சமுதாயம்,, சமூகம் - விளக்கம்
சமுதாயம்,, சமூகம் என்ற இரு சொற்களின் பொருள்கள் ஒன்றுபட்டதாக கருதப்பட்டாலும்,, கலைக்களஞ்சியத்தின் மூலம் இவை இரண்டிற்குமுள்ள நுட்பமான வேறுபாட்டைக் காணமுடிகிறது.
“ஒரு சிறிய நிலப்பரப்பில் ஒரு பொதுவாழ்க்கை வழியைப் பின்பற்றிக் கூட்டாக வாழும் மக்கள் தொகுதி சமுதாயம் (ஊழஅஅரnவைல) எனப்படும். இது மக்கள் ஒன்று கூடி ஒன்றுபட்ட எண்ணத்துடன் ஓரிடத்தில் வாழும் அமைப்பைக் குறிக்கும்.”1 “சமூகம் என்பது குறிப்பிட்ட நிலப்பகுதியில் நீண்ட காலமாக ஒன்று சேர்ந்து வாழ்வதற்காக மக்கள் கூட்டம் ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் அமைப்பாகும்.”2 தம்மைப் பேணிப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஒன்றாக இணைந்துள்ள ஒரு மானிடக்குழு சமூகம் எனப்படுகிறது. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி சமுதாயம் என்பதற்கு ‘மக்கள் திரள்’ என்றும் சமூகம் என்பதற்கு ‘திரள்’ என்றும் பொருள் விளக்கம் தந்துள்ளது. இதே பொருளில் சங்க காலத்தில் ‘பைஞ்ஞிலம்’இ ‘மன்பதை’ என்னும் சொற்கள் வழங்கப்பட்டுள்ளன. சமூகவியல் என்பது சமூகத்தை அதாவது மக்கள் உறவையும் அதன் விளைவுகளையும் பற்றிய அறிவியல் ஆகும். இது சமூகத்தின் தோற்றம் வளர்ச்சி,, அமைப்பு,, செயல்கள் ஆகியவற்றிற்குத் தக்க விளக்கம் காண முற்படுகிறது.
காதல் திருமணத்தை எதிர்க்கும் சமுதாயம்
இசுலாமியச் சமுதாயம் வேற்று மதத்தினரோடு காதல் திருமணம் செய்வதை விரும்புவதில்லை என்பதை ‘மல்லிகை மொட்டுகள்’ சிறுகதை வாயிலாக சமுதாயத்தின் நிலைப்பாட்டை ஆசிரியர் அழகாக எடுத்துரைக்கின்றார்.
“பழிகாரி... மானத்தை வாங்கிட்டாளே…! தலையில் துண்டைப் போட்டுகிட்டு எங்கேயாச்சும் கண்காணாத பிரதேசம் போக வேண்டியதுதான்” நடுஹாலில் பிதற்றிக் கொண்டிருந்தார் அத்தா!”3 என்ற கூற்றும்
“இப்படி வேற்று மதத்துக் காரனோட ஓடிப்போனதோட தன்னைத்தேட வேணாம்னு வேறு எழுதி வச்சிருக்காளே,, மானங்கெட்டவ. குடும்ப கௌரவத்தையே சின்னாபின்னப் படுத்திட்டாளே இந்தக் கோடாலிக் காம்பு… அவ மட்டும் இப்ப எங்கையிலே அகப்பட்டாள்னா கூழாக்கிடுவேன். இந்த ரீதியில் எரிமலையாய் கத்திக் கொண்டிருந்தார் வயதான மாமா.”4 என்ற இக்கூற்றுகளின்; வாயிலாக வேற்று மதத்தினரோடு காதல் திருமணம் செய்வதை இச்சமுதாயம் விரும்புவதில்லை என்பது புலப்படுத்தப்படுகிறது.
குழந்தைகள் இல்லாத வாழ்க்கையும் இறை நம்பிக்கையும்
திருமணமாகி ஓராண்டு ஈராண்டுகளில் குழந்தை பிறந்துவிட வேண்டும். அப்படி பிறக்கவில்லையென்றால் பலரின் பலவாறான பேச்சுக்கு இடமாகிவிடும். வாழ்க்கையே வெறுமை போல் தோன்றும். வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இருக்காது. சில நேரங்களில் அது மிகுந்த மனநோயை உண்டாக்கி உடல் ஆரோக்கியத்திற்கே கேடு விளைவிக்கும் என்பதை பின்வரும் கூற்று தெளிவாகப் புலப்படுத்துகிறது.
“இனி அவர் மூலமாக குழந்தை பிறக்க எந்த சான்சும் இல்லை’ என்பதை வாழைப் பழத்தில் மெல்ல ஏற்றிய ஊசி போன்று டாக்டர் கூறினாலும் அது நெஞ்சில் வலிக்க வலிக்க பதிந்த பிறகு… உலகமே வெறுப்பிற்குரிய நரகமாகத்தான் இருந்தது. இரண்டு பேருமே இடிந்து போய் விட்டார்கள் என்பது என்னவோ உண்மை. ஆண்டவன்தான் நாடியவர்களுக்கு மட்டும் மக்கட் செல்வத்தை அளிக்கிறான். பிற மதத்தினரைப் போன்று பிள்ளையில்லாவிடில் சுவீகாரம் எடுத்துக் கொள்ளலாம் என்றால் தான் பெறாத பிள்ளை தன் பிள்ளையாகாது என்பதை நாஸர் தம்பதிகள் அறிந்திருந்தார்கள்.
தாம்பத்திய வாழ்க்கையின் ஆணிவேரே குழந்தைகள் தாமே! குழந்தைகள் இல்லாத வாழ்க்கை இயந்திர கதியில் உப்புச் சப்பில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. அர்த்தமில்லா காலைகளும் மாலைகளும் எந்த எதிர்ப்புகளுமின்றி பிரவசமாகி கண்முன்னே மடிந்து கொண்டிருந்தன.”5 என்னும் கூற்றுகளின் வாயிலாக குழந்தை இல்லாததால் படும் துயரத்தையும் மேலும் இறைவன் நாடினால் மட்டுமே குழந்தை பிறக்கும் என்ற இறை நம்பிக்கையுடைய சமூகமாக இசுலாம் உள்ளது என்பதை ‘ஒரு விடியலின் அஸ்தமனம்’ கதையின் வாயிலாக அறிய முடிகின்றது.
மார்க்கப் பாதையில் செல்லும் சமுதாயம்
“இறைவா உன்னையும் உன் திருத்தூதரையும் மணக்க மணக்கப் பாடிய அந்த வாயா இரட்டை அர்த்தம் தொனிக்கும் விரசப் பாடல்களைப் பாடவேண்டும்…? இதென்னடா சோதனை! எனும் தினுசில் பொருமிப் பொருமி மனங்குழைந்தார். இஸ்லாத்தில் தற்கொலை மட்டும் தடுக்கப்படாதிருந்தால் என்றைக்கோ ஒரு முழம் கயிற்றில் தொங்கியிருப்பார். வேறு வழியில்லாத மௌலானா,, நாள் முழுவதும் தொழுது ‘தவ்பா’ச் செய்து கொண்டு வீட்டுக்குள்ளேயே சிறையிருக்க ஆரம்பித்தார்.”6 ;என்ற கூற்றும்.
“அடங்காத மனம் ஓலமிட்டது! கண்மணியே மார்வா.. இதுக்கா ஒனக்கு ஆறு வயசிலேயே தீனை ஊட்டினேன்…? அல்லாஹ் ரஸ_லும் போதித்ததை பாட்டாக உன் குரல் எட்டுத்திக்கும் எதிரொலிக்கும்போது அறநெறியிலிருந்து வழி கெடுக்கும் சினிமா பாட்டைப் பாட எப்படியம்மா மனசு வந்துச்சு…? சிறுவயசுலேயே “காசு பணமென்ன அத்தா பெரிய காசுபணம்…ன்னு” சொல்லுவியே… அப்படிப்பட்ட நீ இன்று புகழுக்கு அடிமையாகிவிட்டாயே அம்மா… என்னோட இளமைக் காலத்தையெல்லாம் உன்னை தீன்குலச்செல்வி யாக்குறதுக்காக செலவழிச்சுட்டு இன்று முதுமையின் விளிம்பிலே அடியெடுத்து நிற்கும் என்னை சிறகொடிந்த பறவையாக்கிட்டியேயம்மா… எந்த முகத்தை வச்சிக்கிட்டு பள்ளிவாசலுக்குப் போறதுன்னு வெட்கப்பட்டுகிட்டு வீட்டோட கிடக்கும்; முடமாக ஆக்கிட்டியே”7 என்னும் கூற்றும் ‘மனம் திருந்திய இசைக்குயில் மார்வா’ என்னும் சிறுகதையில் இடம் பெற்றிருக்கின்றது.
இக்கூற்றின் வாயிலாக இசுலாமியச் சமுதாயத்தில் திரைப்பாடல்களை அவை ஏற்றுக் கொள்வதில்லை என்பதும்,, இசுலாத்தில் தற்கொலைக்கு இடமில்லை என்பதும் எல்லாப் புகழும் இறைவனுக்கே! புகழுக்கு யாரும் அடிமையாகிவிடக்கூடாது என்பதும் மார்க்கப் பாதையிலேயே இசுலாம் செல்கிறது என்பதும் புலப்படுத்தப்படுகிறது.
பெண்களின் பேராசையும் நஷ்டமும்
“பிறையைத் தேடும் முழுமதி” என்னும் சிறுகதையில் இடம் பெறும் பின்வரும் கூற்றுகள் உற்று நோக்கத்தக்கது.
“எத்தனை நாளைக்குத்தான் இந்த பாக்டரியிலே ராத்திரி ஷிப்டு,, பகல் ஷிப்டுன்னு மாடா உழைப்பீங்க…? எங்க பெரியம்மா மக. அதுதாங்க ஜுபைதா அக்கா வீட்டுகாரர் துபாய்க்குப் போய் சம்பாதிச்சு மச்சுவூடு கட்டிட்டாங்க,, என் தோழி ஸம்ரூத்தோட அண்ணன் கூட மஸ்கட்டிலே வேலைக் கெடச்சுப்போயி மாதா மாதம் கொஞ்சப் பணமா,, சாமானா அனுப்புறாரு…? படிப்பு,, கிடிப்பு ஒண்ணும் இல்லாதவங்களெல்லாம் கூட இப்படி அரபு நாடுகளுக்குப் போயி தேடிக்கிட்டு வந்து சேந்துட்டாங்களேங்க…! நீங்க இம்முட்ட நல்ல டிப்ளமா படிப்பை வச்சுக்கிட்டுக் கூட…”8 என்ற கூற்றும்,,
“பைத்தியம் மாதிரி… இப்போ ரெண்டுபேரும் ஒண்ணாயிருந்து நாம வாழுறோமே… இந்த வாழ்க்கையை எத்தனை பணம் கொடுத்தாலும் வாங்க முடியுமா? பணக்காரங்களா இல்லாட்டி என்ன? இந்த மன அமைதி வருமா? குடும்ப வாழ்க்கையை அதுவும் இந்த வயசில் இழக்கத் தயாரா? வெளிநாடு அது இதுன்னு நா போனா,, நீயும் புள்ளைங்களும்,, ஓரிடத்துலே… நான் வேறிடத்திலேன்னு பிரிஞ்சு இருந்துகிட்டு,, ஆயிரமாயிரமா சம்பாதிச்சுத்தான் என்ன செய்ய? கூழோ,, கஞ்சியோ நாம ஒண்ணா ஒரேயிடத்திலேர்ந்து சந்தோசமா குடிப்போம்…”9 என்ற கூற்றும்,,
“நம்மகிட்ட பணம் நிறைய இருந்தாத்தான்,, ஊர்லேயும்,, நாலுபேர் கண்ணுக்கு உசத்தியா தெரியும்… வாழ்க்கையையும் எவ்வளவு வசதியா,, நிம்மதியா வாழலாம்”10 என்ற கூற்றும்,,
“அல்லாகுத்தாலா கிருபையாலே எல்லாந்தான் இருக்குது… ஆனா மனசிலே சந்தோஷ ஈரம் துளிகூட இல்லாம வறண்டு இருக்கே… புருஷன் பிள்ளைகளோடு ஒன்னா உண்டு உறங்கி அந்த செழிப்பை அனுபவிக்கலையே”11 என்ற கூற்றும் உற்று நோக்கத்தக்கவை.
இக்கூற்றின் வாயிலாக இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டால் நிம்மதியை இழந்து வாழ வேண்ழய சு10ழல் ஏற்படும் என்பதும் எப்பொழுதும் அடுத்தவரோடு ஒப்பிட்டு வாழக்கூடாது என்பதும்,, பேராசை பெருநஷ்டத்தை உண்டாக்கிவிடும் என்பதும் ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பதும் புலப்படுத்தப்படுகிறது.
தனிக்குடித்தனத்திற்கு ஆசைப்படும் பெண்கள்
பொதுவாகவே இன்றைய காலத்தில் குறிப்பாக பெண்கள் தனிக்குடித்தனம் செல்வதையே அதிகம் விரும்புகிறார்கள் என்பதும் பெற்றோர்களை அரவணைத்துச் செல்லும் மனநிலையில் அவர்கள் இல்லை என்பதும் படித்த பெண்கள் அடக்கம் இல்லாமல் இருப்பதும் வறட்டுக் கவுரவத்தை விரும்பும் பெண்களாக இருப்பதும் பின்வரும் கூற்றுகளின் வாயிலாக அறிய முடிகிறது.
“சாப்பாடாம்… சாப்பாடு… பேசறதெல்லாம் பேசி என்னை அவமானப் படுத்திவிட்டு சாப்பிடணுமாம்,,.. இந்த வீட்டிலே எங்க வீட்டு நாய்கூடச் சாப்பிடாது” எரிமலையாய் கத்தினாள் ஷகிலா.
“இந்தா பாரு… எல்லாத்துக்குமே ஒரு எல்லை இருக்கு… இந்த அளவிலே நீ போய்க்கிட்டிருந்தா வீடு போர்க்களமாகத்தான் போவும்,, இது உனக்கும் நல்லதில்ல…
அப்படீன்னா,, இன்னிக்கே ஒரு வூடு பிடிச்சு தனிக்குடித்தனம் வையுங்க… நா இந்தக் கெழங்களோடெல்லாம் இனிமே இருக்கமுடியாது…”
“நீ பாடற பாட்டுக்கு நா ஆடிக்கொண்டு,, எந்தக் காரணத்துக்காகவும் எப்பவுமே என்னைப் பெத்தவங்கள விட்டுட்டு வரமாட்டேன்..”
“இந்த கெழங்களைக் கட்டி அழுவணும்னு உங்க தலையெழுத்து இருந்தா… நானும் ஏன் அவதிப் படணும்?...பேசாம தலாக் சொல்லி,, என்னை வுட்டுடுங்க…”12 என்று கூறுவதன் மூலமாக படித்த,, இன்றைய பெண்களின் நிலையை ‘ஒரு மலர் கருகிவிடவில்லை’ என்னும் சிறுகதை வாயிலாக ஆசிரியர் கூறியிருப்பது உணரத்தக்கது.
குடிப்பழக்கத்தைத் தடுக்கும் சமுதாயம்
இசுலாம் குடிப்பழக்கத்தை அறவே தடுக்கிறது. இசுலாம் சமயத்தில் ஆகாதவை (ஹராம்) என்று சொல்லப்படுகின்றவற்றில் இதுவும் ஒன்று.
“உங்களுக்குத் தெரியாதா… குடிக்கிறது” ‘ஹராம்’ன்னு ஆண்டவனே சொல்லியிருக்கான்… இப்பவும் இன்னும் முழுசா குடிமுழுவிப் போவலை…இந்த வேண்டாத பழக்கத்துக்கும்,, சகவாசங்களுக்கும் சேர்த்து ஒரு முழுக்குப் போட்டுடுங்க… கண்டிப்புத்தொனிந்த நஸீமாவின் வார்த்தைகளில் பரிவும் பாசமும் இழையோடியது.
“என்னடி…? ஒரேதா பிரசங்கம் செங்சுக்கிட்டிருக்கே… எது செய்யணும்,, எது செய்யச்கூடாதுன்னு நீ எனக்குச் சொல்லித்தான் தெரியணுமா,, என்ன? நீ உன் சோலியெப் பார்த்துக்கிட்டு சும்மா கிட… மார்க்கம்,, மதம்ன்னு மார் தட்டுறவனுமே எத்தனைபேரு குடிக்காம இருக்கிறான்..? பணம் வச்சிருக்கிறவன் ஃபாரின் சரக்கா வரவழைச்சு பங்களாவுக்குள்ள வச்சு இரண்டாம் பேருக்குத் தெரியாமக் குடிக்கிறான்… அதனால அவன் நாத்தம் வெளியே வர்றதுல்லே….”13
என்னும் கூற்றின் வாயிலாக இசுலாமியச் சமுதாயத்தில் குடிப்பழக்கம் தடுக்கப்பட்ட ஒன்றாக இருப்பதும் இருந்தும் அடிப்படைக் கடமைகளில் அலட்சியம் காட்டுபவர்கள் சிலர் குடிப்பதும் ‘பிரார்த்தனைகள்’ கதை வழி அறியப்பட்டு புலப்படுத்தப்படுகின்றது.
பெண் குழந்தைகளைப் பாரமாக நினைத்தல்
பெண் குழந்தைகளைப் பாரமாக நினைக்கின்ற இன்றைய நிலையைப் பாத்திமுத்து சித்தீக் அவர்கள் ‘மனத்திரையில் தட்டிய பொறி’ என்னும் சிறுகதை வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.
“மூன்றாவதும் பெண்ணாகப் போய்விட்டதே என்று மனம் நொந்து கிடந்தவளை,, உடல் நலம் எப்படி இருக்கின்றது என்று வந்து பார்த்து ஆறுதல் சொல்லக்கூட யாரும் இல்லை… பச்சைவுடம்போடு அழுதால் காய்ச்சல்,, ஜன்னி என்று வந்துவிடும் ஒடம்புக்கு ஆகாது..” என்று இரண்டாவது பெண்ணை பெற்றுக்கிடந்த போது தேறுதல் சொல்லிய தாயும் இப்போதில்லை. நினைக்க நினைக்க அவளுக்கு அழுகையாக வந்தது.
“நாள் முழுக்க கூடவே இருக்கும் மன்சூர்,, காலையில் பிறந்த பிள்ளையையும் தாயையும் மாலை ஆறு மணிக்கு,, நடைப்பிணம் போல்,, நடக்கக்கூட தெம்பில்லாதவனாக,, சிவந்த கண்களோடு பார்க்க வந்திருந்தான். அவளிடம் பேசவோ,, குழந்தை அருகில் போய் பார்க்கவோயில்லை.
“ஒரு மகனைப் பெற்றுக் கொடுக்கத் துப்பில்லாத ஸல்மாவை நேரம் கிடைத்த போதெல்லாம் சமயம் வாய்த்;த போதெல்லாம் வார்த்தை அம்புகளால் மனம் நோகச் செய்திருக்கிறான்”14 என்னும் கூற்றின் வாயிலாக ஆண் வாரிசுக்கு ஏங்கும் சமுதாயத்தையும் அதே சமயம் பெண்குழந்தைகளைப் பாரமாக நினைக்கின்ற சமுதாயத்தையும் காணமுடிகின்றது.
அடிக்குறிப்புகள்
1. வாழ்வியல் களஞ்சியம்,, (தொகுதி எட்டு),, ப.469
2. கலைக் களஞ்சியம் (தொகுதி நான்கு),, ப.477
3. பாத்திமுத்து சித்தீக்,, மல்லிகை மொட்டுகள் ப.19
4. மேலது,, ப.19
5. மேலது,, ப.28
6. மேலது,, ப.45
7. மேலது,, ப.47
8. மேலது,, ப.56
9. மேலது,, ப.58
10. மேலது,, ப.58
11. மேலது,, ப.62
12. மேலது,, பக்.100,, 101
13. மேலது,, ப.150
14. மேலது,, ப.187
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.