DNA என்பது Deoxyribonucleic Acid என்பதன் சுருக்கமாகும்(;(Abbreviation).). இது மனிதனது மரபணுவினை (DNA) உயிரியல் நோக்கில் கண்ணடறியும் விஞ்ஞான ரீதியான ஒரு ஆய்வின் முடியாகும். M130 என்பது ஒரு மனிதனதோ அன்றி ஒரு இனக்குழுமத்தினதோ அன்றி பல இனக்குழுமங்களைத் தொடர்பு படுத்திய மரபணுவுக்கு இடப்பட்ட விஞ்ஞானரீதியான குறியீடாகும். மேலே குறிப்பிட்ட DNA -M130 என்பது 70,000 ஆண்டுகளுக்கு முந்தி வாழ்ந்த உலகின் நவீன மூத்த குடியாகிய ஒரு பகுதி மனிதனினதோ அன்றி ஒரு மக்கள் கூட்டத்தினதோ பொது மரபணு என்று தற்போது அறியப்பட்டுள்ளது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் உயிரியில் விஞ்ஞான பீடத்தின் தலைவரான பேராசிரியர் ஆர்.எம்.பச்சப்பன் அவர்கள் உலகளாவிய அமைப்பான தேசிய புவியியல் (National Geographic) என்ற அமைப்பின் சார்பாக மனித மரபணுவியல் (Genology) பற்றிய ஆய்வினை இந்தியாவில் செய்வதற்காக நியமிக்கப்பட்டு 2007ஆம் ஆண்டில் தனது ஆய்வினை ஆரம்பித்தார். இவ்வாய்வின் நோக்கமானது நவீன மனித இனம் எங்கிருந்து தோற்றம் பெற்றது என்றும் அந்த மனித இனங்களின் பொதுவான தொடர்புகள் என்ன என்பதனைக் கண்டறிய டி.என்.ஏ பகுப்பாய்வு செய்து மனித இனத்தின் தோற்றம் அதன் பரம்பல் பற்றி நிறுவுவதாகும். இவ்வாறாக அவரும் அவரது குழுவினரும் செய்த ஆய்வுகளில் பல வியத்தகு முடிவுகள் வெளிப்பட்டன.
பேராசிரியர் பச்சப்பனின் ஆய்வு மதுரையிலும், ஆதித் திராவிடர்கள் வாழும் மலைப்பகுதிகளிலும் வடஇந்தியாவின் குஜராத், ஒரிசா, ஹிமாசல்பிரதேஷ், ஜம்முகாஷ்மீர், கார்கில் ஆகிய பகுதிகளிலும் டி.என்.ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுகூட சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது ஒரு பொதுவான மரபணுவே எங்கும் காணப்பட்டது. இம்மரபணுவை எம்-130 என்னும் பெயரிடப்பட்ட மரபணு என்ற முடிவு பெறப்பட்டது. இதில் குறிப்பாக மதுரையில் உள்ள குக்கிராமமான “ஜோதிமாணிகம்” என்னும் கிராமத்தில் பெறப்பட்ட டி.என.;ஏ மாதிரிகள் 700 பேரிடம் பெறப்பட்டு அதில் நடைபெற்ற ஆய்வு முடிபுகளும் எம்-130 என்ற ஆய்வு முடிவினையே காட்டடியது. இங்கு முதன் முதலில் விருமாண்டி ஆண்டித்தேவர் என்னும் 30 வயதுடைய முன்னணி கணணி நிறுவன நிர்வாகியிடம் பெறப்பட்ட முடிவின் பிரகாரம் அவரிடம் பெறப்பட்ட டீ.என்.ஏ மாதிரி 70,000 வருடங்களுக்கு முந்திய ஆபிரிக்க மனிதனின் டி.என்.ஏ மாதிரியுடனும் இன்றும் வடமேற்கு அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் பல வகையான ஆதிக்குடிகளிலும் பெறப்பட்ட டி.என்.ஏ மாதிரிகள் யாவும் எம்-130 என்ற முடிவினையே கொடுத்தன. இந்த ஆய்வு முடிவுகளைப்பெற 5 ஆண்டுகள் எடுத்ததாக பேரசிரியர் பச்சப்பன் குறிப்பிடுகின்றார். ஆகவே இதிலிருந்து அறிப்படுவது இந்த மூன்று இனக்குழுமங்களும் ஒரு மனித இனத்தின் வேர்கள் என்ற முடிவிற்கு வரமுடிகின்றது. இந்த ஜோதிமாணிக்கம் கிராமத்து மக்களே இந்தியாவின் ஆதிக்குடிகளாகும். இவ்வாறாகவே மலைவாழ் ஆதித்திராவிடர்களும் இவ்வாறான ஆதிக் குடிகளேயாவர். அத்தோடு திருமலை கள்வர் இனம், யாதவர், சௌராஷ்டர் ஆகியோரிடை 5மூ வீதமானவர்களிடம் இவ்வாய்வினை மேற்கொண்டபோதும் டி.என.ஏ எம்130 என்ற முடிவே பெறப்பட்டுள்ளது. ஆனால் ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பெறப்பட்ட முடிவுகளின் பிரகாரம் அவர்களது டி.என்.ஏ எம்60 என்றும் அறிப்பட்டு உள்ளது. இது வேறொரு இனக்குழுமத்திலிருந்து பெறப்பட்டதாக இருக்கவேண்டும். 160,000 ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் தோற்றம் பெற்றிருக்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் முடிவாகும். இக்காலப்பகுதியில் பல இனங்கள் ஒன்றாகக் கலக்கத் தொடங்கியதனால் இவ்வாறான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
பேராசிரியர் பச்சப்பனால் பாதுகாக்கப்படும் டி.என்.ஏ மாதிரிகள் மதுரை காமராசர் பல்கலைக்கழக உயிரியல் ஆய்வு கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதனை ஆழ் உறை நிலையில் -20˚உ வெப்ப நிலையில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றது. இந்தியாவின் முதன் மனிதனின் வாரிசான விருமாண்டியின் டி.என்.ஏ மாதிரியும் இங்கேயே பாதுகாக்கப்படுகின்றது. தமிழ்நாடடின் ஏனைய பகுதிகளில் மட்டுமல்ல ஏனைய இந்திய பகுதிகளிலும் இவ்வாறான ஆய்வு செய்யப்படின் இவ்வாறான ஒரே வகையான முடிவனையே காணமுடியும் என்பது திண்ணமாகும். இந்தியா முழுவதும் இந்த இனமே ஆதிக்குடிகளாவர். பேராசிரியர் பச்சப்பனின் முடிவின் பிரகாரம் இவர்கள் ஆபிரிக்காவிலிருந்து நகர்ந்து வந்து குடியேறியவர்கள் என்று குறிப்பிடுகின்றார்;. இவர் மேற்குலக ஆய்வாளர்களின் முடிவின்படியே இப்படிக் கூறுகின்றார்.
பொதுவாக தென் ஆசியமக்கள் நிக்குறொய்ட் இனத்திலிருந்து தோன்றியவர்களாகவே மானிடவியல் விஞ்ஞானம் குறிப்பிடுகிறது. இவர்கள் எவ்வாறு நிலத் தொடர்புகள் அற்ற இந்தியா அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு பரவினார்கள் என்பது ஆழ்ந்து நோக்கத்தக்கது. இவ்வாறு நோக்கும் போது புவியியல் அறிஞர் வெக்னர் (Wegner) அவர்களது கண்டநகர்வுக் கருதுகோளும், லெமூறியாக் கண்ட கருதுகோளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். 70,000 வருடங்களுக்கு முன்பு நீண்ட தூர கடல்ப் பிரயாணம் என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாததாகும். ஆகவே இந்த குடியேறிகள் நிலத் தொடர்புகள் உள்ள பகுதிகளாலேயே உணவு தேடி அல்லது ஆபிரிக்காவில் வரட்சி அல்லது பஞ்சம் ஏற்பட்டதனால் செங்கடல் கடந்து மத்திய கிழக்கூடாக இந்தியாவிற்கு நடந்து வந்திருக்க வேண்டும். ஆனால் அவுஸ்திரேலியாவிற்கு எவ்வண்ணம் கடல் கடந்து சென்றிருக்க முடியும்.
இவ்விடத்தில் தான் லெமூறியாக் கண்டம் ஆசியா, இந்தியா, மடகஸ்கார், அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் ஒன்று சேர்ந்து இருந்து, ஊழிக்காலத்தில் ஏற்பட்ட எதிர் மணிக்கூட்டுத் திசையில் ஏற்பட்ட கண்ட நகர்வினாலும் அதனால் ஏற்பட்ட ஆழிப்பேரலையாலும் மேற்குறிப்பிட்ட நாடுகள் பிரிந்து சென்றது என்பதுவே லெமூறியா கண்ட கருதுகோளாகும். இதன் காரணமாக இங்கிருந்த மக்களும் அழிவுற்றவர்கள் போக எஞ்சிய மக்கள் அந்தந்த நாடுகளிலேயே எஞ்சியுள்ளவர்களாவர். அத்தோடு ஒன்றாக இருந்த காலத்தில் லெமூறியாவின் மத்திய பகுதியாகி முதல் சங்கம் வளர்த்த கபடமபுரம், தொன்மதுரை, பஃகுறுளியாறு, குமரிஆறு, கன்னியாறு, மேருமலை ஆகிய இருந்த லெமூறியாவில் இருந்து உணவு தேடி தெற்கு நோக்கி கால்நடையாக சென்றவர்களே வடமேற்கு அவுஸ்திரேலியாவில் குடியேறிய திராவிடர்களாகக் கருதப்படுகின்றனர். இதன் காரணமாகவே மதுரையில் பெறப்பட்ட டி.என்.ஏ மாதிரிகளும் அவுஸ்திரேலியாவில் பெறப்பட்ட டி.என்.ஏ ஆகியன எம்130 என்ற ஒரே வகையினச் சார்ந்தாக உள்ளது என்பது இதற்கு உறுதி சேர்க்கின்றது. அவுஸ்திரேலிய ஆதிக்குடிகள் திராவிடர்களின் வாரிசுகள் என தேவநேயப் பாவாணர் அவர்களும் முனைவர் அரேசந்திரன் அவர்கள் கூறிய கருத்துக்கள் இங்கு ஈண்டு நோக்ற்பாலது.
இது மதுரை ஜோதிமாணிகம் என்ற ஊரில் வாழும் எம்.130 என்ற டி.என்.ஏ என்ற மரபணுவுடன் வாழும் 70,000 ஆண்டுகளுக்கு முந்திய நவீன மனித இனத்தின் (Modern Human Race) வாரிசான விருமாண்டி ஆண்டித்தேவர்.
இது மேற்படி ஆய்வுகளைச் செய்துவரும் மதுரை காமராசர் பல்கலைக்கழக மரபணுவியல் பேராசிரியர் ஆர்.எம்.பச்சப்பன் அவர்கள். இவ்வேளையில் கடந்த 2010 யூன் மாதம்; கோயம்புத்தூரில் நடைபெற்ற செம்மொழி மகாநாட்டில் என்னால் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையின் ஒரு பகுதியினை இங்கு மீட்டுப் பார்ப்பதும் இக்கட்டுரைக்கு மேலும் உதவியாகவிருபக்கும்.
“அவுஸ்ரேலியாவின் வடமேற்குப் பகுதியில் தற்போதும் வாழும் கரிறியா என்னும் ஆதிக்குடிகள் ஆதித் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியும் என எண்ணத் தோன்றுகின்றது. இதற்கு அவர்களது உருவத் தோற்றப்பாடு; ஆதாரமாயுள்ளது. அத்தோடு அவர்களது மொழியிலும் திராவிட மொழியின் சாயலும் இலக்கண, ஒலியன் ஒற்றுமைகள் உள்ளதாக கு.அரசேந்திரன் குறிப்பிடுகின்றார். ஆதாரம்;: தமிழ்க்கப்பல் பக்3. குமரிக் கண்ட நிலத்தொடர்பு இருந்த காலத்திலேயே ஆதித் திராவிடர் குமரிக் கண்டத்திலிருந்து புலம் பெயர்ந்து உணவு தேடி வேட்டையாடும் நோக்கோடு வேறொறு பிரதேசத்திற்குச் சென்றுள்ளார்கள"
“மேலும் அங்குள்ள சில ஆதிக்குடிகளின் சில இனக்குழுமங்களின் பெயர்கள் வியப்புத்தருவதாகவும் மேலும் ஆராயப்பட வேண்டியதனையும் வலியுறுத்துகின்றது. அவையாவான குவினி இது இலங்கையின் இயக்கர் இனப்பெண்ணான குவேனியின் பெயரை ஒத்திருக்கின்றது. மேலும் அவுஸ்திரேலிய ஆதிக் குடிகளின் சில குழுக்களின் பெயர்களான நகர, நன, நந்தா, நங்கா, நகரியா, நகுரி, நகண்டி, நகம்பா என்ற பெயர்களை நோக்கும போது நாகர் என்ற பெயருடன் தொடர்பட்டது போன்றும் ஏதொவொரு அறிந்த பெயரான தமிழ்ப் பெயர்கள் போலவும் இருக்கின்றது”. – ஆதாரம்: விக்கிப்பிடியா தேடுதளம். இக்காரணத்தினாலும்;; லெமூறியாவில் தமிழன் வாழ்ந்தான் என்பதற்குரிய ஒரு ஆதாரமாகவும் கொள்ள முடியும். குமரிக்கண்டத்தில் வாழ்ந்தவனின் இறுதிக் குடிகளே அதன் எஞ்சிய பகுதிகளான இலங்கையிலும் இந்தியாவிலும் வடமேற்கு அவுஸ்ரேலியாவிலும், மடகஸ்காரிலும்; 70,000 ஆண்டுகளுக்கு முந்திய ஆதிக்குடிகளாவர்.”
“அவுஸ்ரேலியாவின் சில ஆதி இனக்குழுமங்களின் மரபணுக்கூறுகள் (டீ.என்.ஏ) ஐ.நா சபையினால் ஆராயப்பட்டுள்ளன. திரவிட இனத்தொடர்பு இருப்பதாக நாம் கருதும் இனங்களின் மரபணுக்கள் பரிசோதிக்கப்பட்டால் பல உண்மைகள் வெளிவரும். இதற்கு தமிழ்நாட்டு அரசு நிதியொதுக்கி இச்செயற்பாட்டினை ஆரம்பித்து வைக்கவேண்டும் என பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
மேற்குறிப்பிட்ட கட்டுரையின் பகுதி பேராசிரியர் பச்சப்பனின் முடிவு அறியப்பட முன்னரே எழுதப்பட்டது. ஆனால் அவரது முடிவின் பிரகாரம் அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளது மரபணுவும் தமிழ்நாட்டில் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளின்படியும் எம் 130 என்னும் மரபணு இவர்களிடையே தொடர்பை ஏற்படுத்துவதனால் இவர்கள் லெமூறியாவில் 70000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழனின் மூதாதையர் என்று உறுதிபடக்கூற முடியும்.
கீழே காணப்படும் வடமேற்கு அவுஸ்திரேலியாவில் வாழும் கரிறியா இனக்குழுமத்தினைச் சார்ந்த பழங்குடி மக்கள். இவர்களது தோற்றப்பாடு திராவிடனின் உருவ ஒற்றுமையோடு இருப்பதனை நோக்கவும்.
மேற்கு அவுஸ்ரேலியாவில் வாழும் திராவிட மூதாதையர்களின் ஆதிக்குடிகளின் படம்.
ஹோமோ சேப்பியன் (Homo Sapiens) எனப்படும் ஆதி மனிதனின் எலும்பு இலங்கையில கண்டுபிடிப்பு ஹோமோ சேப்பியன் என்பது நவீன மனிதன் தோன்றிய காலத்தைய மனிதனையே ர்ழஅழ ளுயிநைn எனப்படும் ஆங்கிலச் சொல்லைக் கொண்டு அழைப்பர். றஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவன செய்தியின் பிரகாரம் ஸ்ரீ லங்கா புதைபொருள் ஆய்வுத் திணைக்களத்தின் பத்திரிகை, இணையத்தள செய்திகளின்; பிரகாரம் 37,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆதி மனிதனின் எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இது வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட மனிதனது எலும்புக்கூடாக இருக்கலாம் என்றும். இவ்வாறான ஒரு மிகத் தொன்மையான ஒரு எலும்புக்கூடு கண்டிருப்பது இதுவே முதல் முறை என்றவாறாகவும் தெரிவித்துள்ளது.
இதுபற்றிய செய்திகள் மேலும் பல இணையத்தளங்களிலும் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த எலும்புக்கூடானது. இது பற்றி மேலும் ஸ்ரீலங்கா புதைபொருள் ஆய்வுத் திணைக்கள் பணிப்பாளர் நாயகம் திரு சேனரத் திசநாயக்கா தெரிவிக்கையில் கொழும்பிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பலாங்கொடையின்; புலத்சிங்கலவில் 1900 வருடங்களுக்கு முன்பு சீனத்துறவியான பா ஹெயின் வாழ்ந்த இடமான பா ஹெயின் (Fa Hein குகையில் செய்யப்பட்ட அகழ்வாரய்சியில் இவ்வாறான ஒரு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து மனிதனின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது என்றும். அதன் ஒரு மாதிரியினை காபன் டேற்ரிங் (Carbon Dating ) என்ற ஆய்வு முறைக்கு அமெரிக்காவிற்கு அனுப்பி ஆய்வு செய்த போது அது 37,000 வருடத்திற்கு முந்திய மனிதனது எலும்புக்கூடு என்ற முடிவினைத் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த எலும்புக்கூடு பற்றி மேலதிக ஆய்வு செய்ய பிரித்தானிய ஆய்வாளர்களை அழைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இது பற்றிய தொடர் ஆய்வினை நடாத்த அவுஸ்ரேலியா, நியுசிலாந்து ஆகிய நாடுகள் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் இலங்கை அரசாங்கம் இன்னும் இதற்குச் சாதகமான பதிலைக் கொடுக்கவில்லை.
புலத்சிங்களவில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட எலும்புக்கூறு.
எலும்புக் கூட்டிமேல் கற்பாறையே வளர்ச்சியடைந்துள்ளதனால் அதன் தொன்மையினை ஓரளவு ஊகிக்க முடியும். மேற்படி செய்திக்கும் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் கட்டுரைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. கடலில் ஆழ்ந்துபோன தமிழனின் ஆதிக்குடிகள் வாழ்ந்து மறைந்து போன லெமூறியாக் கண்டத்தின் உறைவிடமும் இந்தியா, இலங்கை, அவுஸ்ரேலியா, மடகஸ்கார் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு பாரிய நிலத்தொடர்புள்ள ஒரு கண்டமாகவே இருந்தது என்றும் அங்கு வாழ்ந்த மூதாதையர்களே இலங்கை, இந்தியா, வடமேற்கு அவுஸ்ரேலியா ஆகிய பகுதிகளில் வாழ்வதாககும் என்று குமரிக்கண்டம் பற்றிய கருதுகோள்களை முதலில் வெளியிட்ட மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்கள் தனது நூல்களில் எழுதியுள்ளார். இந்தத் தமிழர்களே உலகின் ஹோமோ சேப்பியன்கள் என அழைக்கப்படும் ஆதிக்குடிகள் என்று பல ஆதாரங்களைக் காட்டி எழுதியள்ளார். அவரைப் பின்பற்றி தனது ஆய்வுக் கருத்துக்களை வெளியிட்டுள்ள முனைவர் கு.அரசேந்திரன் அவர்களும் இதே கருத்தினையே வலியுறுத்தியள்ளார். எனது முந்திய கட்டுரைகளில் இதுபற்றி விவாகத் தெரிவித்து வந்துள்ளேன்.
காமராசர் பல்கலைக் கழகத்தில் உலக தேசிய புவியியல் நிறுவனத்தின் உதவியோடு நடைபெற்ற மரபணு பரிசோதனையில் கண்டு பிடிக்கப்பட்ட டி.என்.ஏ பரிசோதனையின் முடிவினை மேலே பார்த்தீர்கள். அந்த முடிவின் பிரகாரம் தமிழ் நாட்டில் 70,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுக்கு முந்திய அதுவும் ஸ்ரீலங்காவில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்பின் காலத்திற்கு 30,000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் வாரிசுகளின் மரபணு மாதிரிகள் பெறப்பட்டு அது நிரூபணமாகியள்ளது. அதன் பிரகாரம் 70,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வரலாற்றுக்கு முற்பட்ட மனிதனாகிய தமிழனே லெமூரியாவின் ஆதிக்குடியாக வாழ்ந்துள்ளான் என்பதனை மதுரை ஜோதிமாணிகம் கிராமத்தில் வாழும் விருமாண்டி மற்றும் அந்த ஊரவர்களில் செய்த ஆய்வுகளின் பிரகாரம் பெறப்பட்ட மரபணு முடிவுகள் மூலம் நிரூபணமாகின்றது. இதனை அடிப்படையாக வைத்து தற்போது புலத்சிங்கலவில் கிடைத்துள்ள எலும்பினது டி.என்.ஏ யினை ஆய்வு செய்தால் ஆ130 டி.என்.ஏக்கும் புலத்சிங்கல எலும்புக்கூட்டு டி.என்.ஏக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதனை அறிய முடியும். ஒரே நிலப்பகுதியாக இருந்த இலங்கையில் வாழ்ந்தவர்களும் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்த தமிழர்காக இருக்கும் என்றே திடமாக நம்பலாம். அத்தகைய செயற்பாட்டை இந்திய அரசு மூலமாக பேராசிரியர் பச்சப்பன் செய்வாராயின் லெமூரியாவின் ஆதிக்குடிகள் யார்? உலகின் முதல் மாந்தன் யார்? என்ற வினாக்களுக்கு விடை காணமுடியும். இதனைச் செய்வதற்கு தமிழ்நாட்டு மாநில அரசு இதுவரை சிந்தித்துள்ளதா? அதனைச் சாத்தியமாக்க இலங்கை அரசு அனுமதி வழங்குமா? இது ஒரு அரசியல் சார்ந்த விடையமாகவே இலங்கையரசால் நோக்கப்படும் என்பதில் எதுவித ஐயப்பாடும் இல்லை. அவ்வாறாகக் கோரிக்கை விடும் பட்சத்தில் அதன் அனுமதிக்குரிய சாத்தியக் கூறுகளை நேரடியாக அடைய முடியாதுவிட்டாலும் அதனை ஆய்வு செய்யும் நாடுகளின் ஆய்வு முடிவுகளிலிருந்து பெறமுடியும்.
உசாதுணை
1.1. http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/9351a87c680f7d76
2.http://zeitlerweb.com/about-2/dna-shows-70000-year-link/
3. http://archaeologynewsnetwork.blogspot.ca/2012/06/sri-lankan-skeleton-is-37000-years-old.html
4. பாவாணரின் தமிழ்க் களஞ்சியம தொகுதி;.
5. தமிழ்க் கப்பல் -பேராசிரியர் கு.அரசேந்திரன்
6. விஜய் தெலைக்காட்சி 14.10.2011ல் ஒளிபரப்பப்பட்ட “நடந்தது என்ன” நிகழ்ச்சி
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.