செவ்வியல் வரிசையில் மூவேந்தர்களின் வரலாற்றினை திறம்படவெளிக்காட்டுவது முத்தொள்ளாயிரம். சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூவேந்தர்களின் பெருமைகளை அகம் - புறம் வாயிலாகக் கூறுவதோடு ‘முடியுடை’ மன்னர்கள் எனும் சிறப்பினையும் இந்நூல் பெறுகிறது. புறத்திறட்டில் நூற்று எட்டு பாடல்களும் பழைய உரைகளில் இருபத்திரெண்டு பாடல்களும் சேர்த்து பனுவலாகப் படைக்கப்பட்டுள்ளன. இதன் ஆசிரியர் இன்னாரென்று அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. வெண்பா யாப்பில் அமைந்துள்ள பாக்கள் இனிமையும் கருத்துச்செறிவும் மிக்கனவாக மிளிர்கின்றன. இந்நூல சேரன், சோழன் , பாண்டியன் என்னும் மூவேந்தர்களின் கொடைச்சிறப்புகள், வெற்றி, புகழ், போர்த்திறம், உலாவருதல், அவனைக் கண்டு காதல் மகளிர் காதல் கொள்ளுதல், பேய்களின் செயல்பாடுகள், போர்க்களச் செய்கைகள், புலவர்களின் கற்பனை, சொல்லாச்சித் திறன் மக்கள்களின் வாழ்வியல் நிகழ்வுகள், வெறியாட்டு சடங்குகள் இவை போன்ற களங்களில் மூவேந்தர்களின் வாழ்வியலைத் தடம்பதித்துள்ளனர் புலவர்கள். அதனை திறம்பட வெளிக்காட்டுவதோடு புலவர்களின் மீவியல் புனைவுகளையும் எடுத்துக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகிறது.
1.மீவியல்புனைவு - விளக்கம்
மீவியல் என்பது சடங்குகள் வாயிலாக ஒருவர் ஒரு நிலையிலிருந்து வேறொரு நிலைக்கு மாறும் நிலைமாற்றத்தோடு (Transformation) தொடர்புடைய அனைத்து நிகழ்வுகளையும் ‘Limniality’ என்னும் கருத்தில் மீவியில் எனலாம். புனைவு என்பதனை கவிஞர்கள், புலவர்கள், படைப்பாளிகளின் கற்பனைத் திறன், எழுத்தாக்கம் என்று கூறலாம். “புனைவு என்பதற்கு அலங்காரம், அழகு, செழிப்பு, செய்மை, சுட்டுகை, இணைப்பு, கற்பனை என்று பொருளிடுகிறது. மதுரைத் தமிழ்ப்பேரகராதி பாகம் இரண்டு (ப.273).
மேலைநாட்டு அறிஞர் டர்னர் இயங்கியல் மானிடவியலை,
1. மீவியல் கருத்தாக்கம் - (Concept of liminality)
2. மீசமூகக் கருத்தாக்கம்- (Concept of community)
3. யாத்திரைக் கருத்தாக்கம்- (Concept Pilgrimagy)
4. விளிம்புக் கருத்தாக்கம்- (Concept maginality) (பக்தவத்சல பாரதி ப.210)
மீவியல் புனைவுகளின் வகைப்பாட்டினை,
1. அரசன்(மூவேந்தர்கள்) மீவியல் - தனக்குத்தானே புனைதல்.
2. புலவர் - மீசமூகம் - மக்கள், அரசன் (புனைதல்).
3. சடங்குகள், நம்பிக்கைகள் - யாத்திரை – (புலவர்கள், மக்கள் புனைதல்).
4. குடிமக்கள் - விளிம்பு புலவர்கள், பாணன் (புனைதல்)
இவ்வகைப்பாட்டிற்குள் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வாழ்வியலை உட்பொதிக்கும் போது டர்னரின் இயங்கியல் வெளிப்பாடு புனைவுகளாக வெளிப்பட்டுள்ளதை இனங்கானமுடிகிறது.
மீவியல் என்பது இரண்டு நிலைகளில் பண்பாட்டின் அமைப்பொழுங்கில் (System) செயலாற்றுகிறது. ஒவ்வொரு கூறுக்கும் ஒரு சங்கிலித் தொடர் உண்டு. இச்சங்கிலித் தொடரில் இரண்டு கூறுகள் மாறிமாறி இடம் பெறும். ஒன்று ‘இயல்பு’ வழிப்பட்டது. மற்றொன்று இயல்பிலிருந்து விலகிய ‘மீவியல்பு’ வழிப்பட்டது.
சடங்கு நிகழ்வுகளால் ஏற்படும் பல்வேறு இயல்புகளைச் சடங்கு நிகழ்வுகளுக்கு ஆட்படுவோர் தானே உணர்ந்து கொள்ளும் மன உணர்வு நிலை என்றும், சடங்கு நிகழ்வுகளால் சிந்தனை நிலையில தன்னியல்பாகத் தூண்டப்படும் உணர்வு நிலை (reflection) என்றும் கூறலாம் என்று பக்தவத்சல பாரதி பண்பாட்டு மானிடவியல் நூலில் ப.205 கூறுகிறார். இக்கருத்து புலவர்களின் சிந்தனையில் தன்னியல்பாக ஏற்பட்டதென்று கூறலாம். புலவர்கள் மீவியல் புனைவுகளை, இயல்நிலை மீவியல் நிலை இயல்நிலை என்ற வரிசையில் அல்லது அமைப்பு உலகம் எதிர்அமைப்பு உலகம் அமைப்பு உலகம் என்ற வரிசைக்குள்ளே வட்டமிட்டுச்சுழல்கிறதைச் சுட்டிச்செல்கிறார்கள். “சடங்கு நிலையில் மீவியலர்களின் நிலைப்பாடு இங்குமில்லை, அங்குமில்லை, இரண்டு மற்ற நிலையில் இயங்கக் கூடியது. (பண்பாட்டு மானிடவியல் ப.210) என்று டர்னர் கூறுகிறார்.
2.மீவியல் புனைவுகளாக இடம்பெறுபவை
மீவியல் , இயங்கியலோடு தொடர்புடையதாக இருந்தாலும் சூழல்களை மையமிட்டே இடங்களை அடையாளப்படுத்துகிறது. “குடியிருப்பை ஒட்டி அமைந்துள்ள தீய ஆவிகள் உறைந்துள்ள பாழுங்கிணறுகள், ஆற்றுப்பகுதிகள், ஏரிக்கரைகள், தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்ட இடங்கள், மரம், சுடுகாடு, பேய், பிசாசு, ஊருக்கு வெளியே சீற்றம் மிகுந்த தெய்வங்கள் உறைந்துள்ள இடங்கள் , போர்களங்கள் , வெறியாட்டு களங்கள் , பழியிடும் இடங்கள் , அரண்மனைகள் இது போன்ற பண்புகளால் சுட்டப்படும் பிறஇடங்கள் அனைத்தும் மீவியல் புனைவுகளுக்குறிய இடங்களாகும்.
3.புலவர்களின் மீவியல் புனைவுகள்
3.1.சேரன்
புலவர்கள் மன்னர்களின் வாழ்வியலை பெருமை சாற்றும் போது பல்வேறு வகையான புனைவுகளை மெச்சுக்கொட்டுகின்றனர். சேர மன்னன் பகைமன்னர்களின் மீது எறிந்த ஒளிமிக்க பகழி(அம்பு)ல் , சந்தனத்தின் மணமும் , மாமிசத்தின் நாற்றமும் வீசின. சந்தன மனம் வீசுவதில் வண்டுகளும், மாமிச மனம் வீசுவதில் நரியும் சென்று உண்டன. இதனை,
“ அரும் பவிழ்தார்க் கோதை யரசெறிந்த வெள்வேல்
பெரும்புலவுஞ் செஞ்சாந்தும் நாறிச்- சுரும்பொடு
வண்டாடும் பக்கமு முண்டு குறுநரி
கொண்டாடும் பக்கமு முண்டு” (முத்தொள்ளாயிரம். பாட.2).
இப்பாடலில் புலவர்களின் அதீதக் கற்பனை வெளிப்பட்டுள்ளன. புலவர்கள்ää சேரனின், வெற்றிச் சிறப்பினைக் கூறியுள்ளதோடு பெண்கள் சேரமன்னன் மீது கொண்டுள்ள கைக்கிளை (ஒருதலைக்காதல்) மிகுதியும் இடம்பெற்றுள்ளன. சேரன் உலாவினைக் காண விடாமல் அழகிய வீதிக் கதவினைத் தாய்மார்கள் ஒன்று சேர்ந்து அடைத்தனர். அதே நேரத்தில் இளம் பெண்கள் கோதை (சேரன்)யைக் கானும் ஆர்வத்தில் கதவுகளை திறந்தனர். இது ஆணின் மீதான பெண்களுக்கான மீவியல் என்று கூறலாம். களவு நிலையில் இயல்பாகவும் ஒருதலை பட்சத்தில் எதிர் நிலையாகவும் கற்பு நிலையில் மீண்டும் இயல்பு நிலைக்கு வருவது பண்பாட்டு மீவியல் நிலையாகும். கிராமப்புரங்களில் திருவிழா களியாட்டத்தின் போது சாமியாடுபவர் கோயிலின் முன்பு மற்றவர்களைப் போல கூட்டத்தோடு கூட்டாக நிற்பதைக் கானலாம். திடிரென, தன்னையறியாமலே எதிர்நிலை பெற்று யாரும் மறித்து நிறுத்த முடியாத அளவிற்கு ஆடத்தொடங்குவர். இது அவ்விடத்தில் அடிக்கும் ஒலியின் என்றும், அல்லது பெண்களின் குரவை ஒலி என்றும், கூட சிலர் கூறுவதைக் கேட்கமுடியும். இது சடங்குகளில் தன்னை மறந்து உட்பொதித்துக் கொள்ளும் மீவியலாகும்.
“தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத்
தேயத் திரிந்த குடுமியவே- ஆய்மலர்
வண்டுலாஅங் கண்ணி வயமான்றோர்க் கோதையைக்
கண்டுலா அம் வீதிக் கதவு” (முத். பா.10)
மற்றொரு பாடலில், சேரன், தலைவியின் கனவில் இரவுப்பொழுதில் வந்து அவளது உடலைத் தடவிச் செல்கிறான். அதனால் தலைவியின் உடல் தோற்றமானது பசலை படர்ந்து மெலிந்து துண்பத்திற்கு அளாகி, சேரமன்னன் மீது காதல் மோகம் ஏற்படுகிறது. ஆதனையறிந்த தலைவியன் தாய் இன்னாரென்று அறியாமல்ää வெறியாடும் களம் அமைத்து களத்தின் நடுவே ஆட்டின் இரத்தத்தையும், பொரியையும் தூவி, தண்ணீரில் நீராட்டி நீங்கிப் போ என்று கூறிகிறாள், அவ்வாறு செய்வதால் இயல்புநிலை திரும்பும் என்ற நிலைப்போக்கு தாயிடம் உள்ளேதே தவிர தலைவியிடம் இல்லை.
“ காராட் டுதிரந்தூ யன்னை களனழைத்து
நீராட்டி நீங்கென்றால் நீங்குமோ
னெஞ்சங் களங்கொண்ட நோய்” (முத்.பா.20)
புலவர்களின் புனைவுகளின் படி, பண்பாட்டில் தலைவி, சேரன் மீது காதல் கொள்வதை ஊரார் பழிதூற்றுகின்றனர். தாய் தலைவியை இடித்துரைப்பதும், சேரனைக் காணதபடி வாயில் கதவினை அடைப்பதும், சேரன் கனவில் வந்து உடலைத் தடவுவதும் ஒருதலைப் பட்சமாகவே இருக்கிறது. இதில் ஆண்(சேரன்) உயர்வுப்பொருளாகவும், பெண்(தலைவி) அடைவுப்பொருளாகவும் காட்டப்பட்டுள்ளன. கைக்கிளை நிலையில் யாராவது ஒருவர் தன் நிலையை உயர்த்தியோ அல்லது தகர்த்தியோ பேசவேண்டிய நிலை ஏற்படுகிறது.
3.2. விலங்குளின் மீவியல்
விலங்குகளிடத்திலும் மீவியல் கூறுகள் இருக்கின்றன. சேரனின் கருமையான கோபம் கொண்ட யானை, வானில் விளங்கும் முழுநிலவினை வெண்கொற்றக் குடையென நினைத்துத் தன் கையை நீட்டுகிறது. இது விலங்குகளின் மீதான ஆசைவெளிப்பாடாகும். இதனை,
“செங்கண்மாக் கோதை சினவெங் களியானை
திங்கள் மேல் நீட்டுந்தன் கை” (முத். பா.6)
3.2. சோழன்
சோழநாடு சோறுடைத்தது என்பர். உறையூரை தலைநகராகக் கொண்டு ஆச்சி செய்த சோழனுடைய நாட்டில் வீதிகளில் பூக்களை விற்பனை செய்யும் விற்பனையாளர் பூக்களை விலைகூறி விற்பனை செய்வர். விற்பனைக்காக வைத்துள்ள பூக்களின் காம்புகளை (புறஇதழ்களை) பல நிறத்தில் வீதிகளில் இறைந்து போடுவதால் அவை மறுநாள் காலையில் வானவில் தோன்றுவதைப் போன்று காட்சியளிக்கிறது.
“மாலை விலை பகர்வார் கிள்ளிக் களைந்தபூச்
சால மருவியதோர் தன்மைத்தால் - காலையே
விற்பயில் வானகம் போலும்.” (முத்.பா.28)
இப்பாடலில் புலவர்களின் மீவியல், வர்ணனை நிலையில் வெளிப்பட்டுள்ளன.
3.2.1. விலங்குகளின் மீவியல்
விலங்குகள் வலிமையுடையது என்றாலும், அதன் இனத்தினை காணும்போது தனக்குள்ளே அச்சம் கொள்ளும் முதலைää பாம்பு குட்டிகளை ஈன்றவுடன் தானே உண்டு விடும். பறவைகள் கோழி குஞ்சு பொறித்து சிலமாதங்களுக்கு பிறகு அருகில் தன்குஞ்சுகளை அன்டவிடாமல் துறத்தி விடும். ஏன் மக்கள் கூட மாற்றுக் குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகளை விட்டு விட்டு அடுத்து பிறந்த குழந்தைகளை தூக்குவது இயல்பு. இச்செயல்பாடு ஒவ்வொரு உயிரினத்தின் மன இயல்பாகும். சோழனின் ஆண் யானை கோட்டைச் சுவர்களை மோதி சிதைத்ததால், அதன் கொம்புகள் உடைபட்டன. பகைநாட்டு மன்னர்களின் மணிமுடிகளைக் காலால் உதைத்ததாலும் அதன் நகங்கள் ஒடிந்து அழகில்லாமல் இருப்பதைக் கண்டு பெண்யானையின் அருகில் செல்லாமல் வாயிலின் புறத்தே நின்று விட்டது. இதனை,
“கொடிமதில் பாய்ந்திற்ற கோடு மரசர்
முடியிடறிந்த தேய்ந்த நகமும் - பிடிமுன்பு
பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே
கல்லார்தோட் கிள்ளி களிறு” (முத். பா.34).
என்ற வரிகள் மூலம் விலங்குளின் நாண மிகுதியை வெளிப்படுத்தியுள்ளார் புலவர்.
3.2.2. இறப்பில் பேய்கள்
'
போர்களத்தில் இறந்த வீரர்களின் உடல்களில் குடலினை எடுத்து பேய்மகளிர்கள் மாலையாக அணிந்து கொண்டு போர்களத்தில் நடனமாடின. அதனை,
“அலங்கலம் பேய் மகளிராக வருமே” (முத். பா.36).
இத்தோடு, போர்களத்தில் போர்செய்து இறந்தவர்களின் உடைந்த தலைகளும், மூளையும், நிணமும், தசையும், எழும்பும், குடலும் எங்கு பார்த்தாலும் நிறைந்து காணப்பட்டன அதனை பெருகி ஓடும் இரத்தம் இழுத்துச் சென்றன.
“உடை தலையும் மூளையும் ஊன்தடியும் என்பும்
குடருங் கொடுங்குருதி யீர்ப்ப- மிடைபேய்
பெருநடஞ்செய் பெற்றித்தே கொற்றப்போர்க் கிள்ளி”(முத்.பா.37).
என்று புலவர்கள் கூறியுள்ளனர். மேலும் , இறந்தவர்களின் உடல் உறுப்புகளை விளக்கு எரிக்;கவும் பயன்படுத்தின பேய்கள். மண்டை ஓட்டினை அகலாகவும் மூளையினை நெய்யாகவும், மன்னர்களின் திரட்சியான குடல்களைத் திரியாகவும், கொண்டு பேய்கள்ää குடல்களை எடுத்து அகலில் இட்டு விளக்கு எரிக்கப் பயன்படுத்தின என்பதை,
“முடித்தலை வெள்ளோட்டு மூளைநெய்யாகத்
தடித்த குடர்திரியா மாட்டி- எடுத்தெடுத்துப்
பேஎய் விளக்கயரும் பெற்றித்தே” (முத்.பா.38).
இப்பாடல் அதீத மீவியல் புனைவாகக் கொள்ள நேர்கிறது. கிராமப்புரங்களில் வீடுகளில் பிறந்து இறக்கும் தலைச்சான் பிள்ளை (குழந்தை)யை சுடுகாட்டிற்கு கொண்டு சென்று புதைக்க மாட்டார்கள். வீட்டின் முன்பு வாயில் பகுதியிலோ அல்லது நடு வீட்டிற்கு உள்ளேயே வைத்து பிதைத்து விடுவார்கள். ஏனென்றால் குழி தோண்டி சுடுகாட்டில் பிதைக்கும் போது அக்குழந்தையை பேய்கள் தோன்டி எடுத்து உண்டு விடும் என்று மக்களிடத்தில நம்பிக்கையாக இருப்பதோடு, தலைச்சான் குழந்தையை வீட்டில் பிதைக்கும் போது மீண்டும் குழந்தை பிறக்கும் என்ற மீவியல் நம்பிக்கை மக்களிடத்தில் நிலவி வருகிறது.
3.3. பாண்டியர்
3.3.1. ஒப்புமை புனைவு
செம்மை நிறமான கண்களைக் கொண்ட திருமாலின் முடியின்மேல் தேர் வீரனாகிய விசயன் சூட்டிய பூக்களைப் பசுமையான கண்களை உடைய வெள்ளைக் காளையை வாகனமாகக் கொண்ட சிவபெருமானின் திருவடிகளின் கீழ் கண்டது போலவும், முடிசூடிய மன்னர்கள் தங்கள் தலையில் சூடியிருக்கின்ற பூக்கள் மாறனின் காலடிகளின் கீழ் காணப்படுவதாக ஒப்புமைப்படுத்தப்பட்டுள்ளது.
“செங்க ணெடியான்மேற் றேர்விசைய னேற்றியபூப்
பைங்கண் வெள்ளேற்றான்பாற் கண்டற்றால்- எங்கு
முடிமன்னர் சூடியபூ மொய்ம்ம்மலர்த்தார் மாறன்
அடிமிசையே காணப் படும்” (முத்.பா.71)
பாண்டிய மன்னனுடைய உயர்ந்த மாட மாளிகைகளில் நிறைந்து காணப்படும் மதுரை நகரத் தெருக்கள் தோறும், இரவுப் பொழுதில பெண்கள் மாளிகையின் மேல் மாடத்தில் தங்கி கணவர்களோடு ஊடல் கொள்வது இயல்புநிலை, ஊடல் கொள்ளும் போது உதிர்த்து விட்ட குளுமையான சந்தனமும் குங்குமமும் நிறைந்து அவை சேறாகி வீதிகளில் நடப்பவர்களை நடக்க விடாமல் தடுமாறச் செய்வது புலவர்களின் புனைவுகளாகும். இதனை,
“ மைந்தரோ சூடி மகளிர் தமிர்ந்திட்ட
குங்கும ஈர்ஞ்சாந்தின் சேறிடுக்கி- எங்குந்
தடுமாற லாகிய தன்மைத்தே தென்னன்
நெடுமாடக் கூட லகம்” (முத்.பா.77)
தேவர்கள் தங்களின் பாதங்களைப் பூமியில் மிதிக்காமல் தூக்கிக் கொண்டு திரிகின்றனர். அவர்கள் பூமியில் கால் வைத்தால் திறை கொடுக்க வேண்டும் என்ற மன்னர்களின் கட்டளையும் வாழ்வின் தொன்மங்களாகம்.
“ ஏம மணிப்பு ணிமையார் திருந்தடி
பூமி மிதியாப் பொருள்” (முத்.பா. 78).
இப்பாடல்களில் புலவர்களின் தொன்ம புனைவுகள் வெளிப்பட்டுள்ளன. மற்றொரு பாடலில் போர்களத்தில் குதிரை மோதியதால் யானையின் மேலிருந்த மன்னர்கள் கீழே விழுந்தனர். அவர்களது தலையிலிருந்த மணிமுடிகளை காலால் உதைத்ததால் குதிரைகளின் கால் குளம்புகள் பொன்னை உரைத்த கல்லைப் போல ஆகின என்பதை,
“ புரைசை யறநிமிர்ந்து பொங்கா- அரசர்தம்
முன்னா வீழ்ந்த முடிக ளுதைத்மாப்
பொன்னுரைகற் போன்ற குளம்பு” (முத்.பா.81)
என்ற பாடல்கள் மூலம் புலவர்கள் குதிரைகளின் மீது கொண்ட உயர்வு நிலையை எடுத்துக் கூறுவதைக் காணலாம்.
3.3.2. இறப்பில் மீவியல்
பாண்டிய மன்னன் செய்த போரில் யானைகள் பலவும் இறந்து கிடந்தன. அதே போல் பகைநாட்டு மன்னர்களும் இறந்ததைக் கண்டு அவர்களின் மனைவியர்கள் தீயில் மூழ்கினார்கள். ஆதனைக் கண்ட பாண்டிய மன்னன் தன்னுடைய ஆடையினால் கண்களை மூடிக்கொண்டான்.
போர்களத்தில் இறந்த யானைகளைக் கண்டு பெண்யானைகள் கலங்கி நின்றன. மறுமுனையில் பாண்;டியனின் யானைகள் துண்பம் தாங்காமல் கண்களை மூடிக்கொண்டன. இறப்பு நிகழ்வுகளிலும் மனம் பரிதவிக்க கூடிய நிலைகள் ஏற்படுகிறது. சோகம் சார்ந்த மீவியல் நிலைப்பாடாகும் இதனை,
“ஏனைய பெண்டி ரெரிமூழ்கக் கண்டுதன்
தானையாற் கண்புதைத்தான் தார்வழுதி- யானையெலாம்
புல்லார் பிடிபுலம்பத் தாங்கண் புதைத்தவே” (முத்.பா.87).
அரசுருவாக்கத்pல் தமிழர்களின் வாழ்வு நிலையானது அழிவையை முதன்மையாகக் கொண்டு திகழ்வதை இனங்கான முடிகிறது.
4.முடிவுகள்
நாடோடி வாழ்க்கை வாழ்ந்த தமிழன் வளர்ச்சியினால்ää இனக்குழு வாழ்க்கைää சமூகம், சமுதாயம், என்று வளர்ச்சியுற்று அரசுரு வாழ்க்கையை வாழ முற்பட்டதோடு அக்காலச் சூழல்களில் மன்னர்கள் மக்களுக்கு, புலவர்களுக்கு எத்தகைய வாழ்வாதரத்தை வழங்கினார்கள் என்பதை முத்தொள்ளாயிரம் தெளிவுபடுத்துகிறது. இதில் மன்னர்களுக்காக புலவர்கள்ää தங்களது குடும்ப வாழ்கையை, தெரிதர தொடர்ந்து நடத்துவதற்காகவும், தங்களது அறிவு புலமையை வெளிக்காட்டுவதற்காகவும் அவர்களிடம் தங்களது சொல்லாச்சி திறன், கற்பனை ஆளுமை, அனைத்தையும் வெளிக்காட்டியதையும் இந்நூலின் வாயிலாக விளங்கிக் கொள்ள முடிந்தது.
5.பார்வை நூல்கள்
1. முத்தொள்ளாயிரம்(மூலமும் உரையும்) – பாவை வெளியீடு
2. பண்பாட்டு மானிடவியல் - பக்தவத்சல பாரதி
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.