ஆய்வுக் கட்டுரைகள்!முதல் நான்கு வகுப்புகளிலும் வேளாண்மை குறித்துள்ள கருத்தாக்கங்கள் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன.

தை...தை...விதை    -    வகுப்பு ஒன்று
நாற்று நட வாரீர்    -    வகுப்பு இரண்டு
கனவு பூக்கும் வயல்    -    வகுப்பு மூன்று
கழனி பூக்கும் காலம்    -    வகுப்பு நான்கு

வேளாண்மையைப் பாதுகாப்போம் என்ற கருத்தாக்கம் பதினேழு கருத்தலகுகளாகப் பிரிக்கப்பட்டு ஆராயப்படுகிறது.\

1.    செடி வந்த வரலாறு
2.    பயிர் தொழிலின் படிநிலை வளர்ச்சிகள்
3.    விதைகாத்தல்
4.    பழங்களும் சுவைகளும்
5.    செடிகொடி மரம்
6.    உழவுக்காலம்
7.    ஏர் உழும் காளை
8.    வேளாண் சங்கம்
9.    நாற்று நடுதல் ஒரு வேளாண் கலை
10.    பூசணிப்பயிர்

செடி வந்த வரலாறு
மழை பெய்ய, மண் நனைய, மண்புழு மண்ணை உழுதிட, பசு உரம் போட, குருவி விதை விதைக்க, விதை முளைத்து செடி ஆனது என்று விதையிலிருந்து செடி வந்த
வரலாறு தரப்பட்டுள்ளது.

மண்புழுவால் மண் வளம் பெறுவதாயும், இயற்கை உரம் பசுவிடமிருந்து கிடைப்பதையும் என்றும் குழந்தைகள் தெரிந்து கொள்கின்றனர்.மேலும்,

 

“பூ பூத்தது
காய் காய்த்தது
செடி நிறைய பயிறு”

என்று தானியங்களின் விளைச்சல் சொல்லப்பட்டுள்ளது.

பயிர் தொழிலின் படிநிலை வளர்ச்சிகள்
மண் உழுதல், விதை விதைத்தல், நீர் பாய்ச்சுதல், களை எடுத்தல், உரம் இடுதல் என்று பயிர்தொழிலின் படிநிலை வளர்ச்சிகள் ஒன்றாவது வகுப்பிலே சிறு
வாக்கியங்களால் இடம்பெற்றுள்ளன.  இரண்டாவது வகுப்பில் விதை காத்தல் பற்றிய குறிப்பு தரப்படுகிறது.

“நிலம் உழு
விதையை விதை
நீர் பாய்ச்சு
களை எடு
உரம் இடு
குருவி வழி சொன்னது
பாமா என்ன செய்வாள்”

மண்ணை உழுததன் பின்னரே விதை விதைக்கப்படுகிறது.  அது முளைக்க நீர் பாய்ச்ச வேண்டும் எனும் கருத்தாடல் குழந்தைகளுக்குக் கிடைக்கிறது.


விதைகாத்தல்

விதைக்கப்பட்ட விதைகளை எறும்புகளும் பறவைகளும் உண்ணாதவாறு பாதுகாக்கும் வழிமுறை சொல்லப்படுகிறது.

“கொண்டைக்கோழி கொண்டைக்கோழி
கொத்த வராதே.
கம்பை நட்டு வேலி நானும்
கட்டிடுவேனே.
சிட்டுக்குருவி... சிட்டுக்குருவி...
கொத்த வராதே!
வேலி முள்ளை விதை மேலே
போட்டு வைப்பேனே!

விதைகளின் மேல் வேலிகளில் கட்டப்படும் முள்கள் உள்ள கம்புகளைப் போடுமாறு கூறப்படுகிறது.

பழங்களும் சுவைகளும்
முதல் வகுப்பில் அன்றாடம் வீட்டில் காணும் பழங்களும், காய்கறிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  சிவப்பு நிறத்தில் சுவை மிக்கப்பழம் தக்காளிப்பழம்
என்றும் சிவப்பு நிறத்தில் காரம் மிக்கப் பழம் மிளகாய்பழம் என்றும் சுவை வேறுபாடுகள் காட்டப்பட்டுள்ளன.

செடிகொடி மரம்
கொடியில் அவரைக்காய், செடியில் கத்திரிக்காய், மரத்தில் வாழைக்காய் என, காய்கறிகளின் ஒவ்வொரு பிறப்பிடங்களும் வெவ்வேறு தோற்றங்களும்

‘ஏலேலோ ஏலேலோ’ என்ற கவிதையில் உள்ளன.
“கொத்துக் கொத்தாய் அவரைக்காய்
– ஏலேலோ ஏலேலோ
கொடியில் காய்த்து தொங்குவது
– ஏலேலோ ஏலேலோ
சுற்றுப்புறங்களில் காணப்படும் காய்கறிகளும் பழங்களுமே முதல் வகுப்பில் சொல்லப்பட்டுள்ளன.  மேலும் தெம்மாங்குப் பாடலாக காய்கறிக்கவிதை

அமைந்திருப்பதால் இசைத்தமிழும் இங்கு அறிமுகமாகிறது.

இரண்டாவது வகுப்பு பாடநூலில் ‘பொன்னு மச்சான் கேளு’ என்ற கவிதையும் உழவுத் தொழிலின் வளர்ச்சியையே கூறுகிறது.
மழை பெய்த காலத்திலே
பொன்னு மச்சான் கேளு
மாடு பூட்டி ஏறுழுவோம்
சொல்லி வச்சேன் கேளு

வயல் பயிர்கள், தோட்டப்பயிர்கள் என வேறுபட்ட பயிர் வகைகளைப் பற்றிய பட்டியல் எழுதுமாறு குழந்தைகளுக்குச் செயல்பாடும் அளிக்கப்பட்டுள்ளது.

உழவுக்காலம்
சித்திரைப் புழுதி உழவு செய்வதற்குப் பொருத்தமான காலம் என்றும் ஆடி மாதம் விதை விதைப்பதற்கு ஏற்ற காலம் என்றும் விளக்கப்பட்டுள்ளன. 
‘சித்திரைப் புழுதி பத்தரை மாற்றுத் தங்கம் ஆடிப்பட்டம் தேடி விதை’ என்னும் பழமொழிகளும் கூறப்பட்டுள்ளன.

ஏர் உழும் காளை
‘நாற்று நடவாரீர்’ என்ற பாடப்பகுதி பல்வேறு வீட்டு வளர்ப்பு விலங்குகள் பற்றிய செய்திகளைத் தருகிறது.  அதிகாலையில் உழப்போக வேண்டிய
செவலைக்காளை அதனை எழுப்பி விடுமாறு தன்னுடன் அந்த வீட்டில் உள்ள பிற விலங்கினங்களிடம் கேட்கிறது.  தான் ஏர் உழுவதற்குப் போகாவிடில் அனைவரும்
பட்டினி என்றும் எச்சரிப்பது பசிப்பிணி போக்கும் வல்லமை உழவுக்கு மட்டுமே என்ற கருத்தாக்கத்தைத் தருகிறது.  வீட்டில் வளர்க்கும் மிருகங்களின் அவற்றின்
பயன்பாடுகள் தரப்பட்டுள்ளன.

நிலம் உழு.
விதையை விதை.
நீர் பாய்ச்சு.
களை எடு.
உரம் இடு.
குருவி வழி சொன்னது.
பாமா என்ன செய்வாள்?

ஒவ்வொரு உயிரினமும் வெவ்வேறு பயன்பாட்டை மனிதர்களுக்கு அளிக்கிறது என்றும் மனிதரும் பிற உயிரினங்களும் சார்பு தன்மையுடனேயே வாழ
முடியும் என்ற கருத்தும் இங்கு அளிக்கப்படுகிறது.

வேளாண் சங்கம்
வேளாண் சங்கம் பற்றிய சிறு குறிப்பு உள்ளது.  விதைகள், செடிகள், உரங்கள் என வேளாண்மைக்கு உதவும் பொருட்களை இங்கிருந்து பெறலாம் என்ற
செய்தி அளிக்கப்படுகிறது.

நாற்று நடுதல் ஒரு வேளாண் கலை
புள்ளி போட்டு கோலம் போடுதலை நாற்று நடுதலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்   தேன்மொழியின்   காட்சி  வாயிலாக   நாற்றுநடுதல்  வெறும் தொழில்
மட்டுமல்ல.  இரசனை மிக்க ஒரு கலை என்றும் இந்தப் பாடப்பகுதி தெளிவுப்படுத்துகிறது.

பூசணிப்பயிர்
பூசணி கதை சொல்லும் பாங்கில் சாம்பல் தடவி உலரவைத்த வித்து பக்குவம் செய்து மண்ணுக்குள் நடப்பட்டு முளைத்து காய்த்தமுறை சொல்லப்பட்டுள்ளது.
“என்கதை சுவையானது.  நான் ஒரு பூசணிக்காயில் விதையாக இருந்தேன்.  காயை வெட்டி விதையை வெளியே எடுத்தனர்.  சாம்பல் தடவி உலர வைத்தனர்.  தோட்டத்து

மண்ணை பக்குவம் செய்தனர்.  அதில் என்னை நட்டனர்.  எனக்கு மூச்சு மூட்டியது.  மண்ணுக்குள் தண்ணீருக்காகத் தவம் இருந்தேன்.  அப்போது மழை பெய்தது.  நான்
முளை விடத் தொடங்கினேன்.  முதலில் வேர் தான் வெளியே வந்தது.”

பூசணி, வீட்டு தோட்டப் பயிர்களுள் ஒன்று.  மிக எளிதாக பயிரிடமுடிந்த ஒரு காய்கறி.  மேலும் சாம்பல் வீட்டில் கிடைக்கும் பொருள்.  இது ஒரு இயற்கை உரம். 
பயிர்களுக்கு உணவு போன்றது என்ற செய்திகள் மூலம் வீட்டில் தோட்டம் அமைத்தல் எளிதான ஒரு செயல் என்பதும் தரப்பட்டுள்ளன.  கொடி இனம் சார்ந்த காய்கறி
வகைகள் இங்கு அறிமுகம் ஆகின்றன.

இரண்டாம் வகுப்பில் உள்ளதைப் போன்று மூன்றாம் வகுப்பிலும் நாற்றுநட்டு   கதிரறுத்துக்   களம்  சேர்க்கும்    வரையிலான    செயல்    முறைகள்
கதிரறுத்துக் களமும் சேர்த்து . . .! என்ற கவிதையில் இடம் பெற்றுள்ளன.  ஆனால் வட்டார வழக்கிலான வேறுபட்ட சொற்கள் இரு கவிதைகளிலும் காணப்படுகின்றன.

“தொளியடிச்சு பறம்படிச்சு
தன்னானே னானே – நாங்க
நாத்துப்பாவி நட்டு வச்சோம்
தில்லாலே லேலோ . . . ! (தன்னானே)

தொகுப்புரை
மழை பெய்யாவிடில் வரும் வெப்பக்காலநிலை தண்ணீர் வறட்சி, வேளாண்மை வறட்சி சொல்லப்பட்டுள்ளன..
வேளாண்மையின் பயன்பாடுகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
செடி, கொடி, மரம் என வேறுபடுத்திக் காட்டி காய்கறிகள் பற்றித் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
வேளாண்மைக்கு உதவும் சுய உதவிக்குழுக்கள் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
வேளாண் சடங்குகள் பற்றிய செய்திகள் உள்ளன.

உசாத்துணை நூல்கள்:
தமிழ்ப்பாடத்திட்ட நூல்கள் (வகுப்பு 1, வகுப்பு 2, வகுப்பு 3 & வகுப்பு 4)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R