ஆய்வு: காமத்துப்பாலில் கண்களின் அழகியல் வெளிப்பாடு
மனித வாழ்வில் கண்கள் தனியொருவனின் சொத்தாகும். இது இன்பம், துன்பம் சார்ந்த அழகியல்களை உடலியலால் சிலிர்க்கச் செய்கிறது. நல் நிமித்தக் காட்சிகளைக் கண்டு இன்பம் கொள்வதற்கும், துன்பக்காட்சிகளைக்கான விரைந்து செல்வதற்கும் கருவியாகப் பயன்படுகிறது. காட்சிப்படுத்துகிறது; நினைவூட்டுகிறது; என அனைத்துச் செயல்களிலும் உடலியல்பு கொண்டு இயங்குகிறது கண். ஆகையால் என்னவே! ஐம்புலங்களில் ஒன்றான கண்ணைப்பற்றி, ‘கண்விதுப்பிழிதல்’ எனக் கூறி ‘குறிப்பறிதலை’ இரண்டு முறை அதிகாரப்படுத்தியுள்ளார் வள்ளுவர்.
“காமத்துப்பாலில் அறக்கருத்துக்களை தொகைவகைப் படுத்திக் கூறும் அறங்கூறும் ஆசானாகக் காட்சித் தரவில்லை, கலையுணர்வு மிக்க கலைஞனாகத் தோன்றுகிறரர்.” என்று கு. மோகனராசு கூறுகிறர். கண்கள் மனிதனின் உடல் சார்ந்த அழகியல் வெளிப்பாடு. தனியொருவனின் அடையாளம், குடும்பம், சமூகம் என அனைத்துப் பகிர்வுகளையும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி இயங்கச் செய்கிறது. வள்ளுவர் காலச் சமூக சூழல்களில் இத்தகைய பின்அமைவு நிகழ்வுகளை உள்வாங்கிக் கொண்டு இனைப்புற வாழ்ந்ததால் குறிப்பறிந்து கண்ணிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். முக்கியத்துவம் கொடுக்கப்ட்ட கண்களின் அழகியல் வெளிப்பாடு தனிநிலையிலே பெரிதும் இன்பங்களையும் இன்னல்களையும் சந்தித்திருக்கிறது. மேலும் களவு கற்பு வாழ்க்கையில் கண்ணின் வெளிப்பாடு எவ்வாறு வெளிப்பட்டுள்ளது. கண்ணை எந்தளவிற்கு ஆண்கள் பெண்கள் பயன்பாட்டுப் பொருளாகப் பயன்படுத்தியுள்ளனர்? குடும்பம், சமூக வாழ்வில் எந்தளவிற்கு கண்ணின் ஈடுபாடு இருந்துள்ளது என்பதைப் பற்றி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

திருக்குறள் எந்த நூற்றாண்டில் எழுதப்பட்டது, யார் எழுதினார், எந்த சமயத்தைச் சார்ந்தவர் எழுதினார், யாருக்காக எழுதப்பட்டது, இது போன்ற பல கேள்விகள் பல நூற்றாண்டுகளாக எழுந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் அனைவராலும் ஏற்றுக் கொண்ட கருத்தின் அடிப்படையில் திருவள்ளுவர் இயற்றினார் சங்கம் மருவிய காலத்து நூல், சமண சமயத்தவர் எழுதியது, உலக மக்களுக்காக பொதுவாக எழுதப்பட்டது போன்றவற்றை மையமாகக் கொண்டு அதில் உள்ள கருத்துக்களை இன்று போற்றி வருகிறோம் எனவே தான் மு.வ அவர்கள் சமயங்களின் அடிப்படை உண்மையும் ஒன்றே என்ற தெளிவு பெற்றுவிட்ட காரணத்தால் எல்லாச் சமயங்களையும் ஊடுருவிட பார்த்து அடிப்படை உண்மையை மட்டும் உணர்த்தும் பான்மையைத் திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்தில் காண்கிறோம்.

பண்டைய காலகட்டங்களில் ‘துயிலுணர்பாட்டு’ என்றும், ‘துயிலெழுப்பு பாட்டு’என்றும் பாணர்மரபில் வழங்கி வந்த இவை வாய்மொழியாகப் பாடப்பட்டு வந்தவையாகும். அதுவே, பிற்காலத்தில் புலவர்மரபில் தனிப்பாடல்களாக உருவெடுத்தன. தொல்காப்பியர் காலத்தில் ஒரு துறையாகக் குறிப்பிடப்படுகின்றது. பக்தி இயக்ககாலத்தில் தனித்த ஒரு வகைமையாக இனங்காணப்பட்டது. மேலும், இது சிற்றிலக்கியங்களில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையினை பன்னிருபாட்டியல், தொன்னூல் விளக்கம், பிரபந்த தீபம் முதலான பாட்டியல் நூல்களின் வாயிலாக அறிய இயலுகின்றது. ஆக, தொன்றுதொட்டு வழங்கிவந்த இப்பாட்டு மரபானது பல்வேறு நிலைகளில், பல்வேறு பொருண்மை நிலையில் பாடப்பட்ட நிலைபாடுகளின் தன்மைகளை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது. குறிப்பாக சுந்தரனாரின் பொதுப்பள்ளியெழுச்சியில் காணப்படும் மாறுபட்ட நிலைபாடுகளை இனங்காண முயன்றுள்ளது.
தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒளவையார் என்னும் பெயரில் பலர் வாழ்ந்துள்ளனர். சங்க காலம், நாயன்மார்காலம், கம்பர்காலம், இக்காலம் எனப் பல்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததாகக் குறிப்புகள் உள்ளன. சங்க கால ஒளவையார் இலக்கியப் புலமை, சமயோகித அறிவுமிக்கவர்களுள் அதியமான் அவைக்களப் புலவர்களுள் நட்பாற்றலும், தன்முனைப்பும், பேரன்பும் கொண்டவர். இவர் இன்தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமது பாடல்கள் மூலம் அருந்தொண்டாற்றியவர். பெண்பாற் புலவர்களுள் முதன்மையானவர். தமிழகத்தின் முதல் பெண் தூதுவர் - கிரேக்கப் பெண்பாற்புலவர் சாப்போவுடன் ஒப்பிடத்தக்கவர்.
முன்னுரை 
திராவிட மொழிகள் எல்லாம் ஒரு மூலமொழியிலிருந்து வளர்ந்தது அவை இன்னதென்று தெரியவில்லை. இருப்பினும் அம்மொழிகளனைத்தும் மொழிக்குடும்பமாக இருந்துள்ளது. அக்குடும்பத்தில் இருந்து ஒவ்வொன்றாகப் பிரிந்து கால மாற்றம், இடத்திற்கேற்ப பிரியத் தொடங்கியது. அவ்வாறாக பிரிந்த மொழிகள் தான் மொழிகளின் தொகுதியாக உள்ளது. அப்படிப்பட்ட தொகுதிக்குள் பல்வேறு மொழிகள் இருந்தாலும் தமிழ் மொழியானது தனிப் பெருந்தன்மை பெற்று விளங்குகிறது. குறிப்பாக தமிழ்மொழி திராவிட மொழிகளின் ஆணிவேராக உள்ளது என்பதே சரியாகும். அவ்வாறு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஓரெழுத்தொருமொழியின் பங்கு பெரிதும் உள்ளது.
சமூக வரலாற்றினைக் காட்டும் பெட்டகமாகவும் மானிடசமூகத்தினை உயிரோட்டமாகக் காட்டும் அரிய சான்றாகவும் காப்பியங்கள் திகழ்கின்றன. எனவே தான், இக்காப்பியங்களை இலக்கிய வளர்ச்சியின் உச்சநிலை என்று அறிஞர்கள் கருதுகின்றனர். அன்றைய சமூகத்தில் பல்வகையான நம்பிக்கைகள் நிலவியிருந்தமையை காப்பியங்களின் வழியாக அறியமுடிகிறது. அவற்றில், மறுபிறப்பு பற்றிய நம்பிக்கையும் ஒன்றாக உள்ளது. இம்மறுபிறப்பிற்கு அடிநாதமாக விளங்குவது வினையாகும். எனவே இவ்வினையில் காணப்படும் இன்ப, துன்பங்கள் குறித்து ஆராய முற்படுவதாக இக்கட்டுரை அமைகிறது.
தமிழகத்தின் நிலவியல், தாவரவியல், விலங்கியல்,கடலியல், அரசியல், சமூகவியல், மானுடவியல், சூழலியல், ஆன்மீகம் என பல தறப்பட்ட கூறுகளையும் உள்ளடக்கினவாகச் சங்க இலக்கியம் திகழ்கின்றது. இச்சங்கப் பிரதி தமிழர் வாழ்வியலையும், விலங்குகள் அவர்தம் மனவெளியிலும், புறவெளியிலும், வாழ்நெறியிலும் உறவு கொண்டு ஊடாடி விளங்குவதையும் காட்சிப் படிமங்களாகக் கண்முன் படைத்துக் காட்டுகின்றது. சங்கப் பாக்கள் முதல், கரு, உரி என்ற முப்பெரும்பிரிவின் அவதானிப்பில் அமைந்துள்ளன. இப்பாடல்களில் முதற்பொருளின் பின்புலத்தில் கருப்பொருளாக மனிதனைச் சுற்றியுள்ள இயற்கைப்பொருட்கள், தாவரங்கள், விலங்குகளின் வாழ்வியல் விளக்கம் பெற்றுள்ளன. பண்டையத் தமிழனின் காலச்சூழ்நிலைக்கு ஏற்ப அவனோடு இயைந்து வாழ்ந்த விலங்கினங்களை வேட்டையாடி மாமிசத்தை உண்டு மகிழ்ந்து வந்தான். அந்நிலையில் தாவர உண்ணியாக வாழ்ந்த முயலினை வேட்டையாடி தன் உணவுத் தேவையைப் பூர்த்திச் செய்து கொண்டான். சங்கப் பிரதியில் முயலின் வாழ்வியல் சூழல், புலவரின் கற்பனைத் திறன், உவமையாக்கல் போன்ற பல்வேறு நிலைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









