திருஞானசம்பந்தர்திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் பன்னிரு திருமுறையில் முதல் மூன்று திருமுறைகளாக அமைந்துள்ளன.  திருஞானசம்பந்தர் மூன்று வயது குழந்தையாக இருந்தபோது, உமாதேவியாரின் ஞானப்பாலை உண்டு சிவஞானசம்பந்தரானார்.  அன்று முதல் பாடல்கள் பாடிவந்தாh,  இந்நிகழ்வு இறைவன் திருவருளால் நடைபெற்ற ஒன்றாகும்.  சம்பந்தரின் பாடல்கள் அனைத்தும் உயிர்த்தன்மை உடையவை.  ஓதுபவரை ஈடேற்றும் வல்லமை பெற்றது.  இறைவன் அருள் பெற்று அருளிய முதல் பதிகத் திருக்கடைக்காப்பில் ‘திருநெறிய தமிழ் வல்லவர்  தொல்வினை தீர்தல் எளிதாமே” என்று கூறுகிறார்.  சம்பந்தர் தம்முடைய தேவாரத்தில் மக்கள் பிறப்பிறப்பற்று இறைவனை அடைவதற்குரிய வழிகளைக் கூறியுள்ளார்.  அத்தகைய வாழ்வியல் கூறுகளை இங்கு காண்போம்.

திருக்கடைக் காப்பு:
பத்து பத்து பாடல்களால் பாடப்பெறுவது தான் பதிகம் என்று  பெயர் பெறும், சமய இலக்கியங்களில் காரைக்காலம்மையார் இம்முறையைத் தொடங்கி வைக்கிறார்.  அவர் பாடிய திருவாலங்காட்டு மூத்ததிருப்பதிகங்;கள் இதற்குச் சான்றாகும்.  திருஞானசம்பந்தர் பதிகங்களில் பதினொரு பாடல்கள் அமைந்துள்ளன.  புதினொன்றாவதாக உள்ள பாடலுக்கு திருக்கடைக்காப்பு என்று பெயர்.  இதைப் பதிகப் பயன் என்றும் கூறுவர்.  தம்முடைய பதிகங்களை ஓதுவதால் வரும் நன்மைகளை திருக்கடைக்காப்பில் தெளிவாக விளக்கியுள்ளார்.

பதிகப்பயன்:
திருக்கடைக்காப்பில் பவ்வேறு செய்திகள் கூறப்பட்டிருந்தாலும், அதில் பதிகப் பயனே முக்கிய இடத்தைப் பெறுகிறது.  மக்களிடம் நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக சம்பந்தர் இம்முறையைக் கையாண்டுள்ளார்.  தன்னுடைய பதிகத்தைப் படிப்பதால், பாவம் பழி, துன்பம் இடர்கள் அடையா என்றும், புகழோடு நற்பயன்களைப் பெற்று வாழ்வார்கள் என்றும், வான் ஆள்வர் என்றும், வினைநீக்கம் பெற்று முத்திநிலை கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

பாவம், பழி, - துன்பம், இடர்கள் அடையா:
பாவமும் பழியும் இப்பிறப்பில் வரக்கூடியது துன்பம் இடர்கள் எல்லாம் முன்வினையின் காரணமாக நமக்கு நேரக்கூடியவையாகும்.  எந்தப் பிறவியில் வந்த தீமைகளாக இருப்பினும் அதற்கு ஒரே மருந்து சம்பந்தரின் பதிகங்களாகும்.  நம்மைப் பாவம் அடையாது என்பதை திருமுதுகுன்றம் பதிகத்தில்

           '……………………………………..இசையோடிவை பத்தும்
          பகரும் மடியவர்கட் கிடர் பாவம் அடையாவே”
   - முதல் திருமுறை பதிகம் - 12

என்று கூறுகிறார்.  இசையோடு கூடிய பாடல்களைப் பாடுபவர்களுக்கு பழியோடு பாவமும் இல்லை என்பதை திருவேட்களம் பதிகத்தில்

                     'பண்ணியல் பாடல் வல்லார்கள்
                     பழியொடு பாவம் இலரே”   
    - முதல் திருமுறை பதிகம் -39

என்றும் கூறுகிறார்.  பாவமும் பழியும் இல்லையானால் புகழும், புண்ணியமும் உள்ளவராய் வாழ்வார்கள் என்பது பெறப்படுகிறது.  நமக்கு வந்துள்ள பாவம் கெடவேண்டும் என்றால் பாடுவதுடன் ஆனந்தமாக ஆடவும் வேண்டும் என்பதை திருக்கச்சியேகம்பம் பதிகத்தில் விளக்குகிறார்.

பழி இல்லை:
திருஞானசம்பந்தர் இறை ஆற்றல் பெற்றும் இவ்வுலகில் வாழ்ந்தார்.  காரணம்  மனித இனம் மேம்படவும், பழிபோகவும,; அன்பவர்களின் வாழ்வு சிறக்கவும் ஆகும்.  இதைத் தம்முடைய குறிக்கோளாகக் கொண்டுள்ளார் என்பதை, வேத நெறி சிறந்து விளங்கவும், வைச நெறி மக்களிடையே பொலிந்து தோன்றவும், இறைவன் மீது பற்றுக் கொண்ட அன்பர்களின் வாழ்வு சிறக்கவும் பணிபுரிவதைக் குறிக்கோளாகக் கொண்டவர் சம்பந்தர் என்று ஆதிபாலசுந்தரன் குறிப்பிடுவார்.

தமக்கு வரும் பழியைப் போக்கிக் கொள்ள பண்ணால் இயன்ற  இந்த அருந்தமிழைப் பாடியும் ஆடியும் போற்றுங்கள் என்று திருவேள்விக்குடிப் பதிகத்தில் குறிப்பிடுகிறார்.  திருமுதுகுன்றம் பதிகத்தில்

                '…………………………………….. செந்தமிழ்
               பாடிய அவர் பழியிலரே”
      -  மூன்றாம் திருமுறை பதிகம் - 99

என்று போற்றுகிறார்.

துன்பம் இல்லை:
சம்பந்தர் உலகமக்களின் துயர்களைத் தீர்க்கும் பொருட்டே பதிகங்களை அருளிச் செய்துள்ளார்.  தம்முடைய ஆன்ம விடுதலையை அவர் எப்பொழுதும் விரும்பியதில்லை.  உலக மக்களுக்காகவே உணர்த்துகிறார்.  உங்கள் துயர் தீருமே என்றும் கூறுவதிலிருந்து உணரலாம்.  நமக்கு வரும் துயரங்களில் மிகவும் கொடியது பிறப்பு இறப்புகளாகும். இந்தத் துன்பத்தில் இருந்து மீளவேண்டும,;  சம்பந்தரின் பதிகங்களைப் பாடுவதன் மூலம் நமக்கு இந்நிலை கைகூடும்.  பாடல்களை சொல்பவர்க்கும் கேட்பவர்க்கும் துன்பம் இல்லை என்பதை திருவிடை மருதூர்ப்பதிகத்தில்

         '…………………………………….. பாடலிவைபத்தும்
     சொல்லுவார்க்கும்; கேட்பார்க்கும்; துயரமில்லை” 
    -இரண்டாம் திருமுறை பதிகம் - 56

என்று கூறுகிறார்.

பிணி இடர்கள் இல்லை:
ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் அநாதிகாலமாக நம் உயிரைப் பற்றி நிற்பவையாகும் அம்மலங்கள் அழிந்தால் தான் நமக்கு மேன்மை கிடைக்கும்.  இப்படிப்பட்ட மலங்களை பிணி என்று கூறலாம்.  மேலும் நம் உடலைத் துன்புறுத்தக் கூடிய நோய்களையும் பிணி எனலாம்.  திருக்கலிக்காமூர்ப் பதிகத்தைப் பாடினால் பிணி விலகும்.  இதனை சம்பந்தர்

          'வாழி யெம்மானை வணங்கியேத்த
          மருவா பிணிதானே”
       -  மூன்றாம் திருமுறை பதிகம் - 105

என்று குறிப்பிட்டுள்ளார்.  உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் செல்வம்தான் பற்றுக்கோடாக உள்ளது,  இதன் மூலம் இடர் நேருகிறது.  ஆனால் சம்பந்தரின் பதிகங்களைப் பற்றுக்கோடாகக் கொண்டால் இடர் நேராது, வந்த இடரும் கெட்டுவிடும் என்று கூறியுள்ளார்.

வினைக்கு ஈடாக எடுக்கப்பட்டது மனிதப்பிறவி, வினை ஒழிந்தால் உயிர் உடலில் நிலைத்து நிற்காது என்பது சைவசித்தார்ந்தத்தின் கொள்கையாகும்.  சம்பந்தரின் பாடல்களைப் பாடுவதன் மூலம் பழி, பாவம், துன்பம், வினை ஒழிந்து முத்தி நிலையைப் பெறமுடியும் என்பதை சம்பந்தரின் திருவாக்கிலிருந்தே உணரலாம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R