ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?உலக மக்கள் தொகையில் 5 சதவீதத்தினர், உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களின் மறுவாழ்வு குறித்து கடந்த இரு நூற்றாண்டுகளாகத்தான் உலகம் சிந்திக்கத் தொடங்கிருக்கிறது. உணவு, உடை, இருப்பிடத்தோடு உதவியும் அவர்களுக்கு அத்தியாவசிய தேவையில் ஒன்று. இதனால், அவர்களுக்கு உதவுவதற்காக பல தொழில் நுட்ப கருவிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இப்போக்கு உலக போர்களுக்குப் பிறகே அதிகரித்துள்ளது. போரினால் பலர் ஊனமாக்கப்பட்டனர். அவர்கள் படித்தவர்களாகவும், பல்துறை வள்ளுனர்களாகவும் இருந்தனர். அதனால், அவர்களே, தங்களுக்கான உதவு தொழிநுட்பக்கருவிகளை உருவாக்கினர். போரினால் பார்வை இழந்த அமெரிக்க ராணுவ வீரர் ரிச்சட், சாலையைக் கடப்பதற்காக வெண்கோளை {white cane} உருவாக்கினார். [ந.ரமனி இருலிலிருந்து ப. 42] பார்வையற்றோர்களை அழைத்துச்செல்ல நாய்களை பழக்க இயலுமா? என ஆய்வுகள் நடைபெற்றன. இவ்வாறான தொடர் ஆய்வுகள், பல உதவுதொழிநுட்ப கருவிகள் உருவாக காரணமாக அமைந்தன. கல்வி கற்றலிலும், பணித்தலங்களிலும் பார்வை மாற்றுத்திறனாளிகள், திறம்பட செயல்பட, உதவு தொழில்நுட்பங்களே பெரிதும் துணைசெய்கின்றன. பார்வையற்றோர்களுக்கு உதவும், உதவுதொழில்நுட்பம் குறித்த அறிமுகத்தை இக்கட்டுரை முன்வைக்கிறது.

உதவு தொழில்நுட்பம் {assistive technologies}:
“பார்வைக் குறையுடையோர் படித்தல், எழுதுதல், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்லுதல், போன்ற செயல்பாடுகளில் சிக்கலை எதிர்கொள்கின்றனர். அச்சிக்கலைப் போக்கி , அவர்களை சுயமாகவும் சுதந்திரமாகவும் இயங்க உதவுவதற்காக, எளிதில் எடுத்துச்செல்லக் கூடிய வகையில் வடிவமைக்கப்படும் தொழில்நுட்பமே, உதவு தொழிநுட்பமாகும்”. புத்தாக்க பிரெயில் காட்சியமைவு {Braille display}, ஒலி உரை மாற்றிகள், உரை ஒலி மாற்றிகள், எழுத்துணரி, போன்றவைகள் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான உதவுதொழிநுட்பங்களாகும்.

பிரேயில் எழுத்தின் வரலாறு:
பிரான்ஸ் மன்னர் நெப்போலியனின் வேண்டுகோளுக்கிணங்க ராணுவத்தினர் இரவு நேரங்களிலும் ரகசியமாய் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கென ஒரு புதிய தொடர்பு முறையைக் கண்டறிந்தார் சார்லஸ் பார்பியர் (1767-1841). Night writing எனப்படும் இந்த முறை, புள்ளிகளும், கோடுகளும் நிறைந்தது. இருட்டிலும் இவற்றை ராணுவத்தினர் கைகளால் தடவிப் பார்த்துத் தகவல்களைப் புரிந்துகொள்ளலாம். [ரா.பாலகனேசன் தமிழ் பிரேயில் வரளாறு ப. 24] இந்த முறை கடினமாக இருப்பதாகக் கருதப்பட்டு ராணுவத்தால் நிராகரிக்கப்பட்டது. சற்றும் மனம் தளராத பார்பியர் இம்முறையைப் பார்வையற்றோருக்கான தொடர்பு முறையாகப் பயன்படுத்தினால் என்ன என்று யோசித்தார். 1822-ஆம் ஆண்டில் பிரான்சில் இருந்த பார்வையற்றோர் பள்ளியான The Royal Institute for the Blind-க்குச் சென்று தனது கண்டுபிடிப்புக் குறித்து விளக்கி, தனது ஆசையையும் தெரிவித்தார். அங்குபடித்த மாணவன் லூயி பிரேயில், பார்பியர் முறையில் இருந்த 12 புள்ளிகளை 6-ஆக குறைத்தார். அந்த 6 புள்ளிகளுக்குள்ளேயே அனைத்தையும் அடக்கினார். இன்று உலக மொழிகளின் எழுத்துகள், சுருக்கெழுத்துகள், குறியீடுகள், எண்கள், கணிதக் குறியீடுகள், இசைக் குறியீடுகள் என அனைத்துமே இந்த 6 புள்ளிகளுக்குள் அடங்கியிருக்கின்றன. இந்த 6 புள்ளிகளைக் கொண்டு 63 வடிவங்களைத்தான் உருவாக்கமுடியும் என்பது சுவாரஸ்யமானதும், சவாலானதும் கூட. இவ்வெழுத்துமுறை பிரேயில் எழுத்து என அழைக்கப்படுகிறது.

புத்தாக்க பிரெயில் காட்சியமைவு {Braille display}:
புத்தாக்க பிரெயில் காட்சியமைவு என்பது, கணினி மற்றும் திறன்பேசித் திரைகளில் உள்ள எழுத்துக்களை, பிரேயில் வடிவில் மாற்றக்கூடிய சாதனமாகும். கணினி மற்றும் திறன்பேசிகளோடு இணைத்து இதனை பயன்படுத்த வேண்டும். இச்சாதனங்களில், பயனாளர்கள் எழுத்துக்களைத் தொட்டுப்படிப்பதால், பார்வைமாற்றுத்திறனாளிகளின் எழுத்துத்திறன் வளர்கிறது. இச்சாதனங்களின் விலை அதிகமாக இருப்பதால், பார்வையற்றவர்களால் வாங்க இயலவில்லை. ..

ஒலியுரை மாற்றிகள் {text to speech}:
“உள்ளீடு செய்யும் உரையை, ஒலிவடிவில் படித்துக்காட்டக்கூடிய மென்பொருளயே, உரை ஒலி மாற்றிகள் என்றழைக்கின்றனர்”. இந்திய அறிவியல் ஆய்வகத்தின் உரையொலி மாற்றி, சென்னை ஐஐடி மற்றும் எஸ்.எஸ்.என் கல்லூரி இணைந்து தயாரித்த உரை-ஒலி-மாற்றி போன்றவை தமிழுக்கு ஒத்திசையும் உரை-ஒலி-மாற்றிகளாகும். செய்தித்தாள்களையும், புத்தகங்களையும், இம்மென்பொருட்களின் உதவியால் பார்வையற்றவர்கள் கேட்டு பயன்பெறுகின்றனர். காரைக்குடி குனுலினக்ஸ் குழு, உரை ஒலி மாற்றியின் உதவியால், ஒலிப்பீடியா எனும் திட்டத்தின் மூலம், ஒலிநூல்கள் audio books உருவாக்கி வருகின்றன. இதுபோன்ற முயற்சிகள், கணினி இயக்கத்தெரியாத பார்வைத்திறன் குறையுடையோருக்கு புத்தகங்களை கொண்டு சேர்த்து, அவர்களின் அறிவாற்றல் விரிவடைய உதவுகிறது.

ஒலி உரை மாற்றிகள் {speech to text}:
“நாம் சொல்லும் வாக்கியங்களை, எழுத்துக்களாக மாற்றக்கூடிய மென்பொருளையே, ஒலி-உரை-மாற்றிகள் என்கிறோம்”. 2017-ஆம்; ஆண்டு கூகுல் {google} குரல்வழி தட்டச்சை தமிழில் அறிமுகப்படுத்தியது. திறன்பேசிகளும், குளிகைகளும் {tablet} தொடுதிரை வசதியை மட்டுமே கொண்டிருக்கின்றன. எனவே, தட்டச்சு செய்வதில் , பார்வையற்றவகள் பெரும் இடர்களை எதிர்கொள்கின்றனர். அச்சிக்கலை குரல்வழி தட்டச்சு நீக்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும். சிறிய வாக்கியங்களை சிறப்பாகவே இம்மென்பொருள் உரையாக மாற்றுகிறது. இம்மென்பொருளை மேம்படுத்தும்பட்சத்தில், தேர்வுகளை பிறரின் துணைகொண்டு எழுதும் பார்வையற்றவர்கள், குரல்வழி தட்டச்சுமூலம் சுயமாக தேர்வை எதிர்கொள்வார்கள்.

எழுத்துணரி {Optical character recognition}:
எழுத்துணரி என்பது, “கையெழுத்துப் பிரதியையோ, அச்சுப் பிரதியையோ, புகைப்படக்கருவி அல்லது வருடியின் மூலமாக {scanner} வருடச்செய்து கிடைத்த, படத்தில் உள்ள எழுத்துக்களை தனியாக பிரிக்கும் மென்பொருளைக் குறிக்கும்”. விழிச்சவாலர்கள் பயன்படுத்தும் திரைவாசிப்பான்கள் {screen reader software} நிழல்படங்களில் உள்ள எழுத்துக்களை வாசித்துக்காட்டாது. இதனால், படங்களில் உள்ள எழுத்துக்களை தனியாக பிரித்தால் மட்டுமே அவர்களால் படிக்க இயலும். இதன் காரணமாகவே, எழுத்துணரிகள் பார்வைக் குறையுடையோருக்கு பெரிதும் உதவுகிறது. 1920-ஆம் ஆண்டு இமானுவேல் கோல்ட்பர்க் {Emanuel Goldberg} புகைப்பட கருவியின் மூலம் இயங்கும் எழுத்துணரியை உருவாக்கினார். [Schantz, Herbert F. The history of OCR, p. 183] இந்திய அறிவியல் ஆய்வகத்தில், பேராசிரியர் ராமகிருஷ்ணன் குழுவினர் 2000-தில் இந்திய மொழிகளுக்கான எழுத்துணரியை உருவாக்கினர். இவ்வெழுத்துணரி பார்வையற்றவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது. இம்மென்பொருள் பிரிக்கும் எழுத்துக்களை பிரேயில் நூலாகவும் மாற்றிக்கொள்ளலாம். ஆனாலும், இது குறைந்த துள்ளியத்தையே கொண்டிருந்தது. 2015-இல் கூகுல் வழங்கிய எழுத்துணரி சிறப்பாக எழுத்துக்களை பிரித்துக் கொடுக்கிறது. கூகுல் எழுத்துணரி இணைய இணைப்பில் மட்டுமே இயங்குகிறது. குறைந்த எண்ணிக்கையிலான பக்கங்களை மட்டுமே எழுத்துக்களாக மாற்றுகிறது. இத்தகைய குறைகளை கூகுல் எழுத்துணரி கொண்டிருந்தாலும், அவை பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கும் பயன்கள் அளப்பரியது. இன்று பார்வையற்றவர்கள், தாங்கள் விரும்பிய நூல்களை விரும்பிய நேரத்தில் படிக்கும் வசதியை, எழுத்துணரிகள் ஏற்படுத்தித்தந்திருக்கின்றன. இவ்வெழுத்துணரியை அடிப்படையாகக் கொண்டு, ரூபாய்த் தாள்களை அடையாளம் காணும் செயலி, உணவகங்களில் தரப்படும் உணவுப்பட்டியல்களை வாசித்துக்காட்டும் செயலி என, பார்வைக் குறையுடையோரின் தேவைக்கேற்ப செயலிகள் உருவாக்கப்பட்டு வருகின்றனர். .

முடிவுகள்:
பிரையில் எழுத்தின் வருகைக்கு பிறகே, உலகம் முழுவதிலும் உள்ள பார்வையற்றவர்கள் கல்வி பயிலத் தொடங்கினர். அவர்களது கற்றல் செயல்பாடுகள் இவ்வெழுத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன.

உரை ஒலி மாற்றிகள், மின்நூல்களை படித்துக்காட்டும் வசதியை அளிக்கின்றன. ஒரு பிரேயில் நூலை உருவாக்குவதைவிட, மிக விரைவாக இம்மென்பொருளின் உதவியால் ஒலிநூல்களை உருவாக்களாம். இது, பிரேயில் தெரியாத பார்வையற்றவர்களுக்கும் வாசிப்புத்திறன் குறையுடையவர்களுக்கும், பெரிதும் உதவுகிறது. தொடுதிரை வசதிகொண்ட திறன் பேசிகளில், விரைவாக தட்டச்சு செய்ய குரல்வழி தட்டச்சு பெரிதும் உதவுகிறது. எதிகாலத்தில் பார்வைக்குறையுடையோர்களின் எழுத்துப்பணி இம்மென்பொருளைச் சார்ந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளது.

விழிச்சவாலர்களின் வாசிப்பு, ஒலி மற்றும் மின்நூல்களைச் சார்ந்தே இருக்கின்றன. அவ்வடிவிலான புத்தகங்கள் தமிழில் மிகக்குறைவாகவே உள்ளன. இதனால், அவர்களுக்கு அறிவு மறுக்கப்படுகிறது. இத்தகைய குறைகளை, எழுத்துணரிகள் களைந்துள்ளன. இன்று, பார்வையற்றவர்கள் தன்னிச்சயாகவும் சுதந்திரமாகவும் இயங்கி, சமூகத்தில் பல சாதனைகள் படைப்பதற்கு, உதவுதொழிநுட்பங்கள் பெரிதும் உதவுகின்றன.

பார்வை நூல்கள்:
1. ந .ரமணி இருலிலிருந்து இண்திய பார்வையற்றோர் சங்கம் பிரேயில் அச்சகம், மதுரை .
2. ரா.பாலகனேசன் தமிழ் பிரேயில் வரலாறு இண்திய பார்வையற்றோர் சங்கம் பிரேயில் அச்சகம், மதுரை.
3. Schantz, Herbert F. (1982). The history of OCR, optical character recognition. [Manchester Center, Vt.]: Recognition Technologies Users Association. ISBN 9780943072012.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர்: - பொன். சக்திவேல், ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப்பல்கலைக்கழகம், காந்திகிராமம்- 624 302, திண்டுக்கல் மாவட்டம்) -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R