முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -தமிழில் தோன்றிய முதல் இலக்கியம் சங்க இலக்கியம் ஆகும்.இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பதினெண் மேற்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படுகின்றன.காலத்தின் கோலத்தால் அறநூல்கள் தோன்ற வேண்டிய சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டதால் சங்க காலத்தை அடுத்து உள்ள காலமான சங்க மருவிய காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றின. இந்நூல்கள் அறம்,  அகம், புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று,அக நூல் ஆறு ,புற நூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன. பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் காரியாசன்.இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர்.இக்கருத்தைப் பாயிரப் பாடல் கடவுள் வாழ்த்து உறுதிப்படுத்துகின்றது.இவர் சமண சமயத்தவத்தவரானாலும்இசமய சார்பற்றக் கருத்துக்களை மிகுதியாகக் கூறியுள்ளார்.சிறுபஞ்சமூலம் என்னும் சொல்லுக்கு

ஐந்துவேர்கள்என்றுபொருள்படும்அவையாவனசிறுவழுதுணைவேர்,நெருஞ்சிவேர், சிறுமல்லிவேர் ,பெருமல்லிவேர்,கண்டங்கத்திரிவேர் ஆகிய ஐந்தின் வேர்கள் சிறந்த மருந்தாக உடல் நோயைப் போக்குவது போல் இந்நூலுள் வரும் ஒவ்வொரு பாடலும் ஐந்து நீதிகளைத் தொகுத்துக் கூறுகின்றன இவை மக்களின் நோய் நீக்கும் என்பதால் இதற்குச் சிறுபஞ்சமூலம் என்று பெயர் வழங்கப்பட்டது.இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 102 பாடல்கள் உள்ளன.ஆயினும் 85 ஆம் பாடலில் தொடங்கி 89 ஆம் பாடல் வரை ஐந்து பாடல்கள் காணப்பெறவில்லை ஆனால் சென்னைப் பல்கலைக்கழகப் புறத்திரட்டில் 85,86,87-ஆம் எண்களுக்கு உரிய பாடல்கள் உள்ளன.இதற்கு உரியசான்று முடியாதததானால் நூலின் இறுதியில் தனியாக இடம் பெற்றுள்ளன.இந்நூல் நான்கு வரிகளில் ஐந்து பொருள்கள் சிறந்த முறையில் அமைந்துள்ளன.இந்நூலில் இடம்பெறும் சமுதாய நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். சமுதாயம் என்பதன் விளக்கம்
சமுதாயம் என்பதற்கு கௌரா தமிழ் அகராதி கூட்டம், சங்கம், பொதுவானது, மக்களின் திரள், பொருளின் திரள்,உடன்படிக்கை என்று பல்வேறு பொருள் விளக்கமளிக்கிறது.(ப.331)

.ஒழுக்கம்
நல்ல நெறிகளை கடைப்பிடித்து ஒழுகும் பண்பே ஒழுக்கம் ஆகும்.வள்ளுவரும் ஒழுக்கமுடைமை என்ற ஓர்  தனி அதிகாரத்தை வகுத்துள்ளார்.ஒருவனுக்கு மேன்மையுண்டாக்குவது நல்ல நடத்தைதான் அதனால் நல்ல நடத்தையை உயிரைவிடச் சிறந்ததாகப் பாதுகாக்க வேண்டும்.இதனை

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்    (131)


என்ற குறளின் வழி அறியலாம்.

உலகில் இன்பமானது செல்வம் உடையவனிடமே உள்ளதாகும்.ஒழுக்கமானது இரக்க குணம் உடையவன் பழிக்கப்படும் தீய செயல்களைச் செய்யான்.புறங்கூற்றுச் சொற்களையும் பிறர் செவியில் செலுத்தி தவற்றைச் செய்யமாட்டான் என்று கீழ்கண்ட பாடலாகிய சிறுபஞ்சமூலம்

பொருள் உடையான் கண்ணதே போகும் ;அறனும்
அருளுடையான் கண்ணதே ஆகும் -அருளுடையான்
செய்யான் பழிவாம் சேரான் புறமொழியும்
உய்யான் பிறர்செவிக்கு உய்த்து     (சிறுபஞ்ச.15)

நல்லறத்தை விரும்பி நடப்பவன் நல்ல ஒழுக்க நெறியில் நின்றொழுகுவான் நல்ல நீதி நெறிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பான் என்று கீழ்கண்ட பாடலில் காரியாசன் உணர்த்துகிறார்.இதனை

அறன் நட்டான் நல்நெறிக்கண் நிற்க அடங்காப்
புறன்நட்டான் புல்நெறிப் போகாது      (சிறுபஞ்ச.39)

என்ற பாடலடிகள் புலப்படுத்துகிறது.மேற்கூறப்பட்ட கருத்துக்களின் மூலம் நல்ல நடத்தை ( இரக்கக் குணம்,புறங்கூறாமைகுணம், தீயச்செயலில் ஈடுபாடமை) நெறிகளைப் பின்பற்றி ஓழுகுபவர் ஒழுக்கமுடையவராக வாழ்ந்தனர் என்பதை அறியமுடிகிறது.

இளமையில் கல்
இளமைப்பருவத்திலே கற்று தேராதவரும் கற்றறிந்த பெரியோரிடமும் சேராதவரும் நல்லவர்களின் சிரிப்புக்கு இடமாகி அவமானம் பெறுவர்.எனவே இளமைப் பருவத்திலேயே நற்கல்வியைக் கற்று அறிவு பெற வேண்டும்.சிறுபஞ்சமூலம் பாடலில் காணலாம்.

பொன்பெறும் கற்றான பொருள்பெறு நற்கவி
என்பெறும் வாதி இசைபெறும் - முன்பெறக்
கல்லார் கற்றார் இனத்தர் அல்லர் பெறுபவே
நல்லார் இனத்து நகை  (சிறுபஞ்ச.66)


கல்வி கற்க வேண்டிய பருவம் இளமைப் பருவம் ஆகும்.அப்பருவத்தில் தான் கல்வி கற்க வேண்டும் என்பதை,

ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ -ஆற்றச்
சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லையேஇஇல்லை
மரம் போக்கி கூலிகொண் டார்                       (பழமொழி.2)


என்ற பாடல் உணர்த்தியுள்ளது.இக்கருத்தையே ஆத்திசூடியும்,

இளமையிற் கல் (பா. 28) என்று கூறுகிறது.நான்மணிக்கடிகையும் இளமையில் கல்லாமல் இருப்பது குற்றம் என்று கூறுகிறது.இதனை
இளமைப் பருவத்து கல்லாமை குற்றம்                  (நான்.பா .94:1)

என்ற பாடலடி குறிப்பிடுகிறது.இக்காலத்தில் வாழும் பெற்றோர்களும் இளமையிலேயே தன் குழந்தைகளைப் படிக்க வைக்கும் சூழல் காணப்படுகிறது.

ஈகை
வாழ்க்கையில் தமக்கென உறவும் பொருளும் இன்றி வாழ்பவர்க்கு தம்மால் முடிந்த அளவு உதவிச்செய்தல் ஈகை ஆகும்.
பிறப்பால் வரும் உடம்பை நீக்க வேண்டும்.உலகில் எங்கும் தன் புகழ் நிறைய வேண்டும் என்றால் ஈகையைச் செய்ய வேண்டும்.பிறர்மனையாளை விரும்பாமல் ஒழுக வேண்டும்.குறைவாக இருந்தாலும் ஒருவருக்கு நாள்தோறும் பிறருக்கு உதவி செய்தால் செல்வம் நிறையும் என்பதனை சிறுபஞ்சமூலம் பாடலில் காணலாம்.

உடம்பொழிய வேண்டின் உயர்தவம் ஆற்றுஈண்டு
இடம்பொழிய வேண்டுமேல் ஈகை – மடம்பொழிய
வேண்டின் அறிமடம் வேண்டேல் பிறர்மனை
ஈண்டின் இயையும் திரு  (சிறுபஞ்சம்.)

இக்கால மக்களும்  இதனை உணர்ந்து பிறர்க்கு ஈகை செய்ய வேண்டும் என்பதை அக்கால புலவர்கள் அன்றே எழுதி வைத்தனர் போலும்.

நட்பு
நட்பு என்னும் சொல்லிற்கு உறவு,சிநேகம், சுற்றம், நேசம் என்று மதுரைத் தமிழ்ப் பேரகராதி பொருள் கூறுகிறது.வள்ளுவரும் நட்பிற்கு அதிகாரம் வகுத்துள்ளார்.
நட்பு கொண்டவரை செல்வராக்குதல் வேண்டும் என்பதனை,

நட்டாரை ஆக்கிப் பகைதணித்து      (சிறுபஞ்ச.16)

என்ற பாடலடி புலப்படுத்துகிறது.

மானம்
மானம் என்பது எக்காலத்தும் ஒழுக்க நெறியில் தாழாதிருத்தல்இஅப்படி தாழ்ந்தால் உயிர்வாழாது இறந்துவிடுதலே மேலானது.இச்சொல்லிற்கு தன்மதிப்பு,அலங்காரம்,அபிமானம்,ஒருவிதப் பொருத்தம் நேசம், பெருந்தன்மை, பெருமை, மரியாதை, கற்பு, அன்பு பிராமானம் என்ற பொருள் உண்டு.

ஒருவன் தனக்கு பிறர் செய்த நல்லவற்றைப் பலரிடமும் கூறியும் தீயவற்றை மறந்தும்.பிற உயிர்களுக்கு இடையூறு ஏற்பட்டால் விரைவில் சென்று உதவி செய்து பிறருடைய பொருள்கள் மீது உள்ள வஞ்சனை செயலை நீக்கியும் செயல்படுவான் மானமுடையான் ஆவான்.
குற்றம் வந்த இடத்து உயிர்விடுதலே அறிவுடையார் செயலாகும்.இதனை,

நல்ல வெளிப்படுத்துத் தீய மறந்தொழிந்து
ஒல்லை உயிர்க்கு கோலாகி –ஒல்லும் எனின்
மாயம் பிறர்பொருள் கண்மாற்றுக மானத்தன்
ஆயின் அழித்தல் அறிவு   (சிறுபஞ்ச.56)


மேலும் மானம் அழிந்தபின் உயிர்வாழாது இருத்தல் நற்பண்பு ஆகும் என்பதை இனியவை நாற்பது பாடல் வரிகளால் அறியலாம்.

மானம் அழிந்தபின் வாழாமை முன் இனிதே   (இனி.நா. 6)

இந்நெறியை உணர்ந்து இக்காலத்தில் வாழும் மக்களும் மானத்துடன் வாழ வேண்டும்;.

பெரியாரைப் பிழையாமை
மாசற்ற பெரியோரிடத்தும் அவர் வருந்தத்தக்க குற்றங்களைச் செய்யாதிருத்தல் பெரியாரைப் பிழையாமை என்னும் நற்பண்பு ஆகும்.
பெரியோர்கள் கூடியுள்ள இடத்தில் காரணமின்றிச் சிரிப்பதும்இஅவர்கள் முன் வருந்தத் தக்க இரகசியம் பேசுவதும்இநண்பர்களுக்குச் சாதகமாகவாதிடலும்இசெய்யுளுக்கு தாம் புதிதாகக் கண்டு பிடித்ததைப் போல விளக்கம் அளித்தல் ஆகிய ஐந்தும் கற்றறிந்த பெரியோர்கள் கூடி இருக்கும் இடத்தில் செய்தல் கூடாது என்பதனை சிறுபஞ்சமூலம் குறிப்பிடுகிறது,

நகையொடு மந்திரம் நட்டார்க்கு வாரம்
பகையொடு பாட்டுரை என்றைந்தும் -தொகையொடு
மூத்தோர் இருந்துழி வேண்டார் முதுநூலுள்
யாத்தார் அறிந்தவர் ஆய்ந்து   (சிறுபஞ்ச.94)


என்ற பாடலால் அறியலாம்.

தான் உண்ணும் உணவினை பிறருக்குக் கொடுத்துதவி வாழ்பவனும் பிறர் கூறும் பழிச்சொல் எதற்கும் தான் ஆளாகமல் நல்வழியில் நடப்பவன் மதிக்கத்தக்க பெரியோன் ஆவான் என்பதனை சிறுபஞ்சமூலம் பாடலில் காணலாம்.

பாத்துண்பான் பார்ப்பாண் பழிஉணர்வான் சான்றவன்
காத்துண்பான் காணான் பிணி   (சிறுபஞ்ச.7)


என்ற பாடல் புலப்படுத்துகிறது.இக்காலத்தில் சமுதாயத்தினரால் மதிக்கத்தக்க பெரியோர்கள் இருக்கின்ற போதிலும் கால மாற்றத்தின் காரணமாக  அவர்களை மதிக்காத சூழல் இளம் தலைமுறையினரிடம் காணப்படுவது வருந்தத்தக்கதாக உள்ளது.இதனை உணர்ந்து இக்கால சமுதாய மக்கள் செயல்படுவதே சாலச் சிறந்தது.

தீவினையச்சம்
தீயனவற்றைச் செய்ய அஞ்சுவதும்இபிறர் துன்பப்படும் அளவிற்கு அவர்களுக்கு தீங்கு செய்தலும் தீவினையச்சம் ஆகும்.

தன்னிடம் பழகிய நண்பர்களுக்கு தீங்கு செய்வதும் அவர்களின் வறுமைக்கும் உதவாமல் இருப்பதும் வீட்டில் உள்ள பெரியோரை இகழ்ந்து பேசுதலும்
தீமையாகும்.ஆகவே மற்றவர்கள் வருந்தும்படி தீயவற்றை செய்தலை விட்டுவிட வேண்டும் என்பதனை சிறுபஞ்சமூலம் வரிகள்  உணர்த்தும்.

இடர்இன்னா நாட்டார்கண் ஈயாமை இன்னா
தொடர்பு இன்னா நள்ளார்கள் தூயார்ப் படர்புஇன்னா
கண்டல்அவிர் பூங்கதுப்பினாய் இன்னாதே
கொண்ட விரதம் குறைவு   (சிறுபஞ்ச.13)


என்ற பாடல் உணர்த்துகிறது. மேலும் வள்ளுவரும் இக்கருத்திற்கு வலுசேர்க்கும் விதமாக

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்புன்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை  (789)


என்ற குறளில் தெளிவுப்படுத்தியுள்ளார்.
தனக்கு ஒருவன் செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளுதல் பெருமைக்குரிய செயலாகும்.மற்றவர் செய்த தீங்கினை அன்றே மறந்து விட்டுவிடுவது நல்லதாகும் என்பதனை சிறுபஞ்சமூலம் பாடலில் காணலாம்.

பிழைத்தல் பொறுத்தல் பெருமை சிறுமை
இழைத்த தீங்கு எண்ணி இருத்தல்     (சிறுபஞ்ச.15)


மேலும் தீவினை அச்சம் குறித்த செய்திகளை எடுத்துரைத்துள்ளப் பாங்கை  உணரமுடிகிறது.இதன் மூலம் அக்காலச் சூழலில் மக்கள் தீவினைகளைத் தாங்கி கொண்டு அதனை மறந்து விடும் போக்கு உடையவராக இருந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.இக்காலத்திலும் இந்நிலைக் காணப்படுவது இங்கு நோக்கத்தக்கது.
பொய்சொல்லாமை

பொய் பேசாமல் இருத்தல் சிறந்த நெறி ஆகும்.இந்நூலும் இக்கருத்தையே கூறுகிறது.இதனை,
பொய்யாமை பொன் பெறினும்    (சிறுபஞ்ச.17)


என்ற பாடலடி கூறுகிறது.

கள்ளாமை

கள்ளின்மீது ஆசை கொண்டு நடப்பவர் எப்பொழுதும் அச்சப்படமாட்டார்.அதோடன்றி முன் பெற்றுள்ள புகழையும் இழப்பார்.மற்றவர் பொருளின் மேல் ஆசை கொள்ளாமல் திருடாமையும் தன் மனைவி மக்கள் பெரியோர்களால் நன்மதிப்பை பெற்று வாழ்பவனே சிறந்த மனிதனாக கருதப்படுவார்.

மற்றவர் பொருளின் மேல் ஆசைகொண்டு திருடாதவனும் சூதாட்டத்தில் கலந்து கொண்டு பணத்தை வீணாக்குவனும்; கேட்பவர் மனம் வருந்தி அழும்படி பேசிக் கொண்டு சுடு சொல் கூறாதவனும் அதன்மேல் விருப்பம் இல்லாதவனாய் கள்  உண்ணாமையும்,;இவ்வுலகில் செய்த புண்ணியம் மீண்டும் பிறப்பு எடுக்கமாட்டான்.மக்கள்மனைவி பெரியோரிடத்தில் நல்ல புகழ் பெற்று வீடுபேறு அடைவான் என்பதனை இப்பாடலின் மூலம் அறியமுடிகிறது.

கள்ளான் சூதுஎன்றும் கழுமான் கரியாரை
நள்ளான் ……………………..  -நள்ளான் ஆய்
…………………………….  எஞ்ஞான்றும்
தான்மறுத்துக் கொள்ளான் தளர்ந்து    (சிறுபஞ்ச.33)

மேலும் பல பாடல்களில் காரியாசன்,

பிறர் பொருளைக் களவு செய்யாதிருத்தல் வேண்டும்.களவுத் தொழில் செய்தால் பிறவியெடுக்கும் நிலை ஏற்படும் என்ற கருத்தையும் பதிவுசெய்கிறது.இதனை,
……………………கள்ளாமை……………    (சிறுபஞ்ச.17)

கள்ளான்………………………………………
…………………………………………………    (சிறுபஞ்ச.19)


என்ற பாடலடிகள் புலப்படுத்துகிறது.இதன் மூலம் களவு தொழில் தவறு என்பதை எடுத்துரைத்து இத்தொழிலைச் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்துகிறது.இக்காலத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்திற்கு இழுக்குத் தரும் செயலைச் செய்யாமல் இருப்பதே சாலச் சிறந்தது.

சினம் கொள்

நற்குணமில்லாதவர் முன் சினம் கொள்ளலாம் என்று காரியாசன் குறிப்பிடுகிறார்.இதனை,
கதநன்று சான்றாண்மை        (சிறுபஞ்ச.15)

என்ற பாடலடி உணர்த்துகிறது.இக்காலத்திலும் இந்நெறியைப் பின்பற்றி வாழ்வதே சிறந்தது.

கொல்லாமை
சங்க காலத்தில் உயிர்களைக் கொன்று தின்னும் வழக்கம் காணப்பட்டதைப் புறநானூறு பாடல்கள் எடுத்துக்கின்ற செய்தியைப் பல புலவர்களின் பாடல்கள் வழி அறியமுடிகிறது.ஆனால்  சங்க மருவிய காலத்தில் ஆட்சி மாற்றத்தின் காரணமாக இது தவறு என்பதை எடுத்துரைக்கிறது.இக்கருத்தைப் பற்றி அற இலக்கிய ஆசிரியர்கள பல பாடல்களில் பதிவு செய்துள்ளனர். ஒருவன் நீதி கடந்து ஒழுகும் போது கொலை தொழிலைச் செய்கின்றான்.இணையில்லாத அறம் என்பது கொல்லாமை ஆகும்.உயிர்களைக் கொன்று உண்பவனுடைய நாக்கும் அற்றுவிடும்.பொய் சாட்சி கூறப் போகின்றவனுடைய நாக்கும் அற்றுவிடும்.கற்றவர் எதிரில் கல்லாதவனுடைய நாக்கும் அற்றுவிடும்.கற்றவர் எதிரில் கல்லாதவனுடைய நாக்கு அடங்கும்.சொன்ன சொல்லைக் கடவாதவன் கடன் கொடுத்தவனைக் கண்டதும் நாக்கு எழாது உயர்வான குடியில் பிறந்தவன் தனக்கும்இபிறர்க்கும் உதவி செய்வான்.தனக்கும தீங்கு செய்தாலும் அவற்றை வெளியில் சொல்ல மாட்டான் என்பதனை இப்பாடல் வரிகள் உணர்த்துகின்றன.

கொன்றுண்பான் நாசாம் கொடுங்கரிபோ வான்hநச்சாம்
நன்றுணர்வார் முன்கல்லான் நாவுஞ்சாம் -ஒன்றானும்
கண்டுழி நாச்சாம் கடவான் குடிப்பிறந்தான்
உண்டுழி நாச்சாம் உணர்ந்து     (சிறுபஞ்ச.22)

.
ஓர் உயிரைக் கொன்றவனும் கொலைக்கு உடன்பட்டவரையும் அப்படி கொன்ற ஊனை விலைக்கு வாங்கியவனும் அதை சமைத்தவனும்  அதனை உண்ணவனும் என இவ் ஐவரிடத்தும் கொலைக்குரிய எல்லாச் செயல்கட்கும் காரணமாவார்.ஆகவே கொலைத்தொழிலை செய்யாமை இருத்தலே நன்றாகும் என்பதனை இப்பாடல் வரிகள் மூலம் அறியமுடிகிறது.

கொன்றான் கொலை உடன்பட்டான் கோடாது
கொன்றதனைக் கொண்டான் கொழிக்குங்கால் -கொன்றதனை
அட்டான் இடவுண்டான் ஐவரினும் ஆகுமெனக்
கட்டெறிந்த பாவம் கருது     (சிறுபஞ்ச.80)


மேலும் உயிரைக் ;கொல்லாதவனாகவும் ஊனை உண்ணாதவனாகவும் உள்ளவனை எல்லா உயிர்களும் கை குவித்து வணங்கும்.இதனை வள்ளுவர்,

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்      (53)


என்ற குறளின் வழி அறியமுடிகிறது.உயிர்களைக் கொலைச் செய்து உண்பது பாவமென்று சங்க மருவிய காலத்தில் காணப்பட்டது என்பதை மேற்கூறப்பட்ட பாடல்களின் வழி அறியமுடிகிறது. ஆனால் இக்காலச் சூழலில் புலால் உணவு உண்பதன் மூலம் பல நோய்கள்  வர வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவர்கள் எடுத்துரைத்துள்ளனர் இதனை உணர்ந்து இக்கால மக்கள் தாவர உணவுகளை உட்கொள்ளுவதே சிறந்தது.

பெண் நெறிகள்

இல்லறச்சிறப்பு
கணவன்இமனைவி இவர்களிடைய ஒற்றுமை மலர்ந்து இவர்கள் குழந்தைகளுடன் ஒற்றுமையாக வாழ்வதே இல்வாழ்க்கை ஆகும்.இல்லதரசி நல்ல பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளுதல் அடக்கம் உடைமையாகும்.கணவன் விரும்பும் அழகுடன் விளங்குவதும் தாலிகட்டிய கணவனுடன் கூடி வாழ்வதலும்இதன் கணவன் விரும்பி அறுசுவை உணவளித்து உதவுதலும் ஆகியவற்றுடன் கூடிய ஐந்து நற்பண்புகளும் பெண்கள் தன் கணவரைத் தமக்கு அடக்கியவராகச் செய்யும் அரிய மருந்து போன்றவை என்பார் இல்லத்தார்கள் என்பதனை சிறுபஞ்சமூலம் நூலில் அறியலாம்.

மக்கள் பெறுதல் மடன் உடைமை மாதுஉடைமை
ஒக்க உடன்உறைதல் ஊண்அமைவு –தொக்க
அலவலை அல்லாமை பெண்மகளிர்க்கு –ஐந்தும்
தலைமகனைத் தாழ்க்கும் மருந்து     (சிறுபஞ்ச.51)


தன்னிடம் வரும் சுற்றத்தார்களைப் பேணிப் பாதுகாத்தல்இதன் கணவனுக்கு அடக்கம் உடையவளாய் இருத்தல்இபிற ஆடவரை விரும்பாத பெருந்தன்மையும்இபெண்மைக்கு உரிய பெருமைஇபெண்களுக்கே உரிய பெருமைஇபெண்களுக்கே உரித்தான வெட்கத்தால் வரும் அடக்கம் என்ற ஐந்து பண்புகளையும் கொண்டு வாழும் பண்பே நன்மையைத் தருவதாகும்.இவையே இல்லறத்தாருக்கு உரிய பெருமை ஆகும்.இவை இல்லாதவள் பொற்பூண் பூண்டு இருக்கும்இகோங்க மலர்போலும்இஅழகுடைய தாமரை மலரில் வாழும் திருமகளே ஆனாலும்இகணவரைத் தாழ்த்தாது தன் கணவனுக்கு அடங்கி இருத்தல் நல்லதாகும்.அப்பெருமை இல்லத்தரசியின் திருமகளுக்கு பொருந்தும் என்பதனை இப்பாடல் வரிகள் உணர்த்துகின்றன.

பேண்அடக்கம் பேணாப் பெருந்தகைமை பீடுடைமை
நான் ஒடுக்கம் என்றைந்தும் நண்ணின்றாப்  -பூண்ஒடுக்கம்
பொன்வரைக்கோங் நேர்முலைப் பூந்திருவே யாயினும்
தன்வரைத் தாழ்த்தல் அரிது    (சிறுபஞ்ச.45)


தன்னை மணந்து கொண்ட கணவனின் சொற்படி தவறாமல் நடத்தல் இல்வாழ்க்கைக்கு பொருந்திய பெண்ணின் இயல்பு ஆகும்.இதனை,

கொண்டான் வழி ஒழுகல் பெண்மகன் (சிறுபஞ்ச.13)

என்ற பாடல் வரிகள் குறிப்பிடுகிறது.இக்காலச் சூழலில் ஒரு சில பெண்கள் கணவன் சொற்படி வாழ்கின்றனர் என்பது நோக்கத்தக்கது.

பிறர்மனைநோக்காமை
பிறர்மனைவியை நோக்காத விரும்பி பார்க்காத பெரிய ஆண்மை சான்றோர்க்கு அறம் மட்டுமல்லாத நிறைந்து ஒழுக்கம் ஆகும் என்பதை,

பிறர்மனை

நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு


என்ற குறளில் அறியலாம்.மேலும் சிறுபஞ்சமூலமும்,

யார்யார் பிறர்மனையாள் உள்ளீட்டில் ஐவரையும்
சாரார் பகைபோல் சலித்து   (சிறுபஞ்சமூலம்)


என்ற அடிகள் ஆனது பிறர்க்குரிய மனைவியை சேர விரும்புவனைப் போல் கருதுவார்கள் என்று குறிப்பிடுகிறது.

அரசு நெறிகள்
அரசன் என்பவன் மக்களிடம் குறையறிந்து வழக்கு உரைக்கும்போது தன்நிலைக் கருதாமல் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற ஏளனம் கருதாமல் உண்மை நிலை என்ன என்பதை நுணுகி ஆராய்ந்து நன்மை தீமை என்பதை அளந்தறிந்து நீதி வழங்கும் பண்பே அரசனின் கடமையாகும்.  தன் நிலையைப் பற்றியும்இதன் வினை நிலையையும் பகைவர் நிலையையும் உலகியல் நிலையையும் ஆராய்ந்து செய்வனே அரசனாவான்.இவற்றையே ஊன்றுகோல் நின்று மற்றெல்லாக் காரியங்களையும் பகுத்தறிந்து நீதி வழங்குவனே அரசன் ஆவான்.

தன்நிலையும் தாழாத் தொழில்நிலையும் துப்பு எதிர்ந்தார்
இன்நிலையும் ஈடுஇல் இயல்நிலையும் -துள்ளி
அளந்தறிந்து செய்வான் அரசன் அமைச்சன்யாதும்
பிளந்தறிந்து பேராற்ற லான்    (சிறுபஞ்ச.67)


சேனைக்கு யானைப் படை அழகாகும்.;.ஒழுக்கத்திற்கு நடுநிலை தவறாத சொல்லே அழகாகும்.அரசனுடைய செங்கோலுக்கும் நடுவுநிலை தவறாத சொல்லே அழகாகும். படைவீரர்க்கு அஞ்சாமையும் அழகாகும் என்பதனை சிறுபஞ்சமூலம் நூலின் மூலம் அறியலாம்.

படைதனக்கு யானை வனப்பாகும்…………..;
……………………………………. -நடைதனக்கு
கோடா மொழிவனப்புக் கோற்(கு) அதுவே சேவகர்க்கு
வாடாத வன்கண் வனப்பு     (சிறுபஞ்ச.19)


பொருளும் இன்பமும்இஇடுக்கண் வந்த காலத்து அதற்கு அஞ்சாமையும் பிறிதோர் உயிர் அழிய வரும்போது அதற்கு இரங்கும் அருளுடைமையும் அருமையாகிய அறமும் என்று சொல்லப்பட்ட இந்த ஐந்தையும் உடையவன் அரசனால் ஒரு கருமத்தின் மேல் செலுத்தத் தக்கவன் என்று சிறுபஞ்சமூலம் நூலின் மூலம் அறியலாம்.

பொருள்போகம் அஞ்சாமை பொன்றுங்கால் போந்த
அருள்போகா ஆரறம்என்று ஐந்தும் -இருள்தீரக்
கூறப்படுங்குணத்தான் கூர்வேல்வல் வேந்தனால்
தேறப் படுங்குணத்தி னான்     (சிறுபஞ்ச.68)

மேலும் செங்கோலாட்சி செலுத்தும் அரசனை நோக்கி மக்கள் உயிர் வாழ்வர்.என்பதை,

கோல் நோக்கி வாழும் குடி எல்லாம்  (நான்.14)

என்ற பாடலடி உணர்த்துகிறது.'

முடிவுரை
மானத்துடன் வாழ வேண்டும் என்றும்  பெரியாரை மதிக்க வேண்டும் என்றும்,ஒழுக்க நெறியில் வாழ வேண்டும் என்றும் அரசனுக்கு உரிய கடமைகளிலிருந்து தவறக் கூடாது என்றும் நட்புடன் வாழ வேண்டும் என்றும் இளமையில் கல்வி கற்க வேண்டும் ஈகை செய்து வாழ வேண்டும் என்றும் பிறர்மனையை நோக்க கூடாது என்றும் குறிப்பிடப்பட்டதை அறியமுடிகிறது. இந்நெறிமுறைகளை .இக்கால சமுதாய மக்களும உணர்ந்து பின்பற்றி ஒழுகுவதே சிறந்தது ஆகும்.

துணைநூற்பட்டியல்
1.இராமசுப்பிரமணியம்இஎம்.ஏ (உ.ஆ)          பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 1  செல்லப்பா பதிப்பகம்இ மதுரை -625001 முதற்பதிப்பு -2009
2.இராமசுப்பிரமணியம்இஎம்.ஏ (உ.ஆ)          பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 2 செல்லப்பா பதிப்பகம்இ மதுரை -625001 முதற்பதிப்பு -2009
3.இராமசுப்பிரமணியம் எம்.ஏ (உ.ஆ)          பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 3 செல்லப்பா பதிப்பகம்இ மதுரை -625001 முதற்பதிப்பு -1999
4.பத்மதேவன் தமிழ்ப்பிரியன் (உ.ஆ)             நீதி நூல் களஞ்சியம் கொற்றவை வெளியீடு  சென்னை -600017  முதற்பதிப்பு -2014
5.அகராதி                         தமிழ் - தமிழ் அகரமுதலி சென்னைப் பல்கலைக்கழக அகராதி
6. கௌமாரீஸ்வரி .எஸ் (ப.ஆ)                சிறுபஞ்சமூலம் மூலமும் உரையும் சாரதா பதிப்பகம் சென்னை – 600014 முதற்பதிப்பு
7.இராசாராம் .துரை                    பதினெண் கீழ்க்கணக்கு  (தெளிவுரை) மூன்றாம் பகுதி முல்லை நிலையம்   சென்னை 17  முதற்பதிப்பு - 1995

*கட்டுரையாளர் - சு.ஜெனிபர் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியல் துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி -24 -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R