இளையராஜாஒரு படைப்பு வாசகரை எளிதில் சென்றடைவதற்கும் கவரக் கூடியதாய் அமைவதற்கும் அப்படைப்பின் கரு அடிப்படை என்றாலும் அக்கருவை வளர்த்தெடுத்து இலக்கியமாக்குவதற்குப் படைப்பாளனின் படைப்பு உத்திகள் துணை செய்கின்றன. எனவே, ஒரு செய்தி அல்லது தகவலைப் படைப்பாளன் தன் படைப்பு உத்தகளால் சிறந்த இலக்கியப் படைப்பாக வெளிக்காட்ட முடியும். இந்த அடிப்படையில் “உத்திகள்’ அடிப்படை என்பதை அறியலாம்.

இலக்கியப் படைப்பாளிகள் செலச் சொல்லும் பொருட்டுப் பல்வேறு நெறிமுறைகளைக் கையாள்வர். இந்நுவல் நெறிமுறைகளே “இலக்கிய உத்திகள்’ என்னும் குறியால் – கலைச் சொல்லால் குறிக்கப்படுவன எனலாம். (அறிவுநம்பி.அ, 2001, ப: 6)

பொதுவாக நாவல், சிறுகதை போன்ற படைப்புகளில் உவமை, வருணனை, கற்பனை, பாத்திரப் படைப்பு உத்திகள், எழுத்து உத்திகள் போன்றவை நிறைந்து காணப்படும். இளையராஜாவின் படைப்புகளில் இறையனுபவங்கள் புதுக்கவிதையாயும், வெண்பா எனும் மரபுவழி பாக்களால் பாடப்பட்டதாயும் அமைந்துள்ளன. ஆயினும் பாமரரும் புரிந்துக்‌கொள்ளும் வகையில் எளிமையாக வெண்பாக்களைப் படைத்துள்ளார் இளையராஜா. இப்புரிதலின் அடிப்படையில் உவமை, உருவகம், தொடைகள், கற்பனை போன்ற பல உத்திகளைக் கையாண்டுள்ளார். அவற்றுள் குறிப்பாக “அணிகள்” இவர் படைப்பில் பயின்று வந்துள்‌ளமை குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது.

அணிகள்
அணி என்பதற்கு அழகு என்பது பொருள். இலக்கியத்திற்கு அழகூட்டுவதன் வாயிலாக இலக்கியத்தைச் சுவையுடையாக்குவது அணி. தொல்காப்பியத்தில் அணி குறித்து இடம்பெறவில்லையெனினும் “தண்டியலங்காரம்” அணிகள் குறித்த இலக்கணத்தை விரிவாகச் சுட்டியுள்ளது.இளைராஜாவின் வெண்பா படைப்புகளில் பல்வேறு அணிகள் இடம்பெற்றுள் ளன. அவை வருமாறு

வேற்றுப்பொருள் வைப்பணி
சொற்பொருள் பின்வருநிலையணி
தற்குறிப்பேற்ற அணி
உவமையணி
எடுத்துகாட்டு உவமையணி

என்பன இளையராஜாவின் படைப்புகளில் இடம் பெற்றுள்ளமையைக் காணலாம்.

வேற்றுப்பொருள் வைப்பணி
கவிஞன் ஒரு பொருளைச் சிறப்பிக்கக் கருதுவானாயின் உலகமறிந்த வலுவுடைய பிறிதொரு பொருளை எடுத்துக்காட்டி முடிப்பான். இதுவே வேற்றுப் பொருள் வைப்பணியாகும். வீரசோழியம் இவ்அணியைப் பிறபொருள்வைப்பு எனக் கூறுகின்றது. இதனை வடநூலார் அர்த்தாந்தர நியாசம் என்பர் (திருஞானசம்பந்தம், ச.,  2012: 110) வேற்றுப்பொருள் வைப்பணி எட்டுவகைப்படும் (தண்டி நூ: 46)

இவ்வணி,
நூலைச் சென்றோதார்க்கு நூற்பயனே கிட்டு‌மோ?
மேலைப்பயனும் முனையாச் செயல் பெறுமோ?
நூலைத்தான் கற்காதே ‌நோற்ற பலன் பெற்றேன் நான்
பாலைக்கும் பெய்யு மழை பார் (வெண்.நன் ப: 109)

எனும் பாடலில் இடம்பெற்றுள்ளது. “ஆசிரியரின் பால் சென்று நூலைக் கற்காதவர்க்கு அந்த நூலின் பயன்கிட்டுமோ? முனைந்து செய்யாத செயலுக்கு இறுதியில் உரிய உயர்ந்த பலன் சேருமோ? ஆனால் யான் நூலைக் கற்காமலேயே முயன்று கற்றுப் பெறும் பயனைப்பெற்‌றேன். அது நல்ல நிலத்திற்கு மட்டுமின்றி வறண்ட பாலைக்கும் மழை பெய்தது போன்றது என்பதைக் காண்பாயாக’’ என்பது மேற்காட்டிய பாடலின் பொருள்.

என் கல்வி இறையருளால் பெற்றது. அதைக் குறிக்கும் ஆசிரியர் உலகோர் அறிந்த மழையைக் காட்டி முடிப்பதால் இது வேற்றுப்பொருள் வைப்பணியாயிற்று இவ்வணி வேறு சில இடங்களிலும் (என் நர. வீ. பக். 290, 357) பயின்று வந்துள்ளது.

சொல் பொருள் பின்வருநிலையணி
செய்யுளில் முன் வந்த சொல்லும் பொருளும் பின்னர் பல இடத்து வருவது சொற்பொருட் பின்வருநிலையணி ஆகும்.
பாவில் பல் வண்ணம் கறிபிடித்தே தந்தார் வெண்
பாவில் பல் வண்ணம் தலை பிடித்தோர்.
பாவிலுலும் வண்ணம் பரந்த பரம் பொருளே
பாவி துணைக்(கு) இப்பா அப்பா (வெண். நன். ப: 8)
பாவில் என்னும் சொல்லும் அதன் பொருளும் பிற அடிகளிலும் வந்துள்ளமையால் இது சொற்பொருள் பின்வரு நிலையணியாம்.

தற்குறிப்பேற்ற அணி
இயல்பாக நிகழும் நிகழ்ச்சி ஒன்றின் மேல் கவிஞன் தான் கூறக் கருதிய பொருளை ஏற்றிச் சுவைபட உரைப்பது தற்குறிப்பேற்ற அணியாகும். அணிகளில் சிறந்ததாகக் கருதப்படும் இவ் அணியைக் கவிஞன் உடன் பாட்டுக்கும் ‌எதிர்மறைக்கும் பயன்படுத்துவான். பல இலக்கியங்களில் கவிஞனின் கற்பனை ஆற்றலையும் சிந்திக் கும் திறனையும் அறிவதற்கு இஃது ஒரு கருவியாக அமைகிறது (திருஞானசம்பந்தம், ச. 2012 : 133). இது பெயர் பொருள் தற்குறிப்பேற்றம், பெயராப் பொருள் தற்குறிப் பேற்றம் என இருவகையில் அமையும் (தண்டி நூ: 54).

மதி தன்னில் ஆறே அலைவதால் மாந்தர்
மதி என்றும் ஆறாதலைகிறதோ? அம்மை
ஒரு பாதி கொண்டதால் இதனொடு பெண்மை
சரி பாதியானதோ சான்று (வெண்.நன். ப. 43)

இப்பாடலில் இயல்பாக அமையும் அறிவின் செயலுக்குக் கங்கையாறு அலை வீசிக் கொண்டிருத்தலைக் கற்பித்தலின் இது தற்குறிப்பேற்ற அணியாக அமைகிறது.

உவமையணி
பண்பு, தொழில், பயன் ஆகியவற்றின் காரணமாக உவமை பிறக்கும். இது ஒன்றாகவோ பலவாகவோ வருகின்ற பொருளோடு பொருந்தும்படி வைக்கப்படும். இத்தன்மையால் கேட்போர் உணர்ந்து கொள்ளுமாறு ஒப்புமை புலப்படும் வண்ணம் எடுத்துரைப்பதே உவமை என்னும் அணியாகும். (திருஞானசம்பந்தம். ச. 2012 : 43)

பக்தி எனச் சொல்வேன் நான் பார்த்த தெல்லாம்
முக்திதனைவேண்டி முனைகிலேன் – காமுறுவேன் சக்தி
அமைதி எனச் சொல்லி ஆயுதங்கள் செய்வார்
தமையொத்தேன் தாழ்ந்தேன் தரம் (வெண். நன். ப: 80)
எனும் பாடல் உவமையணிக்குச் சான்று

எடுத்து காட்டு உவமையணி
உவமையையும் பொருளினையும் வேறு வேறாக நிறுத்தி இன்னது உவமை, இன்னது பொருள் என விளக்கப் பெறாதமைவது எடுத்துக்காட்டு உவமை அணி யாகும்.

தாவிடும் தண்மலர்கள் தாங்கிடுதேன் ஒன்றே
பூவில் புகுந்தெடுக்கும் பூந்‌தேனி – மேவிடும்   
எல்லா உயிர்க்குள்ளும் உள்ளுறையும் மெய் பொருளாம்
நல்லுயிர்‌த்தேன் நாடுவையோ நன்று (வெண். நன். ப. 34)

ஆறறிவு படைத்த மக்களுக்கு அவர்களினும் நல்லறிவு குறைந்த வண்டின் நல்லியல்பு காட்டி நல்லறிவு புகட்டும் நயம் உணர்ந்து மகிழ்வதற்குரியது. இதில் உவமையையும் பொருளையும் வேறு போல தொடர்களாக நிறுத்தி இன்னது உவமை, இன்னது பொருள் என்று விளக்காமையால் எடுத்துக்காட்டு உவமை ஆயிற்று. (ஞான சுந்தரம், தெ. 2002 : 34)

சிலேடை
சிலேடையும் ஒரு வகை அணி. எனினும் மேற்காட்டிய அணிகளை தனிப் பாடல் களில்‌ புனைந்துள்ளதைப் போலன்றிச் சிலேடை‌யைத் தனியாக விரிவாகப் பாடியுள்ளார் இளையராஜா.

“செய்யுளில் இடம்பெறும் ஒரு சொல்லோ தொடரோ தனித்து நின்றும், பிரிந்து நின்றும் பல பொருள்களைத் தரும். அவ்வாறு பல பொருள்பட அமைவதனைச் சிலேடை அணி என்பர். இவ் அணி நுட்பமும் திட்பமும் உடைய புலவர்களுக்கே இயலுவதாகும். இதனை இரட்டுற மொழிதல் அணி என்பர். சிலேஷை என்னும் சமற்கிருதச்சொல் சிலேடை என்னும் வடசொல் ஆயிற்று. இச்சொற் இத்துணைப் பொருள் தருதல் என்பது பொருளாகும் (திருஞானசம்பந்தம், ச. 2012: 162).
ஒருவகையாய் நின்ற தொடர் சொல் பல பொருள்களது தன்மை புலப்பட வருவது சிலேடை அணியாகும். (தண்டி நூ. 74) இது செம்மொழி, பிரிமொழி என இருதிறப்படும் (தண்டி நூ: 75).

இளையராஜா, விஞ்ஞானம் – மெய்ஞானம், மனம் – பணம், பெண் – புகழ், திரைக் கவிஞன் – நிலவு, அரசியல்வாதி – திருடன், கல்வி – தீபம், புலவர் – வணிகன் எனும் நிலையிலும் நிலவு – இசை – கவிதை – விலை மாது, புகழ்- செல்வம் எனும் நிலையிலும் சிலேடையாகப் பாடியுள்ளார். சான்றாகச் சில பாடல்களைக் காணலாம்.

ஒன்றையே நாடுதலால் ஓயாது தேடுதலால்
ஒன்று பொருள் உண்மை உணர்த்தலால் என்றும்
தொடர்வோர் துணைநின்று தூண்டுதலால் குன்றாச்
சுடர் இரண்டு ஞான மென்று சொல் (யாது. ப. 26)

எனும் வெண்பா விஞ்ஞானம் – மெய்ஞ்ஞானம் இரண்டின் இயல்புகளை ஒப்பிட்டுச் சிலேடையாக அமைந்துள்ளது.

உள்ளில் உறங்கும் வெளியே பரபரக்கும்
உள்ளவரை அற்றவரை ஆட்டி வைக்கும் ஓயாது!
கொள்வதற்கும் ஆகாது கொண்டவர்க்கும்போதாது
கள்ளமனம் செல்வமாம் காண் (யாது. ப. 26)

எனும் வெண்பா மனம் – பணம் என்பவற்றின் இயல்பைச் சிலேடையாகச் சுட்டுகிறது.

பொதுவாக  ஒப்புமை உடைய இரண்டின் இயல்பைச் சிலேடையாகப் பாடுதலே மரபு. ஆயின் இளையராஜா மூன்று பொருள்களின் இயல்புகளைப் பாடிப் புதுமை படைத்துள்ளார். நிலவு – இசை – கவிதை.

ஆர்த்து எழ ஆடாத நெஞ்சாடும் மெள்ளவே
ஊர்ந்தே உலகும் கடந்து நிற்கும் உள்ளத்துன்
ஓர் நேரம் கார்போலும் காட்டி கறுத்து வரும்   
சிறந்த மதி சேர் இசைப்பா செப்பு (வெண். நன். ப. 126)

என அமைந்துள்ளது. மற்றொரு வெண்பா விலைமாது – புகழ் – செல்வம் எனும் மூன்றின் பொது இயல்புகளைச் சிலேடையாகக் கொண்டமைந்துள்ளது. (வெண். நன். ப. 127)

முடிவுரை
இளையராஜாவின் படைப்புகளில் காணப்பெறும் இலக்கிய உத்திகளில் பல்வேறு உத்திகள் சிறப்புற அமைந்துள்ளன. அணிகள் இளையராஜா வின் வெண்பாக்களுக்கு அழகூட்டுவதாய் அமைந்துள்ளதை இக்கட்டுரை ஆராய்ந் துள்ளது.

பயன்பட்ட நூல்கள்
1.அறிவுநம்பி, அ. 2001. இலக்கியங்களும் உத்திகளும், அமுதன் நூலகம், 19, இரண்டாம் வீதி, இராசராசேசுவரி நகர், புதுச்சேரி – 605 011
2.திருஞானசம்பந்தம், ச. 2012 தண்டியலங்காரம் தெளிவுரை, கதிர் பதிப்பகம், தெற்கு வீதி, திருவையாறு – 613 204.
3.இளையராஜா, 2004, என் நரம்பு வீணை, கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண். 6123 எண், 8 மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், சென்ன‌ை -–10
4.இளையராஜா, 2002, வெண்பா நன்மாலை, அரும்பு பதிப்பகம், 49 டெய்லர்‌ஸ் சாலை, கீழ்ப்பாக்கம் சென்னை – 10
5.இளையராஜா, 2005, யாதுமாகி நின்றாய், கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண். 6123, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், சென்ன‌ை - 10.

 

* கட்டுரையாளர் : - லி.கி. கிறிஸ்துராஜேஷ், பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர். -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R