பேராசிரியர் கோபன் மகாதேவன் மறைவு!
- ஜனவரி 14 அன்று இலண்டனில் பேராசிரியர் கோபாலப்பிள்ளை மகாதேவா (கோபன் மகாதேவன்) மறைந்த செய்தியினை அவரது குடும்பத்தினர் பேராசிரியரின் முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்கள். அவரது இழப்பால் ஆழ்ந்த துயரிலிருக்கும் அனைவர்தம் துயரில் 'பதிவுக'ளும் பங்குகொள்கின்றது. 'பதிவுகள்' இணைய இதழின் ஆலோசகர்களில் ஒருவராகவிருந்தார். கடந்த சில வருடங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தபோதும் தொடர்ந்தும் புத்துண்ர்ச்சியுடன் முகநூலில் இயங்கிக்கொண்டிருந்தவர் பேராசிரியர். அவரது ஆக்கங்கள் பல, கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என, பதிவுகள் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. அவற்றில் சிலவற்றையும், அவரைப்பற்றி ஞானம் சஞ்சிகையின் ஆசிரியர் ஞானசேகரன் எழுதி ஞானம் சஞ்சிகையில் வெளியான அறிமுகக் கட்டுரையினையும் பகிர்ந்துகொள்கின்றோம். - - ஆசிரியர், பதிவுகள்.காம் -

(பதிவுகள்.காம்) பேரறிஞர் பேராசிரியர் கோபன் மகாதேவா
- தி. ஞானசேகரன், பிரதம ஆசிரியர், 'ஞானம்' சஞ்சிகை-
பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்களை முதன்முதலில் அவரது இலக்கியப் படைப்புக்கள் மூலமே அறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஞானம் சஞ்சிகையில் அவர் எழுதிய சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் அவரைச் சிறந்த படைப்பாளியாக எனக்கு அறிமுகப் படுத்தியிருந்தன. சென்ற 10-10-2015 அன்று டென்மார்க்கில் இடம்பெற்ற ஏழு சங்கங்கள் இணைந்து நடத்திய கலைவிழாவில் பிரதம அதிதியாக நானும் எனது மனைவியும் அங்கு சென்றபோது, பேராசிரியரும் அவ்விழாவிலே சிறப்பு அதிதியாகக் கலந்து கொள்ள வந்திருந்தார். அவ்வேளையிலேதான், 1974ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது அனைத்துலகத் தமிராய்ச்சி மகாநாட்டின் பிரதம செயலாளராகச் செயலாற்றிய கலாநிதி கோபாலபிள்ளை மகாதேவாதான் அவர் என்பதும், அவரே தொடர்ந்து தற்போது கோபன் மகாதேவா என்ற பெயரில் பிரபல்யமாகி பல்துறைச் செயற்பாடுகளிலும் இலக்கியத்திலும் ஈடுபாடுகொண்டு இயங்கிவருகிறார்; என்பதும் தெரியவந்தது.
யாழ்ப்பாணத்தில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டை நடத்த முடியாது என்றும் கொழும்பிலேதான் அது நடத்தப்பட வேண்டும் என்றும் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் மந்திரிசபையில் தீர்மானித்திருந்த வேளையில் கலாநிதி கோபாலபிள்ளை மகாதேவா சிறிதும் தளராமல் தனது திறமையைப் பயன்படுத்தி சிறிமா அம்மையாருடன் வாதாடி யாழ்நகரிலேயே அந்த மாநாட்டை நடத்த அனுமதிபெற்றவர் என்பதும் என் நினைவில் வந்தது.


தை பிறக்கப் போகுதடி தங்கமே தங்கம்




அவுஸ்திரேலியாவின் நியுவ் சவுத் வேல்ஸ் மாநிலத்தின் கிராவின் புறநகரின் ’புனித அந்தோனியார்’ ஆரம்பப்பள்ளிக்குள் நுழைந்த பிரியா, தன் மகள் கீர்த்தியின் முதலாம் வகுப்பை அடைந்ததும், “வாடா குஞ்சு, வீட்டைப் போகலாம்,” எனக் கீர்த்தியை அன்போடு தூக்கிக் கொஞ்சிய பிரியாவை உற்று நோக்கி புதிதாக பார்ப்பது போல் பார்த்தாள் கீர்த்தி. திரும்பி நன்சிக்கு பக்கத்தில் நின்ற அவளது தாயாரையும் பார்த்தாள். ”இன்றைக்கு என்ன செய்தீங்கள்? கைவேலை செய்தீங்களா?” எனக் கேட்டபடி நன்சியைத் தூக்கிக் கொண்டுபோன அவளது தாயையும். பிரியாவையும், மாறி மாறிப் பார்த்தாள். அவளது சின்ன மூளைக்கு எதுவுமே புரியாது குழம்பியது. அந்தச் சின்ன மூளைக்கு எதோ புரிகிற மாதிரி இருந்தது ஆனால் புரியாத மாதிரியும் இருந்தது.
கேள்வி: இதுவரை எத்தனை பாடல்களுக்கு இசையமைத்துள்ளீர்கள்?
83 கலவரத்தைத் தொடர்ந்து முதல் முதலாக அந்நிய நாடொன்றில், அமெரிக்காவின் உலகப்புகழ் பெற்ற நியூயோர்க் மாநகரில் அகதியாக அலைந்து கொண்டிருந்தபோது பட்டி தொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருந்த பாடகர்கள் நால்வர். அதனால் அப்பாடகர்கள் பற்றிய நினைவுகள் எழும்போதெல்லாம் எனக்கு அமெரிக்க மண்ணில் அகதியாக அலைந்து திரிந்த அந்த நாட்கள் நினைவுக்கு வந்து விடும். லயனல் ரிச்சி, சிந்தி லோப்பர், பில்லி ஜோயெல், மைக்கல் ஜாக்சன் இவர்கள்தாம் அப்பாடகர்கள். மைக்கல் ஜாக்சனின் 'திரில்ல'ரும் வெளியாகியிருந்த காலம். கறுப்பினப் பதின்ம வயதுச் சிறுவர்கள் ஆங்காங்கே நடைபாதைகளில் கசட் பிளேயரில் மைக்கல் ஜான்சனின் பாடல்களை ஒலிக்கவிட்டு உடம்மை வளைத்து, முறுக்கி, வெட்டி 'பிரேக் டான்ஸ்' ஆடுவார்கள்.

வட இலங்கையில் சப்த தீவுகளில் ஒன்றான நெடுந்தீவை பூர்வீகமாகக் கொண்டிருக்கும் எழுத்தாளர், அவ்வூரின் மற்றும் ஒரு பெயரையே தனது புனைபெயராக்கியும்கொண்டார். அவர்தான் 'ஆவூரான்' சந்திரன் நெடுந்தீவு பல விடயங்களில் புகழ்பெற்றது. உலகத் தமிழராய்ச்சிக்கு வித்திட்ட அருட்திரு. தணிநாயகம் அடிகளார் பிறந்த மண். அத்துடன் பல கலை, இலக்கியவாதிகளும் கல்விமான்களும் சமூகப்பணியாளர்களும் தோன்றிய பிரதேசம். இங்கு 1963 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி சண்முகம் – பொன்னம்மா தம்பதியருக்கு ஏழாவது பிள்ளையாக பிறந்திருக்கும் சந்திரன், இலக்கியப் பிரவேசம் செய்தபோது, ஊரின்மீதிருந்த அளவு கடந்த நேசத்தினால், உள்ளுருக்கு மட்டுமன்றி வெளியூருக்கெல்லாம் பசுவின் பாலை வழங்கிய தீவின் மற்றும் ஒரு பெயரையே புனைபெயராக்கிக் கொண்டவர். அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்த பின்னரும், நெடுந்தீவையும் அங்கு வாழும் மக்களையும் மறந்துவிடாமல், தன்னால் முடிந்த உதவிகளையும் அம்மக்களுக்கு – குறிப்பாக மாணவர் சமூகத்திற்கு வழங்கி வரும் ஒரு தன்னார்வத் தொண்டர். சமூகத்திற்காக பேசுவதும் சமூகத்தை பேசவைப்பதுமே ஒரு படைப்பாளியின் பிரதான நோக்கமாகவிருக்கும். அந்த நோக்கத்துடனேயே எழுத்துலகில் பிரவேசித்த காலம் முதல் அயர்ச்சியின்றி இயங்கி வருகின்றார். அதனால் எமது நெஞ்சத்துக்கும் நெருக்கமானார்.

" முதல் நாளைப் போல அதிகம் ஓடாமல் கிட்ட இருக்கிற சிறிய டவுண் பக்கம் போவோம் " என்றாள் பூமலர் . அவர்கள் சென்ற இடம் வூத்வில் . விவசாயப் பண்ணைகளிற்கு மையமாக இப்படி ஒரு சந்தைகடை ( ஃபாம் மார்க்கட்) , மற்றும் வேறு சில கடைகளும் சேர்ந்த தொகுதிகள் அங்காங்கே இருக்கின்றன . " நான் இந்த கடையிலே வந்து நல்ல காய்கறிகளை வாங்கிறேன் " என்றாள் பூமலர் . அந்த மார்க்கட் கடையில் வீட்டிற்கு வேண்டிய சகலப் பொருட்களும் நிறைந்த பெரிய கடையாக இருக்கிறது . எல்லாம் மனித தயாரிப்புடைய பழமைச் சாயல் . அவற்றை ரசனையோடு பார்த்தார்கள் லொப்ஸ்டர் இடுக்கிகள் தொங்கின்றன . நண்டு போன்ற (ஓடு) கோதுகளை உடைத்து சாப்பிடுவதற்கு உபயோகிக்கப்படுகிறது . இடுக்கிகளையும் வைக்கிறார்கள் . இங்கே , உணவகங்களில் லொப்ஸ்டர் பேகர் சன்விச்கள் கூட விற்கப் படுவதாக கேள்வி . 
கதை சிறப்பாகப் பின்னப்பட்டுள்ளது. கதையில் தனது தாய், தகப்பனுடன் 'டொராண்டோ'வில் வசிக்கும் சிந்து என்னும் சிறுமி யாழ்ப்பாணம் சென்று தைப்பொங்கலைக் கொண்டாடுகின்றார். இந்தக் கதை குழந்தைகளுக்காக எழுதப்பட்டுள்ள கதை. உலகின் எங்கும் வாழும் தமிழ்க்குழந்தைகளும் பொங்கல் நிகழ்வைப் பற்றிய காரணங்களை, விளக்கங்களை அறிந்துகொள்ளும் வகையில் , அவர்களுக்குப் புரியும் எளிமை கலந்த சரளமான இனிய நடையில் எழுதப்பட்டுள்ள கதை. 


மீன்களை நன்னீரில் வாழ்பவை என்றும், கடல் நீரில் வாழ்பவை என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். கெண்டை மீன், கெழுத்திமீன், நெத்திலி மீன், வஞ்ஜ்ரமீன், விலாங்குமீன், செண்ணாங்குனிமீன்,மோவல் மீன், சங்கரா மீன், கிழங்கா மீன், பாறை மீன், விரால்மீன், மத்தி மீன், சால மீன், சீலா மீன் என்று பல வகையான மீன்கள் காணப்படுகின்றன. கம்ப ராமாயணத்தில் கெண்டைமீன்,பனைமீன், கயல்மீன், வாளைமீன், விரால்மீன், இறால் மீன், சேல்மீன், திமிங்கிலம், திமிங்கிலம் ஆகிய மீன்கள் குறித்தும், மீன்களின் தன்மை, இயல்பு குறித்தும் இக்கட்டுரையில் ஆராய்வோம்.
நூலகம் அறக்கட்டளை






பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் 







