ்வெறியாடல் ஒன்றில் மட்டும் சாத்தியமாகும் (இது தனியான மேலாய்விற்குரியது). இத்தகவல் தென் தமிழ்நாட்டில் இடம்பெறும் வெறியாட்டுக் களங்களின் ஆய்வுத் தரவுகளின்படி பெறப்பட்டதாகும். பெண் தெய்வங்களோ பெண்களோ இடம்பெறாத சூழலில் ஆண் தெய்வ வெறியாடல்கள் விரிவான மறு ஆய்விற்கு உட்படுத்தக் கூடியவையாகும். உற்று நோக்கலில் பெற்ற அல்லது பயின்ற விடயங்களைப் போலச் செய்தல் முறையில் மாணவனுக்குரிய அரங்காக இந்நிகழ்வு அமைந்துவிடுகிறது. முதன்முதலில் வெறியாடலில் மாணவன் இசையை அர்தப்படுத்தும் பணியில் தன்னை இணைத்துக் கொள்கிறான். உடல்மொழியும் வெளிப்பாடும் கொண்ட மாணவன் இசையை அர்த்தப்படுத்தும் பணியில் தன்னை இணைத்து வெற்றிக்  கொள்கிறான். உடல்மொழியும் வெளிப்பாடும் கொண்ட மாணவன் ஆசிரியரால் அடையாளம் காட்டப்படத் தெரிவாகிறான். தெரிவிற்குப் பின் தொடர்ந்து அவன் நிகழ்த்துதலில் ஈடுபாடு கொள்கிறான். இந்த ஈடுபாடே மாணவனுக்குத் தனிச் சிந்தனைப் புலம் உருவாக்கும் அளவிலான திறத்தை வழங்கிவிடுகிறது.

இவ்விடத்தில் நிகழ்த்துதல் கூறுகள் 1. உற்று நோக்கல் 2. போலச் செய்தல் 3. உரிச் சொல்லறிதல் 4. கற்றல் - கற்பித்தல்  போன்றவை பாடமாகக் (subject) கொள்ளப்பட்டுப் பின்னாளில் அதுவே சிந்தனைப் புலமாக (Discipline) ஆக மாற்றம் பெறுகிறது என்பதை அவதானிக்கலாம்.

சிந்தனைப் புலம்
வெறியாடலில் இடம்பெறும் அறிமுக மாணவன் ஒருவனுக்கு ஆசிரியரின் துணை தேவைப்படுகிறது அல்லது ஆசிரியரின் கருணை அவசியமாகிறது. அதன்பின் தொடர்ந்த நிகழ்த்துதல்சார் ஈடுபாட்டில் தனக்கானதொரு பாணியை - முறையை வளர்த்துக்கொள்ள மாணவனுக்குத் தேவையான அங்கீகாரத்தை வெறியாடல் அனுமதிக்கிறது. இதற்குக் குறீயிடுகளும் உரிச்சொல் பயன்பாடுகளும் உறுதுணையாகின்றன. மாணவன் ஆசிரியனைக் கடந்து செல்கிறான் என்ற போதும் மாணவனின் அடிப்படைத் தகுதித் தேர்வு ஆசிரியரால் நிர்ணயிக்கப்பட்டது. பெண் ஆசிரியரின் நிகழ்த்துதல் இல்லாத ஒரு வெளியில் மாணவன் தனித்துவம் பெறுகிறான். இங்கு ஆசிரியர் மறுக்கப்படுவதற்கான சூழல் ஆராயப்பட வேண்டியவொன்று. பக்குவப்பட்ட சூழலில் பெண் மறுப்பு இடைவெளி அதிகாரமற்ற வேறொன்றை அர்த்தப்படுத்துகிறது. அதற்கான அர்த்தத்தை ஆய்வுலகுதான் அறிந்து கூற வேண்டும். மேற்கண்ட விவாதங்கள் வெறியாடலை ஒரு கற்கைப் புலம் என்பதை நிறுவதற்கான சான்றுகள் அன்றி வேறில்லை.

முடிவுரை

 

மனிதனைப் பக்குவப்படுத்தும் அனைத்தும் கற்கை நெறிகளே என்பதாகக் கொண்டால் வெறியாடலுக்குள் வெற்றிடம் மிஞ்சாது. மக்கள் பண்பாடுx வெகுசனப் பண்பாடு இவ்விரண்டிற்குமான முரண்பாடுகளில் பெரும்பாலும் மக்கள் பண்பாட்டையே முன்மொழிய வேண்டிய தேவை அறிஞர். பெருமக்களுக்குரியதாக உள்ளது. ஆயினும் வெறியாடல் புலத்தின் பாதை வேறொரு கோணத்தில் பயணிக்கிறது. இவ்விரு வெளிகளிலும் (செவ்வியல் x நவீனம்) நவீனம் சுதந்திரத் தன்மையையும் அதிகாரமின்மையையும் மாணவனை உணரச் செய்யும். மரபு சார்ந்த செவ்வியலில் மாணவன் பிறக்கும்போதே திருவுடையவனாகிறான். அதனுள் இடம்பெறும் பிறழ்வுகள் குறிப்பாக ஆண் வாரிசு இன்மை அல்லது இறந்துபடுதல் போன்ற சூழல்கள் ஏற்படுமாயின் அது அக்குழுவில் வேறொருவருக்கு இடம்பெயர;தலாகிறது அவ்வளவே. பின் அப்பணி செவ்வனே தொடரும். மரபார;ந்த சூழலில் மரபு ஒன்றே காரணமாகக் கற்பிக்கப்பட்டு வெளி நிர;ணயிக்கப்படுகிறது. சூழல் தரும் வெளியானது மாணவனின் கற்கை நெறியை அடிப்படையாகக் கொண்டு நிர;ணயிக்கப்படுகிறது. மரபின் இயற்கைப் பண்பு மிக முக்கியம் எனும் அதே வேளையில் சூழல் தரும்  சுதந்திரப் பண்பு மாணவனுக்கு அதி முக்கியமானது. செவ்வியல் x நவீனம் என்ற உள்முரண் களையப்பட்டு வெளியானது மண் - மண்ணோசை போன்ற இயற்கைக் கூறுகளுடன் முரணாகின்ற போது இயல்பாகவே இக்கற்கை நெறியின் தோற்றப் பின்புலங்கள் துலக்கம் என்பது மறுப்பதற்கில்லை.

கட்டுரைக்கு உதவியன
1.    சக்திவேல். சு. நாட்டுப்புற இயல் ஆய்வு மணிவாசகர; பதிப்பகம் சென்னை. 2002. மூன்றாம் பதிப்பு.
2.    சிவசுப்பிரமணியன் ஆ. மந்திரமும் சடங்குகளும் காலச்சுவடு பதிப்பகம். 2010.
3.    சிவத்தம்பி கார;த்திகேசு சங்க இலக்கியம் கவிதையும் கருத்தும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம். சென்னை. 2009.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர் -   - முனைவர் சு.சிவசந்திரகுமார், தமிழ் - உதவிப் பேராசிரியர், தூயநெஞ்சக் கல்லூரி , திருப்பத்தூர்.    வேலூர்-635 601. -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R