கட்டுரையாளர்:  - ப.குமுதா, ஆய்வியல் நிறைஞர், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), விழுப்புரம்முன்னுரை
இணையத்தமிழ் இதழ்களில் இலக்கியம் சார்ந்த படைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் இதழ் பதிவுகள் இதழ். இந்த இதழில் பெண்ணியமஇ; மார்க்சியம்இ தலித்தியம்இ புலம்பெயர்வு போன்ற நவீன இலக்கிய வகைமைகளில் கவிதைகள் படைக்கப்பட்டு வருகின்றது. அக்கவிதைகளில் மார்க்சிய கவிதைகளை ஆராய்வதாக இக்கட்;டுரை அமைகின்றது.

மார்க்சியம்
சமுதாயத்தில் நிலவும் நிகழ்ச்சிகளுக்கு காரணகாரிய விளக்கம் காட்டி உண்மையைப் புரிந்து கொள்ளத் தத்துவார்த்தப் போராட்டம் நடத்துவதையே மார்க்சியப் படைப்பாளர்கள் தங்களின் இலக்கியப் பணியாக கொண்டனர். மார்க்சிய வாதிகள் இலக்கியத்தைச் சமுதாய மாற்றத்திற்கான ஒரு கருவியாகக் கையாண்டனர். சமுதாயக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதோடும் விமர்சனம் செய்வதோடும் நின்றுவிடாமல் குறைகளுக்குத் தீர்வுகாண்பதே மார்க்சியத்தின் நோக்கமாகும். உலகத்தில் உள்ள வர்க்க முரண்பாடுகளை நீக்குவதற்கு வர்க்கப்போர் ஒன்றையே தீர்வாக மார்க்சிய இயக்கத்தினர் குறிப்பிடுகின்றனர்.

வாழ்விற்கு அடிப்படைத் தேவையாக அமைவது அறம், பொருள், இன்பம், வீடு என்ற உறுதிப்பொருள்கள் தான். அப்பொருள்கள் கிடைக்கப்பெறாத மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்த்;துக்கொள்ள மக்கள் எல்லா வகையிலும் சமுதாயத்தில் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும். என்பதை,

'அடுத்த உணவெங்கே என்ற
வினாவிற்கு விடையின்றி
மயங்கி விழுகிறது ஏழைகளின் பசி!
தங்களின் பசுமைப் புரட்சி வெற்றிகாண
தொடர்கிறது.    
அரசர்களின் மகிழ்ச்சியான
இரகசிய முயற்சிகள்
ஏழ்மைக்கு விடுதலை
ஏனென்று கேட்கும் மன்னர்களே
சரித்திரம் ஏழ்மைக்கு விடுதலை அளிக்கும்
அது
உங்களுக்குத் தரித்திரத்தை உமிழும்.'

என்ற போராட்டம் என்னும் கவிதை வரிகளின் வாயிலாக அறியமுடிகிறது.

பாட்டாளி வர்க்கம் பசியில் துடிக்கும் தருணத்தில் கூட உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் அளிக்காத நிலையில் தான் ஆதிக்க வர்க்கம் செயல்படுகிறது. மேலும், சமத்துவம் இவ்வுலகில் நிலைப்பெற போராட்டங்கள் மட்டுமே நிலையான தீர்வினை தருபவை. என்பதை,

'ஏழைகள் எங்களின்
தீவிர போராட்;டங்கள் தொடங்கிற்று இனி
கனவுகளிலும் போராட்டங்கள்
அவைகளிலும் வெற்றிகள்!
கருவறையிலிருந்து சுதந்திரம் தேடி
கல்லறைக்குள் புகவும் உரிமை தேடி
வாழ்க்கையில் எப்போதும்
போராடி வெல்லத் துடிக்கிறது போராட்டங்கள்
மரணத்தின் விளிம்பில்
இலட்சியம் நோக்கியே பயணிக்கையில்
மிக இனிமையானதே போராட்டங்கள்!'


இக்கவிதை விவரிக்கிகறது.  சமுதாயத்தில் முதலாளி தொழிலாளி என்ற வர்க்கப்பாகுபாடு தோன்றியகாலம் முதலே போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. தொழிலாளிகள் வெற்றிபெற்றிட வேண்டும் என்பதற்காகப் போராடுகின்றனர். அவர்களின் போராட்டம் கருவறையில் இருந்து கல்லறைக்குப் போகும் வரை தங்களின் உரிமைகளும் சுதந்திரமும் முழமையாகக் கிடைத்திட வேண்டும் என்ற நோக்கத்தினை வலியுறுத்துவதாக போராட்டம் என்னும் கவிதை வரிகள் படைக்கப்பட்டுள்ளது.

 

ஓட்டுக்கேட்டு வருபவர்கள் வாக்காளர்களிடம் பணிந்தும் பாசமாகப் பேசியும் பிரச்சாரம் செய்வார்கள். பிரச்சாரம் செய்யும் போது வாக்காளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்றும், வாக்காளர்களின் தேவைகளை பூர்த்திசெய்துக் கொடுக்கப்படும் என்றும் தந்திரமாகப் பேசி வாக்குகளை சேகரித்துக் கொள்வார்கள். தேர்தலுக்கு பிறகு அரசியல் வாதிகள் கொடுத்த வாக்குறுதிகளைப் பற்றி எந்தவித கேள்விகளையும் கேட்கமுடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் வாக்காளர்கள் என்பதை,

'கேள்விகள் மட்டும் தான்
எம் நெஞ்சில் எழலாம்
விடைகள் மட்டும்
யார் யாரோ கைகளில்
ஒவ்வொரு வருடமும்   
ஒவ்வோர் மே மாதம்
தவறாமல் உலகெங்கும்   
ஊர்வலங்கள்.'


என்ற சக்தியின் கனவுதானா தோழா என்னும் கவிதை வரிகள் எடுத்துரைக்கின்றன.

எந்த ஒரு துறையாக இருந்தாலும் அதில் வர்க்கப்பாகுபாடு காணப்படுகிறது. மேல்தட்டு வர்க்கத்தினருக்க பயந்து வாழ வேண்டிய நிலையிலேயே காணப்படுகிறார்கள் கீழ்தட்டு வர்க்கத்தினர். தொழிலாளிகள், கீழ்தட்டு வர்க்கத்தினர் என அனைவரும் தனக்கு நடக்கும் அநீதிகளை சுயநினைவோடு வெளிப்படையாக வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் நிலையினை,

'பூமி கூட போதையில்
தடம் மாறி சுழல்கிறது
சொகுசாக வாழும்
மேல்தட்டு வர்க்கத்தினரை
திட்டித் தீர்க்கிறது
வாய் திட்டித் தீர்க்கிறது
மறுநாள்
போதை தெளிந்து
காக்கிச் சட்டை அணிந்து
அடிமை பிழைப்புக்கு
தொழிற்சாலைக்கு
ஓடும் பொழுது
நினைவில் வருகிறது
திரும்பவும் ஒரு மாலை வரும்
மதுக் கோப்பையுடன்
மற்றவர்களைத்
திட்டித் தீர்க்கலாம்
என்ற எண்ணம்
நினைவில் வருகிறது.'

என்ற மதியழகனின் கொ(கு)டிகாரன் என்னும் கவிதை வரிகள் புலப்படுத்துகின்றன. மேலும், முதலாளித்துவம் என்பது மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவதும், சுரண்டுவதும் ஆகும்.  மேல் வர்க்கத்தினர் கீழ் வர்க்கத்தினரை அன்றாட வாழ்க்கைக்கு தேவையாளவற்றிலும் ஊழல் செய்து அவர்களை அடிமைப்படுத்துகிறார்கள். தொழிலாளிகள், கீழ்வர்க்கத்தினர் என அனைவரிடமும் சுரண்டி உயர்ந்த பதவியிலும், சமுதாயத்தில் உயர்ந்த நிலையிலும் வாழ்ந்து வருகிறார்கள் முதலாளிகள் என்பதை,

'கிராமத்தில் மனிதர்கள்
வாழ வழிவகைகளை
யார் செய்வது
பெட்ரோல் விலையை
காரணம் காட்டி
காய்கறி விலை ஏறிப்போச்சுது
காய்கறிகளை கண்ணால்
பார்த்தே
ஒரு வருஷமாச்சுது
நீங்கள் தலைக்கு மேலே
விமானத்தில் பறக்கின்றீர்கள்
அதனால் எங்கள் தலையெழுத்தை
நீங்கள் எழுத அனுமதிக்க முடியுமா
நாங்கள்.?'


என்ற மதியழகனின் ஏழைகள் நாங்கள் என்னும் கவிதை வரிகள் எடுத்துரைக்கின்றது.

முடிவுரை
இணையத்தமிழ் இதழான பதிவுகள் இதழில் இடம்பெற்றுள்ள மார்க்சியம் சார்ந்த கவிதைகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் பொருளாதார மற்றும்  வசதி வாய்ப்பு அடிப்படையில் மனிதன் பாகுபடுத்தப்படுதல், வறுமை நிலை, தொழிலாளிகளின் அடிமைத் தன்மை, வறுமைக் கோடு வித்தியாசம், உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமை போன்றவற்றவற்றையெல்லாம் இக்கட்டுரையின் வாயிலாக அறியமுடிகிறது.

*கட்டுரையாளர்:  - ப.குமுதா, ஆய்வியல் நிறைஞர், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), விழுப்புரம் -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R