ஆய்வு: இன்னா நாற்பது உணர்த்தும் சமுதாயநெறிகள்
முன்னுரை
தமிழகத்தில் சங்க மருவிய காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படுகின்றன.இந்நுல்களை அற நூல்கள், நீதி நூல்கள் எனவும் குறிப்பிடலாம்.இக்காலக் கட்டத்தில் களப்பிரர்கள் ஆட்சி செய்தனர் அதனால் இக்காலம் இருண்டக் காலம் என வழங்கப்படுகிறது.இதற்கு இருண்ட கால இலக்கியங்கள் என்ற பெயரும் உண்டு.இந்நூல்கள் அறம்,அகம்,புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன.இதில் அற நூல் பதினொன்று,புற நூல் ஒன்று,அக நூல் ஆறு என வகைப்படுத்தப்பட்டுள்ளன.இப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக இன்னா நாற்பது விளங்குகிறது.இந்நூலின் ஆசிரியர் கபிலர்.கடவுள் வாழ்த்து உட்பட மொத்தம் 41 பாடல்கள் இயற்றியுள்ளார்.சமுதாயத்தில் வாழ்கின்ற மக்கள் இச்செயல்களை செய்தால் துன்பம் தரும் என இந்நூல் எடுத்துரைக்கிறது.இதில் 164 இன்னாச் செயல்கள் உள்ளன.இந்நூலில் இடம் பெறும் சமுதாய நெறிகளைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சமுதாயம் என்பதன் பொருள்
மதுரை தமிழ் அகராதி சமுதாயம் என்பதற்கு கூட்டம்,சங்கம்,பின்னணி,ஊர்ப் பொது,மக்களின்திரள்,பொருளின்திரள்,பொதுவானது,பொதுவாகவேனும்,அவ்வவர்க்குப் பங்குப்படி பிரித்தேனும் அனுபவிக்கப்படும் ஊர்ப் பொதுச் சொத்து,சபை,அவைக்களம் என்று பொருள் விளக்கம் அளிக்கிறது.மேலும் செந்தமிழ் அகராதி மக்களின் திரள்,பொதுவானது எனப் பொருள் உரைக்கிறது.பேராசிரியர் காளிமுத்து அவர்கள் வளர்தமிழில் அறிவியல் அறிவியலும் சமுதாயம் என்ற நூலில் சமுதாயம் என்பது உறவுடன் கூடிய மக்களின் வாழ்க்கைத்தளம் என்றும் உலகில் தோன்றிய இனங்களில் ஒன்று மனித இனம் இவ்வினம் ஆறாவது அறிவைப் பெற்று தனக்காக சிலவற்றைத் தேடி அவற்றுடன் சார்ந்து வாழும் நிலையே சமுதாயம் என்று குறிப்பிடுகிறார்.
கல்வி
கல்வி என்ற சொல்லின் ஆதாரச் சொல் ‘கல்லுதல்’என்பதாகும்.கல்லுதல் என்றால் தோண்டுதல் மனத்தில் மறைந்து கிடக்கும் ஆற்றல்களை வெளிக் கொணர்ந்து மடைமாற்றம் செய்து திசை திருப்ப வல்லது கல்வி. இக்கல்வியின் பயனாக ஒருவன் இயைந்த முழுவளர்ச்சியினையும் பெறுகிறான் இன்னாநாற்பதில் கல்விப் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன.

முன்னுரை
முன்னுரை:
அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்களின் சில படைப்புக்களால் ஈர்க்கப்பட்டு அவரைப் பற்றிய எனது தேடலின் விளைவாக நான் அறிந்தவற்றை அல்லது உணர்ந்தவற்றை இங்கு பதிவு செய்கின்றேன். இந்தப் பதிவைச் சக எழுத்தாளர்களுடனும் தமிழ் வாசகர்களுடனும் பகிர்ந்து கொள்ளும் முகமாக எழுதிய இந்தக் கட்டுரை கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 20வது ஆண்டு மலரில் இடம்பெறுவது மிகவும் பொருத்தமானதெனக் கருதுகின்றேன்.
முன்னுரை
பழந்தமிழர் வாழ்க்கைக் கோலங்களையும் பண்பாட்டையும் அக்கால வரலாற்றுப் போக்கையும் எடுத்துக்காட்டும் இலக்கிய மூலாதாரங்களில் சங்க இலக்கியங்கள் முதன்மையான இடத்தை வகிக்கின்றன. அவற்றில் எட்டுத்தொகை நூல்களில் பரிபாடல் தனித்துவமானதாக அமைந்துள்ளது. அகமும் புறவும் விரவிய இவ்விலக்கியத்தில் வையைப்பாடல்களை ஆதாரமாகக் கொண்டு அக்கால சமூகநிலையை நோக்கமுடியும்.
முதல் நான்கு வகுப்புகளிலும் வேளாண்மை குறித்துள்ள கருத்தாக்கங்கள் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன.
“முரட்டுத்தனம் மிக்க சட்டத்தரணி, மரியாதையீனம் தொடர்பான, தமது மேன்முறையீட்டு முயற்சியில் தோல்வியுற்றார்.” ஜூன் 15, 2016 ‘ரொறன்ரோ ஸ்ரார்’ பத்திரிகை இப்படியொரு தலையங்கத்துடன் செய்தியொன்றை வெளியிட்டிருக்கின்றது. இதில் சம்பந்தப்பட்டவர் ரொறன்ரோவைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணியான Joseph Groia என்பவர். சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் ரொறன்ரோவில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றின்போது, எதிர்த் தரப்பினருக்காக வாதாடிய இவர், வழக்குத்தொடுநர் குறித்துத் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்பதுவே இவர் மீதான குற்றச்சாட்டு.
தமிழில் தோன்றிய பாவடிவங்களை யாப்பிலக்கணமரபின் அடிப்படையில் நால்வகைப்படுத்தி நோக்கலாம். இந்நால்வகைப் பாவடிவங்களில் ஒன்று கலிப்பாவாகும். இப்பாவடிவமானது ‘துள்ளல்’ என்ற ஓசைப்பண்பிலிருந்து உருவானதாகும். ஏனைய மூன்று பாவடிவங்களான ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா ஆகியவற்றைவிட தமிழரின் இசைமரபுடன் மிக நெருக்கமான உறவு கொண்டுள்ள பா வடிவம் கலிப்பாவாகும். குறிப்பாகத் தமிழின் பண்டைய இசைமரபு நூல்கள் பெரும்பான்மையும் அழிந்துபட்ட நிலையில் அக்காலத்தய இசைமரபின் இயல்புகளைத் தெரிந்து தெளிவதற்குத் துணையாக நிற்கும் முக்கிய பா வடிவம் இதுவாகும். அத்துடன் தமிழில் காலந்தோறும் தோன்றிய இசைவடிவங்கள் பலவற்றின் உருவாக்கத்திற்கு முக்கிய பங்களிப்புச் செய்துள்ளது இப்பாவடிவம் ஆகும் என்பதும் தமிழரின் இசைவரலாற்றினூடாக அறிந்து கொள்ளக்கூடிய முக்கிய செய்தியாகும். இவ்வாறான இப்பாவடிவத்தின் இசையியல் முக்கியத்துவத்தை தமிழ் இலக்கணநூல்களின் துணைகொண்டு எடுத்துரைக்கும் முயற்சியாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது. 
சமுதாயம்,, சமூகம் - விளக்கம்
தற்காலப் பெண்ணியவாதிகள் பாலுறவை முன்னிறுத்தியே பெண்விடுதலைக்கான போராட்டத்தை துவக்கியுள்ளனர். பாலியல் அடிமைத்தனமே அனைத்துச் சிக்கலுக்கும் காரணம் என்பது இவர்களின் வாதமாகும். ஆதலால், ‘புனிதப்படுத்தப்பட்ட’, ‘மர்மப்படுத்தப்பட்ட’ ஆண் - பெண் அந்தரங்கம் பாடுபொருளாக கட்டமைக்கப்பட்டுள்ளது. தந்தை வழிச் சமூகம் ‘குடும்பம்’ என்ற நிறுவனத்தின் மூலமாகப் பெண்ணின் பாலியலை அமுக்கி வந்ததாகக் கருதியே பாலுறவைப் பாடவிளைந்துள்ளனர்.
ஈழத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெரும்புலவரான சிவசம்புப் புலவர் காலம் தொடர்பாக ஆராய்ச்சியாளர்களிடையே மாறுபாடான கருத்துகள் நிலவுகின்றன. புலவரது நூல்கள் அச்சாகி வெளிவரத் தொடங்கிய காலத்திலிருந்து, அச்சாகி வெளிவந்த நூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதிய எழுத்துக்களில் புலவரது காலம் பற்றிய பல்வேறுபட்ட கணிப்புக்களை அவதானிக்க முடிகின்றது. புலவரின் செய்யுட்களை அவர் வாழ்ந்த காலப்பின்புலத்தில் வைத்து ஆராய்வதற்கு அவரது காலம் பற்றிய சரியான கணிப்பு அவசியமாகும். இத்தேவை கருதியே புலவரின் காலம் தொடர்பாக இச்சிறுகட்டுரை ஆராய முனைகிறது. 
“தமிழில் மாதிரி உரைநடை நவீனம் பொது மக்களுக்கு இதுவரை அளிக்கப்படவில்லை. ஆகையால் இந்நூல் வாசகர்களுக்கு சுவை பொருந்தியதாகவும் போதனை நிறைந்ததாகவும் இருக்கும் என எதிர்பார்க்கின்றேன்” என தமிழுக்குப் புதிய உரைநடை நவீனமான நாவலெனும் இலக்கிய வடிவம் வேதநாயகம்பிள்ளையினால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டதிலிருந்து. நாவல் எனும் இலக்கிய வடிவம் பல்வேறு வளர்ச்சிக்கு உட்பட்டு இந்நூற்றாண்டிலும் செல்வாக்குப் பெற்ற இலக்கிய வடிவமாகவும் மிளிர்கின்றது. 
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளையில் பிறந்த முல்லைமணி என்னும் புனைபெயரைக் கொண்ட வே.சுப்பிரமணியம் இலங்கைப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் சிறப்புக்கலைமாணிப் பட்டத்தைப் பெற்றதோடு இவரது கலை இலக்கிய ஆய்வுப்பணிகளை அங்கீகரித்து 2005ல் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப் பட்டத்தையும் வழங்கியது. பாடசாலை அதிபராகவும், ஆசிரியகலாசாலை விரிவுரையாளராகவும், பிரதம கல்வி அதிகாரியாகவும், மாவட்டக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றிய இவர் நாடகம், சிறுகதை, நாவல், கவிதை, வரலாற்று ஆய்வுகள், இலக்கியத்திறனாய்வு போன்ற துறைகள் மூலம் தமிழ் எழுத்துலகில் கால் பதித்தார். இவர் மல்லிகைவனம், வன்னியர்திலகம், மழைக்கோலம், கமுகஞ்சோலை போன்ற நாவல்களைப் படைத்துள்ளார். இவற்றுள் “கமுகஞ்சோலை” என்னும் நாவல் இங்கு அலசப்படுகிறது.
மனித சமூகம் இனக்குழு வாழ்க்கை முறையில் இருந்து குடிமைச் சமூக நாகரிகத்தை ( civic society ) நோக்கி வளா்ந்த ஒரு வளா்ச்சிக் கட்டத்தை சங்ககாலம் என்று குறிப்பிடுவா்.இச்சங்க கால வாழ்க்கை முறைகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.சங்கம் மருவிய கால இலக்கியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள சிலப்பதிகாரத்தில் சங்க இலக்கியப் பதிவுகள் சில இடங்களில் அவ்வாறேயும் சில இடங்களில் மாற்றம் பெற்றும் காணப்படுகின்றன. அவற்றை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
முன்னுரை


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









