நாங்கள் டி.எம்.எஸ் & பி.சுசீலாவுடன் வளர்ந்தவர்கள். அவர்களுக்குப் பின்னர்தான் எவரும். மார்ச் 24. அமரர் டி.எம்.செளந்தரராஜனின் நூறாவது பிறந்த தினம். எம் வாழ்வுடன் பின்னிப் பிணைந்த குரல் அவருடையது. அவரது நினைவாக ஒரு பாடல். 'ஆயிரத்தில் ஒருவ'னில் 'ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ' பாடல். https://www.youtube.com/watch?v=T590PRV5hig
கவிஞர் கண்ணதாசனின் எழுத்தில், மெல்லிசை மன்னர்களின் இசையில் , டி.எம்.எஸ்ஸின் குரலில், எம்ஜிஆர் & ஜெயலலிதா நடிப்பில் இனிக்கும் இனியதொரு கானம். காலத்தால் அழியாத கானம்.
இந்தக் குரலைக் கேட்கையில் எனக்கு நூற்றுக்கு நூறு வீதம் எம்ஜிஆரின் குரல் போலவே கேட்கின்றது. அதுதான் டி.எம்.எஸ்ஸின் திறமை. எம்ஜிஆர், சிவாஜி ஆகியோரின் குரல்களை உள் வாங்கி அவர்களைப்போலவே பாடுவதில் வல்லவர் அவர். அந்தத் திறமை வேறு எவருக்குமில்லை.
பாடல் வரிகள் முழுமையாக:
ஓடும் மேகங்களே
ஒருசொல் கேளீரோ
ஓடும் மேகங்களே
ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஓடும் மேகங்களே
ஒருசொல் கேளீரோ
நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு
வாடுவதே என் பாடு
இதில் நான் அந்த மான்
நெஞ்சை நாடுவதெங்கே கூறு
ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம்
காதலை யார் மனம் தேடும்
இதில் நான் அந்த மான்
நெஞ்சை நாடுவதெங்கே கூறு
ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ