ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?காலனை உதைத்த தொன்மம்

திருஞானசம்பந்தா் பாடல்களில் சிவன் மார்க்கண்டேயரைப் பிடிக்க வந்த காலனை, உதைத்த தொன்மம் மிகுதியான இடங்களில் வருகிறது.

“காலற் செற்ற மறையவன்”1

“காலன் தன்னை ஒல்க உதைத்தருளி”2

“காலன் தறில் அறச் சாடிய கடவுள்”3
“காலன் மடியவே”4

“கூற்றமுதைத்த குழகன்”5
“கூற்றுதை செய்த”6

போன்றவை முதல்திருமுறையில் இடம்பெற்ற காலனை உதைத்த தொன்மக் குறிப்புகளில் சிலவாகும். இவை ஏன் திருஞானசம்பந்தரால் திரும்பத் திரும்பத் கூறப்படுகின்றன என்பதை ஆராய்ந்து பார்த்தால் சில விளக்கங்களைப் பெற முடியும்.

வடமொழியில் யமன் என்றும் தமிழகத்தில் கூற்றுவன் என்றும் கூறப்படும் தெய்வமே தொல்பழம் சமயத் தெய்வங்களில் ஒன்றாகச் சுடலை மாடன் என்ற பெயரில் வணங்கப்பட்டது. மக்களின் சமய வாழ்வின் தொடக்கம் மரணத்தைப் பற்றிய அச்சம் அதன் பிறகான வாழ்வு பற்றிய சிந்தனையை அடியொற்றியே இருந்திருக்க வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரையில் நடுகல் வணக்கம் எனப்படும் நீத்தார் வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்து வந்துள்ளது. அதனைத் தொடா்ந்து தமிழ்மக்கள் கூற்றுவனைக் கடவுளாக, வணக்கத்திற்குரியவனாகப் போற்றியிருக்கின்றனா்.

சுடுகாட்டுப் பகுதிகளில் மிகுதியாகக் காணப்படும் கள்ளி நிழலில் அமா்ந்துள்ள ஒரு கடவுள் பற்றிய குறிப்பு புறநானூற்றில் காணப்படுகிறது (புறம்.260). இது சுடலை மாடனைக் குறிப்பதாக இருக்கலாம்7 என்ற க. கோதண்டராமன் கூறுவார்.

 

சுடலைமாடன் வழிபாடு தமிழ் நாட்டின் தென்மாவட்டங்களில் இன்றும் தொடா்கிறது. இத்தெய்வத்தின் கோயிலைச் சுற்றிய பகுதிகளில் ஆலமரம் காணப்படும் நிலையை நாஞ்சில் நாட்டில் பரவலாகக் காணமுடிகிறது என்று அ.கா.பெருமாள் கூறுகிறார். 

மாடன் வழிபாட்டின் முக்கிய அம்சம், திருநாளின் போது சாமியாடி ஒருவா், மக்கள் பின் தொடர நள்ளிரவில் சுடுகாட்டுக்குச் சென்று அங்கு சாம்பலில் குளித்து, எலும்புகளை அணிந்துகொhண்டு, ஊருக்குள் திரும்பி வருவது என்று அவர் கூறுகிறார். சுடலை வாழ்வு, சாம்பல் பூச்சு, அழிக்கும் தொழில், கபாலம் ஏந்தி இருத்;தல், ஆலமரத்தடியமாதல் ஆகிய சிவனின் பண்புகள் சுடலை மாடனிடமிருந்து வந்திருக்க வேண்டும் என்றும் அவா் கூறுகிறார்.

சுடலை மாடனின் உருவம் மேலே குறுகிச் செல்லும் ஒரு செவ்வகமும் அதன்மேல் ஒரு அறைவட்டமுமாக இருப்பதிலிருந்து தான் சிவலிங்க வடிவம் தோன்றி இருக்க வேண்டும் என்ற அவரது கருத்து சரியாக இருக்கலாம்.

சிவன் வழிபாடு நிலைத்தபின் சிவனுக்குரிய புராணக் கதைகள் சுடலைமாடனுக்கும் உரியதாக ஆக்கப்பட்டது என்று அவா் கூறுகிறார். (இவ்வாறு தமிழகத்தில் தொன்று தொட்டு நிலவிவந்த சுடலைமாடன் வழிபாட்டைச் சிவவழிபாடு பின்னுக்குத் தள்ளியிருக்க வேண்டும் என்பதை சு. கோதண்டராமன்,

“சோழ நாடாகிய தஞ்சை மாவட்டத்தில் மயானம் என்ற பெயா் பெற்ற நான்கு கோயில்கள் உண்டு. அவை திருவிழிமிழலை, சீர்காழி, திருக்கடவூர், நாலூர் இவற்றுடன் வட தமிழகத்தில் உள்ள காஞ்சியையும் சோ்த்து ‘பஞ்ச மயானம்’ என்பா். இந்த இடங்களில்தான் முதன்முதலாக யமன் வழிபாடு சிவன் வழிபாடாக மாற்றம் பெற்றிருக்க வேண்டும் என்கிறார்8 மேலும்,

திருக்கடவூரில் மார்க்கண்டேயனைக் காப்பதற்காகவும், திருவிழிமிழலையில் சுவேதகேது என்னும் ராஜாக்காகவும், திருவையாற்றில் ஔத்தாலதி என்பவருக்காகவும், சிவன் யமனை சம்ஹாரம் செய்தார் என்ற புராணக் கதைகள் சிவவழிபாட்டின் முன் யமன் வழிபாடு தோற்றுப் போனதைக் கூறுவதாகவே இருக்கலாம் என்கிறார்.9

மேலும் தமிழகம் மற்றும் புதுவைப் பகுதிகளில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மாசிமகத் திருவிழா இறந்த முன்னோர்கள் அனைவருக்கும் சோ;த்து வழிபாடு நடத்தும் விதமாக அமைந்துள்ளது. இவ்விழா பிராமணா் அல்லாதாரிடையே வழக்கமாக இருந்து வருகிறது.

இவற்றையெல்லாம் நோக்க, தமிழகத்தில் நீத்தார் வழிபாடும், சுடலைமாடன் வழிபாடும் சிறப்பாக நடைபெற்று வந்திருக்கிறது என்பதை அறியலாம். பின்வந்த வைதீக மதத்தால் சுடலைமாடன் பின்னுக்குத் தள்ளப்பட்டு சிவன் முதன்மை பெறுவதும் காணமுடிகிறது. கள்ளி நிழலில் இருந்த சுடலைமாடன் ஆலமா் செல்வனாக மாறிய நிலை சிந்துவெளி சிவ வழிபாட்டிலிருந்துத் தமிழா் பெற்றுக் கொண்டதாகும். மேலும் இலக்கியச் சான்றாக,

“கணிச்சிக் கூர்ம்படை கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை இரங்குவீர் மாதோ”10

என்பதிலிருந்து கணிச்சி எனும் மழு முதலில் கூற்றுவனின் ஆயுதமாக இருந்து இதுவே பின்னா் சிவனின் ஆயுதமாகி இருக்க வேண்டும்.

மேற்கண்ட கருத்துக்கள் தமிழகத்ததில் நிலவிவந்த சுடலைமாடன் என்னும் கூற்றுவ வழிபாட்டை சிவ மதம் பின்னுக்குத் தள்ளிய வரலாற்றை உணா்த்தவல்லன. திருஞானசம்பந்தார், காலனை உதைத்த தொன்மத்தை மீண்டும் மீண்டும் எடுத்தாளக் காரணம் தமிழகத்தில் தொன்றுதொட்டு செல்வாக்குப் பெற்றிருந்த கூற்றுவ வழிபாட்டைப் பின்னுக்குத் தள்ளவே ஆகும். திருஞானசம்பந்தா் மார்க்கண்டேயன் வழிபட்டதைப் பற்றிக் கூறும்பொழுது,

“நன்றுகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரங்கொண்டி டொன்றி 
வழிபாடு செயலுற் றவன்”11

என்று மலா்களைக் கொண்டு இருக்கு வேதமந்திரங்களைக் கொண்டு துதித்ததாகக் கூறுகின்றார். மேலும் பல இடங்களில் மார்க்கண்டேயனை அந்தணன் என்று போhற்றுகின்றார். அந்தணனை மாய்க்க வந்ததே சிவன் கூற்றுவனை உதைக்கக் காரணம் என்று பாடுகிறார். சிவனை முன்னிருத்தி அந்தணா்களின் வைதீக வழிபாட்டைச் சிறப்பித்து அவ்வாறு துதிப்பவா்களைக் காலனும் அணுகமாட்டான். அணுகினால் சிவன் தடுத்தாட் கொள்வார் எனும் கருத்தைத் திருஞானசம்பந்தா் இத்தொன்மத்தின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். தமிழா் வழிபட்ட கூற்றுவ வழிபாட்டைப் பின்னுக்குத் தள்ளி வைதீகத்தை முதன்மைப்படுத்தும் கருத்தியலை இத்தொன்மத்தின் மூலம் எடுத்துரைக்கிறார்.

சிவன் கரியின் தோலை உரித்தது பற்றிய தொன்மம்

சிவபெருமான் யானையை உரித்த கதை திருஞானசம்பந்தரைக் குறிப்பாகக் கூடிய அளவு கவா்ந்திருக்க்கின்றது. புலித் தோலை உரித்தவா் சிங்கத்தின் தோலை உரித்தவா் போன்ற புராணக் குறிப்புகள் ஆங்காங்கே இடம்பெற்றிருந்தாலும் யானையை உரித்த தொன்மக் கதையை மிகுதியாக எடுத்துரைக்கிறார்.

“……….உமையஞ்சுதல் பொருட்டால்
பிளிறுக் குரல் மதவாரணம் வதனம் பிடித்து உரித்து”12

“அரிவை அவள் வெருவ,
பொருவெங்கரி படவென்று, அதன் அரிவை உடல் அணிவோன்”13

“வண்டு சோ் குழலி மலைமகள் நடுங்க வாரணம் உரிசெய்து போர்தார்”14

போன்றவை அப்பாடல் வரிகளுள் சில. இப்பாடல்வரிகளின் மூலம் சிவன் யானையின் தோளை உரித்தது உணா்த்தப்படுகிறது. 

நான்முகனை நோக்கித் தவமியற்றுகிறான் கயாகரன். சிவனைத் தவிர பிறரால் அவனுக்கு இறப்பு நிகழாது என்று வரமளிக்கிறான் நான்முகன். வரம்பெற்று கயாகரன் தேவா்களை எல்லாம் வருத்துகிறான். மானிடா்களை அழிக்கிறான். தவயோகியா் காசியில் எழுந்தருளியிருக்கும் விசுவநாதராகிய சிவனையே எதிர்க்கிறான். அவனது சிரத்தை ஒருகாலால் மிதித்து மற்றொரு காலால் தொடையை மிதித்து அவன் முதுகைப் பிளந்து அவனது தோலையுரித்துப் போர்வையாகப் போர்த்திக் கொள்கிறான் சிவன். பின்னா் அவன் பணிய அவனுக்கு அருள் செய்கிறான். இக்கதை கந்தபுராணம் ததீசி உத்தரப்படலத்தில் (128-153) இடம்பெறுகிறது. இத்தொன்மத்தால் சிவனை எதிர்ப்பவா்களுக்கு சிவன் எத்தகைய கொடிய தண்டனையை வழங்குவான் என்பதை விளக்க முடிகிறது. திருஞானசம்பந்தா் இத்தொன்மத்தை எடுத்துரைக்கும் இடங்களிலெல்லாம் ‘உமையவள் அஞ்ச’ ‘உமையவள் நடுங்க’ என்பதனையும் சோ்த்தே கூறுகிறார். 

தமிழ் தொல்குடி வழிபாட்டு மரபில் இடம்பெற்ற கொற்றவையே பின்னாளில் வைதீகத்தில் சிவனின் மனைவியாக ஆக்கப்பட்டாள் என்பதைப் பல ஆய்வாளா்கள் விளக்கியிருக்கின்றனா். கொற்றவை பராக்கிரமம் பொருந்திய பெருஞ்சக்தியாக, ஆற்றல்மிக்கவளாக, தமிழா்வழிபாட்டில் இடம்பெற்றிருப்பதைச் சங்கப்பாடல்கள் உணா்த்துகின்றன. வைதீகத் தொன்மங்கள், புராணங்கள் போன்றவை தமிழ் அரசா்களின் வீரதீரச் செயல்களைச் சிறப்பிக்கவும் தமிழ்த் தெய்வங்களின் பராக்கிரமங்களை விளக்கவுமே பயன்பட்டன. அவ்வாறே யானைத் தோலை உரித்துப் போர்த்திய புராணம் சிலப்பதிகாரத்தில் கொற்றவைக்கு ஏற்றி உரைக்கப்படுகிறது.

“வளையுடைக் கையில் சூலம் ஏந்தி
கரியின் உரிவை போர்த்து”16

இப்பாடல் சிவனுக்குரியனவற்றை அப்படியே கொற்றவைக்கும் ஏற்றிக் கூறப்படுகிறது. தாய்த்தெய்வ வழிபாட்டையுடைய சாக்த நெறியினா் சிவனுக்கு நிகரான சக்தியாகவே உமையைப் போற்றுவா். இவ்வாறிருக்க திருஞானசம்பந்தா் மேற்கண்ட பாடல்களில் ‘உமையஞ்சுதல் பொருட்டால்’, ‘அரிவையவள் வெருவ’, ‘மலைமகள் நடுங்க’ என உமையின் ஆற்றலைக் குறைத்து இயல்பான குடும்ப வாழ்க்கைக்குரிய பெண்ணாகக் காட்சிப்படுத்துகின்றார். தந்தையாதிக்கத்தை உடைய வைதீகம் தாய்வழித் தெய்வங்களைத் தாழ்த்தி அவற்றை தந்தையாதிக்க மரபிற்குள் ஏற்றுக் கொண்டது என்பதைச் சமய அறிஞா்கள் விளக்குகின்றனா். திருஞானசம்பந்தா் பாடல்களில் இடம்பெறும் யானையை உரித்த தொன்மம் அவரின் தந்தையாதிக்க வைதீக சிந்தனையையும் கருத்தியல் மேலாண்மையையும் சுட்டுவதாக உள்ளது.

திருஞானசம்பந்தா் பாடலில் அந்தகனைக் கொல்லுதல், சலந்திரனைக் கொல்லுதல், பிரம்மனின் சிரங்களில் ஒன்றையறுத்தல் போன்ற தொன்மங்கள் பெருமளவில் இடம்பெறவில்லை. பிரம்மனின் சிரசைச் சிவபெருமான் அறுத்த நிகழ்வு அந்தணரான திpருஞானசம்பந்தரைக் கவரவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. சிவன் கையிலிருக்கும் பிரம்ம கபாலத்தைப் பல இடங்களில் பெருமைப்பட உரைக்கிறார்.

“மலா்வளா் மறையவன் வழி வழுவிய சிரமது”17

எனப் பல பாடல்களில் பிரம்ம கபாலத்தின் பெருமை பேசப்படுகிறது. எனினும் சிரம் அறுத்த தொன்மம் சில இடங்களிலே பயின்று வருகிறது. அதிக முக்கியத்துவத்தைப் பெறவில்லை. அந்தகனைக் கொல்லுதல், சலந்திரனைக் கொல்லுதல் போன்ற தொன்ம நிகழ்வுகள் அதிகம் இடம் பெறாததற்கு அக்கதைகள் அக்காலத்தில் மக்களிடத்தில் பரவலாகச் செல்வாக்குப் பெறவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆலின் கீழிருந்து அறமுரைத்த தொன்மம்

தமிழ் வழிபட்ட சிவன் ஆரிய மரபிலிருந்து வந்ததல்ல சிந்துவெளிப் பண்பாட்டில் உதித்த ஆரியரல்லாத மரபினா் வழிவந்த சிவனே ஆவான். தமிழா் சிவனை ஆலமா் செல்வனாக, ஆலின் கீழிருந்து அறம் உரைத்த பரமயோகியாக எண்ணியே வழிபட்டனா். இத்தொன்மத்தைத் திருஞானசம்பந்தா் பாடல்களில் பரவலாகக் காண முடிகிறது. இத்தொன்மத்தின்வழி திருஞானசம்பந்தா் தம் வைதீக மேலாண்மையையும் நுட்பமாக நுழைத்துவிடுகிறார். தமிழா் சிவபெருமான் ஆலின் கீழிருந்து அறமுரைத்ததாகக் கூற திருஞானசம்பந்தா் அதோடு சோ்த்து நான்கு மறைகளையும் உரைத்தாகக் குறிப்பிடுகின்றார்.

தமிழா் கூறும் அறம் என்பதற்கும் வேத வைதீகம் குறிப்பிடும் தா்மம் என்பதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு. திருஞானசம்பந்தா் இவை இரண்டையும் ஒருங்கிணைக்கிறார். இவ்வொருங்கிணைப்பு முயற்சிக்கு தமிழா் தொன்மத்தையே பயன்படுத்திக் கொள்கிறார். வேறுபாடுகளும், விலகல்களும் கொண்ட இரு மரபுகளை ஒருங்கிணைப்பதின் சமய அரசியல் அதற்குள்ளான முரண்பாட்டை அழித்து ஒன்றை மட்டுமே மையப்படுத்தும் போக்கினை நிலவச் செய்கிறது. இரண்டில் வைதீகமே மேலாண்மை இடத்தை அடைகிறது.

“அறநெறி மறையொடும் அருளிய பரன்” 18

“வாய் மறைத்திறம் அறத்தொழுதி கண்டு”19

எனவரும் பாடல்கள் சிவன் ஆலமா்ந்து அறமும் வேதமும் ஒருங்கே உரைத்ததாகக் கூறுகிறது. இத்தொன்மத்தை வைதீகத்திற்குச் சார்பாக பயன்படுத்துகிறார். சிவன் அறத்தையும் வேதத்தையும் ஒருங்கேயுரைத்ததாகப் புனைகிறார். தமிழ் அறம் என்பதும் வைதீக தா்மம் என்பதும் வேறு வேறானவை. இவை இரண்டையும் ஒருங்குரைத்ததாகக் கூறுவது அதற்குள்ளான முரண்பாட்டை மறைத்து ஒன்றை மட்டுமே மையப்படுத்தும் முயற்சியாகும்.

இவ்வாறான தொன்மங்களே திருஞானசம்பந்தா் பாடல்களில் மிகுதியாக இடம்பெறுகின்றன. இதன்மூலம் அவா்தம் வைதீக மேலாண்மைக் கருத்தியலை வெளிப்படுத்தியுள்ளார் என்பதை மேற்கண்ட கருத்துகள் தெளிவுபடுத்துகின்றன.

சிவனின் அட்டவீரச் செயல்களும் அச்சம் அருள் எனும் இரட்டைப் பண்புகளை வெளிப்படுத்துவதைக் காணமுடிகிறது. இவை பெரும்பாலும் சிவனின் அருட்கோலத்தைவிட அகோரக் கோலங்களுக்கே முதன்மையளிப்பதாய் உள்ளன. சமண, பௌத்தா்களை எதிர்க்கவும், தமிழ்த் தெய்வங்களை விளிம்பு நிலைக்குத் தள்ளும் இத்தொன்மங்கள் சிறப்பான முறையில் திருஞானசம்பந்தரால் கையாளப்பட்டுள்ளன.

சான்றெண் விளக்கம்:
1. சம்பந்தர், திவலிதாயம், 50:5.
2. மேலது, திருமாற்பேறு, 114:5.
3. மேலது., திருசோபுரம், 51:5.
4. மேலது., திருபுள்ளமங்கை, 16:1.
5. மேலது., சீகாழி, 24:4.
6. மேலது., திருகோலிக்கன், 23:9.
7. மேலது., திருஅயிலுறு, 79:7.
8. க. கோதண்டராமன், வேதநெறியும் சைவத்துறையும், ப.70.
9. மேலது., ப.64.
10. மேலது., ப.66.
11. புறநானூறு, பா.195.
12. சம்பந்தா், மு.சு.நூ., 62:3.
13. மேலது., திருஅண்ணாமலை, 10:8.
14. மேலது., திருவயலூர், 13:1.
15. திருப்பாம்புரம், 41:10.
16. இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், வேட்டுவவரி, பா.54,56
17. மேலது., திருவீழிமிழலை, 20:8.
18. மேலது., 20:5.
19. மேலது., திருஅன்பிலாலந்துறை, 33:3.

பயன்பட்ட நூல்கள்
1. கோபாலையா் டி.வி., (ப.ஆ.),ஞானசம்பந்தா் தேவாரம், பண்முறைத் தொகுப்பு, பிரெஞ்சு ஆய்வு நிறுவன வெளியீடு,புதுச்சரி.1984.
2. கோதண்டராமன்    சு.,வேதநெறியும் சைவத் துறையும், டி.எஸ். புத்தக மாளிகை, சென்னை. 2009.
3. சிலப்பதிகாரம்,ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை,சைவசித்தாந்த நூற்பதிப்பு கழக வெளியீடு,சென்னை.1959.
4. ஔவை. சு. துரைசாமிப்பிள்ளை, புறநானூறு மூலமும் உரையும், தமிழ்மண் அறக்கட்டளை ,சென்னை.2008.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R