முன்னுரை
தமிழ் மரபிலக்கணங்களை ஆய்வறிஞர்கள் அகத்தியம், தொல்காப்பியம், வீரசோழியம், பிரயோகவிவேகம் என நான்கு மரபுகளாக இனங்காண்கின்றனர். இவ்வகைப் பிரிப்புமுறைகள் இலக்கண உருவாக்க நோக்கம், புறக்கட்டமைப்பு, முன்னோர் நூலைப் பின்பற்றும் பொதுமரபு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளன எனலாம். தமிழ் மொழிக்குரிய முதலெழுத்து விளக்க நெறிகளில் மரபிலக்கணிகளின் நிலைப்பாடுகள் குறித்தும், அதன் மரபாக்கம் குறித்தும் விளக்க முனைகின்றது இக்கட்டுரை.
தமிழ் நெடுங்கணக்கு: தமிழ் மொழிக்குரிய நெடுங்கணக்குகள் மொத்தம் இருநூற்றி நாற்பத்தியேழு என ஆரம்பக்கல்வியில் புகட்டப்படுகின்றது; புகட்டப்பெற்று வருகின்றது. இந்நெடுங்கணக்குகளை மரபிலக்கணிகள் முதல், சார்பு எனப் பிரித்துப் பார்க்கின்றனர். இவற்றுள் முதலெழுத்து விளக்கமுறைகளில் மரபிலக்கணிகளிடையே வேறுபாடுகள் நிலவுகின்றன. அஃதியாங்கெனின் தொல்காப்பியர் சார்பெழுத்துகள் (ஆய்தம், உயிர்மெய்) எனக் கருதியதை, முதல் எழுத்துகளுடன் இணைத்துப்பார்ப்பதேயாம்...மேலும் வாசிக்க