நூற்றொகை விளக்கத்தின் பொதுவியல் கட்டமைப்பு
பாயிரங்கள் மொழிகளின் ஆக்கத்திற்கு ஏற்ப காலந்தோறும் அமைப்பு, பொருள் உருப்பெருக்கம் என்ற தன்மையில் பெருகி வருகின்றன. மரபிலிருந்து மாற்றம் பெறாமல் உறுப்புக்களை ஏற்றம் பெறச்செய்கிறது. நன்னூல், தொல்காப்பியம் பாயிர இலக்கணத்தில் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் சிறப்புப் பெருவது போல் நூற்றொகை விளக்கத்தில் பொதுவியல் சிறப்பு பெருகிறது. பொதுவியல் கட்டமைப்பில், நன்னூலரின் பொதுப்பாயிரக் கட்டமைப்பினைப் போல் தொடக்கத்திலே அறிவு, நூல் ஆகியவற்றை சூத்திரமாகக் கட்டமைத்துள்ளார் ஆசிரியர். இது தொல்காப்பிய மரபிலிருந்து மாற்றம் பெற்று காணப்படுகிறது. ஏனெனில் தொல்காப்பியர் மரபியலில் நூலினைப் பற்றி கூறியுள்ளார். அவற்றை ஒப்பிடுவதோடு, அறிவு, நூல், நூலின்வகை அதற்கான பொது இலக்கணம் மற்ற நூல்களிலிருந்து ஆசிரியர் மாற்றம் பெறுவதற்கான காரணம் ஆகியவற்றைப் பற்றி ஆராய்கிறது இக்கட்டுரை.
நூல் - விளக்கம்
நூல் என்பதற்கு நூற்றல் (திரித்தல்) என்ற தொழிலாற் பிறந்த பஞ்சுநூல் என்று பொருள். தொல்காப்பியர் காலத்தில் ‘பாட்டுரைநூல்’ என்னும் நூற்பாவால் பாட்டு முதலியன நூல் என்ற பெயரைப் பெறாமல், இலக்கண நூலே, நூல் எனப் பெயற்பெற்றது என்று பொருளிடுகிறார். தொல்காப்பியர் இதனை,
“நூலெனப்படுவது நுவலுங் காலை
முதலு முடிவும் மாறுகோ னின்றித்
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
உண்ணின் றகன்ற உரையொடு பொருந்தி
நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே” (செய்.நூற்:159)


பொ. கருணாகரமூர்த்தி ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். சிறுகதை, நாவல் ஆகியவற்றுடன் புனைவுசாரா எழுத்துக்களையும் எழுதிவருபவர். இவரின் “ஒரு அகதி உருவாகும் நேரம்” தொகுதியில் இடம்பெற்றுள்ள “வாழ்வு வசப்படும்” என்ற குறுநாவலை மையமாகக் கொண்டதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
நூறு முறையாவது படித்திருப்பேன் நகுலன் கவிதைகளை..ஒரு மூச்சுக்கும் அடுத்த மூச்சுக்கும் இடைப்பட்ட காலம்தான் மனிதஆயுள் என்று புத்தர் சொன்னதுபோல் நகுலனும் சொல்கிராறோ என்று நினைக்கத் தோன்றும்.வாழ்வைத் தத்துவ நோக்கோடு பார்த்தவர்கள் நகுலனும் மௌனியும்..இருவரும் சுருக்கமாக ஆனால் சுருக்கென்று தைக்க எழுதியவர்கள். கனமான அரிசி மூட்டையை லாவகமாகக் கொக்கியால் குத்தித்தூக்கி முதுகில் ஏற்றி இடம் மாற்றும் தொழிலாளியின் நேர்த்தியான லாவகம் நகுலன் கவிதைகளில் உண்டு. அவர் கவிதையின் கனம் வாசிக்கும் வாசகனின் மனதில் இடம்மாறி மனதை ஒரு வினாடியில் பாராமாக்கும்.இறந்துபோன வண்ணத்துப்பூச்சியை இரக்கமில்லாமல் இழுத்துச் செல்கிற எறும்பைப்போல் காலம் நம்மை இழுத்துச்செல்லும் கோலத்தை நகுலன் கவிதைகள் அப்பட்டமாய் சொல்கின்றன. நகுலனின் வரிகளில் சொல்லவேண்டுமானால்



இன்று அறிவியல் எனும் விந்தையால் புதிது புதிதாக ஆயிரமாயிரம் கருவிகளையும் புழங்குப் பொருட்களையும் கண்டுபிடித்து வருகின்றோம். அவற்றிற்கிடையே பழஞ்சொத்துக்களையும் இழந்து வருகின்றோம் என்பதையும் மறந்துவிடலாகாது. ஊர்ப்புறம் (கிராமம்) என்றாலே அது நெல் விளைச்சலின் சொத்து. எனவே அது நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்கின்றது எனும் கருத்து வலுப்பெற்றது. அது இன்று விலை நிலங்களின் இருப்பிடமாக மாறி வருகின்றது. அதனைப் போன்றே அவ்வுழவர்கள் பயன்படுத்திய குதிரின் பயன்பாடும் மறைந்து வருகின்றது. இத்தன்மை அப்பயன்பாட்டின் மீதான அக்கறை இல்லை என்பதைக் காட்டுகின்றது. குதிர் எனும் சொல் நெல் போன்ற தானிய வகைகளைச் சேகரிக்கப் பயன்படும் ஒருவகை கலம் என அகராதிகள் பொருள் கொள்கின்றன. இதன் பயன்பாடு பயிர்த்தொழில் கண்டுபிடிக்கப்பட்ட காலம் தொட்டே தோன்றிற்று எனலாம். அத்தொழில் புரிந்து வந்த மாந்தன் தேவைக்குப் போக மீதமிருந்தவற்றை எதிர்கலத் தேவைக்காக சேமிக்க குதிரைக் கண்டறிந்தான். அதற்கு நெற்குதிர் எனப் பெயரிட்டான். பின்பு பல தானிய வகைகளையும் சேமித்து வைக்கவும் கற்றுக் கொண்டான். முழுமையான கட்டுரை 






மகாகவி பாரதி அக்கினிக்குஞ்சாய் வீறுகொண்டு எழுந்தவன்.வறுமை விரட்டியபோதும் உறவுகள் எதிர்த்தபோதும் சுதந்திரபாரதம் பெறத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவன்.தாமிரபரணிபாயும் சீவலப்பேரி, மகாகவி பாரதியின் தந்தை சின்னச்சாமிஐயர் பிறந்தஊர்.தந்தை கடுவாய்ச் சுப்பைய்யர் காலமானபின் தாய் பாகீரதியம்மையாருடன் பாரதியின் தந்தை எட்டயபுரம் செல்ல நேரிடுகிறது. எட்டயபுரத்தில் சின்னசாமிஐயர் பள்ளிப்படிப்பை முடித்து எட்டயபுரஜமீனில் பணிபுரிகிறார்.அதே ஊரில் வசித்த லட்சுமிஅம்மையாரை மணக்கிறார்.1882 டிசம்பர் 11 இல் மகாகவி பாரதி பிறக்கிறார்.சுப்ரமணியன் என்று பெயரிடுகிறார்கள்.பாரதி பிறந்து ஐந்தாமாண்டில் 1887இல் பாரதியின் தாய் லட்சுமிஅம்மையார் காலமாகிறார். பாரதி தன் சுயசரிதையில் தன்தாயின் இறப்பை ஏக்கத்தோடு பதிவு செய்துள்ளார்.

ஆற்றுப்படை இலக்கியம் வளர்வதற்கு காரணம் அக்காலச் சூழலே காரணமாகும். ஏனெனில் சங்க காலம் மன்னரின் ஆட்சிகாலம் என்பதால் அவை சமூக உணர்வு நோக்கோடு செயல்பட்டது. மன்னனுக்காக சமுதாயமும் வாழ்ந்த காலம் சங்ககாலம். மன்னர்கள் வீரம் கொடை என்ற இரண்டையும் உயிராக மதித்து வாழ்ந்துள்ளார்கள். ஆகையால் கலைஞர்கள் மன்னரிடம் செல்லும்போது அக்கலைஞர்களை மன்னாகள்; ஆதரித்துப் போற்றியுள்ளனர். இருவரிடையே இணக்கமான நட்பு ஏற்பட்டு ஒருவரையொருவர் போற்றி வாழ்ந்தமையால் ஆற்றுப்படை இலக்கியம் தோன்றலாயிற்று. சங்ககால ஆற்றுப்படைக்கு பின்னர் எழுந்தது பிற்கால ஆற்றுப்படை. கால மாற்றத்திற்கேற்ப அறிவியலின் பரிமாண வளர்ச்சி போன்றுää இலக்கியத்திலும் காலத்திற்கேற்றவாறு பாடுபொருளில், மாற்றத்தினையும் வளர்ச்சியினையும் பார்க்க முடிகிறது. இவ்வகையில் வளர்ந்தது தான் பிற்கால ஆற்றுப்படை....

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









