ஆய்வு: தொண்டைநாட்டுக் கச்சி மாநகர்
தொண்டைமான் இளந்திரையனின் குடிமரபினர் காஞ்சிமாநகரை முதன்மை இடமாகக் கொண்டு ஆண்டு வந்தனர் என்பதை இலக்கியங்கள் காட்டுகின்றன. பண்டைய இலக்கியங்களில் காஞ்சிமாநகரைக் கச்சி, கச்சப்பேடு, கச்சிப்பேடு, கச்சிமூதூர், கச்சிமுற்றம், என்று அழைத்துள்ளனர். இம்மாநகரை ஆண்ட மன்னர்களையும் வேந்தர்களையும் அரசர்களையும் தலைவர்களையும் வள்ளல்களையும் இலக்கியங்களில் கச்சியோன், கச்சியர், கச்சிவேந்தன், கச்சிக்காவலன், கச்சியர்கள் என்று அழைக்கப்பட்டுள்ளனர். கச்சி என்ற சொல்லானது காஞ்சிமாநகரைக் குறிக்கும் சொல்லாகும். இது இன்றையக் காஞ்சிபுரப் பகுதியாகும் என்பதைத் தமிழ்மொழி அகராதி, மதுரைத் தமிழ்ப்பேரகராதி, அபிதான சிந்தாமணி, கழகத்தமிழ் அகராதி, சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி, வரலாற்றுமுறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி, தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி போன்ற அகராதிகள் குறிப்பிடுகின்றன. பெரும்பாணாற்றுப்படையில் கச்சிமூதூரின் சிறப்புகள் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கச்சிமூதூருக்கு உள்ள நிலப்பரப்பு, மக்களின் பண்பாட்டுக்கூறுகள், வழக்காற்றுக்கூறுகள், பாணனின் வறுமை, பரிசில் பெற்றோரின் செல்வநிலை, தொண்டைமான் இளந்திரையனின் மாண்பு, ஆட்சியின் பெருமை, உப்புவணிகர் செல்லும்வழி, கழுதைச் சாத்தொடு செல்லும் காட்டுவழி, எழினர் குடிசை, புல்லரிசி எடுத்தல், எயிற்றியர் அளிக்கும் உணவு, பாலை நிலக் கானவர்களின் வேட்டை, எயினர் அரண்களில் பெறும் பொருள்கள், குறிஞ்சி நிலமக்களின் வாழ்க்கை, கோவலர் குடியிருப்பு, கோவலரின் குழலிசை, முல்லை நிலத்தில் கிடைக்கும் பொருள், மருதநிலம் சார்ந்த முல்லைநிலம், மருதநிலக் காட்சிகள், நெல்வயல்கள், நெல்லரிந்து கடாவிடுதல், மருதநிலத்து ஊர்களில் பெறும்உணவுகள், கருப்பம்சாறு, வலைஞர் குடியிருப்பு, வலைஞர் குடியில் பெறும்உணவு, தாமரைமலரை நீக்கி ஏனைய மலர்களைச்சூடுதல் அந்தணர் குடியிருப்பும் அங்குப் பெறும்உணவும் , நீர்ப்பெயற்று என்னும் ஊர், அத்துறைமுகப் பட்டினத்தின் சிறப்பு, பட்டினத்து மக்களின் விருந்தோம்பல் பண்பு, ஒதுக்குப்புற நாடுகளின்வளம், திருவெஃகாவின் சிறப்பும் திருமால்வழிபாடும், கச்சிமூதூரின் சிறப்பு, இளந்திரையனின் போர்வெற்றி, அரசனது முற்றச்சிறப்பு, திரையன் மந்திரச்சுற்றமொடு அரசுவீற்றிருக்கும் காட்சி பாணன் அரசனைப் போற்றியவகை, பாணர்க்கு விருப்புடன் உணவளித்தல், பரிசுவழங்குதல், இளந்திரையனது மலையின் பெருமை முதலான செய்திகள் அதில் கூறப்பட்டுள்ளது. சிறுபாணாற்றுப்படை, மலைபடுகாடாம், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களில் கச்சிமாநகரின் குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
கச்சி என்ற சொல் மணிமேகலையில், பூங்கொடி கச்சிமாநகர் புக்கதும் (மணி.பதி.90), பூங்கொடி கச்சிமாநகர் ஆதலின் (மணி.28:152), கச்சிமுற் றத்து நின்உயிர் கடைகொள (மணி.21:174), பொன்எயில் காஞ்சி நகர்கவின் அழிய (மணி.21:148), பொன்எயில் காஞ்சி நாடுகவின் அழிந்து (மணி.28:156), செறிதொடி காஞ்சி மாநகர் சேர்குவை (மணி.21:154), என்றும் பெருபாணாற்றுப்படையில் கச்சியோனே கைவண் தோன்றல் (பெரும்பாண்.420) எனவும் காஞ்சி அல்லது கச்சிமாநகர் பற்றிய குறிப்புகள் காணக்கிடக்கின்றன. சங்ககாலத்திற்கு முன்பிருந்தே கச்சி என்ற காஞ்சிமாநகர் களப்பிரர்காலத்திலும் பல்லவர் காலத்திலும் பிற்காலச் சோழர்காலத்திலும் விசயநகரப் பேரரசுக்காலத்திலும் ஆங்கிலேயர்காலத்திலும் சிறந்து விளங்கியுள்ளது என்பது வரலற்று உண்மையாகும். கச்சிப்பேடு என்றிருந்த காஞ்சிபுரம் திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்பிலும் திருநாவுக்கரசரின் தேவாரத்திலும் கச்சி என்றும் காஞ்சி என்றும் பாடப்பட்டுள்ளது. கி.பி.7-ஆம் நூற்றாண்டுத் தமிழ்நூல்களிலும் இது பற்றிய குறிப்புகள் காணக்கிடக்கிறது.

ஏறு தழுவுதல் என்பது முல்லைநில மக்களின் மற மாண்பையும் குடிச் சால்பையும் பறைசாற்றி நிற்கும் வீர விளையாட்டாகும். முல்லை நிலத்து ஆடவா்களின் ஆண்மைத்திறப் புலப்பாடாக அமைந்த இந்த விளையாட்டைத் தமிழ்ச் சமுதாயத்திற்கு அந்நில மக்கள் வழங்கிய கொடையாகவே கருத வேண்டும். இந்த ஏறுதழுவுதல் விளையாட்டானது அன்றைய பதிவுகளின் நீட்சியாகவே தமிழகத்தின் சில பகுதிகளில் இன்றும் நிலவி வருவதைக் காணமுடிகின்றது. இந்நிகழ்வு ஏறுகோடல், ஏறு தழுவுதல், ஏறுகோள், ஏறு விடுதல் என்னும் பெயா்களில் முல்லைக் கலியிலும், இக்காலத்தில் சல்லிக் கட்டு, மஞ்சு விரட்டு, மாடுபிடித்தல், கூளிபிடித்தல், கூளியாடுதல் என்னும் பெயா்களிலும் வழங்கப்பட்டு வருகின்றது. இவ் ஏறுதழுலுதல் குறித்துக் கலித்தொகையில் முல்லைக்கலி பாடல்கள் புலப்படுத்துவனவற்றை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.
பக்தி இலக்கிய வரலாற்றில் பல்லவர்காலம் மிக்குயர்ந்த இறைவழிபாட்டையும் தமிழர் பண்பாட்டையும் எடுத்துக்காட்டும் காலமாகத் திகழ்ந்தது. அக்காலத்தில் சைவசமயத்தின் எழுச்சிக்கும் அதன் வளர்ச்சிக்கும் நாயன்மார்களின் பங்களிப்பு மிக அதிகமாகவே இருந்துள்ளது. அவர்களில் சுந்தரின் திருப்பதிகங்கள் ஓசை நயமும் பொருள்வளமும் கொண்டவை. வாழ்வின் இன்பத்தை ஏற்றுக்கொண்டு குதூகல உணர்வுடன் இறைவனுடன் நட்புரிமை பூண்டவை. எல்லாவற்றுக்கும் மேலாக இயற்கையில் இறைவனைக் காணும் நிலையில் அவரது பாசுரங்கள் அமைந்துள்ளன. இவ்வகையில் ஸ்ரீசைலம் என்று அழைக்கப்பட்ட திருப்பருப்பதமலையில் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பாடிப்பரவிய பதிகங்களில் சுந்தரர் பாடிய சீபர்ப்பதம் என்ற பதிகத்தில் அமைந்துள்ள இயற்கை இன்பத்தில் இறைவனைக் காணும் உத்தியை வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முன்னுரை: செவ்விலக்கியங்களின் தொகுப்பில் காப்பியங்கள் என்ற முக்கியப் பிரிவு உண்டு. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்கள் அடங்கியவை ‘காப்பியம்’ எனப்பட்டன. இந்த விதிமுறைகளில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. தமிழ் இலக்கிய வரலாற்றில் வீரயுகத்தை அடுத்துத்தான் காப்பியக் காலம் தொடங்குகிறது. இக்காப்பிய எழுச்சிக்கு வித்திட்டவர் இளங்கோ அடிகள் ஆவார். சிலப்பதிகாரத்திற்கு முன் பல காப்பியங்கள் எழுந்திருக்க வேண்டும் என அறிஞர்கள் கருத்துத் தெரிவித்தாலும் அவை அனைத்தும் ஊகங்களே ஆகும். தமிழில் கிடைத்த முதல் காப்பியமே சிலப்பதிகாரம்தான். இதனை அடியொற்றியே தமிழில் பல காப்பியங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்க் காப்பிய இலக்கணமும் காப்பியப் படைப்பும் என்னும் தலைப்பில் சுருக்கமாக ஆராய்வோம்.
முன்னுரை:
உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் வீரர்களைப் போற்றும் வழக்கம் இருந்துள்ளது. எல்லா நாடுகளிலும் வீரர்களுக்குத் தனிச்சிறப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. பழந்தமிழ் நாட்டில் வீரர்களுக்குத் தனிச்சிறப்பு இருந்ததைச் சங்ககாலப் புற இலக்கிய நூல்கள் மூலம் அறியமுடிகிறது. பழந்தமிழர் போர்புரிவதற்கென்று தனியொரு இலக்கணம் கண்டனர். தமிழ்மொழியில் போரைப் பற்றிய தமிழ் இலக்கியங்கள் பல இருக்கின்றன. அவர்கள் அவற்றிற்குப் புறப்பொருள் என்று பெயரிட்டிருந்தனர். தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பா மாலை என்னும் இலக்கண நூல்கள் புறநானூறு போன்ற இலக்கிய நூல்களும் தமிழர்களின் வீரத்தைப் பற்றியும் வீரத்தைப்போற்றுவது பற்றியும் தெளிவாக எடுத் துரைக்கின்றன. போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடாமல் திறலோடு போர்செய்த வீரர்களைத் தமிழர் புகழ்ந்து பாராட்டினார்கள்; திறலோடு போர்செய்து களத்தில் வீழ்ந்து உயிர்விட்ட வீரர்களுக்கு நடுகல் நட்டு நினைவுச்சின்னம் அமைத்தனர். விறல் வீரர்களின் நினைவுக்காக நடப்பட்ட நடுகற்களைப் பற்றிச் சங்க நூல்கள் விரிவாக விவரிக்கின்றன. பண்டைக்காலத்தில் போர்க்களத்தில் பெருவீரங்காட்டிப் போர்புரிந்து வீரமரணம் அடைந்த வீரனுக்கு அவன் வீழ்ந்த இடத்தில் நடுகல்நட்டு வழிபடும் வழக்கம் இருந்தது. இதனைச் சங்ககால மக்கள் வீரக்கல் அல்லது நினைவுக்கல் என வழங்கினர். வெட்சிப்போர், கரந்தைப்போர், உழிஞைபோர், நொச்சிப்போர், தும்பைப்போர், வாகைப்போர் என்று போர் முறைகளைத் தமிழர் ஏழு வகைகளாகப் பிரித்திருந்தார்கள்; ஏழு வகையான போர்களிலே எந்தப் போரிலானாலும் ஒரு வீரன் திறலாகப் போர்செய்து உயிர் விட்டால் அந்த வீரனுக்கு நடுகல் நட்டு அவன் வீரத்தைப் பாராட்டினார்கள்; சிறப்புச் செய்தார்கள். தமிழகத்தில் வீரக்கல் நடுகிற வழக்கம் மிகப் பழங்காலம் தொட்டு இருந்து வந்துள்ளது. பழங்காலத்தில் நடப்பட்ட ஆயிரக்கணக்கான நடுகற்கள் தமிழ்நாட்டிலே பல இடங்களில் காணக்கிடக்கின்றன. வீரர்களின் நினைவுக்காகக் கல் நடுவதைத் திருக்குறள் இவ்வாறாக எடுத்துரைக்கிறது.
நெறிபடுத்துதல் அல்லது வழிபடுத்துதல் என்பதை நோக்கமாகக் கொண்டது ஆற்றுப்படை. வறுமையிலிருந்து மீண்டு வளம்பெற்ற ஒர் இரவலன் வறுமையுடன் இருக்கும் மற்றோர் இரவலனை தான் வளம்பெற்று வாழக்காரணமான வள்ளல் அல்லது மன்னனிடம் சென்று பெருஞ்செல்வம் பெற்று வளமுடன் வாழுமாறு நெறிபடுத்துவதாய் இது அமையும்.
பொதுவாகக் காலக் கணிப்பு என்பது அற்றைவாழ் சமுதாயப் போக்கை, நிகழ்வுகளை ஒட்டி நிருணயம் செய்யப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டு என்பது அக்காலச் சூழல், நிகழ்வுகளை ஒட்டி முக்கூறு பெற்றதாகத் தோற்றம் தருகிறது. முதற்பகுதி அந்நியர் ஆதிக்கத்தின் தாக்கத்தால் உருவான விடுதலை உணர்வுக்கான வேட்கையின் எழுச்சிக்காலம், இடைப்பகுதி வேட்கையின் தாகம் தணிவு பெறாத நிலை பிற்பகுதியோ புதிய சூழல், அறிவியல் கண்டுபிடிப்புக்களால் உருவான பல்வேறு வகையான போராட்டத்தின் உச்சகாலம். இக்கால இடைவெளியில் உருவான கண்ணதாசன் கவிதைகளுள் காணப்படும் பக்தி தொடர்பானவை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.
சங்க இலக்கியத்தில் சங்க தமிழரின் வாழ்வயிலைக் காட்டும் கண்ணாடி. சங்கத் தமிழர் இயற்கையோடு இரண்டறக் கலந்து வாழ்ந்தனர். மனிதன் விலங்கோடு விலங்காக வாழ்ந்த காலத்தில் விலங்கைத் தாக்கி வீழ்த்தி வாழ முற்பட்ட நிலையில் வேட்டைத் தொழில் தோன்றியிருக்க இடமுண்டு. அன்று தொடங்கி இந்தத் தொழில் காலந்தோறும் வளர்ந்து தற்காலத்தில் ஒரு கலையாகப் போற்றப்படுகின்றது. காலமாற்றத்தால் இக்கலை இன்று வீரத்தின் அடையாளமாகக் கருதப்படுவதும் சுட்டத்தக்கது. சங்க காலத்தில் ஐந்நிலமக்களும் வேட்டைத் தொழிலில் ஈடுபட்டன என்று அறிய முடிகின்றது. உணவு தேடுதல், பொருளீட்டல் என்ற அடிப்படைகளில் வேட்டைகள் நிகழ்ந்தன. வேட்டைத் தொழிலில் வேட்டையாடப்படும் பொருளாகவும், வேட்டையாடுவதற்கு உதவியாகவும் விலங்குகள் இருந்தன என்று இக்கட்டுரை வாயிலாக வெளிக்கொணர முற்படுப்படுகின்றது.
தமிழ்மொழி உலகின் முதல் மொழி, மூத்தமொழி, மூவா வனப்புடைய மொழி. “இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்”1 என்று பாரதியும் தமிழின் பழமையை வெளிக்காட்டி நிற்கின்றார். உலகின் ஒப்பற்ற செம்மொழியாக விளங்கும் நம் தமிழ்மொழி இயல், இசை, நாடகமென மூன்று பிரிவுகளையுடையதாய் இலங்குகிறது.
நோயற்ற உடலிருந்தால் நூறுவரை வாழலாம் என்று ஆன்றோர் வாக்கு. நோயற்ற வாழ்வுக்கு நல்ல பழக்கங்கள் கடின உழைப்பு அல்லது உடற்பயிற்சி சரியான உணவுமுறை ஆரவாரமற்ற வாழ்க்கை முறையே அதற்கேற்ற சூழல், மன அமைதி இன்ன பிறவும் இன்றியமையாததாகும். நமது முன்னோர்கள் நீண்ட ஆயுளுடனும், மனநிறைவுடனும் வாழ்ந்தும், நாம் பின்பற்றத் தக்க எளிய பழக்க வழக்கங்களைக் கூறிச் சென்றுள்ளனர். இவற்றில் முதன்மையும், முக்கியமானதும் இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை முறையும், மருத்துவ முறையும,; உணவு முறைமாகும்.
பிரபஞ்சத்தில் காணப்படும் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் அனைத்திலும் முதன்மையானதாகவும், மையமாகவும் மனிதனே கருதப்படுகிறான். இயற்கையின் ஒரு மேம்பட்ட அங்கமாக விளங்கும் மனிதன், இயற்கையை அனைத்து விதங்களிலும் தனக்கும் தன்னுடைய தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்கிறான். அவ்வாறு மனிதனின் வாழ்க்கைக்கு மூலாதாரமாக விளங்கும் அவனைச் சுற்றியமைந்துள்ள அனைத்துப் பொருட்களையும் உள்ளடக்கிய ஒன்றே. சுற்றுச்சூழல் என்ற சொல்லின் நேரடியான சுற்றுப்புற என்பதாகும். 'சுற்றுச்சுழல் என்ற வார்த்தை நுnஎசைழn என்ற பிரஞ்சு மொழிச் சொல்லில்லிருந்து தோன்றியதாகும். இதன் பொருள் சுற்றிலும், 'சூழ்ந்து வருவது', 'சூழ் என்பதாகும். இதன் மூலம் மனிதனைச் சூழ்ந்துள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களே சுற்றுச்சூழல் என்பது தெளிவாகிறது. இவ்வாறு சற்றுச் சூழலில் காற்று எவ்வாறு மாசுப்படுகிறது அறியவதாக இக்கட்டுரை அமைகின்றது.
இருளர் ஒரு சிறிய பழங்குடி சமூகம், இருளர் மொழி தென் கிழக்கு இந்தியாவில் பேசப்படும் திராவிட மொழிக் குடும்பத்தின் ஒன்றாக கருதப்படுகிறது. இருளர் என்ற சொல்லின் தோற்றம் தெளிவாக இல்லை, இருளரின் இருண்ட தோற்றத்தை வைத்து ’இருள்’ என்ற சொல் வந்திருக்கலாம் என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். இவர்கள் இருண்ட காடுகளில் சுற்றித் திரிந்ததால் இருளர் என்று வந்திருக்கலாம். அதிலும் நாங்கள் இருட்டில் இருந்து வந்தவர்கள் என்பதால் இருளர் என்று பெயர் பெற்றோம் என்று அவர்களே சொல்லுகின்றனர். இவ்வாய்வுக் கட்டுரை வெட்டக்காடு இருளர் பழங்குடி மக்களின் வழிபாட்டு முறைகளைப் பற்றி விவரிக்கிறது.
“சோஷலிஸம் அமெரிக்க விழுமியங்களுக்கு முற்றிலும் முரணானது; அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடுகளுடனும் ஆதிக்கங்களுடன் பிறந்த நாடல்ல. பூரண சுதந்திரத்துடனும் விடுதலையுடனும் பிறந்த நாடு; ஆகவே அமெரிக்கா ஒருபோதும் ஒரு சோஷலிஸ நாடாகப் போவதில்லை.” இது அண்மையில் இடம்பெற்ற ‘State of the Union’ உரையில் அமெரிக்க அதிபர் டொனல்டு ற்ரம்ப் விடுத்த அறைகூவல். 2020இல் மீண்டும் அதிபராகும் எண்ணத்தின் எதிரொலி. ஜனநாயகக் கட்சியினரைச் சோஷலிஸவாதிகள் எனக் கூறி, அவர்களது முகங்களில் சேறுபூசும் முயற்சி. சோஷலிஸம் என்னும் சொல்லைச் சொல்லிச் சொல்லியே, அமெரிக்க மக்களை அச்சமூட்டித் தம்வயப்படுத்தும் தந்திரம்.
குடும்பத்தினரை உயர்த்தும் குலவிளக்காய் சமுதாயத்தினை வழிநடத்தும் விடிவெள்ளியாய் குவலயத்தில் திகழ்பவர்கள் பெண்களே. இத்தகு பெண்கள் கடந்து வரும் பாதைக் கரடுமுரடானது, ஏனெனில் வேறு எந்த உயிரினங்களிலும் இல்லாத ஆண், பெண் என்ற பேதம் மனித இனத்தில் மிகுதியாக வளர்ந்து வந்துள்ளது. இப்பேதத்தை உருவாக்கியுள்ள இன்றைய சமுதாயத்தில் ஆண், பெண் வேற்றுமைகளை நீக்கி காலங்காலமாக அடிமைக் கூண்டில் அகப்பட்டு அல்லலுறும் பெண்ணை விடுவித்து, அவர்களுக்கு முதலிடம் கொடுத்து, அவளுக்காகவே குரல் கொடுப்பது முன்னேற்றச் சிந்தனையாகக் கருதப்படுகிறது. இச்சிந்தனை இன்று வேரூன்றி நின்று, பரவலாகப் பேசப்பட்டு, முக்கியத்துவம் பெற்று வருகின்றது. இச்சிந்தனைக் காலத்தின் தேவையை உணர்ந்து எழுந்தது எனில் மிகையில்லை. பெண்ணியத்தின் மையக் கருத்தாக அமைவது பெண்களைச் சமுதாய அளவில் முன்னேற்றுவதுதான் சமூகத்தில் பெண்களின் இடத்தை இனம் காட்டுதல், அவற்றால் பெண்கள் அடையும் பாதிப்புகள் அவற்றின் ஆழம் மற்றும் அதற்குக் காரணமான நிறுவன மரபு போன்றவற்றையே இக்கட்டுரை முன்வைக்கிறது.
மானுடத்தை அடிப்படையாக கொண்டு படைக்கப்படுவது சென்ரியு. ஹைக்கூவிலிருந்து தோற்றம் பெற்ற புதிய இலக்கிய வகையான சென்ரியு, ஹைக்கூவின் இயற்கை, ஜென்தத்துவம், உயர்ந்த நடை, குறிக்கோள் போன்ற கட்டுப்பாடுகளை துறந்து சுதந்திரமாக செயல்படும் போக்கினைக் கொண்டிருக்கின்றது. ஹைக்கூவும் சென்ரியுவும் மூன்றடிகளை உடைய கவிதைகளாக இருப்பினும் கருத்தளவில் இரண்டும் வெவ்வேறானவை. மானுடத்தினை நடைமுறையில் மனிதன் பயன்படுத்தும் வார்த்தைகளைக் கொண்டு வெளிப்படையாகப் படைக்கப்படுகின்ற சென்ரியுவின் இத்தகையத் தன்மையே பிற கவிதை இலக்கியங்களிலிருந்து சென்ரியு கவிதை வேறுபடக் காரணமாகின்றது. சென்ரியுவின் உள்ளடக்கங்களாக உண்மையை உரைத்தல், அங்கதம், நகைச்சுவை, வேடிக்கை, விடுகதை, பொன்மொழி ஆகியவற்றை இக்கட்டுரையின் வாயிலாக விரிவாக காணலாம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









