சி.யுவராஜ்முன்னுரை
சங்க இலக்கியம் அகம்,புறம் எனும் இருபகுப்புகளையுடையது. அகம் சார்ந்தஎட்டுத்தொகை நூல்களில் அகநானூறு ஒன்று. அகப்பாடலுள் காதல் உணர்வும்,காதல் சார்ந்தபிறநிகழ்;வுகளும் பேசப்படும். அத்தகையஅகப்பாடல் செய்திகளைசங்கப் புலவர்கள் முதல்,கரு,உரிஎன்றஅடிப்படையில் அமைத்துப் பாடியுள்ளனர். இவற்றுள் முதற்பொருள் என்பதுஅகமாந்தர் வாழ்ந்து நிலத்தினையும், நிகழ்ச்சிநிகழும் காலத்தையும் அடிப்படையாகக் கொண்டஅமைகின்றது. இக்கட்டுரைஅகநானூறு பாலைத்திணைப் பாடல்களின் மலைப்பற்றி கூறுகள் அமைந்துள்ளவிதம் குறித்தப் புலவர்கள் தரும் செய்திகள் இக்கட்டுரையின் மையப்பொருளாகஅமைகின்றது.

பாலைநிலக்கூறுகள்
பாலைச்சூழலின் நிலத்தியல் கூறுகள் மலை, வழி, இடைவெளி, மணல்,பாறை, காடு ,பரப்பு, அறை, வயல், கழனி, கடல், வேங்கடல், பொதினி எனப் பலவகையானபெயர்களால் இடம் பெறுகின்றன. பாலைநிலத்தின் கூறுகளுள் ஒன்றாகிய‘மலை’என்பதை அடுக்கம், கவாஅன், குன்றம், சாரல், அறை, சிமை, கோடு, வரை, வெற்பு, விடாகம், பிறங்கல் எனப்பலப் பெயர்களில் சங்கப்புலவர்கள் விவரித்துள்ளனர்.

மலைப்பகுதிகள்

மலை
பாலைச்சூழலில் உயர்ந்தமலைஎன்பதை‘கல் உயர் பிறங்கல்’ (அகம்.313:17),‘உயர்பிறங்கல்;’(அகம்.321:17) எனவும்,‘கொடியமலை’என்பதற்கு‘வெம்மலை’ (அகம்.275:13) எனவும்,‘பெரியமலை’என்பதற்கு‘மைபடுமாமலை’ (அகம்.153;:17;187:2) எனவும் அகநானூற்றுப் புலவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அடுக்கம்
அடுக்கடுக்காகவரிசையாகச்செல்லும்அடுக்குமலைகள்‘அடுக்கம்’எனப்படுகின்றன. ‘உயர்ந் தோங்கியபக்கமலை’ என்பதை‘ஓங்குவரைஅடுக்கம்’ (அகம்.323:8) என்றும்,தெய்வம் விரும்பிஉறையும் பக்கமலையை‘கூர்புகல் அடுக்கம்’ (அகம்.359:11) எனவும் அகநானூற்றுப் புலவர்கள் அடைமொழிகளோடுகுறிப்பிடுவர். கோடையினால் மூங்கிலின் பசுமைஒழிந்துவதங்குவதுபற்றி‘மழைகரந்துஒளித்தகழைதிரங்குஅடுக்கம்’ (அகம்.347:10) எனப் புலவர்கள் பாடுகின்றார்.

அறை
நிலத்திலிருந்துஎழுந்தபெரியபாறைகள்‘கற்குன்று’போன்றதோற்றத்தைற்படுத்துவதுண்டு. திருச்சிக்குஅருகில் துறையூர் செல்லும் வழியில் ‘வெண்குன்றம்’எனப்பொருள்படும்‘திருவெள்ளறை’எனும்வைணவதிவ்யதேசத்தலம் இப்பெயர் கொண்டுஅழைக்கப்படுவதுகுறிப்பிடத்தக்கது. அகன்றபாறைகள் ‘வியல் அறை’ (அகம்.103:8;357:5) ‘அகலறை’ (அகம்.309:6) எனக்குறிப்பிடுகின்றன.

கவாஅன்
கற்பாதைகள் நீண்டுஉயர்ந்திருக்கும் மலைப்பகுதிகவாஅன் எனஅழைக்கப் பட்டதைப் பாடல்கள் வழி அறியலாம். நீண்டநெடியமலை‘கல்லுயர் கவாஅன்’ (அகம்.189:6) எனவும்,நீண்டகற்பாறைகளையுடையமலை‘கல்அறைக் கவாஅன்’ (அகம்.385:8) எனவும் அழைக்கப்பட்டன. வானைத் தொடுமளவிற்குநீண்டுவளர்ந்துள்ளமலை‘விண்பொருநெடுவரைக் கவாஅன்’ (அகம்.173:17) என்றும,; ‘விண்தோய் சிமையவிறல் வரைக் கவாஅன்(அகம்.179:1) என்றும் அகநானூற்றுப் பாலைப் பாடல்களில் புலவர்களால் சிறப்பிக்கப்படுகிறது.

குன்றம்
மலையினும் சிறிய,அறையினும் பெரியசிறுமலையைக் குன்றம் என்றழைப்பர். அகன்றபெரியகுன்றினை‘அகன்பெருங் குன்றம்’ (அகம்.45:3)  என்றும்,நீண்டபெரியகுன்றினை ‘நெடும் பெருங் குன்றம் (அகம்.17:14;19;;5) என்றும் அகநானுற்றுப் புலவர்கள் அழைக்கின்றனர். தொலைதூரத்திலுள்ளமலை‘நெடுஞ்சேணிடையேகுன்றம்’ (அகம்.229:7) எனப்பட்டது. முருகன் வீற்றிருக்கும் நீண்டதிருப்பரங்குன்றம் ‘நெடியோன் குன்றம்;’(அகம்.59:11) எனவும்,குளிர்ச்சிவாய்ந்தமுருகன் விற்றிருக்கும் குளிர்ந்தமலை‘தண்பரங் குன்றம்’(அகம்.149:16) எனவும் அழைக்கப்பட்டது. பெரியஉச்சியையுடையமலை‘இருஞ்சியைக் குன்றம்’(அகம்.229:7) எனக் குறிப்பிடப்படுகிறது.

கோடு
‘கோடு’ என்பது‘வளைந்த’ என்றுபொருள்படும். மலைப்பகுதியில் வளைந்தசிகரங்களைக் குறிக்குக் ‘கோடு’என்றசொல்லைப் புலவர்கள் பயன்படுத்தியுள்ளனர். நாளடைவில் ஊர்ப்பெயர்களிலும் மலையின் சிறப்புக்கருதி திருச்செங்கோடு‘ அதங்கோடு’என்றுவழங்கப்பட்டன. நீண்டமலையுச்சி‘நெடுங்கோடு’ (அகம்.145:9) என்றும்,‘வானுயர் நெடுங்கோடு’ (அகம்.397:14) என்றும் சிறப்பிக்கப்பட்டது. மலைச்சிகரத்தின் உயரம்; ‘வான்புகுதலையகுன்றம்’ (அகம்.201:5) என்றுஉயர்வுநவிற்சியுடன் பாடப்படுகிறது. அழகியஉச்சிமலை ‘காமர்சென்னி’(அகம்.205:18) என்றதொடரால் சிறப்பிக்கப்படுகிறது.

சிலம்பு
சிலம்புஎன்பதற்கு‘ஒலி’என்றபொருளும் உண்டு. அருவிகள் பாய்ந்துமலையில் ஒலிசெய்யுமானால் அம்மலைப்பகுதிசிலம்புஎனஅழைப்பட்டது. உயர்ந்தமலை‘ஓங்குமலைச்சிலம்பு’ (அகம்.249:15) என்றும்,நீண்ட மூங்கில் உயர்ந்தநிழல் பொருந்தியமலை‘நீடமைநிவந்தநிழல்படுசிலம்பு’ (அகம்.20:15-16) என்றும் புலவர்களால் குறிக்கப்படுகிறது.

சிமை
உயர்ந்தசிரங்களைக் கொண்டமலைஉச்சிப் பகுதிகள் ‘சிமை’என்றழைக்கப்பட்டன. நீண்டுஉயர்ந்தமலையுச்சியை‘உயர்சிமை’ (அகம்.145:9) என்றும்,‘கேண்சிமை’ (அகம்.159:13;291:15) என்றும் புலவர்கள் சிறப்பிக்கின்றனர். கதிரவனின் கடுவெப்பம் தாங்கமாட்டாமல் மலைஉச்சியில் வளைந்த மூங்கில்கள் கணுக்களில் வெடிக்கின்றனஎன்பதனை,

வேய்கண் உடைந்தசிமைய
வாய்படுமருங்கின் மலை                  (அகம்.399:17-18)

குறிப்பிடப்படுகின்றன.

பிறங்கல்
பாறைகள் அதிகம் செறிந்தமலை‘பிறங்கல்’ எனப்பட்டது. நீண்டஉச்சியையுடையபிறங்கல் ‘சேண்சிமைகோடுயர் பிறங்கல்’ (அகம்.247:12-13) எனவும்,வெப்பத்தின் காரணமாகஅழகொழிந்தபாறைகள் நிறைந்தபிறங்கல் ‘காய்கதிர் கடுகியகவின்அழிபிறங்கல்’ (அகம்.399:16) என்றுகடுங்கோடையின் கொடுமையால் மலையின் கவினெல்லாம் அழிகின்றதுஎன்றபொருளில் கோடையில் வெம்மையைப் புலவர் உணர்ந்துபாடியுள்ளார்.

வரை:-
நிலப்பகுதியின் எல்லையாகமலைஅமையுமானால் அது‘வரை’எனப்பட்டது. ‘உயர்ந்த் மலை’என்றபொருளில் ‘உயர்வரை ’(அகம்.393:19) என்றும்,‘பெரியமலை’என்றபொருளில் ‘பெருவரை (அகம்.91:3;291:5;359:16)என்றும்,நீண்டதாக இருப்பின் ‘நெடுவரை’ (அகம.69:10;;75:8;;141:28;;209:9) என்றும் எல்லையாகஅமைந்தமலைப்பகுதியைப் பாலைத்திணைபாடியஅகநானூற்றுப்புலவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

‘நெடுமால் வரை’ (அகம்.9:13) என்பதுமுருகன் உறையுள் மலையைக்குறித்தது. நிலத்தின் எல்லையைக் குறிக்கும் மலைப்பகுதியை‘நிலவரை’(அகம்.273:16) என்றும்,தமிழகத்தின் வடஎல்லையாகவேங்கடத்தில் எழுந்தநீண்டமலையை‘வேய்கடநெடுவரை’ (அகம்.85:9) என்றும்இ தமிழகத்தினுள் உள்ளகொல்லிமலையைக் ‘கொல்லிக் குடவரை’ (அகம்.213:15) என்றும் அகநானூற்றுப் பாலைத்திணைப் பாடல்களில் புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வானைத்தொடும்அளவிற்குஉயாந்தோங்கியமூங்கிலையுடையமலை‘விண்பொருநெடுவரை’ (அகம்.173:17) என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளது. இமயமலைஎல்லையாகவிளங்குகின்றதுஎன்றகுறிப்பைப் பழந்தமிழர்; அறிந்திருந்தனர். அதனால் தான் மாமூலனார் தம்முடையபாலைத்திணைப் பாடலொன்றில் இமயமலையை‘இமயச் செவ்வரை’என்றுகுறிப்பிடுகின்றார். இன்றும் சிவந்தநிறத்தில் இமயஉச்சிக் காணப்படுவதை மூவாயிரம் ஆண்டுகட்குமுந்தையசங்கப்புலவரானமாமூலனார் அன்றுதம்முடையபாடலில் குறிப்பின் சுட்டியுள்ளார்.

புகைபோல்மேலேழுந்து,விண்ணிடத்தேஉயர்ந்துசென்றுஆங்கேபனிதவழ்ந்து மூடியதீச்சுடர்போல் இமயமலைவிளங்குகிறதுஎனும் எபாருள்பட,

 

புகையிற் பொங்கிவியல்விசும்பிஉகந்து
பனியூர் அழற்கொடிகடுப்பதிதோன்றும்
இமயச் செவ்வரை…                    (அகம்.265:1-2)

என்று மாமூலனார் பாடியுள்ளார்.

வெற்பு
மலையிலுள்ள உறுதிகானகற்பாதைப் பகுதிகள் வெற்பு என அழைக்கப்படுகின்றன. முதிர்ந்தநிலையில் இவை மிகப்பழமையானதும் உறுதியானதுமாகக் கருதப்பட்டிக்கவேண்டும். இதனைநோக்கியேகுறிஞ்சநிலத் தலைவன் வெற்பன் எனஅழைக்கப்பட்டிருக்கக் கூடும் எனக்கருத இடமுண்டு. உயர்ந்தமலை,‘ஒங்கல் வெற்பு’ (அகம்.267:13) எனஅழைக்கப்படுகின்றது.

விடரகம்
‘விடரகம்’என்பர்மலைப்பிளவு(பிளப்பு)இமலைக்குகை,மலைமுழைஞ்சுஎனஅழைக்கப்டுகின்றன. பெரியமலைப்பிளவு‘இருங்கல் விடரகம்’(அகம்.21:16)எனப் புலவர்களால் குறிக்கப்படுகின்றது.

முடிவுரை
உலகம் உருவாவதற்கு நிலமும,; பொழுதுமுதற்பொருள் இன்றியமையாததாகவிளங்குகின்றது.முல்லையும் குறிஞ்சியும் இருநிலங்களில் திரிபினால் வறண்டபகுதியைப் பாலைஎன்றதிணையாகவகுத்தார். குறிஞ்சித்திணைமலையும் மலைசார்ந்த இடம் என்பதைபுலவர்கள் வாயில் அகநானூற்றுப் பாலைதிணையின் பாடல்கள் மூலம் மலையைப் பற்றிய கூறுகள் இக்கட்டுரையின் மூலம் காணமுயலப்படுகின்றன.

துணைநூற்பட்டியல்
1.ச.வே. சுப்பிரமணியன்  சங்க இலக்கியம் எட்டுத்தொகைஅகநானூறு, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம் 608001

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

*கட்டுரையாளர்: - சி.யுவராஜ் ,முனைவர்பட்டஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வுமையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி -24 -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R